Posts

Showing posts from November, 2022

CCM Tamil Bible Study - கோபம்

வெளி12:12d. பிசாசு மிகுந்த கோபம் கொண்டு.நீதி12:16;16:14;27:3,4;பிர7:9;சங்4:4;76:10;தானி11:36;யோனா4:1;மத்2:16;யாக்1:20.  கோபம் கோபம் மிகவும் பொல்லாதது என்று சொல்வது சரியா என்று எனக்கு தெரியவில்லை. தேவன் கோபம் கொள்வது அவசியமானது என்பதை விவிலியத்தில் படிக்கின்றோம். தேவனுடைய விருப்பத்துக்கு மாறாக மனிதர்கள் போனபோது தேவனுடைய கோபம் வெளிப்பட்டது. தேவகோபம் பற்பல விதமான சிதைவுகளை ஏற்படுத்தியிருந்தாலும் அது தேவனுடைய நீதியையும் பரிசுத்தத்தையும் வழுவாதன்மையையும் வெளிப்படுத்தியது. தேவனுடைய கோபத்தினால் தண்டனை உண்டாயிற்றென்றால் தேவ இரக்கத்தினால் கிருபையும் மீட்பும் உண்டாயிற்று.  மனிதர்கள் தேவன் மீது கோபம் கொள்வதை விவிலியம் ஏற்றுக்கொள்ளவில்லை. தேவன் மீதும் தேவ ஆளுகை மீதும் கோபம் காண்பித்தவர்கள் அழிந்து போயினர். ஆகையினால் தான் மனித கோபம் தேவ நீதியை எழுப்பாது என்று அதற்கு முற்றுப்புள்ளி போடப்பட்டது. தேவகோபத்துக்கும் மனித கோபத்துக்கும் உண்டான போட்டிகள் சுருங்கி போயின. ஆனால் தேவ கோபத்திற்கும் சாத்தானின் கோபத்திற்கும் இடையில் உண்டான போட்டிகள் உலகம் அழிக்கப்படுவது வரையிலும் சாத்தான் நரகத்தில் தள்ளப்...

CCM Tamil Bible Study - ஏழாம் தூதனின் காலம் அறிவிக்கப்படுகிறது

வெளி 10:6d. ஏழாம் தூதனுடைய சத்தத்தின் நாட்களிலே அவன் எக்காளம் ஊதப் போகிறபோது தேவ ரகசியம் நிறைவேறும் என்றான். வெளி11:15;ஏசா24:1-23;26:1-27:13;66:1-24;தானி7:11,12;சக14:1-21;மல்3:4.  ஏழாம் தூதனின் காலம் அறிவிக்கப்படுகிறது ஏழாம் தூதனின் காலம் என்பது ஏழாம் தூதன் எக்காளம் ஊதுகிற நாட்களிலிருந்து ஆரம்பமாவதாகும். ஏழாம் தூதன் குறித்து பலவிதமான அபிப்ராயங்கள் காணப்படுகிறது. இங்கு இப்பகுதியில் உள்ள இரு காரியங்களை மட்டும் தியானிப்போம்.  முதலாவது ஏழாம் தூதனின் நாட்களில் உண்டாகும் சத்தங்கள் குறித்ததாகும். வெளிப்படுத்தல் 11 : 15 லிருந்து 15 ஆம் அதிகாரம் வரை நம் கணக்கிடும் போது ஏழாம் தூதனின் காலத்திய சத்தங்களை அறிய முடியும். 11:15,19;12:10;14:2,7,9,13,15,18;15:3,4 போன்றவைகள் ஆகும். 11:15லும 11:19லும் சொல்லப்பட்டுள்ள சத்தங்களின் தாற்பரியங்களை நாம் அறிய முடியாவிட்டாலும் அக்காலத்திய மக்கள் நிச்சயம் அறிவார்கள். கடைசி காலங்களில் தூதர்களின் வெளிப்படுதல் நிச்சயம் உண்டாகும். உலகத்தில் நடக்கும் இயற்கையான நிகழ்வுகளை தவிர்த்து இயற்கைக்கு மாறாக நடக்கிற காரியங்கள் உண்டாகும். இந்த சத்தங்களினால் மனிதர்களுக்கு...

CCM Tamil Bible Study - சுவிசேஷம்

வெளி 10:6c. தேவன் தம்முடைய ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகளுக்கு சுவிசேஷமாய் அறிவித்தபடி.  1நாளா16:23;சங்96:2;ஏசா61:1;வெளி14:6;எபி4:1-3;1பேது1:24,25.  சுவிசேஷம் இச்சொல் அநேக மூல சுவடிகளில் இல்லை என்று கூறுகின்றார்கள். ஆங்கில KJV லும் காணப்படவில்லை. ஆனாலும் நமது தமிழ் விவிலியத்தில் காணப்படுவதினால் இதனை குறித்து சில காரியங்களை இங்கு நாம் தியானிக்கலாம்.  பழைய ஏற்பாட்டில் தூரத்திலிருந்து வரும் செய்தி என்றும், இரட்சிப்பே சுவிசேஷமாய் அறிவிக்கப்பட வேண்டும் என்றும், சமாதானத்தை சுவிசேஷமாய் கூறி அறிவிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. தீர்க்கதரிசிகளாகிய ஊழியக்காரர்களில் தேவனுடைய இருதயத்தை பெற்றுக் கொண்டவர்கள் இந்த சுவிசேஷத்தை காட்சியாகவும் வாக்காகவும் பெற்றுக் கொண்டனர்.  புதிய ஏற்பாட்டில் வரும்போது சுவிசேஷத்தை கொண்டு வந்தவர் இயேசு கிறிஸ்துவாக இருக்கின்றார். இயேசு கிறிஸ்துவே சுவிசேஷமாகவும் அறியப்படுகின்றார். புதிய ஏற்பாட்டில் சுவிசேஷம் என்பது நான்கு முக அமைப்புகளாக கொண்டுள்ளது.  முதலாவது இயேசு கிறிஸ்து கொண்டு வந்த செய்திகள். மனந்திரும்புங்கள் பரலோக ராஜ்யம் சமீபமாய் இருக்கி...

CCM Tamil Bible Study - ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகள்

வெளி 10:6b. ஆனாலும் தேவன் தம்முடைய ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகளுக்கு சுவிசேஷமாய் அறிவித்தபடி...  யாத்15:20;எண்11:25;உபா18:15;34:12;நியா4:4;1சாமு3:20;சங்105:15;நீதி29:18;மத்10:41;13:35;லூக்24:44;ரோம1:4;16:25;2பேது1:19;2பேது3:2;வெளி22:19.  ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகள் ஊழியக்காரன் என்பதற்கு மூலச்சொல் டூலோஸ். அப்படியென்றால் அடிமை என்றும் இன்னொருவரின் பணிக்காக அர்ப்பிக்கப்பட்டவன் என்றும் பொருள். இச்சொல் புதிய ஏற்பாட்டில் 127 தடவைகள் வந்துள்ளது. வெளிப்படுத்தலில் 14 தடவைகள் வந்துள்ளது. தீர்க்கதரிசி என்றால் மறைவானவைகளை கண்டோ, அறிந்தோ வியாக்கியானம் செய்கிறவன் என்றுப் பொருள். இச்சொல் புதிய ஏற்பாட்டில் 149 தடவைகள் வந்துள்ளது. வெளிப்படுத்தலில் எட்டு தடவைகள் மாத்திரமே வந்துள்ளது. ஊழியக்காரராகிய தீர்க்கதரிசி என்றால் தேவனுடைய கட்டளையாலும், தேவனுடைய ஆவியாலும் கட்டப்பட்டவனாகிய தேவனால் அர்ப்பிக்கப்பட்டவனாகிய தனக்குத்தானே எவ்வித உரிமையும் இல்லாதவனுமாகிய தேவனுடைய அடிமை என்று பொருளாகும்.  தேவனால் பிரித்தெடுக்கப்பட்டவனாயும், அபிஷேகிக்கப்பட்டவனாயும் வார்த்தையையோ, காட்சியையோ, பணியையோ பெற்றுக்...

CCM Tamil Bible Study - காலம் செல்லாது

வெளி 10:6a. இனி காலம் செல்லாது. எரே8:20;30:7;எசே7:10;30:3;ஓசி6:11;ஆமோ5:13;மாற்1:15;லூக்13:15;யோவா7:33;2தீமோ4:4,6;எபி4:9;வெளி11:18;14:15;22:10.  காலம் செல்லாது இவ்விடத்தில் காலம் செல்லாது என்று கூறினவர் 22 10ல் காலம் சமீபமாய் இருக்கிறது என்று கூறுகின்றார். காலங்களும் வேளையும் ஆண்டவரின் கரத்தில் இருப்பதினால் தான் குறிப்பிட்ட காலங்களையும் நேரங்களையும் அவர் வெளிப்படுத்தினாலொளிய நாம் அறிய முடியாது. இனி காலம் செல்லாது என்று கூறுவதினால் கடைசி காலம் நெருங்கி விட்டது என்பதை அறிவுறுத்துகின்றார். ஆகவே இச்சொல் எதனை மையப்படுத்துகிறது என்பதை நாம் அறிவது நல்லது. இவ்விடம் சார்ந்த அல்லது வெளிப்படுத்தல் புத்தகம் சார்ந்த மூன்று காரியங்களை நினைவிற் கொள்வோமாக.  முதலாவது தீமை சார்ந்தவைகளுக்கு முடிவு வரப் போகின்றது. இதுவரையிலும் தீமையின் தாய் வீடாகிய பாவத்தினமித்தம் பரிகாரம் கிடைத்தது. இனி பரிகாரம் கிடையாது. தண்டனையே கிடைக்கும். ஒவ்வொரு நிகழ்வுகளினாலும் தீமையினால் ஆட்கொள்ளப்பட்ட அனைத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக சிதைத்து வருகின்றார் ஆண்டவர். இவ்விதமான மெல்ல கொல்லும் அல்லது அழிக்கும் தண்டனை முற்றுப்பெற்ற...

CCM Tamil Bible Study - கையை உயர்த்தி

வெளி10:5. சமுத்திரத்தின் மேலும் பூமியின் மேலும் நிற்கிறதாக நான் கண்ட தூதன் தன் கையை வானத்திற்கு நேராக உயர்த்தி: ஆதி14:22,23;உபா32:40.  கையை உயர்த்தி பரலோகத்துக்கு நேராக தன் வலது கையை உயர்த்தி ஆணையிடுவது வழக்கம். இங்கு இவ்விதமான ஆணையிடுதலாக அல்லாது தேவனுடைய செய்தியை சொல்வதற்காக கையை உயர்த்தினான் என்று பார்க்கின்றோம். தன் வலது கையை தேவனுக்கு நேராக உயர்த்துவதினால் தான் தேவனுக்காக நிற்கிறவன் என்றும், தனது செய்தி தேவனுடைய செய்தி என்றும், இது நிச்சயமாக நிறைவேறிய தீரும் என்றும் அறிவுறுத்துவதாகும். தேவனிடமிருந்து வருகிற எதுவானாலும் தேவனையே மையம் பண்ணும். தேவனுடைய பணியை செய்யும் படியாக அழைப்பு பெற்று அபிஷேகிக்கப்பட்டு நிலை நிறுத்தப்பட்டுள்ள அனைவருமே தாங்கள் தேவனுக்குரியவர்கள் என்றும், தங்களின் செய்தி தேவனுடையது என்றும், தாங்கள் சொல்லுகிறபடியே நிறைவேறும் என்றும் நம்புகிற உறுதிபாடு உடையவர்களாக இருக்க வேண்டும்.  தேவனுடைய மக்களுக்கு தேவனுடைய செய்தியை சொன்னால் சொன்னதின்படியே நிறைவேறும். தேவனுடைய செய்திகள் யாவும் புத்தக வடிவில் தேவ மனிதர்களால் நமக்கு கொடுக்கப்பட்டுள்ளது. எதை பிரசங்கித்தாலும்...

CCM Tamil Bible Study - எழுதாமல் முத்திரை போடு

வெளி 10:4. அவ்வேழு இடிகளும் தங்கள் சத்தங்களை முழங்கின போது நான் எழுத வேண்டுமென்றிருந்தேன். அப்பொழுது ஏழு இடி முழக்கங்கள் சொன்னவைகளை எழுதாமல் முத்திரை போடு என்று வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாக கேட்டேன். உபா29:29;ஏசா8:16;29:11;தானி8:26;12:4,9.  எழுதாமல் முத்திரை போடு தீர்க்கதரிசனங்கள் இவ்விதமாக கணக்கிடப்பட்டுள்ளது. நிகழ்வுகளிலும், பேச்சுகளிலும், எழுத்துக்களிலும் சில காரியங்கள் தேவனால் மறைக்கப்பட்டுள்ளது. ஆதியிலிருந்தே தேவன் இதை செய்தார். தேவன் மறைத்துள்ளவைகளை பிசாசானவன் அறிய முயற்சி செய்வதற்கு அவன் பயன்படுத்துகின்ற முறை தந்திரம் மற்றும் பாவமாகும். தந்திரத்தினால் வஞ்சித்து ஏமாற்றி விஷயங்களை அறிய முயற்சிக்கின்றான். பாவத்தை செய்ய வைத்து ரகசியங்களை பெற்றவர்களை அல்லது அதற்குரியவைகளை தேவனை கொண்டே அழிக்க முயற்சிக்கின்றான். இல்லையெனில் மகா உபத்திரவங்களை கொடுத்து துன்பப்படுத்துகின்றான். இந்த சாத்தானை போல் தேவனால் முத்திரிக்கப்பட்டவைகளை அறியும்படியாக தேவ மனிதர்கள் போராடுகிறார்கள். யோவான் தேவனால் மறைக்கப்பட்டுள்ளதை திறக்கவும் இல்லை வெளிப்படுத்தவும் இல்லை. அப்படியிருக்க தேவ மனிதர்கள் அமைதியாக...

CCM Tamil Bible Study - 7 இடி முழக்கங்கள்

வெளி10:3b. அவன் ஆர்ப்பரித்த போது ஏழு இடிகளும் சத்தமிட்டு முழங்கின. வெளி8:5;14:2;யாத்9:23;19:16;20:18;1சாமு7:10;வெளி11:19;16:18;19:6.  7 இடி முழக்கங்கள் வெளிப்படுத்தல் புத்தகத்தில் 8 இடங்களில் இடிமுழக்கம் என்ற சொல் வந்துள்ளது. சிங்காசன இடி முழக்கம் 4:5. இடிமுழக்க சத்தம் 6:1;14:2. தூபகலச இடிமுழக்கம் 8:5. ஆர்ப்பரித்தலின் இடி முழக்கம் 10:4. தேவாலய இடி முழக்கம் 11:19. ஏழாம் தூதனின் இடி முழக்கம் 16:17,18. கடைசி இடி முழக்க சத்தம் 19:6. விவிலியத்தில் சீனாய் மலை இடி முழக்கம் யாத் 20:19. பெலிஸ்தியரின் மேல் தேவனின் இடிமுழக்கங்கள் 1சாமு 7:10. ஜெப இடி முழக்கங்கள் 1சாமு 12:18. இயேசுவோடு பேசிய இடி முழக்க சத்தம் யோவா 12:29 என்று பலவாறு சொல்லப்பட்டுள்ளது. இவைகளை கணக்கிட்டு பார்க்கும்போது ஏழுவிதமான இடி முழக்கங்கள் என்னவென்று அறிய முடியும்.  நாம் இங்கு மூன்று இடி முழக்கங்கள் குறித்து காண்போமாக முதலாவது சீனாய் மலை இடி முழக்கம். யாக் 19:18;20:18. இந்த இடி முழக்கங்கள் தேவனுடைய வெளிப்படுத்தலை குறிக்கின்றது. இந்த இடிமுழக்கங்களினால் தேவனை குறித்த பயம் இஸ்ராயேலருக்குள் இருக்கும்படி காண்பிக்கப்பட்டது....

CCM Tamil Bible Study - சிங்க கர்ஜனை

வெளி 10:3a. சிங்கம் கெர்ச்சிக்கிறது போல மகா சத்தமாய் ஆர்ப்பரித்தான். நீதி19:12;ஏசா5:29;31:4;42:13;எரே25:30;யோவே3:16;ஆமோ1:2;3:8.  சிங்க கர்ஜனை பரலோக தேவனுடைய சத்தம் சிங்க கர்ஜனை போல் இருக்கும் என்று விவிலியம் கூறுகின்றது. ஆனால் இயேசு கிறிஸ்துவின் சத்தம் மயிர் கத்தரிக்கிறவனுக்கு முன் சத்தமிடாதிருக்கிற ஆடாகவும், வாய்திறவாதவராகவும் இருந்தார் என்று விவிலியம் கூறுகின்றது. அதே வேளையில் உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்து இரண்டாம் முறையாக வெளிப்படும்போது தேவகுமாரனுக்குரிய இயல்பான சத்தமாகிய சிங்க கர்ஜனையாக கேட்கப்படும். இந்த இடைப்பட்ட காலத்தில் மனிதர்களை ஏமாற்றவும் வஞ்சிக்கவும் பயபடுத்தவும் சிங்கத்தை போல் கர்ச்சிக்கிறவனாக சாத்தான் இருக்கின்றான் என்று விவிலியம் கூறுகின்றது. அவனுடைய கர்ஜனையை உண்மையென்று நம்பியவர்கள் அவனை பின்தொடர்கின்றார்கள். இப்பொழுது சாத்தான் அரசியல்வாதி போர்வையிலும், அதிகாரிகள் போர்வையிலும், சமூக சேவகர்கள் போர்வையிலும், ஜாதி அமைப்புகள் போர்வையிலும் நுழைந்து தேவகுமானாகிய இயேசு கிறிஸ்துவின் கர்ஜனையை எழுப்புகின்றான். சிங்கம் கரச்சிக்கின்றது. யார் தான் கவனிக்காமல் இருப்பார்கள்?. இப்...

