CCM Tamil Bible Study - எச்சரிக்கை - Warning
- Get link
- X
- Other Apps
எச்சரிக்கை
2Jn1:8. Look to yourselves, that we do not lose those things we worked for, but that we may receive a full reward. Mt24:4,24,25;Mk13:5,6,9,23;Lk21:8;Heb12:15;Rev3:11;Gal4:11,12;Phil3:16;Heb10:32,33.
2யோவா1:8. பூரணபலனை பெறும்படிக்கு எச்சரிக்கையாயிருங்கள். மத்24:4,242,5;மாற்13:5,6,9,23;லூக்21:8;எபி12:15; வெளி3:11;கலா4:11,12;பிலி3:16;எபி10:32,33.
வஞ்சகத்தினாலும், வஞ்சக ஆவிகளினாலும் தேவனால் கிடைத்த நற்பொருட்களையும் கிடைக்கப்போகும் நற்பொருட்களையும் இழந்து போகாதிருங்கள் என்று எச்சரிக்கின்றார். தேவனுடைய மனிதர்களிடமிருந்து இரண்டு முக்கியமான நற்பொருட்களை வஞ்சிக்கிற ஆவிகள் பறித்துக்கொள்ளப் போராடுகின்றது. வஞ்சிக்கிற ஆவிகள் பிசாசின் மறு உருவமாகி நல்லவர்களைப்போல வேஷம் மாறி சபைகளுக்குள் ஊடுருவியுள்ள ஒளியின் தூதன் வேஷம் தரித்தவைகள். ஆகவே நாம் மிகவும் கவனமாக வாழவேண்டும்.
ஒன்று நமது இரட்சிப்பாகும். இந்த இரட்சிப்பினால்தான் தேவனுடைய ஆவியும் வசனங்களும் நமக்கு கிடைத்துள்ளது. இரட்சிப்பின் வஸ்திரத்தை இழந்துபோகாமல் இரட்சிப்பின் பாத்திரத்தை சுமந்து திரிய வேண்டும். இரட்சிப்பு என்பது பாவத்தினால் உண்டான நிர்வாணம் மூடப்படும்படியான சால்வையாகும்.
இரண்டாவதாக, பரலோக பாக்கியம். இரட்சிப்பின் உறுதியில் நின்று வாழும்போதே இந்த பரலோக பாக்கியத்தைப் பெற்று அனுபவிக்கிறார்கள். ஆகையினால்தான் பவுல் நல்லப் போராட்டத்தைப் போராடினேன்… நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டுள்ளது என்றும், அங்கு போவதை நான் வாஞ்சிக்கிறேன் என்றும் வெளிபடுத்தினார். பரலோகத்தை காணாமலும், அதன் ருசியை அனுபவிக்காமலும் அங்கு போக முடியாது. அங்குதான் நாம் போகிறோமா என்பதை அறியாமல் அங்கு எப்படி செல்ல முடியும்?. நமது செய்கைகளின் பலனே பரலோக பாக்கியமாகும். இந்த பாக்கியத்தை இழந்து விடாமலிருப்போமாக.
இரட்சிக்கப்பட்ட ஒவ்வொருவரின் நற்கிரியைகளில் மிகவும் முக்கியமானது பலரை இரட்சிப்புக்குள் நடத்துவதாகும். இந்த நற்கிரியைகளின் பலன் பரலோகத்தில் மட்டுமே கிடைக்கும். இரட்சிக்கப்பட்டும் பலரை இரட்சிப்புக்குள் வழிநடத்தாத ஒருவரும் பரலோக பாக்கியத்தை – பூரணபலனை அடைய முடியாது. ஆகவே நமது கிரியைகளின் பூரணபலன் அடையும்படி சுவிசேஷத்தை சுமந்து சென்று வஞ்சிக்கிற ஆவிகளினால் பிடிபடாதபடிக்கு கவனமாக – ஜாக்கிரதையாக ஓடுவோமாக.
புத்தியில்லாத கலாத்தியரே, நீங்கள் சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமற்போகத்தக்கதாக உங்களை மயக்கினவன் யார்? இயேசுகிறிஸ்து சிலுவையிலறையப்பட்டவராக உங்கள் கண்களுக்குமுன் பிரத்தியட்சமாய் உங்களுக்குள்ளே வெளிப்படுத்தப்பட்டிருந்தாரே. ஒன்றைமாத்திரம் உங்களிடத்தில் அறியவிரும்புகிறேன்; நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலேயோ, விசுவாசக் கேள்வியினாலேயோ, எதினாலே ஆவியைப் பெற்றீர்கள்? ஆவியினாலே ஆரம்பம்பண்ணின நீங்கள் இப்பொழுது மாம்சத்தினாலே முடிவுபெறப்போகிறீர்களோ? நீங்கள் இத்தனை புத்தியீனரா? இத்தனை பாடுகளையும் வீணாய்ப் பட்டீர்களோ? அவைகள் வீணாய்ப்போயிற்றே. கலாத்தியர் 3:1-4
நான் வீணாக ஓடினதும் வீணாகப் பிரயாசப்பட்டதுமில்லையென்கிற மகிழ்ச்சி கிறிஸ்துவின் நாளில் எனக்கு உண்டாயிருப்பதற்கு, ஜீவவசனத்தைப் பிடித்துக்கொண்டு, உலகத்திலே சுடர்களைப்போலப் பிரகாசிக்கிற நீங்கள்,
கோணலும் மாறுபாடுமான சந்ததியின் நடுவிலே குற்றமற்றவர்களும் கபடற்றவர்களும், தேவனுடைய மாசற்றபிள்ளைகளுமாயிருக்கும்படிக்கு, எல்லாவற்றையும் முறுமுறுப்பில்லாமலும் தர்க்கிப்பில்லாமலும் செய்யுங்கள். பிலிப்பியர் 2:14-16
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment