CCM Bible Study - யோவானின் விருப்பம் - John's wish
- Get link
- X
- Other Apps
யோவானின் விருப்பம்
2Jn1:12. Having many things to write to you, I did not wish to do so with paper and ink; but I hope to come to you and speak face to face, that our joy may be full. Jn16:12;15:11;17:13;Rom15:24;1Cor16:5-7;Phila1:22;Heb13:19,23.
2யோவா1:12. எழுதுவதை விடவும் முகமுகமாய் சந்திப்பதையே விரும்புகின்றார். யோவா16:12;15:11;17:13;ரோம15:24;1கொரி16:5-7;பிலோ1:22;எபி13:19,23.
2 ஆம் வசனத்தில் மூப்பனாகிய நான் என்று தன்னை அறிமுகம் செய்தவர் சத்தியமாவது என்னவென்று கூறிவிட்டு சில தனிப்பட்ட விபரங்களை இந்த சிறிய வசனத்துக்குள் பொதிந்து அனுப்புகின்றார்.
நான் எழுதவேண்டியவைகள் ஏராளமுண்டு. ஏற்கனவே ஏராளமான விஷயங்களை தெளிவுபடுத்தியவர் இன்னும் ஏராளமான காரியங்கள் உண்டு என்று கூறியிருப்பதினால் யோவான் 21:25 ல் சொல்லப்பட்டுள்ளதை நினைவு படுத்துகின்றது. ஆகவே இவர் யோவான் அப்போஸ்தலன் என்று நம்பலாம். தேவனுடைய மனிதர்களுக்கு எழுத்துதுறை தேவனால் கொடுக்கப்பட்டுள்ள ஒரு வரம் ஆகும். ஞானத்தின் ஆவியால் நிரப்பப்பட்டவர்களுக்கு இந்த தாலந்தைக் கொடுக்கிறார். சத்தியத்தை துலாம்பாரமாக வெளிப்படுத்த எழுத்தேடுகள் பெரும் உதவி செய்கின்றன. ஆதிகாலந்தொட்டு பரிசுத்த மனிதர்கள் பரிசுத்த ஆவியினால் ஏவப்பட்டு எழுதினார்கள் என்பது உண்மையாயின் கிறிஸ்துவை குறித்த உண்மைகளை பிற்கால சந்ததிகளுக்காக எழுதிவைப்பது அவசியமாகும். நானும் ஒரு எழுத்துதுறை சார்ந்தவனே. ஒரு ஊழியனுக்கு பிரசங்க தாலந்து, கற்பிக்கும் தாலந்து, எழுத்து தாலந்து அவசியமாகும். செய்திகளை எழுதிவைத்து பேசுவது மிகுந்த நன்மை பயக்கும்.
நான் உங்களை முகமுகமாய் சந்திக்க விரும்புகின்றேன். இந்த யோவான் அப்போஸ்தலன் தான் எழுதி தெரிவிக்கும் சபை எதுவென்று தெரியவில்லை. ஆனால் அந்த சபையோரை முகமுகமாய் சந்திக்க விரும்புவதாக கூறுகின்றார். இதற்குரிய காரணம் என்னவெனில் அவர்கள் தன்னை காணவேண்டும் என்று பலகாலங்களாக விரும்புவதேயாகும். அவர்கள் தன்னை கண்டு சந்தோஷபட விரும்புகின்றார்கள். கிறிஸ்துவுக்குள் தங்களை பெற்றெடுத்த தந்தையை போன்ற யோவானை காண வாஞ்சிப்பதும், காண்பதின் சந்தோஷமும் உலகபிரகாரமானதல்ல. விசுவாசிகள் தங்களுடைய ஆவிக்குரிய தகப்பனாகிய சபை போதகர் மேல் பற்றுள்ளவர்களாகவும், அவர்களை மனதார கிறிஸ்துவுக்குள் நேசிக்கிறவர்களாகவும் இருக்க வேண்டும். சபையாருக்கும் போதகருக்கும் இடையில் உள்ள ஆனந்தமயமான உறவு உலகபிரகாரமானதல்ல, பரலோகத்தின் முன் ருசியாகும்.
நேரடியாக பேசுவதை விரும்புகின்றார் யோவான். சத்தியங்கள் சிறு சிறு குழுக்களுக்கு எடுத்துரைத்ததினிமித்தம் ஆதிசபை காலங்களில் பல தேசங்களில் சபைகள் பரம்பலாயிற்று. தனி நபருக்கு விளக்கிக் காண்பித்தல், குழுக்களுக்கு விளக்கிக் காண்பித்தல், வீட்டாருக்கு விளக்கிக் காண்பித்தல் சத்தியத்திலே தெளிவுபெறவும் ஆவிக்குரிய வாழ்வில் வளர்ச்சியடையவும் கிறிஸ்துவுக்கு நல்ல பணியாட்களாக விளங்கவும் பயன்படுகிறது. சமீபகாலமாக இத்தியாதி திருப்பணிகள் சுருங்கிப்போய் சபையிலே பிரசங்கிப்பதோடு நின்றுப்போய் விட்டது. இதினிமித்தம் சத்தியத்தின் விஸ்தாரம் சுருங்கிபோய் கிறிஸ்துவின் மாண்பு மங்கிக்கொண்டு வருகின்றது. சபை போதகர்கள் வீட்டு குழுக்களை உருவாக்கி வீட்டு தலைவர்களையே வீட்டு சபையின் ஊழியர்களாக்க முன்வந்தால் நலமாயிருக்குமோ?. அந்த வீட்டு தலைவர்கள் வாரமொருமுறை கூடிவரச் செய்து சத்தியத்தை விக்கிக்காட்டினால் எல்லா இடங்களிலும் கிறிஸ்துக்கள் எழும்புவார்களல்லவா?..
சபைகளில் இவைகளை உங்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும்படிக்கு இயேசுவாகிய நான் என் தூதனை அனுப்பினேன். நான் தாவீதின் வேரும் சந்ததியும், பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரமுமாயிருக்கிறேன் என்றார்.
ஆவியும் மணவாட்டியும் வா என்கிறார்கள்; கேட்கிறவனும் வா என்பானாக; தாகமாயிருக்கிறவன் வரக்கடவன்; விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளக்கடவன். இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கேட்கிற யாவருக்கும் நான் சாட்சியாக எச்சரிக்கிறதாவது: ஒருவன் இவைகளோடே எதையாகிலும் கூட்டினால், இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற வாதைகளை தேவன் அவன்மேல் கூட்டுவார். ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும் இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார். இவைகளைச் சாட்சியாக அறிவிக்கிறவர் மெய்யாகவே நான் சீக்கிரமாய் வருகிறேன் என்கிறார். ஆமென், கர்த்தராகிய இயேசுவே, வாரும். நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென். வெளிபடுத்தல் 22: 16-21.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment