CCM Tamil Bible Study - கோபம்

வெளி12:12d. பிசாசு மிகுந்த கோபம் கொண்டு.நீதி12:16;16:14;27:3,4;பிர7:9;சங்4:4;76:10;தானி11:36;யோனா4:1;மத்2:16;யாக்1:20.  கோபம் கோபம் மிகவும் பொல்லாதது என்று சொல்வது சரியா என்று எனக்கு தெரியவில்லை. தேவன் கோபம் கொள்வது அவசியமானது என்பதை விவிலியத்தில் படிக்கின்றோம். தேவனுடைய விருப்பத்துக்கு மாறாக மனிதர்கள் போனபோது தேவனுடைய கோபம் வெளிப்பட்டது. தேவகோபம் பற்பல விதமான சிதைவுகளை ஏற்படுத்தியிருந்தாலும் அது தேவனுடைய நீதியையும் பரிசுத்தத்தையும் வழுவாதன்மையையும் வெளிப்படுத்தியது. தேவனுடைய கோபத்தினால் தண்டனை உண்டாயிற்றென்றால் தேவ இரக்கத்தினால் கிருபையும் மீட்பும் உண்டாயிற்று.  மனிதர்கள் தேவன் மீது கோபம் கொள்வதை விவிலியம் ஏற்றுக்கொள்ளவில்லை. தேவன் மீதும் தேவ ஆளுகை மீதும் கோபம் காண்பித்தவர்கள் அழிந்து போயினர். ஆகையினால் தான் மனித கோபம் தேவ நீதியை எழுப்பாது என்று அதற்கு முற்றுப்புள்ளி போடப்பட்டது. தேவகோபத்துக்கும் மனித கோபத்துக்கும் உண்டான போட்டிகள் சுருங்கி போயின. ஆனால் தேவ கோபத்திற்கும் சாத்தானின் கோபத்திற்கும் இடையில் உண்டான போட்டிகள் உலகம் அழிக்கப்படுவது வரையிலும் சாத்தான் நரகத்தில் தள்ளப்...

CCM Tamil Bible Study - காலம் செல்லாது

வெளி 10:6a. இனி காலம் செல்லாது. எரே8:20;30:7;எசே7:10;30:3;ஓசி6:11;ஆமோ5:13;மாற்1:15;லூக்13:15;யோவா7:33;2தீமோ4:4,6;எபி4:9;வெளி11:18;14:15;22:10. 

காலம் செல்லாது

இவ்விடத்தில் காலம் செல்லாது என்று கூறினவர் 22 10ல் காலம் சமீபமாய் இருக்கிறது என்று கூறுகின்றார். காலங்களும் வேளையும் ஆண்டவரின் கரத்தில் இருப்பதினால் தான் குறிப்பிட்ட காலங்களையும் நேரங்களையும் அவர் வெளிப்படுத்தினாலொளிய நாம் அறிய முடியாது. இனி காலம் செல்லாது என்று கூறுவதினால் கடைசி காலம் நெருங்கி விட்டது என்பதை அறிவுறுத்துகின்றார். ஆகவே இச்சொல் எதனை மையப்படுத்துகிறது என்பதை நாம் அறிவது நல்லது. இவ்விடம் சார்ந்த அல்லது வெளிப்படுத்தல் புத்தகம் சார்ந்த மூன்று காரியங்களை நினைவிற் கொள்வோமாக. 

முதலாவது தீமை சார்ந்தவைகளுக்கு முடிவு வரப் போகின்றது. இதுவரையிலும் தீமையின் தாய் வீடாகிய பாவத்தினமித்தம் பரிகாரம் கிடைத்தது. இனி பரிகாரம் கிடையாது. தண்டனையே கிடைக்கும். ஒவ்வொரு நிகழ்வுகளினாலும் தீமையினால் ஆட்கொள்ளப்பட்ட அனைத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக சிதைத்து வருகின்றார் ஆண்டவர். இவ்விதமான மெல்ல கொல்லும் அல்லது அழிக்கும் தண்டனை முற்றுப்பெற்று நிரந்தர அழிவு உண்டாக்கப்படப்போகின்றது. அன்புள்ள தேவனுக்கு இது தகுமா என்று கேட்பவர்களின் ஓலம் காற்றில் கலந்து மறைந்து போகும். தண்டனையின் காலம் வந்துவிட்டது. 

இரண்டாவது இயேசு கிறிஸ்து முழு உலகையும் அரசாள போகிறார். முழு உலகமும் அழிக்கப்படும் முன்பதாக ஆதிவாக்குதத்தத்தையும் இஸ்ராயேலர்கள் முழு உலகையும் அரசாளுவார்கள் என்பதையும் நிறைவேற்றும்படியாக அரசாட்சி உண்டாகும் காலம் கனிந்துவிட்டது. தன் ஜீவனை விட்ட இவ்வுலகில் இராஜாவாக அரசாண்டு தம் விருப்பத்தை நிறைவேற்றுவார். எவர அவரை ஏற்றுக் கொள்கிறார்களோ இல்லையோ அவர் அரசாளப் போகிறார். 

மூன்றாவது பாவமில்லாத தேவமகிமை வாசமாயிருக்கும் புதிய உலகம் உண்டா போகும் காலம் வந்துவிட்டது. பழையவைகள் எல்லாம் ஒழிந்து போயின என்று பவுல் கூறியிருந்தாலும் முற்றிலும் ஒழிந்து புதியன தோன்றப்போகும் காலம் வந்துவிட்டது. 

சிதைக்கப்படுதல் தொடர்கிறது, இனி காலம் செல்லாது, மனம் திரும்புவீர்

உலகத்தோற்றமுதல் தேவன் தம்முடைய பரிசுத்த தீர்கதரிசிகளெல்லாருடைய வாக்கினாலும் உரைத்தவைகள் எல்லாம் நிறைவேறித் தீருங்காலங்கள் வருமளவும் பரலோகம் அவரை ஏற்றுக்கொள்ளவேண்டும். 

அப்போஸ்தலர் 3:21

Comments

Popular posts from this blog

CCM Tamil Bible Study - ஆறுதல் தரும் கிறிஸ்து - Comforter Christ

The Lord built Isaac's family - CCM Tamil Bible Study - ஈசாக்கின் குடும்பம் கட்டப்பட்டது

The Lord built Paul - CCM Tamil Bible Study - கட்டி எழுப்பப்பட்ட பவுல்