CCM Tamil Bible Study - வாழ்த்துக்கள் - Congratulations
- Get link
- X
- Other Apps
வாழ்த்துக்கள்
2Jn1:13. The children of your elect sister greet you. Amen. Gen48:20;1Kin1:47;Ps28:3;72:17;Mt5:47;10:12;Lk1:41;Rom16:16;Phil4:21;Col4:12;Tit3:15;3Jn1:14.
2யோவா1:13. தெரிந்துக்கொள்ளப்பட்ட உமது சகோதரியின் பிள்ளைகள் உமக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள். ஆதி 48:20;1இரா1:47;சங்28:3;72:17;மத்5:47;10:12;லூக்1:41;ரோம16:16;பிலி4:21;கொலோ4:12;தீத்3:15;3யோவா1:13.
வாழ்த்துதல் என்பது ஒருவரை புகழ்ந்து சொல்லுவதாகும். மேலும் ஒருவர் நலமுடன் இருக்கும்படி விரும்புவதாகும். இன்னும் ஒருவர் உயர்ந்திருக்கும்படி விரும்புவதாகும். ஆகவே வாழ்த்துதலகள் என்பது வாய் நிறைந்து வருவதுமுண்டு. உள்ளம் அல்லது இருதயம் நிறைந்து வெளிப்படுவதுமுண்டு. பரிசுத்த ஆவியில் நிரம்பி வெளிப்படுவதுமுண்டு. இப்படிப்பட்ட வாழ்த்துதல்கள் அன்பின் அடையாளமாகவும், ஐக்கியத்தின் அடையாளமாகவும், மீட்பின் அடையாளமாகவும், கடமையின் அடையாளமாகவும் காணப்படுகிறது.
தேவனுடைய மனிதர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துதல்கள் சொல்ல கடமைப்பட்டுள்ளார்கள். ஒருவர் ஆசீர்வதிக்கப்பட்டவராக இருப்பதை விரும்பி சொல்லப்படும் வாழ்த்துதல்களும் உண்டு. வாழ்த்துதல்கள் பரிமாறிக்கொள்வதினால் அன்பும், ஐக்கியமும் பரிணமிக்கின்றது. நலமாயிருக்கிறீர்களா என்று விசாரிப்பதும், நலமுடன் இருப்பீராக என்று சொல்லுவதும், நலமுடன் இருக்க விரும்புகிறேன் என்று விழைவதும் ஒருவருக்கொருவர் பயன்படுத்த வேண்டிய ஒன்றாக உள்ளது. கடமை என்பது வெறும் வாய்ச் சொல்லாக அல்லாது பொறுப்புடன் சொல்லப்படுவதாகும்.
சிறியவர் பெரியவரை வாழ்த்துவது புகழ்ச்சியுரையாகவும், பெரியவர் சிறியவரை வாழ்த்துவது ஆசீர்வாத உரையாகவும் காணப்படுகின்றது. சமாதானத்தையும், ஆசீர்வாதத்தையும் , முத்தத்தையும் வாழ்த்துதல்களாக பரிமாறிக்கொள்கிறார்கள். கொடுத்து வாழ்த்துகிறவர்களும் உண்டு, வாங்கிக்கொண்டு வாழ்த்துகிறவர்களும் உண்டு.
தேவனுடைய மனிதர்கள் தேவனை வாழ்த்தி பாடல்களை எழுதியுள்ளார்கள். கிறிஸ்தவ உலகத்தில் தேவனை வாழ்த்துவது குறித்து பாடல்களில் தான் காணப்படுகின்றது. அவர்கள் தேவனிடமிருந்து பெற்ற ஞானங்கள், திறமைகள், தாலந்துகள், வரங்கள் அடிப்படையில் வாழ்த்திப் பாடுகின்றார்கள். இசைகளின் எழுச்சி மேலோங்க மேலோங்க வாழ்த்துரை முறைமை மாறிக்கொண்டேயிருக்கின்றன.
விவிலியத்தில் தேவனை வாழ்த்தி பேசுவதாக துதி காணப்படுகின்றது. சங்கீதங்களிலும் மற்றுள்ள அனேக பகுதிகளிலும் தேவனை துதித்து வாழ்த்துகிறார்கள். அவரது நாமத்தினிமித்தமும், அவரது கிரியைகளினிமித்தமும் மீட்கப்பட்டோர் ஆனந்த களிப்புடன் பாடி சீயோனுக்கு வருகிறார்கள். தேவனை துதிப்பது தேவனுடைய பிள்ளைகளின் வாழ்வியல் பங்காக மாறிவிட்டது. நாம் துதியின் சத்தத்தை தொனிக்கப்பண்ணி தேவனை புகழ்ந்துரைக்க வேண்டும். துதியானது தேவனை எல்லா நாமங்களுக்கும் மேலாக உயர்த்தி வைக்கிறது. நம்மை அவரின் பாதத்தில் அமர வைக்கிறது. துதியினிமித்தம் தேவனின் பலத்த கிரியைகள் வெளிப்பட்டுள்ளன.
ஒருவருக்கொருவர் வாழ்த்துவதால் ஆழமான கிறிஸ்தவ ஐக்கியம் உண்டாகின்றது. தேவனை உயர்த்துவதினால் தேவனுடைய பலத்த கிரியைகள் வெளிப்படுகின்றது.
அவர்கள் ஆத்துமாக்களை வஞ்சகத்திற்கும் கொடுமைக்கும் தப்புவிப்பார்; அவர்களுடைய இரத்தம் அவருடைய பார்வைக்கு அருமையாயிருக்கும். அவர் பிழைத்திருப்பார், ஷேபாவின் பொன் அவருக்குக் கொடுக்கப்படும்; அவர்நிமித்தம் இடைவிடாமல் ஜெபம்பண்ணப்படும், எந்நாளும் ஸ்தோத்திரிக்கப்படுவார். பூமியிலே மலைகளின் உச்சிகளில் ஒரு பிடி தானியம் விதைக்கப்பட்டிருக்கும்; அதின் விளைவு லீபனோனைப்போல அசையும்; பூமியின் புல்லைப்போல நகரத்தார் செழித்தோங்குவார்கள். அவருடைய நாமம் என்றென்றைக்கும் இருக்கும்; சூரியனுள்ளமட்டும் அவருடைய நாமம் சந்தான பரம்பரையாய் நிலைக்கும்; மனுஷர் அவருக்குள் ஆசீர்வதிக்கப்படுவார்கள், எல்லா ஜாதிகளும் அவரைப் பாக்கியமுடையவர் என்று வாழ்த்துவார்கள். இஸ்ரவேலின் தேவனாயிருக்கிற கர்த்தராகிய தேவனுக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக; அவரே அதிசயங்களைச் செய்கிறவர்.
அவருடைய மகிமை பொருந்திய நாமத்துக்கு என்றென்றைக்கும் ஸ்தோத்திரமுண்டாவதாக; பூமிமுழுவதும் அவருடைய மகிமையால் நிறைந்திருப்பதாக. ஆமென். சங்கீதம் 72:14-19
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment