CCM Tamil Bible Study - காத்துக் கொள் - Protect Yourself
- Get link
- X
- Other Apps
காத்துக் கொள்
1Jn5:21b. Little children, keep yourselves from idols. Amen.Ps34:13;119:9;Pr2:20;3:21;4:13,23;7:2;Ecc5:1; Jer31:16;Nah2:1;Lk21:19;Act15:29;1Tim3:9;5:22;2Tim1:14;Jas1:27;Jud1:6;Rev16:15.
1யோவா5:21b. பிள்ளைகளே உங்களை காத்துக் கொள்ளுங்கள். சங்34:13;119:9;நீதி2:20;3:21;4:13,23;7:2;பிர5:1;எரே31:16;நாகூ2:1;லூக்21:19;அப்15:29;1தீமோ3:9;5:22;2தீமோ1:14;யாக்1:27;யூதா1:6;வெளி16:15.
பிள்ளைகளே விக்கிரகங்களுக்கு விலகி உங்களை காத்துக் கொள்ள வேண்டும். பிள்ளைகளே பொருளாசையாகிய விக்கிரகராதனைக்கு விலகி உங்களை காத்துக் கொள்ள வேண்டும். இதுதான் யோவானின் விருப்பம் ஆகும்.
ஏன் இந்த இரண்டு காரியங்களிலிருந்தும் தன்னைக் காத்துக்கொள்ள வேண்டும் என்று கூறுகின்றார் ?
இந்த இரு விக்கிரகாராதனை மூலம் மூன்றுவிதமான காரியங்கள் நடந்தேறுகின்றது.
ஒன்று இவைகளால் தீட்டு உண்டாகின்றது. ஏசா30:22. தீட்டு என்றால் அசுத்தமானது, அழுக்கானது, அருவருப்பானது, சீயென்று இகழப்படவேண்டியது ஆகும். தீட்டுப்பட்டு பஸ்காவை புசிக்கமுடியாது. எண் 9:6-10. ஆசாரியபணி – ஊழியம் செய்கிறவர்கள் இவைகளால் அழுக்கடையலாகாது. லேவி 22:3,8. தீட்டோடே கர்த்தரின் வாசஸ்தலத்தில்கூட வரலாகாது. எண்35:34;2நாளா23:19. தீட்டுள்ளதொன்றும் தேவனுடைய இராஜ்யத்தில் பிரவேசிக்க முடியாது. வெளி21:27. விக்கிரகங்களினாலும், பொருளாசையினாலும் மற்றும் பல செயல்களினாலும் தீட்டுபடுகிறவர்கள் அக்கினிக்கு இரையாக்கப்படுவார்கள். வெளியேற்றப்படுதலும், ஒதுக்கிவைக்குதலும் முதற்காரியம். இதிலே தவறை உணர்ந்து தீட்டுப்போக சுத்திகரிக்கப்படவில்லையெனில் அக்கினிக்கு ஒப்புக்கொடுக்கப்படும். எனவே விக்கிரகம் சம்பந்தபட்டவைகளை விட்டு வெளியேற வேண்டும்.
இரண்டு தீட்டு சாபத்தை கொண்டு வருகின்றது. விக்கிரகங்களாலும், பொருளாசை என்பதினாலும் தானும் சாபத்துக்குள்ளாகி தன் சந்ததியையும் சாபத்துக்குள்ளாக்குகின்றனர். விக்கிரக வணக்கத்தினால், விக்கிரகங்களை பின்பற்றுவதினால் நான்கு தலைமுறை சாபமடைகின்றது. உபா5:9;11:28, 2பேது2:14. பாவம் சாபத்தை கொண்டு வந்தது. பாவத்தை பிசாசு கொண்டு வந்தான். சபிக்கப்பட்ட பிசாசினால் பாவம் உண்டானதினால் ஆதிமனுகுலம் சபிக்கப்பட்டது. விக்கிரகாராதனை செய்வது, அப்படிபட்டவர்களோடு பழகுவது, அவர்களை வெறுக்காமலிருப்பது , அவர்களோடு தொந்திப்பாய் இருப்பது , அப்படிபட்டவர்களை கல்யாணம் செய்வது யாவும் சாபத்தையே கொண்டு வரும். சபிக்கப்பட்டவர்கள் நரகத்துக்குரியவர்களாகின்றனர். சாபம் வறுமை, வியாதி, தரித்திரம் போன்ற குறைவுகளை உண்டாக்கும். சாபம் அகலாவிட்டால் தொடர்ந்து பிடிக்கும். விக்கிரகம் சார்ந்தவைகளை விட்டு வெளியேற வேண்டும்.
மூன்றாவது தேவ கோபம் உண்டாகின்றது. மனுகுலம் கொத்து கொத்தாக அழிவதின் காரணமே தேவனுடைய கோபாக்கினை தான். விக்கிரகங்களால் கிறிஸ்தவ தேசங்களும், சபைகளும் தீட்டுபட்டு சாபத்திற்குட்பட்டதினால் தேவகோபம் பற்றியெரிகின்றது. முழு உலகமும் எப்பொழுது பொல்லாங்கனுக்குள் விழுந்து போனதோ அன்றே தேவன் தமது கோபத்தில் முழு உலகையும் அழிப்பதாக ஆணையிட்டார். எபே5:6;யாத்32:10;எபி3:10,11. தேவனுடைய கோபத்தை ஆற்றும்படியாக இயேசு கிறிஸ்து வந்தார். மீட்பை கொண்டு வந்தார். என்றாலும் கோபம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதேயன்றி நீக்கப்படவில்லை. விக்கிரகங்களாலும், பொருளாசைகளாலும் தீட்டுப்பட்டுபோன உலகத்தை கோபாக்கினைக்கு ஒப்புக்கொடுத்திருப்பதை அறிந்து இன்று அவருடைய சத்தத்தை கேட்டு மனந்திரும்பி உங்கள் ஆத்துமாவைக் காத்துக் கொள்ளுங்கள். குறைவுகள் காணப்பட்டாலும், பாடுகள் இருந்தாலும் உங்கள் ஆத்துமாவும், சரீரமும் தீட்டுப்படாமல் காத்துக் கொள்ளுங்கள். வெளி 3:8-10.
புறப்படுங்கள், புறப்படுங்கள், அவ்விடம்விட்டுப் போங்கள்; அசுத்தமானதைத் தொடாதிருங்கள்; கர்த்தருடைய பாத்திரங்களைச் சுமக்கிறவர்களே அதின் நடுவிலிருந்து புறப்பட்டு உங்களைச் சுத்திகரியுங்கள். ஏசாயா 52:11
ஆனபடியால், நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானதைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். அப்போது, நான் உங்களை ஏற்றுக்கொண்டு, உங்களுக்குப் பிதாவாயிருப்பேன், நீங்கள் எனக்குக் குமாரரும் குமாரத்திகளுமாயிருப்பீர்களென்று சர்வவல்லமையுள்ள கர்த்தர் சொல்லுகிறார்.2கொரிந்தியர் 6:17,18
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment