CCM Tamil Bible Study - ஒத்துப்போகாதே - Do not agree
- Get link
- X
- Other Apps
ஒத்துப்போகாதே
2Jn1:10. If anyone comes to you and does not bring this doctrine, do not receive him into your house nor greet him. 2Jn1:11;Rom16:17,18;1Cor5:11;16:22;Gal1:8,9;2Tim3:1-10;Heb6:11,12.
2யோவா1:10. ஒருவன் இந்த உபதேசத்தை கொண்டுவராதிருந்தால் உங்கள் வீட்டில் ஏற்றுக்கொள்ளாமலும், வாழ்த்துதல் சொல்லாமலும் இருங்கள். 2யோவா1:11;ரோம16:17,18;1கொரி5:11;16:22;கலா1:8,9;2தீமோ3:1-10;எபி6:11,12.
கிறிஸ்துவையும், கிறிஸ்துவின் உபதேசத்தையும், கிறிஸ்துவின் தன்மைகளையும் உடையவனாயிராத ஒருவன் எப்படிப்பட்டவனாயிருந்தாலும் அவனோடும், அவனுக்குரியவைகளோடும் இணங்கிச் செல்லக்கூடாது என்பது புதிய ஏற்பாட்டு பரிசுத்தவான்களின் கட்டளையாகும். இயேசு கிறிஸ்துவும் இப்படித்தான் நடந்தாரென்று யோவான் 2:24,25 கூறுகின்றது. கிறிஸ்துவின் சரீரமாகிய சபையில் பிதாவையும், குமாரனையும் குறித்து பிரசங்கிப்பதற்காகவே பரிசுத்த ஆவி கொடுக்கப்பட்டார். கிறிஸ்துவை குறித்து பிரசங்கிப்பதற்காகவே தேவன் சபைகளில் ஐந்துவிதமான ஊழியங்களையும், உதவிகாரர்களையும், மூப்பர்களையும், மற்றும் பலரையும் ஏற்படுத்தியுள்ளார். கிறிஸ்துவை ஒருவருக்குள் பிறப்பிப்பதற்காகவே கிறிஸ்துவின் ஊழியகாரன் நியமிக்கப்பட்டுள்ளான். அவனுக்குள் கிறிஸ்து ஜெனித்து விட்டாரென்றால் அவன் வெளியே புறப்பட்டுப்போய் பலருக்குள் கிறிஸ்துவை பிறப்பிப்பார்.
கிறிஸ்தவ ஊழியர்கள் கிறிஸ்துவின் சபையில் கிறிஸ்துக்களை உருவாக்கவே நியமம் பெற்றுள்ளார்கள். கிறிஸ்துக்கள் பட்டணந்தோறும், கிராமங்கள் தோறும் உருவாவார்களென்றால் எங்கும் கிறிஸ்துக்களாகவே சுற்றிதிரிந்து தேவனுடைய இராஜ்யத்தை விஸ்தரிப்பார்கள். 2000 வருடமாக தேவனுடைய இராஜ்யம் வருவதாக என்று ஜெபித்துக்கொண்டிருந்தும் இன்னும் தேவனுடைய இராஜ்யம் வரவில்லையெனில் கிறிஸ்துவின் சபையில் ப. ஏ பரிசுத்தவான்களை பிரசங்கித்து சபைகளை உலகமயமாக்குவதையும், தீட்டாக்குவதையும், பொருளாசை என்ற விக்கிரகத்தையும் நிரப்பி விட்டார்கள் என்றுதான் பொருள். அவர்கள் இஸ்ராயேல் தேசம் உருவாக காத்திருந்தார்கள். நாமோ தேவனுடைய இராஜ்யம் உருவாகக் காத்திருக்கிறோம்.
பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்களை பிரசங்கிக்கும் ஆவிகள் சபைகளில் பெருகி விட்டது. கிறிஸ்துவை பிரசங்கிக்க அபிஷேகம் பெற்றவர்கள் கிறிஸ்துவை காண முடியாமல் போன ப. ஏ பரிசுத்தவான்களை பிரசங்கிப்பதினால் சபைகள் தாறுமாறுகளின் ஆவிகளினால் நிரம்பியுள்ளது. ப. ஏ பரிசுத்தவான்களுக்கும் இயேசுவுக்கும் சம்பந்தமே இல்லை. வாழ்க்கை முறையிலும், உபதேச முறையிலும் தொடர்பே இல்லை. அவர்கள் எல்லாம் கிறிஸ்துவை வாஞ்சித்து வாஞ்சித்து மடிந்துப் போனார்கள். நல்ல வாழ்க்கை முறை கொண்டவர்கள் அவர்களுக்கு கிடைக்கவில்லை. இழந்துபோன தூய்மையையும், தேவ சாயலையும் கிறிஸ்து மட்டுமே கொண்டு வந்தார். கிறிஸ்துவை பிரசங்கிக்காத ஏவரோடும் உங்களை இணைத்துக் கொள்ளாதீர்கள். அவர்களோடு ஒத்துப்போகாதீர்கள். அவர்களோடு தொந்திப்பாகாதீர்கள். இவ்விதம் செய்ததினால்தான் எருசலேம் தேவாலயம் இன்று வரையிலும் மண்மேடாய் கிடக்கிறதைப்போல் தேவாலயங்களும் பூட்டப்பட்டு வெறிச்சோடி காணப்படுகின்றது. கிறிஸ்துவை பிரசங்கிக்காத சபையும், ஊழியனும் தேவனுடைய இராஜ்யத்துக்கு தூரமானவனே. அப்படிப்பட்டவர்கள் சபையை விட்டு வெளியேறுங்கள். இஸ்ரேயேலுக்குப் போங்கள். இல்லையெனில் அவர்கள் வெளியேற்றப்படுவார்கள்.
கிறிஸ்துவின் வேஷத்தை தரித்துக்கொண்டு ஆபிரகாம் முதல் எலியா வரைக்கும் பிரசங்கிக்கிற உங்களுக்கு வெட்கமாயில்லை. மனந்திரும்புங்கள். இல்லையெனில் ஒருவராலும் அவிக்கவியலாத அக்கினி உங்கள் பலிபீடத்திலிருந்து எழும்பும்.
புறப்படுங்கள், புறப்படுங்கள், அவ்விடம்விட்டுப் போங்கள்; அசுத்தமானதைத் தொடாதிருங்கள்; கர்த்தருடைய பாத்திரங்களைச் சுமக்கிறவர்களே அதின் நடுவிலிருந்து புறப்பட்டு உங்களைச் சுத்திகரியுங்கள். ஏசாயா 52:11..
அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக; நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது? கிறிஸ்துவுக்கும் பேலியாளுக்கும் இசைவேது? அவிசுவாசியுடனே விசுவாசிக்குப் பங்கேது? தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தமேது? நான் அவர்களுக்குள்ளே வாசம்பண்ணி, அவர்களுக்குள்ளே உலாவி அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனங்களாயிருப்பார்கள் என்று, தேவன் சொன்னபடி, நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களே. ஆனபடியால், நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானதைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். அப்போது, நான் உங்களை ஏற்றுக்கொண்டு, உங்களுக்குப் பிதாவாயிருப்பேன், நீங்கள் எனக்குக் குமாரரும் குமாரத்திகளுமாயிருப்பீர்களென்று சர்வவல்லமையுள்ள கர்த்தர் சொல்லுகிறார். 2கொரிந்தியர் 6:14-8
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment