CCM Tamil Bible Study - கோபம்

வெளி12:12d. பிசாசு மிகுந்த கோபம் கொண்டு.நீதி12:16;16:14;27:3,4;பிர7:9;சங்4:4;76:10;தானி11:36;யோனா4:1;மத்2:16;யாக்1:20.  கோபம் கோபம் மிகவும் பொல்லாதது என்று சொல்வது சரியா என்று எனக்கு தெரியவில்லை. தேவன் கோபம் கொள்வது அவசியமானது என்பதை விவிலியத்தில் படிக்கின்றோம். தேவனுடைய விருப்பத்துக்கு மாறாக மனிதர்கள் போனபோது தேவனுடைய கோபம் வெளிப்பட்டது. தேவகோபம் பற்பல விதமான சிதைவுகளை ஏற்படுத்தியிருந்தாலும் அது தேவனுடைய நீதியையும் பரிசுத்தத்தையும் வழுவாதன்மையையும் வெளிப்படுத்தியது. தேவனுடைய கோபத்தினால் தண்டனை உண்டாயிற்றென்றால் தேவ இரக்கத்தினால் கிருபையும் மீட்பும் உண்டாயிற்று.  மனிதர்கள் தேவன் மீது கோபம் கொள்வதை விவிலியம் ஏற்றுக்கொள்ளவில்லை. தேவன் மீதும் தேவ ஆளுகை மீதும் கோபம் காண்பித்தவர்கள் அழிந்து போயினர். ஆகையினால் தான் மனித கோபம் தேவ நீதியை எழுப்பாது என்று அதற்கு முற்றுப்புள்ளி போடப்பட்டது. தேவகோபத்துக்கும் மனித கோபத்துக்கும் உண்டான போட்டிகள் சுருங்கி போயின. ஆனால் தேவ கோபத்திற்கும் சாத்தானின் கோபத்திற்கும் இடையில் உண்டான போட்டிகள் உலகம் அழிக்கப்படுவது வரையிலும் சாத்தான் நரகத்தில் தள்ளப்...

CCM Tamil Bible Study - அம்மாள் -To the elect lady and her children

அம்மாள்

 2Jn1:2. To the elect lady and her children, whom I love in truth, 2Jn1:5,13;Lk1:1-3;2:36-38;8:3;Eph1:4-6;1Thes1:3,4;2Thes2:13,14;1Pet1:1,2;1Tim5:3-5,9,10. 

2யோவா1:2. அம்மாளுக்கும் அவளுடைய பிள்ளைகளுக்கும் எழுதுகிறதாவது. 2யோவா1:5,13;லூக்1:1-3;2:36-38;8:3;எபே1:4-6;1தெச1:3,4;2தெச2:13,14;1பேது1:1,2;1தீமோ5:3-5,9,10.

இவர் யார் என்று தெரியவில்லை. ஆனால் இவரின் குணம் குறித்து மிகையாக எழுதப்பட்டுள்லளது. அவளை தெரியாவிட்டாலும் அவளின் தன்மைகள் தெளிவுள்ளவைகளாயிருப்பதினால் அவைகளை நாம் கவனத்தில் கொள்ளல் வேண்டும். இந்த அம்மாள் சத்தியத்தை அறிந்திருக்கிறவர்களால் நேசிக்கப்பட்டவரும், தெரிந்துக் கொள்ளப்பட்டவருமாயிருக்கிறார். அழைக்கப்பட்டவர்கள் தெரிந்துக்கொள்ளபட முன்னேறுகிறவர்களாயிருக்க வேண்டும். சபைகளில் தெரிந்துக்கொள்ளபடும்படி அழைக்கப்பட்டவர்கள் என்று நிருப ஆசிரியர்களால் குறிக்கப்பட்டிருப்பது கவனிக்கதக்கது. 

ஒரு பெண் தலைவியாயிருக்கும் அம்மாள் தெரிந்துக்கொள்ளப்படுதலுக்கென்று உயர்வு பெறக் காரணம் என்ன?.சத்தியவாசகர்களால் மிகவும் நேசிக்கப்பட தக்கவராய் மாற காரணம் என்ன?. முதலாவது இவர் தான் மட்டுமல்ல தன்னுடைய குடும்பத்தில் உள்ள தூரத்து உறவினர்களைக்கூட கிறிஸ்துவுக்குள் வழிநடத்தி தேவனால் தெரிந்துக்கொள்ளபடுதலுக்கு கொண்டு வந்துள்ளார். வச13. இரண்டாவது இவர் கற்பனைகளில் நடக்கிறவராயிருந்துள்ளார். கற்பனைகளை கேட்கிறவராக மட்டுமல்லாது அதன்படி நடக்கிறவர்களாகவும், செய்கிறவர்களாகவும் இருந்துள்ளனர். வச4. மூன்றாவது இயேசுவை குறித்து வெளிப்படையான சாட்சி உடையவராயிருந்தார். மாம்சத்தில் வந்த இயேசுவை ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று வெளிப்படையாக அறிக்கையிட்டு உண்மை கிறிஸ்தவராக வாழ்ந்தார். வச7. நான்காவது அநேக நற்கிரியகளை செய்கிறவராயிருந்தார். கர்த்தரின் ஊழியர்கள் இச்சபைக்கு வரும்போது அவர்களுக்கு உணவு, உறைவிடம் மற்றும் தேவைகளுக்குரிய பொருளாதார உதவி செய்கிறவராயிருந்தார். மட்டுமல்ல சபையில் உள்ள ஏழைகளுக்கும் உதவுகிறவராயிருந்தார். இதனாலே இவரை நேசிக்கிறவர்கள் சபையில் மட்டுமல்ல வெளியூர்களிலும்  காணப்பட்டனர்.  ஐந்தாவது இச்சபையின் பொறுப்பாளராக இருந்து சபையை நன்று கவனித்து வந்தார். சபையின் பொறுப்பாளர்கள் ஊழியர்களின் தேவையை பூர்த்தி செய்கிறவர்களாயுமிருக்க வேண்டும். 

இயேசுவின் காலத்தில் மட்டுமல்ல அவருக்கு பின்பாகவும் சபைகளில் பெண்களின் பங்கு முக்கியமானதாக இருந்துள்ளது. அவர்கள் ஊழியத்துக்கும் ஊழியர்களுக்கும் உதவியாக இருந்துள்ளார்கள். 

உத்தம விதவைகளாகிய விதவைகளைக் கனம்பண்ணு. விதவையானவளுக்குப் பிள்ளைகளாவது, பேரன் பேர்த்திகளாவது இருந்தால், இவர்கள் முதலாவது தங்கள் சொந்தக் குடும்பத்தைத் தேவபக்தியாய் விசாரித்து, பெற்றார் செய்த நன்மைகளுக்குப் பதில் நன்மைகளைச் செய்யக் கற்றுக்கொள்ளக்கடவர்கள்; அது நன்மையும் தேவனுக்கு முன்பாகப் பிரியமுமாயிருக்கிறது. உத்தம விதவையாயிருந்து தனிமையாயிருக்கிறவள் தேவனிடத்தில் நம்பிக்கையுள்ளவளாய், இரவும் பகலும் வேண்டுதல்களிலும் ஜெபங்களிலும் நிலைத்திருப்பாள். அறுபது வயதுக்குக் குறையாதவளும், ஒரே புருஷனுக்கு மனைவியாயிருந்தவளுமாகி, பிள்ளைகளை வளர்த்து, அந்நியரை உபசரித்து, பரிசுத்தவான்களுடைய கால்களைக் கழுவி, உபத்திரவப்படுகிறவர்களுக்கு உதவிசெய்து, சகலவித நற்கிரியைகளையும் ஜாக்கிரதையாய் நடப்பித்து, இவ்விதமாய் நற்கிரியைகளைக்குறித்து நற்சாட்சி பெற்றவளுமாயிருந்தால், அப்படிப்பட்ட விதவையையே விதவைகள் கூட்டத்தில் சேர்த்துக்கொள்ளவேண்டும். 1தீமோத்தேயு 5:3-5,9,10

Comments

Popular posts from this blog

CCM Tamil Bible Study - ஆறுதல் தரும் கிறிஸ்து - Comforter Christ

The Lord built Isaac's family - CCM Tamil Bible Study - ஈசாக்கின் குடும்பம் கட்டப்பட்டது

The Lord built Paul - CCM Tamil Bible Study - கட்டி எழுப்பப்பட்ட பவுல்