CCM Tamil Bible Study - கோபம்

வெளி12:12d. பிசாசு மிகுந்த கோபம் கொண்டு.நீதி12:16;16:14;27:3,4;பிர7:9;சங்4:4;76:10;தானி11:36;யோனா4:1;மத்2:16;யாக்1:20.  கோபம் கோபம் மிகவும் பொல்லாதது என்று சொல்வது சரியா என்று எனக்கு தெரியவில்லை. தேவன் கோபம் கொள்வது அவசியமானது என்பதை விவிலியத்தில் படிக்கின்றோம். தேவனுடைய விருப்பத்துக்கு மாறாக மனிதர்கள் போனபோது தேவனுடைய கோபம் வெளிப்பட்டது. தேவகோபம் பற்பல விதமான சிதைவுகளை ஏற்படுத்தியிருந்தாலும் அது தேவனுடைய நீதியையும் பரிசுத்தத்தையும் வழுவாதன்மையையும் வெளிப்படுத்தியது. தேவனுடைய கோபத்தினால் தண்டனை உண்டாயிற்றென்றால் தேவ இரக்கத்தினால் கிருபையும் மீட்பும் உண்டாயிற்று.  மனிதர்கள் தேவன் மீது கோபம் கொள்வதை விவிலியம் ஏற்றுக்கொள்ளவில்லை. தேவன் மீதும் தேவ ஆளுகை மீதும் கோபம் காண்பித்தவர்கள் அழிந்து போயினர். ஆகையினால் தான் மனித கோபம் தேவ நீதியை எழுப்பாது என்று அதற்கு முற்றுப்புள்ளி போடப்பட்டது. தேவகோபத்துக்கும் மனித கோபத்துக்கும் உண்டான போட்டிகள் சுருங்கி போயின. ஆனால் தேவ கோபத்திற்கும் சாத்தானின் கோபத்திற்கும் இடையில் உண்டான போட்டிகள் உலகம் அழிக்கப்படுவது வரையிலும் சாத்தான் நரகத்தில் தள்ளப்...

CCM Tamil Bible Study - பங்காளியாகாதே -

பங்காளியாகாதே

2Jn1:11. for he who greets him shares in his evil deeds. Ps50:16-22;Lev14:40;1Sam15:26;1Kin13:9;22:4;2Chr19:2;Mt18:17;Rom16:17;1Tim5:22;Rev18:4. 

2யோவா1:11. கிறிஸ்துவின் உபதேசத்தை கொண்டு வராதவனுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறவன் அவனுடைய துர்கிரியைகளுக்கும் பங்குள்ளவனாகின்றான். சங்50:16-22;லேவி14:40;1சாமு15:26;1இரா13:9;22:4;2நாலா19:2;மத்18:17;ரோம16:17;1தீமோ5:22;வெளி18:4. 


பரிசுத்தம் என்பது வேறுபிரிக்கப்பட்ட அனுபவம். தேவத்துவம் தமது பரிசுத்தத்தில் நிலைக் கொண்டுள்ளது. ஆகையினால் தேவத்துவம் சார்ந்த எதுவும் வேறு எதுவோடும் பங்காளித்துவம் கொள்ளாது. தேவத்துவத்தின் அரவணைப்புக்குள் கொண்டுவரப்பட்ட நாம் தேவத்துவத்தின் காட்சியுருவாக வெளிப்பட்ட பரிசுத்தமுள்ள தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்துவினால் மீட்கப்பட்டு பரிசுத்தத்துக்குள் கொண்டுவரப்பட்டவர்கள். ஆகவே தேவனுடைய மனிதர்கள் எக்காரணத்தைக் கொண்டும் பாவத்தோடும், பாவ கிரியைகளோடும், பாவத்தைக் கொண்டிருப்போர்களோடும் உடன்பாடு கொள்ள முடியாது. இது இஸ்ராயேலின் தனித்துவமாயிருந்தது. 


கிறிஸ்துவினால் மீட்கப்பட்டவர்கள் கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்க நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். ஆதிசபையார் கிறிஸ்துவின் உபதேச்சத்தில் நிலைத்திருந்ததினால் ஆபிரகாம் போன்ற ஆதி முற்பிதாக்களை முன்னிறுத்தி  வாழ்ந்த யூதர்களால் துன்புறுத்தப்பட்டார்கள். உயிரையும், உடமையையும் இழந்தபோதிலும் அவர்களோடு உடன்பாடு கொள்ளவில்லை. இந்த பாரம்பரியத்தில் வந்த யோவான் தனது வாசகர்களுக்கு இதனை கட்டாயப்படுத்துகின்றார். கிறிஸ்தவ சபையார் வேறு பிரிக்கப்பட்டவர்கள். உலகத்தாலும், பாவத்தாலும், மாம்சத்தாலும், பிசாசுகளினாலும் கறைபடாதபடிக்கு விலகி வாழ வேண்டியவர்கள். 


