CCM Tamil Bible Study - கோபம்

வெளி12:12d. பிசாசு மிகுந்த கோபம் கொண்டு.நீதி12:16;16:14;27:3,4;பிர7:9;சங்4:4;76:10;தானி11:36;யோனா4:1;மத்2:16;யாக்1:20.  கோபம் கோபம் மிகவும் பொல்லாதது என்று சொல்வது சரியா என்று எனக்கு தெரியவில்லை. தேவன் கோபம் கொள்வது அவசியமானது என்பதை விவிலியத்தில் படிக்கின்றோம். தேவனுடைய விருப்பத்துக்கு மாறாக மனிதர்கள் போனபோது தேவனுடைய கோபம் வெளிப்பட்டது. தேவகோபம் பற்பல விதமான சிதைவுகளை ஏற்படுத்தியிருந்தாலும் அது தேவனுடைய நீதியையும் பரிசுத்தத்தையும் வழுவாதன்மையையும் வெளிப்படுத்தியது. தேவனுடைய கோபத்தினால் தண்டனை உண்டாயிற்றென்றால் தேவ இரக்கத்தினால் கிருபையும் மீட்பும் உண்டாயிற்று.  மனிதர்கள் தேவன் மீது கோபம் கொள்வதை விவிலியம் ஏற்றுக்கொள்ளவில்லை. தேவன் மீதும் தேவ ஆளுகை மீதும் கோபம் காண்பித்தவர்கள் அழிந்து போயினர். ஆகையினால் தான் மனித கோபம் தேவ நீதியை எழுப்பாது என்று அதற்கு முற்றுப்புள்ளி போடப்பட்டது. தேவகோபத்துக்கும் மனித கோபத்துக்கும் உண்டான போட்டிகள் சுருங்கி போயின. ஆனால் தேவ கோபத்திற்கும் சாத்தானின் கோபத்திற்கும் இடையில் உண்டான போட்டிகள் உலகம் அழிக்கப்படுவது வரையிலும் சாத்தான் நரகத்தில் தள்ளப்...

CCM Tamil Bible Study - விலகியிரு - Stay away

விலகியிரு 

1Jn5:21a. Little children, keep yourselves from idols. Amen. Lev19:4;26:1;1Kin14:9;1Chr16:26;Ps106:36,38;Isa2:18;42:8;45:10;1Cor12:2;2Cor6:16;1Thes1:9;Rev9:20.

1யோவா5:21a. பிள்ளைகளே, நீங்கள் விக்கிரகங்களுக்கு விலகியிருங்கள். லேவி19:4;26:1;1இரா14:9;1நாளா16:26; சங்106:36,38;ஏசா2:18;42:8;45:10;1கொரி12:2;2கொரி6:16;1தெச1:9;வெளி9:20. 

விக்கிரகங்கள் குறித்து தாவீது இராஜா தனது சங்கீதத்தில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். சங்115:14-18. விக்கிரகங்கள் யாவும் காற்றும், வெறுமையுமானவைகள் என்று ஏசாயா கூறுகின்றார். 41:29. விக்கிரகங்களை உண்டாக்குகிறவர்கள் யாவரும் வீணராயுள்ளார்கள் என்றும், அவைகள் ஒன்றுக்கும் உதவாதவைகள் என்றும் ஏசாயா கூறுகின்றார். 44:9-20. அவைகள் ஒன்றுக்கும் உதவாதவைகள் ஆனதினால் சுட்டெரிக்கப்படுதலே அவைகளுக்கான இறுதி முடிவாகும். உபா12:3.


விக்கிரகங்கள் ஏராளமாயுள்ளன. நாட்டுக்கு நாடு, மாநிலத்துக்கு மாநிலம், ஊருக்கு ஊரு, தெருவுக்கு தெரு, வீட்டுக்கு வீடு, நபருக்கு நபர் விக்கிரகங்கள் உலகமெங்கும் பெருகிக்கிடக்கின்றன. குப்பைகள் பெருகிக்கிடப்பதுபோல இவைகளும் பெருகிக்கிடக்கின்றன. வெளியே எறியப்படவேண்டிய குப்பைகளை கோபுரத்தில் வைத்து பாலூற்றி, நெய்யூற்றி, அபிஷேகம் செய்கிறார்கள். ஒழிக்கப்படவேண்டியவைகளை சுமந்து திரிகிறார்கள். விக்கிரகங்கள் நாட்டு தெய்வங்களாகவும், குல தெய்வங்களாகவும், வீட்டு தெய்வங்களாகவும் பரிணாமம் பெற்று உண்மை கடவுளை வைத்திருக்கவேண்டிய இடத்தில் வைத்து அழகு பார்க்கிறார்கள். எல்லா விக்கிரகங்களையும் மூஞ்சூறுகளுக்குள் எறிந்துவிடும் நாடகள் வரும். ஏசா2:21. 