CCM Tamil Bible Study - தூதனின் அதிகாரம்

வெளி 10:2b. தன் வலது பாதத்தை சமுத்திரத்தின் மேலும் தன் இடது பாதத்தை பூமியின் மேலும் வைத்து.  வெளி10:5,8;சங்2:8;65:5;நீதி8:15,16;ஏசா59:19;மத்28:18;எபே1:20-22;பிலி2:10,11.  தூதனின் அதிகாரம் யோவான் அப்போஸ்தலருக்கு ஒன்றை கொடுக்கும்படி கொண்டு வருகிற தூதன் பூமியிலும் சமுத்திரத்திலும் அதிகாரம் பெற்றவனாக இருக்கின்றான். பூமி முழுவதற்கும் அதிகாரம் பெற்றவனாய் இருக்கின்றான். சர்வ அதிகாரம் பெற்றுள்ள இயேசு கிறிஸ்துவை குறிப்பதாக கூறுவது சரியானது அல்ல. இந்த தூதனுக்கு கொடுக்கப்பட்டுள்ள அதிகாரமானது பூமிக்கும் சமுத்திரத்துக்குமுடைய செய்தியை அறிவிப்பதாகும். இவனுடைய அதிகாரத்திலிருந்து மூன்று விதமான செய்திகள் பிறந்துள்ளன. முதலாவது முத்திரிக்கப்பட்ட செய்தி. வச 4.  இரண்டாவது எச்சரிப்பின் செய்தி. வச 6. மூன்றாவது தீர்க்கதரிசன செய்தி. வச 11. முதலாவது இடிகளாக வெளிப்பட்டது. இரண்டாவது பேச்சுத் தொனியாக வெளிப்பட்டது. மூன்றாவது புத்தகமாக வெளிப்பட்டது.  ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளை தேவனுடைய மனிதர்கள் மூன்று விதங்களில் வெளிப்படுத்த பூமியிலும் சமுத்திரத்திலும் அதிகாரம் பெற்றுள்ளார்கள். வான...

CCM Tamil Bible Study - கையில் புத்தகம்

 வெளி 10:2a. திறக்கப்பட்ட ஒரு சிறு புஸ்தகம் அவன் கையில் இருந்தது. வெளி10:10;5:1-5;6:1,3;எசே2:9,10.  கையில் புத்தகம் பலமுள்ள தூதன் ஒரு சிறிய புத்தகத்தை தன் கையில் கொண்டு வந்துள்ளான். இந்த புத்தகம் எதற்காக கொண்டுவரப்பட்டது என்பதையும் அவைகளில் என்ன எழுதி இருந்தது என்பதையும் அதிகாரத்தின் கடைசி பகுதியில் வாசிக்கின்றோம். நாம் இங்கு தூதன் கையில் புஸ்தகம் கொண்டிருக்கும் காட்சியை தியானிக்கின்றோம்.  தேவனுடைய கையில் இருந்த புத்தகம் வேறு தூதனுடைய கையில் இருக்கிற புத்தகம் வேறு என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். யோவானின் கண்களுக்கு புஸ்தகமாக தெரிகிறது என்றால் பூமியில் உண்டாக்கப்பட்ட புத்தகங்களுக்கு மாறுபட்ட வித்தியாசமான புத்தகங்கள் தேவனிடத்தில் உண்டு என்று நாம் அறிந்திருக்க வேண்டும். இது தேவனால் உருவாக்கப்பட்ட புஸ்தகம் ஆகும். மேலும் இந்த புத்தகத்தின் உட்பொருளை தேவனே எழுதியிருக்க வேண்டும். ஏனெனில் மோசேக்கு தேவன் எழுதி கொடுத்தார் என்று நாம் அறிந்துள்ளோம். அப்படியானால் தேவனால் உருவாக்கப்பட்ட புத்தகம், தேவனால் எழுதப்பட்ட புத்தகம், தேவனால் கொடுக்கப்பட்ட புத்தகம் என்பதை மறந்து விடல...

CCM Tamil Bible Study - பலமுள்ள தூதன்

வெளி 10:1. பின்பு பலமுள்ள வேறொரு தூதன் வானத்திலிருந்து இறங்கி வர கண்டேன். மேகம் அவனை சூழ்ந்து இருந்தது. அவனுடைய சிரசின் மேல் வானவில்லிருந்தது. அவனுடைய முகம் சூரியனைப் போலவும் அவனுடைய கால்கள் அக்னி ஸ்தம்பங்களை போலவும் இருந்தது.  பலமுள்ள தூதன் இந்த அதிகாரம் முழுவதும் இந்த தூதனை குறித்ததாகவும் யோவானுக்கும் தூதனுக்கும் உள்ள தொடர்பை குறிக்கின்றதாகவும் உள்ளது. இந்த தூதன் கிறிஸ்துவை பிரதிபலிக்கின்றான் என்று பலரும் கூறுகின்றனர். அப்படியென்றால் ஏழாம் வசனத்தில் கிறிஸ்துவின் மேல் ஆணையிட வேண்டிய அவசியமில்லை. ஆகவே தேவனிடமுள்ள பயங்கரமான தோற்றமுள்ள தூதர்களில் இவரும் ஒருவர் என்று நாம் அனுமானிக்கலாம். இந்த தூதனை போன்று உலகத்தின் பல பாகங்களில் சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளதை நாம் கண்டுள்ளோம். தேவனை தொழுது கொண்டு தேவனோடு வாழ்வதற்கு பதிலாக தேவனுடைய பணிவிடையாட்களாகிய தேவதூதர்களை தொழுது கொண்டும் அவர்களை தெய்வங்களாக்கியும் செய்யப்படுகின்ற காரியங்கள் சாத்தானியமே ஆகும்.  இந்த தூதனை போன்றவன் தான் சாத்தானும் ஆகும். சாத்தானும் இந்த தூதன் குறித்து சொல்லப்பட்டுள்ளவைகளாகிய மேகம் வானவில் போன்றவைகளை கொண்டுள்ளான...

CCM Tamil Bible Study - கடைசி கால நான்கு பாவங்கள்

வெளி 9:21. தங்கள் கொலைபாதகங்களையும் தங்கள் சூனியங்களையும் தங்கள் வேசித்தனங்களையும் தங்கள் களவுகளையும் விட்டு மனந்திரும்பவுமில்லை. வெளி11:7-9;13:7,15;16:6;18:24;13:13,14;18:23;21:8;22:15;14:8;17:1,2,5;18:3;19:2.  கடைசி கால நான்கு பாவங்கள் கடைசி காலங்களுக்கு அறிகுறிகள் இந்த நான்கு பாவங்களுமேயாகும். இந்த நான்கு பாவங்களையும் விட்டு மனந்திரும்பி பரிசுத்தமாக வாழ்வதற்கு மக்களுக்கு விருப்பமில்லை. இவைகளை கடிந்துரைக்கின்றவர்களில் அனேகர் இந்த பாவங்களில் மறைமுகமாக காணப்படுவதினாலும் இத்தகைய பாவங்களை கருவறுக்க முடியவில்லை. இத்தகைய சாத்தானின் கிரியைகளை உண்மையாகவே எதிர்க்கின்றவர்கள் எல்லா பக்கத்திலிருந்தும் நெருக்கத்துக்குள்ளாகிறார்கள்.  முதலாவது கொலை பாதகங்களை விட்டு மனந்திரும்ப விரும்பவில்லை. போட்டியின்றி வாழவோ, மற்றவர்களின் உடைமைகளை அபகரிக்கவோ வார்த்தைகளினாலோ, ஆயுதங்களினாலோ, வஞ்சக செயல்களினாலோ, கொலை செய்கின்றார்கள். பரிசுத்தவான்கள் பூமியில் இருக்கலாகாது என்று தீர்மானித்து பிசாசு தன்னுடைய ஏவலாட்களை ஏவி பரிசுத்தவான்களை கொன்றழிக்கின்றான். பரிசுத்தவான்களின் இரத்தம் அவர்களுக்கு மிகவும் பிரியமாய...

CCM Tamil Bible Study - விக்கிரகங்கள்

வெளி 9:20b. அப்படியிருந்தும் பொன் வெள்ளி செம்பு கல் மரம் என்பவைகளால் செய்யப்பட்டவைகளையும் காணவும் கேட்கவும் நடக்கவும் மாட்டாதவைகளாய் இருக்கிற விக்கிரகங்களை வணங்காதபடிக்கு மனந்திரும்பவில்லை. விக்கிரகங்கள் விக்கிரகங்கள் என்ற சொல் உண்மையானதாகவோ கற்பனையானதாகவோ மனதில் நிர்ணயிக்கப்பட்ட ஒரு சாயலை ஒரு தோற்றத்தை காணும்படியாக வடிவமைப்பதாகும். இவ்விதமான பொருள் பிற மத தெய்வங்களின் காட்சி பொருள்களாகிய சிலைகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. பொய்யான தெய்வங்களையும் இச்சொல் குறிக்கும். இச்சொல் புதிய ஏற்பாட்டில் 11 தடவைகள் வந்துள்ளது. அப்7:41;15:20;ரோம2:22;1கொரி12:2;2கொரி6:16;1தெச1:9;1யோவா5:21;1கொரி8:4,7;10:19. வெளிப்படுத்தலில் இவ்விடத்தில் மட்டுமே வருகின்றது.  இந்த விக்கிரகங்கள் குறித்து மூன்று விஷயங்கள் இங்கு கூறப்பட்டுள்ளது ஒன்று இந்த விக்கிரகங்கள் பொன் வெள்ளி செம்பு கல் மரம் ஆகிய ஐந்து பொருட்களினால் உருவாக்கப்பட்டவைகளாகும். தேவன் மனிதனை பூமியின் மண்ணினால் உருவாக்கி அவனுக்கு தன் ஜீவனை தந்து உயிருள்ளவனாகினார். அதாவது அசையும் ஒன்றாக மாற்றினார். இந்த மனிதனோ தனக்கு உயிர் தந்த தேவனை உயிரற்ற பொருட்களாக வடிவம...

CCM Tamil Bible Study - பேய்கள் வணக்கம்

வெளி 9:20a. அப்படியிருந்தும் அந்த வாதைகளால் கொல்லப்படாத மற்ற மனுசர்கள் பேய்களை வணங்காதபடிக்கு மனந்திரும்பவில்லை.லேவி17:7;உபா32:17;2நாளா11:15;1கொரி10:21;வெளி18:2.  பேய்கள் வணக்கம்  பேய் என்பதன் மூலச்சொல் டெய்மோனியோன் என்பதாகும்.  இச்சொல் புதிய ஏற்பாட்டில் 60 தடவைகள் வந்துள்ளது. இதற்கு கடவுளை விட குறைந்தவன் மனிதர்களை விட பலமானவன் என்று பொருளாகும். மனிதர்களை விட அதிக பலம் உள்ளவைகளாக இருப்பதினால் தங்களை கடவுளுக்கு சமமாக பாவித்து கொள்கின்றன. இவைகள் தீமைகளின் ஆவிகள் என்றும் பொருள் படுகின்றது.  உபத்திரவங்கள் அதிகரித்த போதும், தேவனை குறித்த பயம் அதிகரித்த போதும் பேய்களை வணங்காதபடிக்கு தங்களை கட்டுப்படுத்திக் கொள்ள இயலவில்லை. காரணம் இரண்டு விதமான எண்ணங்கள் மக்களிடையில் நிலவுகின்றன. ஒன்று இவைகள் கடவுளுக்கும் மனிதருக்கும் இடையில் நிற்கின்ற ஆவிகள் என்றும் இவைகள் தங்களுக்காக கடவுளிடம் பிரார்த்திக்கின்றது என்றும் நம்பி இருப்பதாகும். இரண்டாவது இவைகள் கண்ணுக்குத் தெரியாத ஆவிகளாக இருப்பதினால் இவைகளை வணங்காமலும் இடையீட்டாளர்களாக வைத்துக் கொள்ளாவிட்டாலும் பயங்கரமான தீங்குகளை செய்யும் எ...