CCM Tamil Bible Study - அதிக சந்தோஷம் - More happiness
- Get link
- X
- Other Apps
அதிக சந்தோஷம்
3Jn1:4. I have no greater joy than to hear that my children walk in truth. 1Kin3:6;2Kin20:3;Ps26:1-3;Pro23:24;Isa8:18;38:3;Jn12:35,36;Gal2:14;4:19.
3யோவா1:4. என் பிள்ளைகள் சத்தியத்திலே நடக்கிறார்கள் என்ற சந்தோஷத்திலும் அதிகமான சந்தோஷம் எனக்கு இல்லை. 1இரா3:6;2இரா20:3;சங்26:1-3;நீதி23:24;ஏசா8:18;38:3;யோவா12:35,36;கலா2:14;4:19
1) குடும்ப நீதி அடிப்படையிலான சந்தோஷம். எந்தவொரு தகப்பனும் தன் பிள்ளைகள் தனக்கு கீழ்படிந்து தன் விருப்பத்தின்படி, தான் வகுத்த வழியில் மட்டுமே நடப்பதையே விரும்புவான். அவ்விதம் பிள்ளைகள் நடக்கும்போது இருவிதங்களில் தகப்பனின் உள்ளம் மகிழ்ச்சியால் நிரம்புகின்றது. ஒன்று குடும்ப பாரம்பரிய ஒழுங்கு ஆதிகாலந்தொட்டு தொடர்ந்து செல்லுவதினிமித்தம் உண்டாகும் சந்தோஷம். இன்னொன்று பிள்ளைகள் கீழ்படிவதையும் , அடங்கிப்போவதையும், பணிவாக நடப்பதையும், ஒழுக்கமாய் இருப்பதையும் பார்ப்பதினாலும் அனுபவிப்பதினாலும் உண்டாகும் சந்தோஷம் ஆகும். இந்த குடும்ப நீதி அடிப்படையிலான சந்தோஷத்தில் பணம், பொன், பொருள், மண், வீடு, கல்வி ஆகிய யாவும் மூன்றாந்தரமானதாகும். இவ்வித உலக காரியங்களினால் உண்டாகும் சந்தோஷம் நிலையானதல்ல. கீழ்படிதல் போன்றவைகளினால் உண்டாகும் சந்தோஷமே தகப்பனை நீண்ட நாட்கள் வாழவைக்கும்.
2) சபை நீதி அடிப்படையிலான சந்தோஷமாகும். இரட்சிக்கப்பட்டவர்கள், நீதிக்குட்படுத்தபட்டவர்கள், பரிசுத்தவான்களாகும்படி அழைப்பப்பட்டவர்கள், விசுவாசத்துக்குள் வந்தவர்கள், கிறிஸ்துவை தரித்துக் கொண்டவர்கள் தங்களை மேய்ப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஊழியகாரர்களுக்கு முற்றிலுமான அர்ப்பணமுள்ள கீழ்படிதலை வெளிப்படுத்துவதினிமித்தம் ஆவிக்குரிய தகப்பன்மார்களாகிய ஊழியர்கள் சந்தோஷப்படுவார்கள். கிறிஸ்துவின் உபதேசத்திலே செம்மையாக நடப்பதினிமித்தம் உண்டாகும் சந்தோஷமே மேலானது. விசுவாசிகள் தாராளமாக பொன், பணம், பொருள் கொடுப்பதினால் உண்டாகும் சந்தோஷத்தை விடவும் கீழ்படிவதினிமித்தம் உண்டாகும் சந்தோஷமே மேலானது.
3) தேவநீதி அடிப்படையினால் உண்டாகும் சந்தோஷமாகும். குடும்பத்திலும், சபையிலும் கீழ்படிதலைக் கற்றுக்கொண்டு நடக்கிற ஒருவன் தேவனுடைய ஆலோசனைகளுக்கும் கீழ்படிந்து நடக்க முயற்சிக்க வேண்டும். தன்னிடம் ஆலோசனைக் கேட்டு அதன்படி நடக்கிறவன் எவனோ அவன்மேல் மாத்திரமே தேவன் பிரியமாயிருப்பார். கீழ்படிதலை இவ்வாறு விளக்கவியலும். ஜெபிப்பது நல்லது ஆனால் தேவன் விரும்புவதை அறிவது அதைவிட நல்லது. மிகவும் மேலானது எதுவெனில் தான் எதை செய்ய வேண்டுமென்றாலும் பரலோக தந்தையிடம் கேட்டு அதன்படி செய்வதாகும். இவைகளினால் மாத்திரம் தேவன் மகிழ்ச்சியடைவதில்லை. தாம் கொடுத்த ஆலோசனைபடி வலது ஒடது பக்கம் விலகாமல் நடப்பதினிமித்தமே தேவன் அதிகமாக சந்தோஷபடுகிறார். இதுதான் ஆவிக்குரிய வாழ்வின் உச்ச நிலையாகும்.
கிருபையால் கிறிஸ்துவுக்குள் வந்தோம். கிருபையால் வரங்களை, ஊழியங்களை பெற்றோம். இப்பொழுது கீழ்படிதலினால் நிலை நிற்கின்றோம். தேவனுடைய ஜனமே நீ கீழ்படிதலினால் நிலைநிற்க முயற்சி செய். அதுவே அவருக்கு சந்தோஷம்.
இப்படியிருக்க, தன்னை நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக்கடவன். 2கொரிந்தியர் 10:12.
நீ என்ன செய்தாலும், நீ எங்கே போனாலும், எல்லாவற்றிலும் புத்திமானாயிருக்கிறதற்கும், கர்த்தர் என்னைக் குறித்து: உன் பிள்ளைகள் தங்கள் முழு இருதயத்தோடும் தங்கள் முழு ஆத்துமாவோடும் எனக்கு முன்பாக உண்மையாய் நடக்கும்படிக்குத் தங்கள் வழியைக் காத்துக்கொண்டால், இஸ்ரவேலின் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கத்தக்க புருஷன் உனக்கு இல்லாமற்போவதில்லை என்று சொன்ன தம்முடைய வார்த்தையைத் திடப்படுத்துகிறதற்கும், மோசேயின் நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடி, நீ உன் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளையும், கற்பனைகளையும், நியாயங்களையும், சாட்சிகளையும் கைக்கொள்ள, அவர் வழிகளில் நடக்கும் படிக்கு அவருடைய காவலைக் காப்பாயாக. 1இராஜாக்கள் 2:3,4.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment