CCM Tamil Bible Study - வஞ்சகர்கள் - Deceivers
- Get link
- X
- Other Apps
வஞ்சகர்கள்
2Jn1:7. For many deceivers have gone out into the world who do not confess Jesus Christ as coming in the flesh. This is a deceiver and an antichrist. 2Pet2:1-3;1Jn2:18-22;4:1-3;1Tim3:16;Rev12:9;13:14.
2யோவா1:7. மாம்சத்தில் வந்த இயேசு கிறிஸ்துவை அறிக்கை பண்ணாத வஞ்சகர்கள். 2பேது2:1-3;1யோவா2:18-22;4:1-3;1தீமோ3:16;வெளி12:9;13:14.
மாம்சத்தில் வந்த இயேசு ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று அறிந்து நம்பி அறிக்கையிடுவதே விசுவாசத்தின் ஆவியாகும். இதன் விரிவுரையாகவே 1தீமோ3:16 மற்றும் பிலிப்2:5-11 நமக்கு தரப்பட்டுள்ளது. ஆனால் ஆதிசபை காலங்களிலிருந்து இயேசுவை தேவனுடைய குமாரனென்றும் , கிறிஸ்து என்றும் அறிக்கையிடாத யூத சமயத்தமைந்தவர்கள், உரோமர்கள் மற்றும் பலவகையினரும் இருந்து வந்துள்ளனர். இவர்களின் வாக்குகளையும், விவாதங்களையும் கவனித்த அனேக கிறிஸ்தவ பெரியோர்களும் கூட இந்த விசுவாசத்தின் ஆவியை விட்டு விட்டவர்களாய் இயேசுவின் மானுடவதாரத்தை மட்டுமே மிகைபடுத்தி போதித்தவர்களாகவும் அல்லது அவரின் தெய்வதன்மையை மட்டுமே மிகைபடுத்துகிறவர்களாகவும் மாறிப்போய் அனேக கள்ள உபதேசங்களை பர்ப்புகிறவர்களாயினர். இப்படிப்பட்ட கள்ளதனமானவர்கள் தோன்றுவார்கள் என்பதை பவுல் மற்றும் பேதுரு போன்றவர்கள் பல தடவைகளிலும் எச்சரித்திருந்தனர். இங்கு யோவானும் எச்சரிக்கின்றார்.
வஞ்சகர்கள் என்போர் ஆதி மனிதர்களை ஏமாற்றிய - வஞ்சித்த சாத்தானின் ஆவியையும், வலுசர்ப்பத்தின் ஆவியையும் உடையவர்கள். இயேசு கிறிஸ்துவின் பூலோக வாழ்வின் தூய்மையே கிறிஸ்தவத்தின் அச்சாணியாகும். . அவரைபோல மாறுவதற்கான நமக்குரிய சாயல் இயேசு கிறிஸ்துவே. இந்த சாயலை மறுக்கிற யாவரும் சாத்தானின் ஆவியையுடையவர்கள். இயேசுவின் சாயலாக மாறும்படியாக போதிக்காமல் பழைய ஏற்பாட்டு முற்பிதாக்களின் வழிமுறைகளை போதிக்கிற போதகர்கள் வஞ்சிக்கிற ஆவியையுடையவர்களே. பழைய ஏற்பாட்டு வாக்குதத்தங்கள் யாவும் இஸ்ராயேலரில் நிறைவேறி முடியவேண்டியவைகள், இயேசு கிறிஸ்துவில் நிறைவேறி முடியவேண்டியவைகள் என்ற இருவிதங்களில் மாத்திரமே விவிலியத்தில் பகிரப்பட்டுள்ளது. இயேசு கிறிஸ்துவை பின்பற்றிச் செல்லும் நாம் அவரின் போதனைகளையும் , கிரியைகளையும், வாழ்க்கை முறையையும் மட்டுமே பின்பற்ற வேண்டும். தவறுவோமெனில் நாம் வஞ்சகர்களாவோம்.
ஆதிசபையில் உபதேசங்களைக்கொண்டு விசுவாசிகளை வஞ்சித்த ஆவிகள் இந்த கடைசி காலங்களில் தாறுமாறான உபதேசங்கள் மூலமாக எங்கும் எல்லாரிலும் நிரம்பிக் காணப்படுகின்றது. கிறிஸ்தவம் பொருளாதாரத்தை மையப்படுத்தி வளர்ந்ததல்ல, பரிசுத்தவான்களின் இரத்தத்தை மையபடுத்தி வளர்ந்ததுவேயாகும். பரிசுத்தவான்களின் இரத்தம் திருச்சபையின் வித்து ஆகும். கிறிஸ்துவையும், கிறிஸ்துவின் பரிகார பலியையும், கிறிஸ்துவின் ராஜரீகத்துவத்தையும் மையமாக வைத்து போதிப்பதற்காகவே இயேசு கிறிஸ்து சபைகளையும் ஊழியர்களையும் நியமித்துள்ளார். தேவனுடைய மனிதர்கள் சுவிசேஷத்தினிமித்தமும் , விசுவாசத்தினிமித்தமும் இரத்தம் சிந்துவதே இயேசுவின் பரிகார பலி இன்றும் உயிரோடிருந்து மக்களை மீட்கிறது என்பதற்கான உயிருள்ள அடையாளம். இரத்தம் சிந்துதல் இல்லாமல் - அதற்கு துணியாமல் நாம் கிறிஸ்துவை பிரசங்கிக்கவியலாது. எல்லா பதவிகளும் கிறிஸ்துவைப்போல பாடுகளை அனுபவிக்க துணிவதற்கு முன்னெடுக்கும் ஒன்றாகும். ஆசீர்வாதம் என்று சொல்லி வஞ்சக ஆவிகளுக்கு அடிமைபட்டு ஜீவனை இழந்து விடாதீர்கள்.
உங்களோடு வராத உலகத்தை நீங்கள் நேசிப்பதின் பொருள் என்ன?
கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது; அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார். ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி, இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும், பிதாவாகிய அவருக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார். பிலிப்பியர் 2:5-11
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment