CCM Tamil Bible Study - கோபம்
வெளி12:12d. பிசாசு மிகுந்த கோபம் கொண்டு.நீதி12:16;16:14;27:3,4;பிர7:9;சங்4:4;76:10;தானி11:36;யோனா4:1;மத்2:16;யாக்1:20.
கோபம்
கோபம் மிகவும் பொல்லாதது என்று சொல்வது சரியா என்று எனக்கு தெரியவில்லை. தேவன் கோபம் கொள்வது அவசியமானது என்பதை விவிலியத்தில் படிக்கின்றோம். தேவனுடைய விருப்பத்துக்கு மாறாக மனிதர்கள் போனபோது தேவனுடைய கோபம் வெளிப்பட்டது. தேவகோபம் பற்பல விதமான சிதைவுகளை ஏற்படுத்தியிருந்தாலும் அது தேவனுடைய நீதியையும் பரிசுத்தத்தையும் வழுவாதன்மையையும் வெளிப்படுத்தியது. தேவனுடைய கோபத்தினால் தண்டனை உண்டாயிற்றென்றால் தேவ இரக்கத்தினால் கிருபையும் மீட்பும் உண்டாயிற்று.
மனிதர்கள் தேவன் மீது கோபம் கொள்வதை விவிலியம் ஏற்றுக்கொள்ளவில்லை. தேவன் மீதும் தேவ ஆளுகை மீதும் கோபம் காண்பித்தவர்கள் அழிந்து போயினர். ஆகையினால் தான் மனித கோபம் தேவ நீதியை எழுப்பாது என்று அதற்கு முற்றுப்புள்ளி போடப்பட்டது. தேவகோபத்துக்கும் மனித கோபத்துக்கும் உண்டான போட்டிகள் சுருங்கி போயின. ஆனால் தேவ கோபத்திற்கும் சாத்தானின் கோபத்திற்கும் இடையில் உண்டான போட்டிகள் உலகம் அழிக்கப்படுவது வரையிலும் சாத்தான் நரகத்தில் தள்ளப்படுவது வரையிலும் தொடர்ந்து கொண்டேயிருக்கும்.
பிசாசின் கோபம் நியாயமானதும் விவேகமானதும் அல்ல. தண்டனை கொடுப்பவர்கள் மேல் - கண்டிப்பவர்கள் மேல் கோபம் கொள்கின்ற பண்புகள் எந்த மனிதனிடம் இருந்தாலும் அது பிசாசின் குணமே. எதிர்த்து நிற்பதும், நன்மையானவைகளை தீதாக கருதுவதும், நல்ல உபதேசங்களை ஏற்காது சண்டை பண்ணுவதும் பிசாசின் குணமாகும். பிசாசின் கோபம் அவனது அழிவுக்கு வழிவகுக்கும். அவன் புத்தியை மழுங்க செய்யும். அவன் அறிவை சிதைக்கும். இதனால் தான் செய்வது என்னவென்று அறியாமல் தான் வெட்டின குழியில் தானே அகப்படுவான்.
சாத்தானின் கோபம் தேசத்தில் மனிதர்களின் கோபமாக துன்மார்க்ககளின் கோபமாக அவதாரமெடுத்து ஆடுகின்றது.
மிஞ்சும் கோபம் அடக்கப்படும்.
Comments
Post a Comment