CCM Tamil Bible Study - கையில் புத்தகம்
- Get link
- X
- Other Apps
வெளி 10:2a. திறக்கப்பட்ட ஒரு சிறு புஸ்தகம் அவன் கையில் இருந்தது. வெளி10:10;5:1-5;6:1,3;எசே2:9,10.
கையில் புத்தகம்
பலமுள்ள தூதன் ஒரு சிறிய புத்தகத்தை தன் கையில் கொண்டு வந்துள்ளான். இந்த புத்தகம் எதற்காக கொண்டுவரப்பட்டது என்பதையும் அவைகளில் என்ன எழுதி இருந்தது என்பதையும் அதிகாரத்தின் கடைசி பகுதியில் வாசிக்கின்றோம். நாம் இங்கு தூதன் கையில் புஸ்தகம் கொண்டிருக்கும் காட்சியை தியானிக்கின்றோம்.
தேவனுடைய கையில் இருந்த புத்தகம் வேறு தூதனுடைய கையில் இருக்கிற புத்தகம் வேறு என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். யோவானின் கண்களுக்கு புஸ்தகமாக தெரிகிறது என்றால் பூமியில் உண்டாக்கப்பட்ட புத்தகங்களுக்கு மாறுபட்ட வித்தியாசமான புத்தகங்கள் தேவனிடத்தில் உண்டு என்று நாம் அறிந்திருக்க வேண்டும். இது தேவனால் உருவாக்கப்பட்ட புஸ்தகம் ஆகும். மேலும் இந்த புத்தகத்தின் உட்பொருளை தேவனே எழுதியிருக்க வேண்டும். ஏனெனில் மோசேக்கு தேவன் எழுதி கொடுத்தார் என்று நாம் அறிந்துள்ளோம். அப்படியானால் தேவனால் உருவாக்கப்பட்ட புத்தகம், தேவனால் எழுதப்பட்ட புத்தகம், தேவனால் கொடுக்கப்பட்ட புத்தகம் என்பதை மறந்து விடலாகாது.
கர்த்தருடைய வார்த்தைகள் அடங்கிய விவிலியமும் மனித உள்ளங்களில் முதலாவது எழுதப்பட்டு பின்னர் மூலப் பொருட்களில் எழுதப்பட்டு மனிதர்களிடம் கொடுக்கப்பட்டுள்ளது. தேவனுடைய வார்த்தைகள் தேவனுடைய மனிதர்களால் தேவனுடைய ஆவியைக் கொண்டு தேவனுடைய படைப்புகளில் பொறித்து வைத்துள்ளனர். இவைகள் புத்தகமாக நமக்கு கொண்டு வருவதற்காக தேவ மனிதர்கள் தங்களை தியாகம் செய்தார்கள். தேவனுடைய வார்த்தைகள் அடங்கிய விவிலியத்திற்கு நாம் மரியாதை கொடுப்பது அதன்படி நடப்பது தேவனை கணப்படுத்துவதாகும். நாம் தேவ தூதர்களை போல தேவ வார்த்தைகளை கையில் பிடித்துக் கொண்டு இவ்வுலகில் உள்ள மனிதர்களுக்கு கொடுக்க அழைக்கப்பட்டுள்ளோம்.
அவர்கள் வாயில் கர்த்தரை உயர்த்தும் துதியும், அவர்கள் கையில் இருபுறமும் கருக்குள்ள பட்டயமும் இருக்கும்.
சங்கீதம் 149:8.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment