CCM Tamil Bible Study - கோபம்

வெளி12:12d. பிசாசு மிகுந்த கோபம் கொண்டு.நீதி12:16;16:14;27:3,4;பிர7:9;சங்4:4;76:10;தானி11:36;யோனா4:1;மத்2:16;யாக்1:20.  கோபம் கோபம் மிகவும் பொல்லாதது என்று சொல்வது சரியா என்று எனக்கு தெரியவில்லை. தேவன் கோபம் கொள்வது அவசியமானது என்பதை விவிலியத்தில் படிக்கின்றோம். தேவனுடைய விருப்பத்துக்கு மாறாக மனிதர்கள் போனபோது தேவனுடைய கோபம் வெளிப்பட்டது. தேவகோபம் பற்பல விதமான சிதைவுகளை ஏற்படுத்தியிருந்தாலும் அது தேவனுடைய நீதியையும் பரிசுத்தத்தையும் வழுவாதன்மையையும் வெளிப்படுத்தியது. தேவனுடைய கோபத்தினால் தண்டனை உண்டாயிற்றென்றால் தேவ இரக்கத்தினால் கிருபையும் மீட்பும் உண்டாயிற்று.  மனிதர்கள் தேவன் மீது கோபம் கொள்வதை விவிலியம் ஏற்றுக்கொள்ளவில்லை. தேவன் மீதும் தேவ ஆளுகை மீதும் கோபம் காண்பித்தவர்கள் அழிந்து போயினர். ஆகையினால் தான் மனித கோபம் தேவ நீதியை எழுப்பாது என்று அதற்கு முற்றுப்புள்ளி போடப்பட்டது. தேவகோபத்துக்கும் மனித கோபத்துக்கும் உண்டான போட்டிகள் சுருங்கி போயின. ஆனால் தேவ கோபத்திற்கும் சாத்தானின் கோபத்திற்கும் இடையில் உண்டான போட்டிகள் உலகம் அழிக்கப்படுவது வரையிலும் சாத்தான் நரகத்தில் தள்ளப்...

CCM Tamil Bible Study - கிறிஸ்துவின் உபதேசம் - The Doctrine of Christ

கிறிஸ்துவின் உபதேசம்

2Jn1:9. Whoever transgresses and does not abide in the doctrine of Christ does not have God. He who abides in the doctrine of Christ has both the Father and the Son. Jn15:6;7:16,17;Mt11:27;Jn5:23;14:6;Act2:42;Col3:16;Heb6:1;1Jn2:22-24.

2யோவா1:9. கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்கிறவன் பிதாவையும் குமாரனையும் உடையவன். யோவா15:6;7:16,17;மத்11:27;யோவா5:23;14:6;அப்2:42;கொலோ3:16;எபி6:1;1யோவா2:22-24. 


இயேசு கிறிஸ்துவின் உபதேசத்தை அறிவதற்கு சுவிசேஷங்களை தெளிவாக அறிந்திருக்க வேண்டும். கிறிஸ்துவின் உபதேசத்தின் வல்லமையை அறிவதற்கு அப்போஸ்தலர் நடபடிகளை அறிந்திருக்க வேண்டும். கிறிஸ்துவின் உபதேசத்தின் நீட்சியை அறிவதற்கு நிருபங்களை அறிந்திருக்க வேண்டும். கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்கிறவனின் முடிவை வெளிபடுத்தலில் தான் அறிய முடிகின்றது. அதேவேளையில் கிறிஸ்துவின் உபதேசம் பிதாவின் உபதேசங்களாகிய நியாயபிரமாணங்களிலிருந்துதான் உருவாக்கம் பெற்றுள்ளது. பழைய கற்பனைகளாகிய 10 கட்டளைகளின் விரிவாக்கமே புதிய கட்டளைகளாகிய கிறிஸ்துவின் உபதேசங்களாகும். ஆகவே கிறிஸ்துவின் உபதேசத்தை பின்பற்றுகிறேன் என்று சொல்லுகிறவன் 10 கட்டளைகளின் நோக்கத்தை அறிந்திருக்க வேண்டும். தேவன் இஸ்ராயேலரை நேசித்ததினாலும், தமது நேசத்துக்குரியவர்கள் உலகியல் காரியங்களோடு இணைந்து பயணிக்கலாகாது என்பதற்காகவுமே 10 கட்டளை கொடுக்கப்பட்டது. 


கிறிஸ்துவின் உபதேசமும் கூட பிதாவையும், குமாரனையும் உடையவனாயிருப்பவனுக்கு மாத்திரமே தரப்பட்டுள்ளது. கிறிஸ்துவின் உபதேசமும் தேவனின் அன்பையும், ஒப்பிடப்படவியலாத தூய்மையையுமே குறிப்பிடுகின்றது. 10 கட்டளைகளுக்கு கீழ்படியவில்லையெனில் எத்தகைய தண்டனை தரப்பட்டதோ அதே தண்டனையைதான் கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திராதவனுக்கும் தரப்பட்டுள்ளது. அனனியா சப்பீராள் நிகழ்வும், ஆரோனின் குமாரர் இருவரின் நிகழ்வும் ஒன்றுபோல் இருப்பதை தவிர்க்க முடியாது. பிதாவானவர் கிறிஸ்துவை கொண்டுவருவதற்கு நியாய பிரமாணத்தை இஸ்ராயேலருக்குக் கொடுத்தார். கிறிஸ்துவானவர் சபையை பரதீசுக்கு கொண்டு வருவதற்கு சபைக்கு கிறிஸ்துவின் உபதேசத்தைக் கொடுத்துள்ளார். இரு இடங்களிலும் உள்ள பாரம்பரியங்கள் யாவும் உபதேசங்களை தூய்மையானதாகவும், வலிமையானதாகவும் வைப்பதற்காகதானே தவிர அவைகளை வெறுப்பதற்கல்ல. பாரம்பரியங்கள், அனுசாரங்கள் யாவும் உபதேசங்களல்ல, வாழ்க்கை நடைமுறைகள். உபதேசங்களில் மட்டுமே பிதாவும், குமாரனும் காணப்படுகின்றனர். இது ஒரு பெரிய சத்தியம். இதை விளங்கிக்கொள்வது அவசியமானது. 


ஏனெனில் எல்லா மனுஷருக்கும் இரட்சிப்பை அளிக்கத்தக்க தேவகிருபையானது பிரசன்னமாகி, நாம் அவபக்தியையும் லெளகிக இச்சைகளையும் வெறுத்து, தெளிந்தபுத்தியும் நீதியும் தேவபக்தியும் உள்ளவர்களாய் இவ்வுலகத்திலே ஜீவனம்பண்ணி, நாம் நம்பியிருக்கிற ஆனந்த பாக்கியத்துக்கும், மகா தேவனும் நமது இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய மகிமையின் பிரசன்னமாகுதலுக்கும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும்படி நமக்குப் போதிக்கிறது. அவர் நம்மைச் சகல அக்கிரமங்களினின்று மீட்டுக்கொண்டு, தமக்குரிய சொந்த ஜனங்களாகவும், நற்கிரியைகளைச் செய்ய பக்திவைராக்கியமுள்ளவர்களாகவும் நம்மைச் சுத்திகரிக்கும்படி, நமக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார். 

இவைகளை நீ பேசி, போதித்து, சகல அதிகாரத்தோடும் கடிந்துகொள். ஒருவனும் உன்னை அசட்டைபண்ண இடங்கொடாதிருப்பாயாக. தீத்து 2:11-15.

Comments

Popular posts from this blog

CCM Tamil Bible Study - ஆறுதல் தரும் கிறிஸ்து - Comforter Christ

The Lord built Isaac's family - CCM Tamil Bible Study - ஈசாக்கின் குடும்பம் கட்டப்பட்டது

The Lord built Paul - CCM Tamil Bible Study - கட்டி எழுப்பப்பட்ட பவுல்