CCM Tamil Bible Study - கோபம்

வெளி12:12d. பிசாசு மிகுந்த கோபம் கொண்டு.நீதி12:16;16:14;27:3,4;பிர7:9;சங்4:4;76:10;தானி11:36;யோனா4:1;மத்2:16;யாக்1:20.  கோபம் கோபம் மிகவும் பொல்லாதது என்று சொல்வது சரியா என்று எனக்கு தெரியவில்லை. தேவன் கோபம் கொள்வது அவசியமானது என்பதை விவிலியத்தில் படிக்கின்றோம். தேவனுடைய விருப்பத்துக்கு மாறாக மனிதர்கள் போனபோது தேவனுடைய கோபம் வெளிப்பட்டது. தேவகோபம் பற்பல விதமான சிதைவுகளை ஏற்படுத்தியிருந்தாலும் அது தேவனுடைய நீதியையும் பரிசுத்தத்தையும் வழுவாதன்மையையும் வெளிப்படுத்தியது. தேவனுடைய கோபத்தினால் தண்டனை உண்டாயிற்றென்றால் தேவ இரக்கத்தினால் கிருபையும் மீட்பும் உண்டாயிற்று.  மனிதர்கள் தேவன் மீது கோபம் கொள்வதை விவிலியம் ஏற்றுக்கொள்ளவில்லை. தேவன் மீதும் தேவ ஆளுகை மீதும் கோபம் காண்பித்தவர்கள் அழிந்து போயினர். ஆகையினால் தான் மனித கோபம் தேவ நீதியை எழுப்பாது என்று அதற்கு முற்றுப்புள்ளி போடப்பட்டது. தேவகோபத்துக்கும் மனித கோபத்துக்கும் உண்டான போட்டிகள் சுருங்கி போயின. ஆனால் தேவ கோபத்திற்கும் சாத்தானின் கோபத்திற்கும் இடையில் உண்டான போட்டிகள் உலகம் அழிக்கப்படுவது வரையிலும் சாத்தான் நரகத்தில் தள்ளப்...

CCM Tamil Bible Study - பிதாவினால் பெற்ற கற்பனை - Commandment from the Father

பிதாவினால் பெற்ற கற்பனை


2Jn1:4. I rejoiced greatly that I have found some of your children walking in truth, as we received commandment from the Father. Hos14:9;Mal2:6;Gal2:14;Eph5:1,2,8;1Jn1:6,7;2:6;Phi4:10;1Thes2:19,20;3:6-10;3Jn1:3,4. 

2யோவா1:4. பிதாவினால் நாம் பெற்ற கற்பனையின்படியே சிலர் சத்தியத்திலே நடக்கிறார்கள். ஓசி14:9;மல்2:6;கலா2:14;எபே5:1,2,8;1யோவா1:6,7;2:6;பிலி4:10;1தெச2:19,20;3:6-10;3யோவா1:3,4.


அம்மாளின் மூலம் விசுவாசத்துக்குள் வந்தவர்களில் சிலர் கர்த்தராகிய இயேசுவை தங்களுக்குள் கொண்டவர்களாக இயேசு கிறிஸ்துவின் உபதேசத்தின்படி வாழ்கிறதைக் குறித்து கேள்விபட்டு சந்தோஷமடைகின்றேன். ஏனெனில்  இவ்விதமான சத்தியமார்க்கத்தமைதல் பிதாவினால் கொடுக்கப்பட்ட கட்டளைகளை பிரதிபலிக்கின்றதாக உள்ளது. கிறிஸ்துவின் மூலம் பிதாவின் கட்டளைகளின் சாரம் கிறிஸ்தவனில் பரிணமிக்கின்றது. 1யோவானில் நாம் கண்டதின்படியாகவே சடங்குசார்ந்த பிரமாணங்களை தவிர்த்த பிரமாணங்கள் ஒருபோதும் நிராகரிக்கப்படதக்கதல்ல என்பதை உணரவேண்டும். 10 கட்டளைகளில் ஒன்றையும் நாம் நிராகரிக்க முடியாது. இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு வாழ்கிறவர்கள் பிதாவின் கற்பனைகளை ஏற்றுக்கொண்டு வாழும் போதுதான் பிதாவின் நாமம் மகிமைபடும். இயேசு கிறிஸ்துவினால் பிதா மகிமைபடும்படியான காரியங்களையும், பிதாவுக்கு கீழ்படியும் காரியங்களையும் மட்டுமே செய்யும்படியாக இயேசு கிறிஸ்து நம்மை தூண்டுவார். அவரே பிரமானங்களை ஏற்றுக்கொண்டு நடந்தார். இயேசுவை ஏற்றுக்கொண்டவரக்ள் அவர் நடந்தபடியே தாங்களும் நடக்க வேண்டும். 


பிதாவின் கட்டளைகளுக்கு இயேசு கிறிஸ்து கீழ்படிந்து நடந்தபோது பிதாவானவர் இயேசு கிறிஸ்துவை நேசகுமாரன் என்று அறிவித்தது மட்டுமல்லாமல் அவர் மேல் பிரியமுள்ளவராகவும் செயல்பட்டார். இயேசு கிறிஸ்துவும் பிதாவின் கட்டளைகளை நிறைவேற்றுவதையே மெய்யான உணவு என்றும் கூறினார். இந்த இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட நாம் இயேசு கிறிஸ்துவைப்போல வாழ்ந்தால்தான் நம்மில் பிதாவானவர் மகிழ்ந்து தமது நேசத்தை வெளிபடுத்துவார். 


 பழைய ஏற்பாட்டின் எல்லாவாக்குதத்தங்களும் ஏதோவொரு விதத்தில் 10 கட்டளைகளில் ஒன்றினால்தான் முத்திரிக்கப்பட்டுள்ளது என்பதை நாம் மறந்துபோகலாகாது. அன்று கட்டளையை மீறினதினால் பலிகள் கொடுக்கப்பட்டு பரிகாரம் செய்யப்பட்டது. இன்று கட்டளைகளை மீறினதினால் ஒரேபலியாக இயேசு பலியிடப்பட்டு நிரந்தர பரிகாரம் உண்டாயிற்று. இனி கட்டளைகளினிமித்தம் நாம் பலியை கொண்டுவரவேண்டியதில்லை. இயேசுவின் மீட்பின் பலியை நினைவுகூர்ந்து இயேசுவை போல வாழ முற்பட்டால் போதுமானது. பலிகள் அகற்றப்பட்டு கட்டளைகள் எழிதாக்கப்பட்டது. அன்று பாவத்தினிமித்தம் கீழ்படியாமை கொண்டிருந்ததினால் கட்டளைகளை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இன்று இயேசுகிறிஸ்துவினால் பாவம் பரிகரிக்கப்பட்டதினால் கட்டளைகள் எனக்கு லகுவாயிற்று. அதற்கு கீழ்படியும் இருதயத்தை இயேசு கிறிஸ்து தந்தார். இயேசு கிறிஸ்துவின் சுத்திகரித்தலோடு ஆவியானவரும் எனக்குள் வாசமாயிருப்பதினால் பிதாவின் பிரமாணம் எனக்குள் எழிதான ஒன்றாயிற்று. இயேசு கிறிஸ்துவினால் நான் கீழ்படிகிறேன். இயேசு கிறிஸ்துவினால் கட்டளைகளின்படி நடக்கிறேன். இயேசுகிறிஸ்துவினால் நான் வாழ்கிறேன். இயேசு கிறிஸ்துவினால் நான் தந்தையிடம் செல்வேன். ஆமென்..


ஆதலால், நீங்கள் பிரியமான பிள்ளைகளைப்போல தேவனைப் பின்பற்றுகிறவர்களாகி, கிறிஸ்து நமக்காகத் தம்மை தேவனுக்குச் சுகந்த வாசனையான காணிக்கையாகவும் பலியாகவும் ஒப்புக்கொடுத்து நம்மில் அன்புகூர்ந்ததுபோல, நீங்களும் அன்பிலே நடந்துகொள்ளுங்கள். மேலும், பரிசுத்தவான்களுக்கு ஏற்றபடி, வேசித்தனமும், மற்றெந்த அசுத்தமும், பொருளாசையுமாகிய இவைகளின் பேர்முதலாய் உங்களுக்குள்ளே சொல்லப்படவுங்கூடாது. அப்படியே வம்பும், புத்தியீனமான பேச்சும், பரியாசமும் தகாதவைகள்; ஸ்தோத்திரஞ்செய்தலே தகும். விபசாரக்காரனாவது, அசுத்தனாவது, விக்கிரகாராதனைக்காரனாகிய பொருளாசைக்காரனாவது தேவனுடைய ராஜ்யமாகிய கிறிஸ்துவின் ராஜ்யத்திலே சுதந்தரமடைவதில்லையென்று அறிந்திருக்கிறீர்களே. இப்படிப்பட்டவைகளினிமித்தமாகக் கீழ்ப்படியாமையின் பிள்ளைகள்மேல் தேவகோபாக்கினை வருவதால், ஒருவனும் உங்களை வீண்வார்த்தைகளினாலே மோசம்போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்களுக்குப் பங்காளிகளாகாதிருங்கள். எபேசியர் 5:1-7

Comments

Popular posts from this blog

CCM Tamil Bible Study - ஆறுதல் தரும் கிறிஸ்து - Comforter Christ

The Lord built Isaac's family - CCM Tamil Bible Study - ஈசாக்கின் குடும்பம் கட்டப்பட்டது

The Lord built Paul - CCM Tamil Bible Study - கட்டி எழுப்பப்பட்ட பவுல்