Posts

Showing posts from August, 2021

CCM Tamil Bible Study - கோபம்

வெளி12:12d. பிசாசு மிகுந்த கோபம் கொண்டு.நீதி12:16;16:14;27:3,4;பிர7:9;சங்4:4;76:10;தானி11:36;யோனா4:1;மத்2:16;யாக்1:20.  கோபம் கோபம் மிகவும் பொல்லாதது என்று சொல்வது சரியா என்று எனக்கு தெரியவில்லை. தேவன் கோபம் கொள்வது அவசியமானது என்பதை விவிலியத்தில் படிக்கின்றோம். தேவனுடைய விருப்பத்துக்கு மாறாக மனிதர்கள் போனபோது தேவனுடைய கோபம் வெளிப்பட்டது. தேவகோபம் பற்பல விதமான சிதைவுகளை ஏற்படுத்தியிருந்தாலும் அது தேவனுடைய நீதியையும் பரிசுத்தத்தையும் வழுவாதன்மையையும் வெளிப்படுத்தியது. தேவனுடைய கோபத்தினால் தண்டனை உண்டாயிற்றென்றால் தேவ இரக்கத்தினால் கிருபையும் மீட்பும் உண்டாயிற்று.  மனிதர்கள் தேவன் மீது கோபம் கொள்வதை விவிலியம் ஏற்றுக்கொள்ளவில்லை. தேவன் மீதும் தேவ ஆளுகை மீதும் கோபம் காண்பித்தவர்கள் அழிந்து போயினர். ஆகையினால் தான் மனித கோபம் தேவ நீதியை எழுப்பாது என்று அதற்கு முற்றுப்புள்ளி போடப்பட்டது. தேவகோபத்துக்கும் மனித கோபத்துக்கும் உண்டான போட்டிகள் சுருங்கி போயின. ஆனால் தேவ கோபத்திற்கும் சாத்தானின் கோபத்திற்கும் இடையில் உண்டான போட்டிகள் உலகம் அழிக்கப்படுவது வரையிலும் சாத்தான் நரகத்தில் தள்ளப்...

CCM Tamil Bible Study - அதிக சந்தோஷம் - More happiness

அதிக சந்தோஷம் 3Jn1:4. I have no greater joy than to hear that my children walk in truth. 1Kin3:6;2Kin20:3;Ps26:1-3;Pro23:24;Isa8:18;38:3;Jn12:35,36;Gal2:14;4:19.  3யோவா1:4. என் பிள்ளைகள் சத்தியத்திலே நடக்கிறார்கள் என்ற சந்தோஷத்திலும் அதிகமான சந்தோஷம் எனக்கு இல்லை. 1இரா3:6;2இரா20:3;சங்26:1-3;நீதி23:24;ஏசா8:18;38:3;யோவா12:35,36;கலா2:14;4:19 1) குடும்ப நீதி அடிப்படையிலான சந்தோஷம். எந்தவொரு தகப்பனும் தன் பிள்ளைகள் தனக்கு கீழ்படிந்து தன் விருப்பத்தின்படி, தான் வகுத்த வழியில் மட்டுமே நடப்பதையே விரும்புவான். அவ்விதம் பிள்ளைகள் நடக்கும்போது இருவிதங்களில் தகப்பனின் உள்ளம் மகிழ்ச்சியால் நிரம்புகின்றது. ஒன்று குடும்ப பாரம்பரிய ஒழுங்கு ஆதிகாலந்தொட்டு தொடர்ந்து செல்லுவதினிமித்தம் உண்டாகும் சந்தோஷம். இன்னொன்று பிள்ளைகள் கீழ்படிவதையும் , அடங்கிப்போவதையும், பணிவாக நடப்பதையும், ஒழுக்கமாய் இருப்பதையும் பார்ப்பதினாலும் அனுபவிப்பதினாலும் உண்டாகும் சந்தோஷம் ஆகும். இந்த குடும்ப நீதி அடிப்படையிலான சந்தோஷத்தில் பணம், பொன், பொருள், மண், வீடு, கல்வி ஆகிய யாவும் மூன்றாந்தரமானதாகும். இவ்வித உலக காரியங்களின...

CCM Tamil Bible Study - உண்மையை குறித்து சாட்சி - Testified of the truth

உண்மையை குறித்து சாட்சி 3Jn1:3. For I rejoiced greatly when brethren came and testified of the truth that is in you, just as you walk in the truth. 2Jn1:4;Rom1:8,9;2Cor7:6,7;Eph1:15,16;Col1:7,8;1Thes3:6-9;Ps26:3;86:11;119:11;Pr20:7;23:15.  3யோவா1:3. நீ சத்தியத்திலே நடக்கிறாய் என்று உன்னுடைய உண்மையை குறித்து சாட்சி கொடுத்தனர். 2யோவா1:4;ரோம1:8,9;2கொரி7:6,7;எபே1:15,16;கொலோ1:7,8;1தெச3:6-9;சங்26:3;86:11;119:11;நீதி20:7;23:15. சத்தியமாகிய இயேசு கிறிஸ்துவுக்குள் வாழ்கிறவன் சத்தியத்திலே நடக்கிறவனாயிருக்கிறான். அவன் பொய் பேசுவதில்லை. உண்மையையே பேசுகிறவனாகவும், காரியங்களை உண்மையாகவே செய்கிறவனாகவும் காணப்படுவான். இதுவே பிறர் மத்தியில் சாட்சியமாகப் பரிணமிக்கின்றது.  சத்தியமாகிய கிறிஸ்து ஒருவனுக்குள் வாசம்பண்ணும்போது பொய்மைக்குரியதும், வஞ்சகத்துக்குரியதுமான விஷயங்களில் நிலைகொண்டிருக்க முடியாது. அப்படியே அப்படிப்பட்டவைகளில் அகப்பட்டிருந்தாலும் அவன் அதைவிட்டு வெளியேறுவதற்கு இணக்கமுள்ளவனாகவே காணப்படுவான். சத்தியத்திலே நடக்கிறவனில் சடிதியில் உண்டாகும் தடுமாற்றங்களை அவனுக்குள் வாசம் செய்யும் ...

CCM Tamil Bible Study - வாழ்ந்திரு - Live

வாழ்ந்திரு 3Jn1:2. Beloved, I pray that you may prosper in all things and be in health, just as your soul prospers. Phil2:4,27;Col1:3-6;1Thes1:3-10;2:13,14,19,20;3:6,7;2Pet1:3-9;3:18;Rev2:9.  3யோவா1;2. பிரியமானவனே உன் ஆத்துமா வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்க வேண்டுகிறேன். பிலி2:4,27;கொலோ1:3-6;1தெச1:3-10;2:13,14,19,20;3:6,7;2பேது1:3-9;3:18;வெளி2:9.  மூப்பனாகிய யோவான் சத்தியத்தின்படி நடக்கிற காயுவை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறார். முதலாவது, சத்தியத்தின்படி நடக்கிறவன் இவ்விதமாய் வாழவேண்டும் என்று விரும்பி ஆண்டவரிடம் மன்றாடுவதாக கூறுகின்றார். இரண்டாவதாக மூப்பனாகிய யோவான் சத்தியத்தின்படி வாழ்கிறவர்களை தேவன் இவ்வ்விதமாக வாழவைக்கிறார் என்று நம்பியிருந்தார். ஏனென்றால் உத்தமனுக்கு கர்த்தர் துணை என்றும், உண்மையுள்ளவன் பரிபூரண ஆசீர்வாதங்கள் பெறுவான் என்றும் யோவான் நம்பியிருந்தார்.  உன் ஆத்துமா வாழ்கிறதுபோல நீ வாழ வேண்டும். பாவத்திலிருந்தும் அதன் அடிமைதனத்திலிருந்தும் மீட்கப்பட்ட காயுவின் ஆத்துமா கிறிஸ்துவுக்குள் பாதுகாப்பாகவும், தைரியமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்கிற...

CCM Tamil Bible Study - சத்தியத்தின்படியான நேசம் - True love

சத்தியத்தின்படியான நேசம் 3John…. 3Jn1:1. The Elder,To the beloved Gaius, whom I love in truth. 2Jn1:1;1Jn3:18;Act19:29;20:4;Rom16:23;1Cor1:14,15;1Tim5:1;Tit3:15;1Pet5:1;1Tim1:5. 3யோவா1:1. மூப்பனாகிய நான் சத்தியத்தின்படி நேசிக்கிற காயுக்கு எழுதுகிறதாவது. 2யோவா1:1;1யோவா3:18;அப்19:29;20:4;ரோம16:23;1கொரி1:14,15;1தீமோ5:1;தீத்3:15;1பேது5:1;1தீமோ1:5. அன்பு, நேசம், காதல், ஈர்ப்பு, பாசம், சிநேகம் என்று பலவிதங்களில் கூறப்படும் வார்த்தைகளில் சத்தியத்தின்படியான நேசம், பிரியமான காயு என்ற இரண்டு விஷயங்களை மூப்பனாகிய யோவான் வெளிப்படுத்துகின்றார். மூப்பனாகிய யோவான் காயுவை பிரியமானவனாக ஏற்றுக்கொள்ளக் காரணம் காயு சத்தியத்தின்படி நடக்கிறவனாகவும், வாழுகிறவனாகவும் காணப்பட்டான். ஆகவே இந்த அன்பு சத்தியத்தின்படியான அன்பு ஆகும்.  கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பிதாவுக்கு பிரியமானவராக காணப்படக் காரணம் பிதாவுக்கு எல்லாவிதத்திலும் கீழ்படிந்து ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டார். நான் பிதாவின் ஒரே மகன் என்று இயேசு கிறிஸ்து உரிமைப்பாராட்ட இயலும் என்றாலும் தேவனுடைய நியமங்களின்படி நியமம் பெற்ற யோவான் ஸ்நானகனுக்கு கீழ்படிய ...

CCM Tamil Bible Study - வாழ்த்துக்கள் - Congratulations

வாழ்த்துக்கள் 2Jn1:13. The children of your elect sister greet you. Amen. Gen48:20;1Kin1:47;Ps28:3;72:17;Mt5:47;10:12;Lk1:41;Rom16:16;Phil4:21;Col4:12;Tit3:15;3Jn1:14.  2யோவா1:13. தெரிந்துக்கொள்ளப்பட்ட உமது சகோதரியின் பிள்ளைகள் உமக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள். ஆதி 48:20;1இரா1:47;சங்28:3;72:17;மத்5:47;10:12;லூக்1:41;ரோம16:16;பிலி4:21;கொலோ4:12;தீத்3:15;3யோவா1:13.  வாழ்த்துதல் என்பது ஒருவரை புகழ்ந்து சொல்லுவதாகும். மேலும் ஒருவர் நலமுடன் இருக்கும்படி விரும்புவதாகும். இன்னும் ஒருவர் உயர்ந்திருக்கும்படி விரும்புவதாகும். ஆகவே வாழ்த்துதலகள் என்பது வாய் நிறைந்து வருவதுமுண்டு. உள்ளம் அல்லது இருதயம் நிறைந்து வெளிப்படுவதுமுண்டு. பரிசுத்த ஆவியில் நிரம்பி வெளிப்படுவதுமுண்டு. இப்படிப்பட்ட வாழ்த்துதல்கள் அன்பின் அடையாளமாகவும், ஐக்கியத்தின் அடையாளமாகவும், மீட்பின் அடையாளமாகவும், கடமையின் அடையாளமாகவும் காணப்படுகிறது.  தேவனுடைய மனிதர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துதல்கள் சொல்ல கடமைப்பட்டுள்ளார்கள். ஒருவர் ஆசீர்வதிக்கப்பட்டவராக இருப்பதை விரும்பி சொல்லப்படும் வாழ்த்துதல்களும் உண்டு. வாழ்த்து...

CCM Bible Study - யோவானின் விருப்பம் - John's wish

யோவானின் விருப்பம் 2Jn1:12 . Having many things to write to you, I did not wish to do so with paper and ink; but I hope to come to you and speak face to face, that our joy may be full. Jn16:12;15:11;17:13;Rom15:24;1Cor16:5-7;Phila1:22;Heb13:19,23. 2யோவா1:12. எழுதுவதை விடவும் முகமுகமாய் சந்திப்பதையே விரும்புகின்றார். யோவா16:12;15:11;17:13;ரோம15:24;1கொரி16:5-7;பிலோ1:22;எபி13:19,23. 2 ஆம் வசனத்தில் மூப்பனாகிய நான் என்று தன்னை அறிமுகம் செய்தவர் சத்தியமாவது என்னவென்று கூறிவிட்டு சில தனிப்பட்ட விபரங்களை இந்த சிறிய வசனத்துக்குள் பொதிந்து அனுப்புகின்றார்.  நான் எழுதவேண்டியவைகள் ஏராளமுண்டு. ஏற்கனவே ஏராளமான விஷயங்களை தெளிவுபடுத்தியவர் இன்னும் ஏராளமான காரியங்கள் உண்டு என்று கூறியிருப்பதினால் யோவான் 21:25 ல் சொல்லப்பட்டுள்ளதை நினைவு படுத்துகின்றது. ஆகவே இவர் யோவான் அப்போஸ்தலன் என்று நம்பலாம். தேவனுடைய மனிதர்களுக்கு எழுத்துதுறை தேவனால் கொடுக்கப்பட்டுள்ள ஒரு வரம் ஆகும். ஞானத்தின் ஆவியால் நிரப்பப்பட்டவர்களுக்கு இந்த தாலந்தைக் கொடுக்கிறார். சத்தியத்தை துலாம்பாரமாக வெளிப்படுத்த எழுத்தேடுகள் பெரும் ...

CCM Tamil Bible Study - பங்காளியாகாதே -

பங்காளியாகாதே 2Jn1:11. for he who greets him shares in his evil deeds. Ps50:16- 22;Lev14:40;1Sam15:26;1Kin13:9;22:4;2Chr19:2;Mt18:17;Rom16:17;1Tim5:22;Rev18:4.  2யோவா1:11. கிறிஸ்துவின் உபதேசத்தை கொண்டு வராதவனுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறவன் அவனுடைய துர்கிரியைகளுக்கும் பங்குள்ளவனாகின்றான். சங்50:16-22;லேவி14:40;1சாமு15:26;1இரா13:9;22:4;2நாலா19:2;மத்18:17;ரோம16:17;1தீமோ5:22;வெளி18:4.  பரிசுத்தம் என்பது வேறுபிரிக்கப்பட்ட அனுபவம். தேவத்துவம் தமது பரிசுத்தத்தில் நிலைக் கொண்டுள்ளது. ஆகையினால் தேவத்துவம் சார்ந்த எதுவும் வேறு எதுவோடும் பங்காளித்துவம் கொள்ளாது. தேவத்துவத்தின் அரவணைப்புக்குள் கொண்டுவரப்பட்ட நாம் தேவத்துவத்தின் காட்சியுருவாக வெளிப்பட்ட பரிசுத்தமுள்ள தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்துவினால் மீட்கப்பட்டு பரிசுத்தத்துக்குள் கொண்டுவரப்பட்டவர்கள். ஆகவே தேவனுடைய மனிதர்கள் எக்காரணத்தைக் கொண்டும் பாவத்தோடும், பாவ கிரியைகளோடும், பாவத்தைக் கொண்டிருப்போர்களோடும் உடன்பாடு கொள்ள முடியாது. இது இஸ்ராயேலின் தனித்துவமாயிருந்தது.  கிறிஸ்துவினால் மீட்கப்பட்டவர்கள் கிறிஸ்துவின் உபதேசத்தில் ந...

CCM Tamil Bible Study - ஒத்துப்போகாதே - Do not agree

ஒத்துப்போகாதே 2Jn1:10. If anyone comes to you and does not bring this doctrine, do not receive him into your house nor greet him. 2Jn1:11;Rom16:17,18;1Cor5:11;16:22;Gal1:8,9;2Tim3:1-10;Heb6:11,12.  2யோவா1:10. ஒருவன் இந்த உபதேசத்தை கொண்டுவராதிருந்தால் உங்கள் வீட்டில் ஏற்றுக்கொள்ளாமலும், வாழ்த்துதல் சொல்லாமலும் இருங்கள். 2யோவா1:11;ரோம16:17,18;1கொரி5:11;16:22;கலா1:8,9;2தீமோ3:1-10;எபி6:11,12. கிறிஸ்துவையும், கிறிஸ்துவின் உபதேசத்தையும், கிறிஸ்துவின் தன்மைகளையும் உடையவனாயிராத ஒருவன் எப்படிப்பட்டவனாயிருந்தாலும் அவனோடும், அவனுக்குரியவைகளோடும் இணங்கிச் செல்லக்கூடாது என்பது புதிய ஏற்பாட்டு  பரிசுத்தவான்களின் கட்டளையாகும். இயேசு கிறிஸ்துவும் இப்படித்தான் நடந்தாரென்று யோவான் 2:24,25 கூறுகின்றது. கிறிஸ்துவின் சரீரமாகிய சபையில் பிதாவையும், குமாரனையும் குறித்து பிரசங்கிப்பதற்காகவே பரிசுத்த ஆவி கொடுக்கப்பட்டார். கிறிஸ்துவை குறித்து பிரசங்கிப்பதற்காகவே தேவன் சபைகளில் ஐந்துவிதமான ஊழியங்களையும், உதவிகாரர்களையும், மூப்பர்களையும், மற்றும் பலரையும் ஏற்படுத்தியுள்ளார். கிறிஸ்துவை ஒருவருக்குள் பிறப்...

CCM Tamil Bible Study - கிறிஸ்துவின் உபதேசம் - The Doctrine of Christ

கிறிஸ்துவின் உபதேசம் 2Jn1:9. Whoever transgresses and does not abide in the doctrine of Christ does not have God. He who abides in the doctrine of Christ has both the Father and the Son. Jn15:6;7:16,17;Mt11:27;Jn5:23;14:6;Act2:42;Col3:16;Heb6:1;1Jn2:22-24. 2யோவா1:9. கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்கிறவன் பிதாவையும் குமாரனையும் உடையவன். யோவா15:6;7:16,17;மத்11:27;யோவா5:23;14:6;அப்2:42;கொலோ3:16;எபி6:1;1யோவா2:22-24.  இயேசு கிறிஸ்துவின் உபதேசத்தை அறிவதற்கு சுவிசேஷங்களை தெளிவாக அறிந்திருக்க வேண்டும். கிறிஸ்துவின் உபதேசத்தின் வல்லமையை அறிவதற்கு அப்போஸ்தலர் நடபடிகளை அறிந்திருக்க வேண்டும். கிறிஸ்துவின் உபதேசத்தின் நீட்சியை அறிவதற்கு நிருபங்களை அறிந்திருக்க வேண்டும். கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்கிறவனின் முடிவை வெளிபடுத்தலில் தான் அறிய முடிகின்றது. அதேவேளையில் கிறிஸ்துவின் உபதேசம் பிதாவின் உபதேசங்களாகிய நியாயபிரமாணங்களிலிருந்துதான் உருவாக்கம் பெற்றுள்ளது. பழைய கற்பனைகளாகிய 10 கட்டளைகளின் விரிவாக்கமே புதிய கட்டளைகளாகிய கிறிஸ்துவின் உபதேசங்களாகும். ஆகவே கிறிஸ்துவின் உபதேசத்தை பின...

CCM Tamil Bible Study - எச்சரிக்கை - Warning

எச்சரிக்கை 2Jn1:8 . Look to yourselves, that we do not lose those things we worked for, but that we may receive a full reward. Mt24:4,24,25;Mk13:5,6,9,23;Lk21:8;Heb12:15;Rev3:11;Gal4:11,12;Phil3:16;Heb10:32,33.  2யோவா1:8 . பூரணபலனை பெறும்படிக்கு எச்சரிக்கையாயிருங்கள். மத்24:4,242,5;மாற்13:5,6,9,23;லூக்21:8;எபி12:15; வெளி3:11;கலா4:11,12;பிலி3:16;எபி10:32,33.  வஞ்சகத்தினாலும், வஞ்சக ஆவிகளினாலும்  தேவனால் கிடைத்த நற்பொருட்களையும் கிடைக்கப்போகும் நற்பொருட்களையும் இழந்து போகாதிருங்கள் என்று எச்சரிக்கின்றார். தேவனுடைய மனிதர்களிடமிருந்து  இரண்டு முக்கியமான நற்பொருட்களை  வஞ்சிக்கிற ஆவிகள் பறித்துக்கொள்ளப் போராடுகின்றது. வஞ்சிக்கிற ஆவிகள் பிசாசின் மறு உருவமாகி நல்லவர்களைப்போல வேஷம் மாறி சபைகளுக்குள் ஊடுருவியுள்ள ஒளியின் தூதன் வேஷம் தரித்தவைகள். ஆகவே நாம் மிகவும் கவனமாக வாழவேண்டும். ஒன்று நமது இரட்சிப்பாகும். இந்த இரட்சிப்பினால்தான் தேவனுடைய ஆவியும் வசனங்களும் நமக்கு கிடைத்துள்ளது. இரட்சிப்பின் வஸ்திரத்தை இழந்துபோகாமல் இரட்சிப்பின் பாத்திரத்தை சுமந்து திரிய வேண்டும். இரட்...