விக்கிரகங்களினிமித்தம் அனேக புராண கதைகளும். கட்டுகதைகளும், கிழவிகள் பேச்சுகளும் உண்டாகி உபதேசங்களாக மாறி புனிதத்துவம் பெற்று தேசமெங்கும், மனித மனங்களிலெங்கும் பரவிக்கொண்டிருக்கின்றது. இவைகளுக்கு பொய் போதகம் என்று  விவிலியம் பெயர் தருகின்றது. ஆப2:18;ஏசா9:15. இந்த பொய் போதகங்களே முற்காலத்திலிருந்து இக்காலம் வரையிலும் எல்லாவிதமான கள்ள போதகங்களுக்கும், கள்ள தீர்க்கதரிசனங்களுக்கும், கள்ள உபதேசங்களுக்கும் அடித்தளமாயுள்ளது. தேவனுடைய ஆவியை பெற்றிராததினாலோ, உண்மையான மனந்நிரும்புதல் இல்லாததினாலோ, ஒழுக்கம்ற்ற வாழ்வு உடையதினாலோ, பொய்களை பழக்கமாக கொண்டிருப்பதினாலோ, விவிலியத்துக்கு மாறான புத்தகங்களை படித்து அறிவு கொழுத்ததினாலோ பொய்களின் ஆவியால் பிடிபட்டு பொய் போதகர்களாகிவிட்டனர். 


விவிலியத்தில் இரண்டுவிதமான விக்கிரகம் உள்ளது. ஒன்று அஞ்ஞானிகள் கும்பிடும் தெய்வங்கள் சார்ந்தவை. இன்னொன்று பொருளாசையுள்ள விக்கிரகாராதனை (எபே5:5;கொலோ3:5). விக்கிரகங்களை கும்பிடுகிறவர்கள் கிறிஸ்தவர்களல்ல. ஆனால் பொருளாசையாகிய விக்கிரகத்தை நாடுகிறவர்களும், அதன்பின்னால் ஓடுகிறவர்களும், அவைகளை போதிக்கிறவர்களும் விக்கிரகங்களை கும்பிடும் கிறிஸ்தவர்களாயுள்ளனர். நல்ல கிறிஸ்தவ முன்மாதிரியைக் கொண்டிருந்த பெந்தேகோஸ்தே மற்றும் தனித்தாள் ஊழியர்கள் இத்தகைய மாயை நிறைந்த பொருளாசையாகிய விக்கிரகாராதனை செய்து  தங்களையும் கெடுத்து, தேவனுடைய சந்நிதானத்தையும் கெடுத்து, விசுவாச குடும்பங்களையும் வழிவிலகச் செய்கிறவர்களாயுள்ளனர். . இந்த ஆவிகளின் கிரியைகள் தற்சமயம் மெயின்லைன் சபையாரையும் பிடித்துக் கொண்டுவிட்டது. 

சபையே விக்கிரகங்களை விட்டு விலகி ஓடு. இல்லையெனில் ஒருவராலும் அவிக்கவியலாத அக்கினியில் அகப்பட்டுக் கொள்வாய். 

ஆதலால் புறஜாதிகளில் தேவனிடத்தில் திரும்புகிறவர்களைக் கலங்கப்பண்ணலாகாதென்றும், 

விக்கிரகங்களுக்குப் படைத்த அசுசியானவைகளுக்கும், வேசித்தனத்திற்கும், நெருக்குண்டு செத்ததிற்கும், இரத்தத்திற்கும், விலகியிருக்கும்படி அவர்களுக்கு நாம் எழுதவேண்டுமென்றும் நான் தீர்மானிக்கிறேன். விசுவாசிகளான புறஜாதியார் இப்படிப்பட்டவைகளைக் கைக்கொள்ளாமல், விக்கிரகங்களுக்குப் படைத்ததிற்கும், இரத்தத்திற்கும், நெருக்குண்டு செத்ததிற்கும், வேசித்தனத்திற்கும், விலகியிருக்கவேண்டுமென்று நாங்கள் தீர்மானம்பண்ணி, அவர்களுக்கு எழுதியனுப்பினோமே என்றார்கள். அப்போஸ்தலர் 15:19,20, 21:25.

நீங்கள் அஞ்ஞானிகளாயிருந்தபோது ஏவப்பட்டபடியே, ஊமையான விக்கிரகங்களிடத்தில் மனதைச் செலுத்தினீர்களென்று உங்களுக்குத் தெரியுமே.1கொரிந்தியர் 12:2

தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தமேது? நான் அவர்களுக்குள்ளே வாசம்பண்ணி, அவர்களுக்குள்ளே உலாவி அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனங்களாயிருப்பார்கள் என்று, தேவன் சொன்னபடி, நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களே. 2கொரிந்தியர் 6:16

ஆகையால் எனக்குப் பிரியமானவர்களே, விக்கிரகாராதனைக்கு விலகி ஓடுங்கள். 1கொரிந்தியர் 10:14

Comments

Popular posts from this blog

CCM Tamil Bible Study - ஆறுதல் தரும் கிறிஸ்து - Comforter Christ

The Lord built Isaac's family - CCM Tamil Bible Study - ஈசாக்கின் குடும்பம் கட்டப்பட்டது

The Lord built Paul - CCM Tamil Bible Study - கட்டி எழுப்பப்பட்ட பவுல்