CCM Tamil Bible Study - கோபம்

வெளி12:12d. பிசாசு மிகுந்த கோபம் கொண்டு.நீதி12:16;16:14;27:3,4;பிர7:9;சங்4:4;76:10;தானி11:36;யோனா4:1;மத்2:16;யாக்1:20.  கோபம் கோபம் மிகவும் பொல்லாதது என்று சொல்வது சரியா என்று எனக்கு தெரியவில்லை. தேவன் கோபம் கொள்வது அவசியமானது என்பதை விவிலியத்தில் படிக்கின்றோம். தேவனுடைய விருப்பத்துக்கு மாறாக மனிதர்கள் போனபோது தேவனுடைய கோபம் வெளிப்பட்டது. தேவகோபம் பற்பல விதமான சிதைவுகளை ஏற்படுத்தியிருந்தாலும் அது தேவனுடைய நீதியையும் பரிசுத்தத்தையும் வழுவாதன்மையையும் வெளிப்படுத்தியது. தேவனுடைய கோபத்தினால் தண்டனை உண்டாயிற்றென்றால் தேவ இரக்கத்தினால் கிருபையும் மீட்பும் உண்டாயிற்று.  மனிதர்கள் தேவன் மீது கோபம் கொள்வதை விவிலியம் ஏற்றுக்கொள்ளவில்லை. தேவன் மீதும் தேவ ஆளுகை மீதும் கோபம் காண்பித்தவர்கள் அழிந்து போயினர். ஆகையினால் தான் மனித கோபம் தேவ நீதியை எழுப்பாது என்று அதற்கு முற்றுப்புள்ளி போடப்பட்டது. தேவகோபத்துக்கும் மனித கோபத்துக்கும் உண்டான போட்டிகள் சுருங்கி போயின. ஆனால் தேவ கோபத்திற்கும் சாத்தானின் கோபத்திற்கும் இடையில் உண்டான போட்டிகள் உலகம் அழிக்கப்படுவது வரையிலும் சாத்தான் நரகத்தில் தள்ளப்...

CCM Tamil Bible Study - சத்தியம் - Truth

சத்தியம் 

2யோவான்….

2Jn1:1because of the truth which abides in us and will be with us forever: Jn8:32;Gal2:5,14;3:1;5:7;Col1:6;2Thes2:13;1Tim2:4;Heb10:26;1Jn2:21.

2யோவா1:1. நமக்குள் நிலைநிற்கிறதும் என்றென்றும் நம்மோடிருக்கிறதுமாகிய சத்தியம். யோவா8:32;கலா2:5,14; 3:1;5:7;கொலோ1:6;2தெச2:13;1தீமோ2:4;எபி10:26;1யோவா2:21.


பொருள் அடிப்படையில் கிறிஸ்தவ மார்க்கத்தின் சாரத்தை குறிக்கின்றாதாக கூறுகின்றார்கள். ஆனால் சத்தியம் என்ற சொல் இயேசுவை குறிக்கின்றது, இயேசு உபதேசித்தவைகளை குறிக்கின்றது, இயேசுவுக்கு உண்மையோடிருத்தலை குறிக்கின்றது. இந்த இடத்தில் இந்த மூன்றில் எதை குறிக்கின்றது என்பதை நாம் கவனிப்போமாக. 


சத்தியம் என்பது நமக்குள் நிலைநிற்கிறது மட்டுமல்ல, என்றென்றைக்கும் நம்மோடிருப்பதுமாகிய சத்தியம் என்று கூறுகின்றார் யோவான். 1யோவான் 1:1 ல் ஜீவவார்த்தை என்று கூறியவர் இங்கு சத்தியம் என்று கூறுகின்றார். இந்த இரண்டு இடங்களிலும் ஒரே விஷயத்தை வித்தியாசமாகக் கூறுகின்றார். அதாவது மாம்சத்தில் வந்த இயேசுவை ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று அறிந்து நம்பி அறிக்கையிடுவதேயாகும். இயேசுவை அறிக்கையிட்டவர் எவரும் அவரது உபதேசத்தையும் பின்பற்றுகிறவராயிருப்பர். இந்த இரண்டையும் இணைத்து சத்தியம் என்று கூறுகின்றார். இயேசுவை விசுவாசித்து ஏற்றுக்கொள்கிற எவரும் இயேசுவை உடையவர்களாகவும், அவரின் உபதேசத்தை உடையவர்களாகவும் இருப்பர். ஆகவே அவர்கள் சத்தியவான்கள் என்று அழைக்கப்படுவர். 


சமீபகாலமாக சத்தியம் என்பதை ஆவியின் வரங்களை வைத்தும், இறையியல் சித்தாங்களை வைத்தும் உபதேசிக்கும் பாங்கு பெருகியதினால் கிறிஸ்துவை போல மாறுகிறவர்கள் குறைந்துபோய் கலகங்களும், சண்டைகளும், பிரிவினைகளும், மார்க்கபேதங்களும் சபைகளில் மலிந்து காணப்படுகின்றன.  இன்னும் ஒருபடி மேலே போய் ஐசுவரியவான்களாவதே சத்தியத்தின் சாரம் என்றும் போதிக்கிற அளவுக்கு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இதனை மாற்றியமைக்க வேண்டும். 


சத்தியத்தை அறிதல் என்பது இயேசுவை இன்னார் என்று அறிவதேயாகும். இந்த அறிவு எல்லா அடிமைதனத்திலிருந்தும் விடுதலை பெற வழி. உள்ளே நிற்கவேண்டியதும், கூடவே இருக்க வேண்டியதும் சத்தியமாகிய இயேசுவே. இயேசுவை விசுவாசிப்பதின்மூலம் இயேசு நமக்குள் வாழ்கிறார்.  நம்மோடுகூட வாழ்கிறார். இயேசுவை உயிருள்ளவராக வெளிபடுத்துவதே சத்தியமாகும். உலகமோ, ஐசுவரியமோ,கல்வியோ வேறு எந்த ஒன்றோ நம்மில் நிலைநிற்க இடம் தராதிருப்போமாக. 


அம்மாள் என்ற சபையின் மூப்பர் இயேசுவை ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாக அறிக்கையிட்டு தனக்குள் நிலைநிறுத்திக்கொண்டதினால் சத்தியத்தை அறிந்துக்கொண்டவராக உள்ளார். நிலைத்து நிற்கும் சத்தியம், அழியாத சத்தியம் இயேசு கிறிஸ்துவே. இயேசுவை கொண்டிருப்பவர்கள் வாழும் இயேசுக்களாக பரிணபிப்பர். இயேசுவின் சாயலாக மாறுவர். இயேசுவைபோல ஜெயிக்கிறவர்களாக காணப்படுவர். வரங்களல்ல கனியே முக்கியம். நான் என்ன செய்தேன் என்பது முக்கியமல்ல நான் இப்பொழுது எப்படியிருக்கிறேன் என்பதே முக்கியம். 


சத்தியவாசகன் நீதியை வெளிப்படுத்துவான்; பொய்ச்சாட்சிக்காரனோ வஞ்சகத்தை வெளிப்படுத்துவான். 

பட்டயக்குத்துகள்போல் பேசுகிறவர்களும் உண்டு; ஞானமுள்ளவர்களுடைய நாவோ ஔஷதம். சத்திய உதடு என்றும் நிலைத்திருக்கும்; பொய் நாவோ ஒரு நிமிஷமாத்திரம் இருக்கும். நீதி 12:17-19..


இயேசு தம்மை விசுவாசித்த யூதர்களை நோக்கி: நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள்; சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார். என்னிடத்தில் பாவம் உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தக்கூடும்? நான் சத்தியத்தைச் சொல்லியிருக்க, நீங்கள் ஏன் என்னை விசுவாசிக்கிறதில்லை. தேவனால் உண்டானவன் தேவனுடைய வசனங்களுக்குச் செவிகொடுக்கிறான்; நீங்கள் ஏன் என்னை விசுவாசிக்கிறதில்லை. நீங்கள் தேவனால் உண்டாயிராதபடியினால் செவிகொடாமலிருக்கிறீர்கள் என்றார். யோவான் 8:31,32,46,47

Comments

Popular posts from this blog

CCM Tamil Bible Study - ஆறுதல் தரும் கிறிஸ்து - Comforter Christ

The Lord built Isaac's family - CCM Tamil Bible Study - ஈசாக்கின் குடும்பம் கட்டப்பட்டது

The Lord built Paul - CCM Tamil Bible Study - கட்டி எழுப்பப்பட்ட பவுல்