கிறிஸ்துவ உபதேசித்த அல்லது கிறிஸ்துவின் உபதேசத்தை பிரசங்கித்த பெரியோர்கள் ஆதிகாலந்தொட்டு இன்று வரையிலும் பாடுகளையும், துன்பங்களையும் அனுபவித்து வருகின்றார்கள். இவைகளிலிருந்து தப்பிபிழைப்பதற்காக்வே கிறிஸ்து உபதேசிக்காதவைகளை உபதேசிக்க துணிந்து விட்டார்கள். ப. ஏற்பாட்டின் திருஷ்டாந்தங்களை உபதேசங்களாக்கிவிட்டனர். உபதேசங்களை ஓரங்கட்டி விட்டனர். இதினிமித்தம் சபைகளில் பொருளாதர ஆவிகளும், விபசார ஆவிகளும், விக்கிரக வணக்கக்காரர்களோடு இணக்கமுள்ள ஆவிகளும், இவ்வுலகத்தை ஆளதுடிக்கும் ஆவிகளும், பொருளாசையின் ஆவிகளும் புகுந்து கிறிஸ்துவின் உபதேசத்தை ஒதுக்கி வைத்து விட்டன. சபை சரித்திரங்களில் உண்டான மாற்றத்தைப்போல் இனியொரு மாற்றம் உண்டாகுமா என்று தெரியாது. ஆனால் கிறிஸ்துவுக்கு நேராய் திரும்புதல் அவசியமாயுள்ளது. தேவன் தாம் நியமித்த மனுஷனாகிய இயேசு கிறிஸ்துவை கொண்டு நியாயம் விசாரிக்கும் நாளில் கிறிஸ்துவையும், கிறிஸ்துவின் உபதேசத்தையும் பிரசங்கிக்காத நீர் எப்படி அவர் முன்னிலையில் தலை நிமிர்ந்து நிற்பீர் என்பதை நினைவு கூருவீர். 


பணம் பொருளுக்காக இயேசுவை விடாதீர். ஆடம்பர வாழ்வுக்காக இயேசுவை விடாதீர். கஷ்டமில்லாம வாழ்வதற்காக இயேசுவை விடாதீர். வளைந்து – நெழிந்து வாழும் வாழ்க்கையல்ல கிறிஸ்தவம், தலைநிமிர்ந்து வாழும் வாழ்க்கை கொண்டதுவே கிறிஸ்தவம். 


பொருளாசை கொண்டவனை விட்டும், பணத்தாசை உடையவனை விட்டும், ஆடம்பர வாழ்வை விரும்புகிறவனை விட்டும் விலகி வழ கற்றுக்கொள்ளுங்கள். 


அவர்களுக்குப் பங்காளிகளாகாதிருங்கள். முற்காலத்தில் நீங்கள் அந்தகாரமாயிருந்தீர்கள், இப்பொழுதோ கர்த்தருக்குள் வெளிச்சமாயிருக்கிறீர்கள்; வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடந்துகொள்ளுங்கள். ஆவியின் கனி, சகல நற்குணத்திலும் நீதியிலும் உண்மையிலும் விளங்கும். கர்த்தருக்குப் பிரியமானது இன்னதென்று நீங்கள் சோதித்துப்பாருங்கள். கனியற்ற அந்தகாரக் கிரியைகளுக்கு உடன்படாமல், அவைகளைக் கடிந்துகொள்ளுங்கள். 

அவர்களால் ஒளிப்பிடத்தில் செய்யப்படும் கிரியைகளைச் சொல்லுகிறதும் அவலட்சணமாயிருக்கிறதே. 

அவைகளெல்லாம் கடிந்துகொள்ளப்பட்டு வெளிச்சத்தினால் வெளியரங்கமாகும்; வெளியரங்கமாக்குகிறதெல்லாம் வெளிச்சமாயிருக்கிறது. எபேசியர் 5:7-13.

Comments

Popular posts from this blog

CCM Tamil Bible Study - ஆறுதல் தரும் கிறிஸ்து - Comforter Christ

The Lord built Isaac's family - CCM Tamil Bible Study - ஈசாக்கின் குடும்பம் கட்டப்பட்டது

The Lord built Paul - CCM Tamil Bible Study - கட்டி எழுப்பப்பட்ட பவுல்