CCM Tamil Bible Study - கோபம்

வெளி12:12d. பிசாசு மிகுந்த கோபம் கொண்டு.நீதி12:16;16:14;27:3,4;பிர7:9;சங்4:4;76:10;தானி11:36;யோனா4:1;மத்2:16;யாக்1:20.  கோபம் கோபம் மிகவும் பொல்லாதது என்று சொல்வது சரியா என்று எனக்கு தெரியவில்லை. தேவன் கோபம் கொள்வது அவசியமானது என்பதை விவிலியத்தில் படிக்கின்றோம். தேவனுடைய விருப்பத்துக்கு மாறாக மனிதர்கள் போனபோது தேவனுடைய கோபம் வெளிப்பட்டது. தேவகோபம் பற்பல விதமான சிதைவுகளை ஏற்படுத்தியிருந்தாலும் அது தேவனுடைய நீதியையும் பரிசுத்தத்தையும் வழுவாதன்மையையும் வெளிப்படுத்தியது. தேவனுடைய கோபத்தினால் தண்டனை உண்டாயிற்றென்றால் தேவ இரக்கத்தினால் கிருபையும் மீட்பும் உண்டாயிற்று.  மனிதர்கள் தேவன் மீது கோபம் கொள்வதை விவிலியம் ஏற்றுக்கொள்ளவில்லை. தேவன் மீதும் தேவ ஆளுகை மீதும் கோபம் காண்பித்தவர்கள் அழிந்து போயினர். ஆகையினால் தான் மனித கோபம் தேவ நீதியை எழுப்பாது என்று அதற்கு முற்றுப்புள்ளி போடப்பட்டது. தேவகோபத்துக்கும் மனித கோபத்துக்கும் உண்டான போட்டிகள் சுருங்கி போயின. ஆனால் தேவ கோபத்திற்கும் சாத்தானின் கோபத்திற்கும் இடையில் உண்டான போட்டிகள் உலகம் அழிக்கப்படுவது வரையிலும் சாத்தான் நரகத்தில் தள்ளப்...

CCM Tamil Bible Study - வாழ்ந்திரு - Live

வாழ்ந்திரு

3Jn1:2. Beloved, I pray that you may prosper in all things and be in health, just as your soul prospers. Phil2:4,27;Col1:3-6;1Thes1:3-10;2:13,14,19,20;3:6,7;2Pet1:3-9;3:18;Rev2:9. 

3யோவா1;2. பிரியமானவனே உன் ஆத்துமா வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்க வேண்டுகிறேன். பிலி2:4,27;கொலோ1:3-6;1தெச1:3-10;2:13,14,19,20;3:6,7;2பேது1:3-9;3:18;வெளி2:9. 


மூப்பனாகிய யோவான் சத்தியத்தின்படி நடக்கிற காயுவை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறார். முதலாவது, சத்தியத்தின்படி நடக்கிறவன் இவ்விதமாய் வாழவேண்டும் என்று விரும்பி ஆண்டவரிடம் மன்றாடுவதாக கூறுகின்றார். இரண்டாவதாக மூப்பனாகிய யோவான் சத்தியத்தின்படி வாழ்கிறவர்களை தேவன் இவ்வ்விதமாக வாழவைக்கிறார் என்று நம்பியிருந்தார். ஏனென்றால் உத்தமனுக்கு கர்த்தர் துணை என்றும், உண்மையுள்ளவன் பரிபூரண ஆசீர்வாதங்கள் பெறுவான் என்றும் யோவான் நம்பியிருந்தார். 


உன் ஆத்துமா வாழ்கிறதுபோல நீ வாழ வேண்டும். பாவத்திலிருந்தும் அதன் அடிமைதனத்திலிருந்தும் மீட்கப்பட்ட காயுவின் ஆத்துமா கிறிஸ்துவுக்குள் பாதுகாப்பாகவும், தைரியமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்கிறது என்பதை யோவான் அறிந்திருந்தார். ஏனெனில் நடக்கையிலும், பேச்சிலும், வாழ்வியல் முறைமையிலும், செயலிலும் சத்தியத்தின்படி வாழந்தார் காயு. அது மட்டுமல்ல அப்போஸ்தலர்களுக்கும், கிறிஸ்தவ தலைவர்களுக்கும் தாராளமாக உதவி செய்கிறவராகவும், அவர்களை தேற்றுகிறவராகவும் காணப்பட்டார். தாம் செய்கிறவைகளை மனப்பிரியத்தோடும், உற்சாகத்தோடும், ஆவியின் பெலத்தோடும் செய்திருந்தார். ஆகையினால் காயுவின் ஆத்துமா பெலத்தோடும், அறிவோடும், ஆனந்தத்தோடும் , நிம்மதியோடும் காணப்பட்டது. 