CCM Tamil Bible Study - வஞ்சகர்கள் - Deceivers

வஞ்சகர்கள் 2Jn1:7. For many deceivers have gone out into the world who do not confess Jesus Christ as coming in the flesh. This is a deceiver and an antichrist. 2Pet2:1-3;1Jn2:18-22;4:1-3;1Tim3:16;Rev12:9;13:14. 2யோவா1:7. மாம்சத்தில் வந்த இயேசு கிறிஸ்துவை அறிக்கை பண்ணாத வஞ்சகர்கள். 2பேது2:1-3;1யோவா2:18-22;4:1-3;1தீமோ3:16;வெளி12:9;13:14.  மாம்சத்தில் வந்த இயேசு ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று அறிந்து நம்பி அறிக்கையிடுவதே விசுவாசத்தின் ஆவியாகும். இதன் விரிவுரையாகவே 1தீமோ3:16 மற்றும் பிலிப்2:5-11 நமக்கு தரப்பட்டுள்ளது. ஆனால் ஆதிசபை காலங்களிலிருந்து இயேசுவை தேவனுடைய குமாரனென்றும் , கிறிஸ்து என்றும்  அறிக்கையிடாத யூத சமயத்தமைந்தவர்கள், உரோமர்கள்  மற்றும் பலவகையினரும் இருந்து வந்துள்ளனர். இவர்களின் வாக்குகளையும், விவாதங்களையும் கவனித்த அனேக கிறிஸ்தவ பெரியோர்களும் கூட இந்த விசுவாசத்தின் ஆவியை விட்டு விட்டவர்களாய் இயேசுவின் மானுடவதாரத்தை மட்டுமே மிகைபடுத்தி போதித்தவர்களாகவும் அல்லது அவரின் தெய்வதன்மையை மட்டுமே மிகைபடுத்துகிறவர்களாகவும் மாறிப்போய் அனேக கள்ள உபதேசங்களை...

CCM Tamil Bible Study - எது உண்மையான அன்பு? - True love

 2Jn1:6. This is love, that we walk according to His commandments. This is the commandment, that as you have heard from the beginning, you should walk in it. Jn14:15,21;15:10,14;Rom13:8,9;Gal5:13,14;1Jn5:3,15.  2யோவா1:6. நாம் அவருடைய கற்பனைகளின்படி நடப்பதே அன்பு. ஆதிமுதல் கேள்விபட்டது இதுவே.  யோவா14:15,21;15:10,14;ரோம13:8,9;கலா5:13,14;1யோவா5:3,15.  ஆண்டவருடைய கற்பனைகளின்படி நடப்பதே அன்பாகும். இயேசுகிறிஸ்து யோவான் சுவிசேஷத்தில் என்னிடத்தில் அன்பாயிருக்கிறவன் என் கட்டளைகளை கைக்கொள்வான் என்றுக் கூறியுள்ளார்.  எந்த கட்டளைகளையும் அவரிடத்தில் நாம் வைக்கும் அன்பினால் கடைபிடிக்க முடியும். தேவனிடத்தில் அன்புகூருகிறவனுக்கு கட்டளைகள் பாரமானதாக தெரியாது. நியாயபிரமாணங்களை பெற்ற இஸ்ராயேலர்கள் தேவனிடத்தில் அன்புகூருவதில் இணக்கம் காண்பிப்பதில் சுணக்கம் ஏற்பட்டதினால்தான் பிரமாணங்களெல்லாம் பாரமானவைகளாக தெரிந்தது. பவுல் புறஜாதியாரை கிறிஸ்துவுக்குள் கொண்டுவரும்போது மிகவும் தெளிவுள்ளவராக காணப்பட்டார். அதாவது, நீங்கள் ஏற்கனவே பிரமாணம் இல்லாதவர்களாயிருந்துள்ளீர்கள். ஆகையினால் இப்பொழு...

CCM Tamil Bible Study - ஆதி கற்பனை - New Commandment

ஆதி கற்பனை 2Jn1:5. And now I plead with you, lady, not as though I wrote a new commandment to you, but that which we have had from the beginning: that we love one another. Jn13:34,35;15:12;Gal5:22;Eph5:2;1Thes4:9;heb13:1;1Pet1:22,23;4:8;1Jn3:14-18;4:7-12,20. 2யோவா1:5. ஆதிமுதல் உண்டான கற்பனையை உமக்கு எழுதி வேண்டிக்கொள்கிறேன். யோவா13:34,35;15:12;கலா5:22;எபே5:2;1தெச4:9;எபி13:1;1பேது1:22,23;4:8;1யோவா3:14-18;4:7-12,20. ஒருவரிலொருவர் அன்புகூர வேண்டும் என்பது புதிய கற்பனையல்ல, ஆதிமுதல் இருந்துவந்த கற்பனை. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இந்த கற்பனையை வலியுறுத்தினார். இயேசு கிறிஸ்து இந்த கற்பனையை பிதாவிடமிருந்து பெற்றார். பிதாவினிடமிருந்து உண்டானதுவும், கிறிஸ்துவால் உபதேசிக்கப்பட்டதும், அப்போஸ்தலர்களால் பயன்படுத்தப்பட்டதுமான கட்டளையாயிருப்பதினால் இது ஆதி கற்பனையாகும். 10 கட்டளைகளைப்போல இதுவும் கட்டளையாக வலியுறுத்தப்படுகிறது. 10 கட்டளைகளில் தேவனிடத்தில் அன்புகூருதல்போல் குடும்பத்திலும், புறத்தியாரிடத்திலும் ஒரேவிதமான அன்பை காண்பிக்க வேண்டும் என்று போதிக்கப்பட்டுள்ளது. அதன் விரிவுரையாகவே ஒருவரிலொரு...

CCM Tamil Bible Study - பிதாவினால் பெற்ற கற்பனை - Commandment from the Father

பிதாவினால் பெற்ற கற்பனை 2Jn1:4. I rejoiced greatly that I have found some of your children walking in truth, as we received commandment from the Father. Hos14:9;Mal2:6;Gal2:14;Eph5:1,2,8;1Jn1:6,7;2:6;Phi4:10;1Thes2:19,20;3:6-10;3Jn1:3,4.  2யோவா1:4. பிதாவினால் நாம் பெற்ற கற்பனையின்படியே சிலர் சத்தியத்திலே நடக்கிறார்கள். ஓசி14:9;மல்2:6;கலா2:14;எபே5:1,2,8;1யோவா1:6,7;2:6;பிலி4:10;1தெச2:19,20;3:6-10;3யோவா1:3,4. அம்மாளின் மூலம் விசுவாசத்துக்குள் வந்தவர்களில் சிலர் கர்த்தராகிய இயேசுவை தங்களுக்குள் கொண்டவர்களாக இயேசு கிறிஸ்துவின் உபதேசத்தின்படி வாழ்கிறதைக் குறித்து கேள்விபட்டு சந்தோஷமடைகின்றேன். ஏனெனில்  இவ்விதமான சத்தியமார்க்கத்தமைதல் பிதாவினால் கொடுக்கப்பட்ட கட்டளைகளை பிரதிபலிக்கின்றதாக உள்ளது. கிறிஸ்துவின் மூலம் பிதாவின் கட்டளைகளின் சாரம் கிறிஸ்தவனில் பரிணமிக்கின்றது. 1யோவானில் நாம் கண்டதின்படியாகவே சடங்குசார்ந்த பிரமாணங்களை தவிர்த்த பிரமாணங்கள் ஒருபோதும் நிராகரிக்கப்படதக்கதல்ல என்பதை உணரவேண்டும். 10 கட்டளைகளில் ஒன்றையும் நாம் நிராகரிக்க முடியாது. இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு வ...

CCM Tamil Bible Study - வாழ்த்துதல் - Congratulations

வாழ்த்துதல்  2Jn1:3. Grace, mercy, and peace will be with you[fn] from God the Father and from the Lord Jesus Christ, the Son of the Father, in truth and love. Gen43:14;Num6:23;Isa53:11;Act15:23;Rom1:3;1Cor1:3;2Cor1:3;Gal1:3;2Pet1:17. 2யோவா1:3 . கிருபையும், இரக்கமும், சமாதனமும் சத்தியத்தோடும் அன்போடும் கூட உங்களோடிருப்பதாக. ஆதி43:14;எண்6:23;ஏசா53:11;அப்15:23;றோம1:3;1கொரி1:3;2கொரி1:3;கலா1:3;2பேதி1:17. இந்த நிருபத்தை எழுதிய ஆக்கியோன் சபையின் தலமை பொறுப்பில் உள்ள அம்மாளுக்கு வாழ்த்துதல்களை தெரிவிக்கின்றார். பிதாவாகிய தேவனாலும், பிதாவின் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவினாலும் கிருபை, இரக்கம், சமாதானம் ஆகியவை சத்தியத்தோடும் அன்போடும்கூட அம்மாளாகிய உம்மோடும் உம் குடும்பத்தோடும் சபையாரோடும் இருப்பதாக என்று ஆக்கியோன் ஆசீர்வதிக்கின்றார். கிருபை இருந்தால்தான் இரட்சிப்பை இன்னும் கொண்டு செல்ல முடியும். கிருபை முடிந்து போயிற்றென்றால் சுவிசேஷ பிரபல்யம் முடிந்து போகும். இரட்சிப்பும் முற்று பெற்றுவிடும்.  ஆகவே அந்த கிருபையானது தொடர்ந்திருக்கும்படியாக வாழ்த்துகின்றார். இரக்கத்தினிமித்தம் கர்த்தருட...

CCM Tamil Bible Study - அம்மாள் -To the elect lady and her children

அம்மாள்  2Jn1:2. To the elect lady and her children, whom I love in truth, 2Jn1:5,13;Lk1:1-3;2:36-38;8:3;Eph1:4-6;1Thes1:3,4;2Thes2:13,14;1Pet1:1,2;1Tim5:3-5,9,10.  2யோவா1:2. அம்மாளுக்கும் அவளுடைய பிள்ளைகளுக்கும் எழுதுகிறதாவது. 2யோவா1:5,13;லூக்1:1-3;2:36-38;8:3;எபே1:4-6;1தெச1:3,4;2தெச2:13,14;1பேது1:1,2;1தீமோ5:3-5,9,10. இவர் யார் என்று தெரியவில்லை. ஆனால் இவரின் குணம் குறித்து மிகையாக எழுதப்பட்டுள்லளது. அவளை தெரியாவிட்டாலும் அவளின் தன்மைகள் தெளிவுள்ளவைகளாயிருப்பதினால் அவைகளை நாம் கவனத்தில் கொள்ளல் வேண்டும். இந்த அம்மாள் சத்தியத்தை அறிந்திருக்கிறவர்களால் நேசிக்கப்பட்டவரும், தெரிந்துக் கொள்ளப்பட்டவருமாயிருக்கிறார். அழைக்கப்பட்டவர்கள் தெரிந்துக்கொள்ளபட முன்னேறுகிறவர்களாயிருக்க வேண்டும். சபைகளில் தெரிந்துக்கொள்ளபடும்படி அழைக்கப்பட்டவர்கள் என்று நிருப ஆசிரியர்களால் குறிக்கப்பட்டிருப்பது கவனிக்கதக்கது.  ஒரு பெண் தலைவியாயிருக்கும் அம்மாள் தெரிந்துக்கொள்ளப்படுதலுக்கென்று உயர்வு பெறக் காரணம் என்ன?.சத்தியவாசகர்களால் மிகவும் நேசிக்கப்பட தக்கவராய் மாற காரணம் என்ன?. முதலாவது இவர் தான்...

CCM Tamil Bible Study - சத்தியம் - Truth

சத்தியம்  2யோவான்…. 2Jn1:1 because of the truth which abides in us and will be with us forever: Jn8:32;Gal2:5,14;3:1;5:7;Col1:6;2Thes2:13;1Tim2:4;Heb10:26;1Jn2:21. 2யோவா1:1. நமக்குள் நிலைநிற்கிறதும் என்றென்றும் நம்மோடிருக்கிறதுமாகிய சத்தியம். யோவா8:32;கலா2:5,14; 3:1;5:7;கொலோ1:6;2தெச2:13;1தீமோ2:4;எபி10:26;1யோவா2:21. பொருள் அடிப்படையில் கிறிஸ்தவ மார்க்கத்தின் சாரத்தை குறிக்கின்றாதாக கூறுகின்றார்கள். ஆனால் சத்தியம் என்ற சொல் இயேசுவை குறிக்கின்றது, இயேசு உபதேசித்தவைகளை குறிக்கின்றது, இயேசுவுக்கு உண்மையோடிருத்தலை குறிக்கின்றது. இந்த இடத்தில் இந்த மூன்றில் எதை குறிக்கின்றது என்பதை நாம் கவனிப்போமாக.  சத்தியம் என்பது நமக்குள் நிலைநிற்கிறது மட்டுமல்ல, என்றென்றைக்கும் நம்மோடிருப்பதுமாகிய சத்தியம் என்று கூறுகின்றார் யோவான். 1யோவான் 1:1 ல் ஜீவவார்த்தை என்று கூறியவர் இங்கு சத்தியம் என்று கூறுகின்றார். இந்த இரண்டு இடங்களிலும் ஒரே விஷயத்தை வித்தியாசமாகக் கூறுகின்றார். அதாவது மாம்சத்தில் வந்த இயேசுவை ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று அறிந்து நம்பி அறிக்கையிடுவதேயாகும். இயேசுவை அ...

CCM Tamil Bible Study - காத்துக் கொள் - Protect Yourself

காத்துக் கொள் 1Jn5:21b. Little children, keep yourselves from idols. Amen. Ps34:13;119:9;Pr2:20;3:21;4:13,23;7:2;Ecc5:1; Jer31:16;Nah2:1;Lk21:19;Act15:29;1Tim3:9;5:22;2Tim1:14;Jas1:27;Jud1:6;Rev16:15. 1யோவா5:21b. பிள்ளைகளே உங்களை காத்துக் கொள்ளுங்கள். சங்34:13;119:9;நீதி2:20;3:21;4:13,23;7:2;பிர5:1;எரே31:16;நாகூ2:1;லூக்21:19;அப்15:29;1தீமோ3:9;5:22;2தீமோ1:14;யாக்1:27;யூதா1:6;வெளி16:15. பிள்ளைகளே விக்கிரகங்களுக்கு விலகி உங்களை காத்துக் கொள்ள வேண்டும். பிள்ளைகளே பொருளாசையாகிய விக்கிரகராதனைக்கு விலகி உங்களை காத்துக் கொள்ள வேண்டும். இதுதான் யோவானின் விருப்பம் ஆகும்.  ஏன் இந்த இரண்டு காரியங்களிலிருந்தும் தன்னைக் காத்துக்கொள்ள வேண்டும் என்று கூறுகின்றார் ? இந்த இரு விக்கிரகாராதனை மூலம் மூன்றுவிதமான காரியங்கள் நடந்தேறுகின்றது.  ஒன்று இவைகளால் தீட்டு உண்டாகின்றது. ஏசா30:22. தீட்டு என்றால் அசுத்தமானது, அழுக்கானது, அருவருப்பானது, சீயென்று இகழப்படவேண்டியது  ஆகும். தீட்டுப்பட்டு பஸ்காவை புசிக்கமுடியாது. எண் 9:6-10. ஆசாரியபணி – ஊழியம் செய்கிறவர்கள் இவைகளால் அழுக்கடையலாகாது. லேவி 22...

CCM Tamil Bible Study - விலகியிரு - Stay away

விலகியிரு  1Jn5:21a. Little children, keep yourselves from idols. Amen. Lev19:4;26:1;1Kin14:9;1Chr16:26;Ps106:36,38;Isa2:18;42:8;45:10;1Cor12:2;2Cor6:16;1Thes1:9;Rev9:20. 1யோவா5:21a. பிள்ளைகளே, நீங்கள் விக்கிரகங்களுக்கு விலகியிருங்கள். லேவி19:4;26:1;1இரா14:9;1நாளா16:26; சங்106:36,38;ஏசா2:18;42:8;45:10;1கொரி12:2;2கொரி6:16;1தெச1:9;வெளி9:20.  விக்கிரகங்கள் குறித்து தாவீது இராஜா தனது சங்கீதத்தில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். சங்115:14-18. விக்கிரகங்கள் யாவும் காற்றும், வெறுமையுமானவைகள் என்று ஏசாயா கூறுகின்றார். 41:29 . விக்கிரகங்களை உண்டாக்குகிறவர்கள் யாவரும் வீணராயுள்ளார்கள் என்றும், அவைகள் ஒன்றுக்கும் உதவாதவைகள் என்றும் ஏசாயா கூறுகின்றார். 44:9-20 . அவைகள் ஒன்றுக்கும் உதவாதவைகள் ஆனதினால் சுட்டெரிக்கப்படுதலே அவைகளுக்கான இறுதி முடிவாகும். உபா12:3. விக்கிரகங்கள் ஏராளமாயுள்ளன. நாட்டுக்கு நாடு, மாநிலத்துக்கு மாநிலம், ஊருக்கு ஊரு, தெருவுக்கு தெரு, வீட்டுக்கு வீடு, நபருக்கு நபர் விக்கிரகங்கள் உலகமெங்கும் பெருகிக்கிடக்கின்றன. குப்பைகள் பெருகிக்கிடப்பதுபோல இவைகளும் பெருகிக்கிடக்கின்றன....

CCM Tamil Bible Study - மெய்யான தேவன் - The true God

இயேசுவே மெய்யான தேவன் 1Jn5:20c. This is the true God and eternal life. 1Jn5:11-13;1:1-3;Jn1:1-3;14:9;20:28;Act20:28;Rom9:5;1Tim3:16;Tit2:13;Heb1:8. 1யோவா5:20c . இவரே மெய்யான தேவனும் நித்திய ஜீவனுமாயிருக்கிறார். 1 யோவா5:11-13;1:1-3;யோவா1:1-3;14:9;20:28;அப்20:28;ரோம9:5;1தீமோ3:16;தீத்2:13;எபி1:8.  JESUS IS TRUE GOD .  விவிலியத்தின் புதிய ஏற்பாட்டில் வெறெங்கும் இவ்வளவு துலாம்பாரமாக காணப்படாத செய்தியாகும். யோவான் இவ்வார்த்தையை குறிப்பிடுவதற்குரிய  காரணம் என்ன?. 1யோவா1:1 ல் ஆதிமுதல் இருந்ததும் என்று ஆரம்பிக்கின்றவருக்கு ஆதிமுதல் இருந்தவரை இயேசு கிறிஸ்து என்றும் அவரே மெய்யான தேவன் என்று அறிவிப்பதற்கும் கடினமாக தெரியவில்லை. வாசிக்கின்ற –தியானிக்கின்ற நமக்கு இது சற்று முரண்பட்டிருப்பதுபோல் தெரிகின்றது. நாம் யோவானோடு சேர்ந்துதான் இவ்வார்த்தையை தியானிக்க வேண்டும்.  யோவான் கீழே 21 ஆம் வசனத்தில் சொல்லப்போகின்றதை கவனத்தில் கொள்ளும்போது இயேசுவை பிதாவுக்கு சமமானவராக கருதியே  கூறியுள்ளார் என்று கருதலாம். இயேசு கிறிஸ்து தேவனோடிருந்தவர், தேவனால் அனுப்பப்பட்டவர், தேவனுடைய குமாரன்...

CCM Tamil Bible Study - கிறிஸ்துவோடுள்ள தொடர்பு - Relationship with Christ

Sunday Sermon - ஞாயிறு பிரசங்கம்   【கிறிஸ்தவ வாழ்வில் நாம் கட்டியெழுப்பப்பட வேண்டிய அடிப்படை உண்மைகள்】 கிறிஸ்துவோடுள்ள தொடர்பு ★ இயேசு என்றால் இரட்சகர் என்றும், ★ கிறிஸ்து என்றால் மேசியா என்றும், அபிஷேகம் பண்ணப்பட்டவர் என்றும் பொருளாகின்றது.  ★ வரலாறானது இயேசு கிறிஸ்துவுக்கு முன், இயேசுகிறிஸ்துவுக்கு பின் என்று பிரித்துப் படிப்பிக்கப்படுவதினால் இயேசு கிறிஸ்துவை குறித்து நாம் அறியவேண்டியுள்ளது.  இயேசு கிறிஸ்துவை குறித்து விவிலியம் கூறுவது என்ன என்பதை கீழே கவனிப்போமா க இயேசு கிறிஸ்து பாவத்தினிமித்தம் வாக்களிக்கப்பட்டார் ஆதி 3:15 - உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய்.  ★ இங்குள்ள ‘வித்து’, ‘அவர்’ போன்ற சொற்கள் இயேசுகிறிஸ்துவை குறிக்கின்றது.  ★ ஆதியிலே பாவத்தையும் பாவத்துக்கு அதிகாரியாகிய சாத்தானையும் அழிக்க சித்தம் கொண்டார். ஆகவே தம் மகனாகிய கிறிஸ்துவை வாக்களித்தார்.  ★ இதை அவர் அறியாமல் அல்ல அறிந்தே செய்தார். ★ இயேசு கிறிஸ்து இஸ்ரயேலரின் வழி பிறப்பிக்கப்பட்டார...