CCM Tamil Bible Study - கோபம்

வெளி12:12d. பிசாசு மிகுந்த கோபம் கொண்டு.நீதி12:16;16:14;27:3,4;பிர7:9;சங்4:4;76:10;தானி11:36;யோனா4:1;மத்2:16;யாக்1:20.  கோபம் கோபம் மிகவும் பொல்லாதது என்று சொல்வது சரியா என்று எனக்கு தெரியவில்லை. தேவன் கோபம் கொள்வது அவசியமானது என்பதை விவிலியத்தில் படிக்கின்றோம். தேவனுடைய விருப்பத்துக்கு மாறாக மனிதர்கள் போனபோது தேவனுடைய கோபம் வெளிப்பட்டது. தேவகோபம் பற்பல விதமான சிதைவுகளை ஏற்படுத்தியிருந்தாலும் அது தேவனுடைய நீதியையும் பரிசுத்தத்தையும் வழுவாதன்மையையும் வெளிப்படுத்தியது. தேவனுடைய கோபத்தினால் தண்டனை உண்டாயிற்றென்றால் தேவ இரக்கத்தினால் கிருபையும் மீட்பும் உண்டாயிற்று.  மனிதர்கள் தேவன் மீது கோபம் கொள்வதை விவிலியம் ஏற்றுக்கொள்ளவில்லை. தேவன் மீதும் தேவ ஆளுகை மீதும் கோபம் காண்பித்தவர்கள் அழிந்து போயினர். ஆகையினால் தான் மனித கோபம் தேவ நீதியை எழுப்பாது என்று அதற்கு முற்றுப்புள்ளி போடப்பட்டது. தேவகோபத்துக்கும் மனித கோபத்துக்கும் உண்டான போட்டிகள் சுருங்கி போயின. ஆனால் தேவ கோபத்திற்கும் சாத்தானின் கோபத்திற்கும் இடையில் உண்டான போட்டிகள் உலகம் அழிக்கப்படுவது வரையிலும் சாத்தான் நரகத்தில் தள்ளப்...

CCM Tamil Bible Study - 7 இடி முழக்கங்கள்

வெளி10:3b. அவன் ஆர்ப்பரித்த போது ஏழு இடிகளும் சத்தமிட்டு முழங்கின. வெளி8:5;14:2;யாத்9:23;19:16;20:18;1சாமு7:10;வெளி11:19;16:18;19:6. 

7 இடி முழக்கங்கள்

வெளிப்படுத்தல் புத்தகத்தில் 8 இடங்களில் இடிமுழக்கம் என்ற சொல் வந்துள்ளது. சிங்காசன இடி முழக்கம் 4:5. இடிமுழக்க சத்தம் 6:1;14:2. தூபகலச இடிமுழக்கம் 8:5. ஆர்ப்பரித்தலின் இடி முழக்கம் 10:4. தேவாலய இடி முழக்கம் 11:19. ஏழாம் தூதனின் இடி முழக்கம் 16:17,18. கடைசி இடி முழக்க சத்தம் 19:6. விவிலியத்தில் சீனாய் மலை இடி முழக்கம் யாத் 20:19. பெலிஸ்தியரின் மேல் தேவனின் இடிமுழக்கங்கள் 1சாமு 7:10. ஜெப இடி முழக்கங்கள் 1சாமு 12:18. இயேசுவோடு பேசிய இடி முழக்க சத்தம் யோவா 12:29 என்று பலவாறு சொல்லப்பட்டுள்ளது. இவைகளை கணக்கிட்டு பார்க்கும்போது ஏழுவிதமான இடி முழக்கங்கள் என்னவென்று அறிய முடியும். 

நாம் இங்கு மூன்று இடி முழக்கங்கள் குறித்து காண்போமாக

முதலாவது சீனாய் மலை இடி முழக்கம். யாக் 19:18;20:18. இந்த இடி முழக்கங்கள் தேவனுடைய வெளிப்படுத்தலை குறிக்கின்றது. இந்த இடிமுழக்கங்களினால் தேவனை குறித்த பயம் இஸ்ராயேலருக்குள் இருக்கும்படி காண்பிக்கப்பட்டது. தேவனுடைய சித்தப்படி வாழ்கிறவர்கள் - செய்கிறவர்கள் இந்த இடிமுழக்கத்தோடு இணைந்திருப்பார்கள் என்பதை மோசே இந்த இடி முழக்கங்களுக்குள் ஏறிப்போனதை வைத்து நம்ப வேண்டும். ஆனால் இஸ்ராயேலர்கள் தேவனுக்கு பயந்து தேவனோடு இணைந்து வாழ்வதற்கு பதிலாக தேவனை விட்டு விலகி வாழ அன்றைய தினமே ஏதுவானார்கள். 

இரண்டாவது சாமுவேலின் காலத்தில் உண்டான ஜெப இடி முழக்கங்கள் ஆகும். 1சாமு 7:10. சாமுவேல் தேவனுக்கு சர்வாங்க தகன பலி செலுத்தும் போது குறுக்கிட்ட பெலிஸ்தியருக்கு அச்சம் உண்டாகும் படி வானத்திலிருந்து இடிகளை இடிக்க பண்ணினார் தேவன். இஸ்ராயேலர் ராஜா வேண்டும் என்று கேட்டதினிமித்தம் சாமுவேல் கர்த்தரை நோக்கி ஜெபம் பண்ணினார். 1சாமு12:18. ஜெபம் செய்த போது இடி முழக்கங்களும் மழையும் உண்டாகி ஜனங்களுக்குள் அச்சத்தை ஏற்படுத்தியது. என்றாலும் புறஜாதியாரிடம் இருந்த பயம் கூட இஸ்ராயேலரிடம் இல்லாமல் போய் பூமிக்குரிய ராஜாங்கத்தை விரும்பினார்கள். 

மூன்றாவது யோவா 12:29 ல் இயேசுவோடு இணைந்த இடி முழக்கம். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஆத்துமாவிலே கலங்கி தமது தந்தையிடம் ஜெபித்த போது இயேசு கிறிஸ்துவை பலப்படுத்தும் படியாக தேவன் வானத்திலிருந்து பேசினார். அவர் பேசிய சத்தம் இடி முழக்கங்கள் போலிருந்தது. தேவனுடைய இடி முழக்க சத்தத்தை கேட்டு பயந்து ஓடிய இஸ்ராயேலர் வழியாக வந்த இயேசு அதே தேவனின் இடி முழக்க சத்தத்தை கேட்டு ஆத்துமாவிலே பலம் கொண்டு எல்லா உபத்திரங்களையும் சகித்து இரட்சிப்பை உண்டு பண்ணினார். 

கடைசியாக வெளிப்படுத்தலில் இவ்விடத்தில் சொல்லப்பட்ட இடிமுழக்கங்கள் தேவனுடைய இடி முழக்கங்களே என்பதை பிற்பகுதியில் இருந்து நாம் அறிய முடியும். தேவனுடைய இடி முழக்க வார்த்தைகளை கேட்க விருப்பம் இல்லாத இவ்வுலக சந்ததிகளுக்கு வார்த்தைகளே உண்மையான இடிகளாக எழும்பி முடிவு உண்டாக்கப் போகின்றது. எச்சரிக்கை. 

அன்றியும் தொடக்கூடியதும், அக்கினி பற்றியெரிகிறதுமான மலையினிடத்திற்கும், மந்தாரம் இருள் பெருங்காற்று ஆகிய இவைகளினிடத்திற்கும், எக்காளமுழக்கத்தினிடத்திற்கும், வார்த்தைகளுடைய சத்தத்தினிடத்திற்கும், நீங்கள் வந்து சேரவில்லை. 

எபிரேயர் 12:18,19

நீங்களோ சீயோன் மலையினிடத்திற்கும், ஜீவனுள்ள தேவனுடைய நகரமாகிய பரம எருசலேமிடத்திற்கும், ஆயிரம் பதினாயிரமான தேவதூதர்களினிடத்திற்கும், 

பரலோகத்தில் பேரெழுதியிருக்கிற முதற்பேறானவர்களிடத்திற்கும், யாவருக்கும் நியாயாதிபதியாகிய தேவனிடத்திற்கும், பூரணராக்கப்பட்ட நீதிமான்களுடைய ஆவிகளினிடத்திற்கும், 

புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராகிய இயேசுவினிடத்திற்கும், ஆபேலினுடைய இரத்தம் பேசினதைப்பார்க்கிலும் நன்மையானவைகளைப் பேசுகிற இரத்தமாகிய தெளிக்கப்படும் இரத்தத்தினிடத்திற்கும் வந்து சேர்ந்தீர்கள். 

எபிரேயர் 12:22-24

Comments

Popular posts from this blog

CCM Tamil Bible Study - ஆறுதல் தரும் கிறிஸ்து - Comforter Christ

The Lord built Isaac's family - CCM Tamil Bible Study - ஈசாக்கின் குடும்பம் கட்டப்பட்டது

The Lord built Paul - CCM Tamil Bible Study - கட்டி எழுப்பப்பட்ட பவுல்