CCM Tamil Bible Study - கோபம்

வெளி12:12d. பிசாசு மிகுந்த கோபம் கொண்டு.நீதி12:16;16:14;27:3,4;பிர7:9;சங்4:4;76:10;தானி11:36;யோனா4:1;மத்2:16;யாக்1:20.  கோபம் கோபம் மிகவும் பொல்லாதது என்று சொல்வது சரியா என்று எனக்கு தெரியவில்லை. தேவன் கோபம் கொள்வது அவசியமானது என்பதை விவிலியத்தில் படிக்கின்றோம். தேவனுடைய விருப்பத்துக்கு மாறாக மனிதர்கள் போனபோது தேவனுடைய கோபம் வெளிப்பட்டது. தேவகோபம் பற்பல விதமான சிதைவுகளை ஏற்படுத்தியிருந்தாலும் அது தேவனுடைய நீதியையும் பரிசுத்தத்தையும் வழுவாதன்மையையும் வெளிப்படுத்தியது. தேவனுடைய கோபத்தினால் தண்டனை உண்டாயிற்றென்றால் தேவ இரக்கத்தினால் கிருபையும் மீட்பும் உண்டாயிற்று.  மனிதர்கள் தேவன் மீது கோபம் கொள்வதை விவிலியம் ஏற்றுக்கொள்ளவில்லை. தேவன் மீதும் தேவ ஆளுகை மீதும் கோபம் காண்பித்தவர்கள் அழிந்து போயினர். ஆகையினால் தான் மனித கோபம் தேவ நீதியை எழுப்பாது என்று அதற்கு முற்றுப்புள்ளி போடப்பட்டது. தேவகோபத்துக்கும் மனித கோபத்துக்கும் உண்டான போட்டிகள் சுருங்கி போயின. ஆனால் தேவ கோபத்திற்கும் சாத்தானின் கோபத்திற்கும் இடையில் உண்டான போட்டிகள் உலகம் அழிக்கப்படுவது வரையிலும் சாத்தான் நரகத்தில் தள்ளப்...

CCM Tamil Bible Study - உண்மையை குறித்து சாட்சி - Testified of the truth

உண்மையை குறித்து சாட்சி

3Jn1:3. For I rejoiced greatly when brethren came and testified of the truth that is in you, just as you walk in the truth. 2Jn1:4;Rom1:8,9;2Cor7:6,7;Eph1:15,16;Col1:7,8;1Thes3:6-9;Ps26:3;86:11;119:11;Pr20:7;23:15. 

3யோவா1:3. நீ சத்தியத்திலே நடக்கிறாய் என்று உன்னுடைய உண்மையை குறித்து சாட்சி கொடுத்தனர். 2யோவா1:4;ரோம1:8,9;2கொரி7:6,7;எபே1:15,16;கொலோ1:7,8;1தெச3:6-9;சங்26:3;86:11;119:11;நீதி20:7;23:15.


சத்தியமாகிய இயேசு கிறிஸ்துவுக்குள் வாழ்கிறவன் சத்தியத்திலே நடக்கிறவனாயிருக்கிறான். அவன் பொய் பேசுவதில்லை. உண்மையையே பேசுகிறவனாகவும், காரியங்களை உண்மையாகவே செய்கிறவனாகவும் காணப்படுவான். இதுவே பிறர் மத்தியில் சாட்சியமாகப் பரிணமிக்கின்றது. 


சத்தியமாகிய கிறிஸ்து ஒருவனுக்குள் வாசம்பண்ணும்போது பொய்மைக்குரியதும், வஞ்சகத்துக்குரியதுமான விஷயங்களில் நிலைகொண்டிருக்க முடியாது. அப்படியே அப்படிப்பட்டவைகளில் அகப்பட்டிருந்தாலும் அவன் அதைவிட்டு வெளியேறுவதற்கு இணக்கமுள்ளவனாகவே காணப்படுவான். சத்தியத்திலே நடக்கிறவனில் சடிதியில் உண்டாகும் தடுமாற்றங்களை அவனுக்குள் வாசம் செய்யும் ஆவியானவரே சுட்டிக் காண்பிக்கின்றார். சில நேரங்களில் கர்த்தருடைய ஊழியக்காரர்களினாலோ அல்லது இன்னொரு ஆவிக்குரியவரினாலோ அல்லது கர்த்தருடைய வசனத்தினாலோ அல்லது தண்டனையின் பிரம்பினாலோ சீர்படுத்தப்படுகின்றான். இதனைதான் தாவீது நீதிமான் ஏழுதரம் விழுந்தாலும் எழுந்திருப்பான் என்று சொல்லுகிறாரோ?. 


கர்த்தருடைய வீட்டிலே உண்மையுள்ளவனாக நடந்துக் கொள்ளுகிறவன் வெளியிலும் உண்மையுள்ளவனாகவே நடந்துக் கொள்கிறான். எங்கும் எதிலும் எப்பொழுதும் உண்மையுள்ளவனாகவே காணப்படுவான். அறிந்த விஷயங்களில் உண்மையை கடைபிடிப்பது எளிது என்பதினாலல்ல பிறர் அறிந்திருப்பதினால் உண்மையை பேசுகிறான். ஆனால் பிறர் அறியாத ஒன்றில் உண்மையை கடைபிடிப்பதில் அனேக தேவ மனிதர்கள் இடறுகின்றார்கள். இந்த ஆபத்திலிருந்து தப்பி பிழைப்பது கடினமாகும். 


பிறர் அறியாத நம் தவறுகளை மறைத்து வாழ்வதே பொய்யாகும். வெளிப்படைதன்மை தேவன் முன்னிலையிலும், பிரர் முன்னிலையிலும் இல்லாத ஒருவர் கர்த்தருடைய பிள்ளையாகவோ, கர்த்தருடைய பணியாளாகவோ இருக்க தகுதியற்றவராகின்றார். வெளிப்படைதன்மை இல்லாதவன் பிறரால் அறியப்பட்டுள்ளவைகளிலும் துணிகரமாக பொய்யை அவிழ்த்துவிடுகிறவனாகவே இருப்பான். காண்கின்ற ஒன்றில் உண்மையில்லாதவன் காணப்படாத ஒன்றில் எப்படி உண்மையுள்ளவனாயிருப்பான்.  காணக்கூடாத ஒன்றிலே பொய்மையை பயன்படுத்துகிற ஒருவர் காணப்படுகிற ஒன்றில் உண்மையை கடைபிடிக்கிறான் என்று எப்படி சொல்ல முடியும்?. அழிந்து போகின்ற பொருளிலே உண்மையை கடைபிடிக்காத ஒருவர் அழியாத பொருளிலே எவ்விதம் உண்மையை கடைபிடிப்பார்?. சொற்ப வருமானத்திலே உண்மையை கடைபிடிக்காதவர்  அதிக வருமானம் வருமபோது எப்படி உண்மையை கடைபிடிப்பார்?. 


ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை கொண்டிருக்கிற எவரும் பிதாவுக்கும் குமாரனுக்கும், பரிசுத்த ஆவிக்கும், வசனத்துக்கும், சபைக்கும், சொந்த ஊழியருக்கும் உண்மையுள்ளவராகவே கானப்படுவார். தான் சார்ந்துள்ள நிர்வாகத்துக்கு உண்மையாய் நடந்துக்கொள்ளுகிற ஒருவர் நிச்சயமாகவே தேவனுக்கும் உண்மையுள்ளவனாகவே காணப்படுவான். சத்தியம் நம்மை உண்மையுள்ளவனாக மாற்றுகிறது. உண்மை சத்தியத்தை எடுத்துச் செல்ல உதவுகிறது. 


நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் மாளும்போது உங்களை நித்தியமான வீடுகளிலே ஏற்றுக்கொள்வாருண்டாகும்படி, அநீதியான உலகப்பொருளால் உங்களுக்குச் சிநேகிதரைச் சம்பாதியுங்கள். 

கொஞ்சத்திலே உண்மையுள்ளவன் அநேகத்திலும் உண்மையுள்ளவனாயிருக்கிறான், கொஞ்சத்திலே அநீதியுள்ளவன் அநேகத்திலும் அநீதியுள்ளவனாயிருக்கிறான். அநீதியான உலகப்பொருளைப்பற்றி நீங்கள் உண்மையாயிராவிட்டால், யார் உங்களை நம்பி உங்களிடத்தில் மெய்யான பொருளை ஒப்புவிப்பார்கள்? 

வேறொருவனுடைய காரியத்தில் நீங்கள் உண்மையுள்ளவர்களாயிராவிட்டால், உங்களுக்கு யாதொன்றைச் சொந்தமாகக் கொடுப்பவர் யார்? எந்த ஊழியக்காரனும் இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ்செய்யக்கூடாது, ஒருவனைப் பகைத்து மற்றவனைச் சிநேகிப்பான், அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு மற்றவனை, அசட்டைபண்ணுவான். தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களாலே கூடாது என்றார். லூக்கா 16:9-13..


சுயமாய்ப் பேசுகிறவன் தன் சுய மகிமையைத் தேடுகிறான், தன்னை அனுப்பினவரின் மகிமையைத் தேடுகிறவனோ உண்மையுள்ளவனாயிருக்கிறான், அவனிடத்தில் அநீதியில்லை. யோவான் 7:18.


அநேக சாட்சிகளுக்கு முன்பாக நீ என்னிடத்தில் கேட்டவைகளை மற்றவர்களுக்குப் போதிக்கத்தக்க உண்மையுள்ள மனுஷர்களிடத்தில் ஒப்புவி. நீயும் இயேசுகிறிஸ்துவுக்கு நல்ல போர்ச்சேவகனாய்த் தீங்கநுபவி. தண்டில் சேவகம்பண்ணுகிற எவனும், தன்னைச் சேவகமெழுதிக்கொண்டவனுக்கு ஏற்றவனாயிருக்கும்படி, பிழைப்புக்கடுத்த அலுவல்களில் சிக்கிக்கொள்ளமாட்டான். 2தீமோத்தேயு 2:1-3.

Comments

Popular posts from this blog

CCM Tamil Bible Study - ஆறுதல் தரும் கிறிஸ்து - Comforter Christ

The Lord built Isaac's family - CCM Tamil Bible Study - ஈசாக்கின் குடும்பம் கட்டப்பட்டது

The Lord built Paul - CCM Tamil Bible Study - கட்டி எழுப்பப்பட்ட பவுல்