இரண்டாவது உன் ஆத்துமாவானது உன் சரீரத்தில் சுகமாய் வாழ்கிறது. ஏனெனில் இவர் மாம்சத்தில் காணப்பட்டாலும் இவ்வுலகத்தில் காணப்பட்டாலும் மாம்சத்துக்குரியவைகளையோ, உலகத்துக்குரியவைகளையோ, பேய்தனத்துக்கடுத்தவைகளையோ சார்ந்துப் போகாமல் உடல் பூர்வமாகவும் தேவனுக்கு பிரியமானவானாக காணப்பட்டார். நல்ல ஆரோக்கியத்தோடும், சுறுசுறுப்போடும் காணப்பட்டார். ஆகையினால் கர்த்தருடைய வருகை தாமதிக்குமானால் காயுவின் ஆன்மா காயுவின் சரீரத்தில் நீண்ட நாட்கள் வாழ்ந்திருக்க வேண்டும் என்று விரும்புகின்றார். 


மூன்றாவது, காயு எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்க  வாழ்த்துகிறார். ஏனெனில் அள்ளிக்கொடுத்து குறைவுப்பட்டுப்போககூடாது என்றும், நற்கிரியைகளும் சுவிசேஷ பணியும் தீவிரமாக செய்து உடல் பலவீனப்பட்டுபோகாமல் ஆரோக்கியமாக காணப்பட்டு நீண்ட நாள் சுகத்தோடும் பெலத்தோடும் காணப்பட வேண்டும். ஆகாரகுறைவோ, சுக குறைவோ, தங்குமிடகுறைவோ, சமாதான குறைவோ உண்டாகாமல் செழிப்பாகவும், நிறைவாகவும், பரிபூரணமாகவும் காணப்பட வேண்டும் என்று வாழ்த்துகின்றார். தேவனுடைய இராஜ்யம் கட்டப்படுவதற்காக தன் செல்வங்களையே இழக்க துணிந்த காயுவுக்கு தேவன் அதிகபடியான செல்வங்களை கொடுக்க விரும்புகின்றார்.   சுயநலமாக சேர்த்துக்கொள்ள துடிக்கும் தேவ ஊழியர்கள் மத்தியில் பிறர் நலத்தினிமித்தம் செழிப்படையும்படி யாக விரும்புவதுதான் தேவனுக்கு பிடிக்கும். 


பிறர் வாழ நான் வாழ்ந்திருக்க வேண்டும்.

பிறர் திருப்தியடைய நான் செழிப்படைய வேண்டும்.


ஆபத்துநாளிலே கர்த்தர் உமது ஜெபத்தைக் கேட்பாராக; யாக்கோபின் தேவனுடைய நாமம் உமக்கு உயர்ந்த அடைக்கலமாவதாக. அவர் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து உமக்கு ஒத்தாசையனுப்பி சீயோனிலிருந்து உம்மை ஆதரிப்பாராக. நீர் செலுத்தும் காணிக்கைகளையெல்லாம் அவர் நினைத்து, உமது சர்வாங்க தகனபலியைப் பிரியமாய் ஏற்றுக்கொள்வாராக. அவர் உமது மனவிருப்பத்தின்படி உமக்குத் தந்தருளி, உமது ஆலோசனைகளையெல்லாம் நிறைவேற்றுவாராக. நாங்கள் உமது இரட்சிப்பினால் மகிழ்ந்து, எங்கள் தேவனுடைய நாமத்திலே கொடியேற்றுவோம்; உமது வேண்டுதல்களையெல்லாம் கர்த்தர் நிறைவேற்றுவாராக. சங்கீதம் 20:1-5.

Comments

Popular posts from this blog

CCM Tamil Bible Study - ஆறுதல் தரும் கிறிஸ்து - Comforter Christ

The Lord built Isaac's family - CCM Tamil Bible Study - ஈசாக்கின் குடும்பம் கட்டப்பட்டது

The Lord built Paul - CCM Tamil Bible Study - கட்டி எழுப்பப்பட்ட பவுல்