CCM Tamil Bible Study - சுவிசேஷம்
- Get link
- X
- Other Apps
வெளி 10:6c. தேவன் தம்முடைய ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகளுக்கு சுவிசேஷமாய் அறிவித்தபடி.
1நாளா16:23;சங்96:2;ஏசா61:1;வெளி14:6;எபி4:1-3;1பேது1:24,25.
சுவிசேஷம்
இச்சொல் அநேக மூல சுவடிகளில் இல்லை என்று கூறுகின்றார்கள். ஆங்கில KJV லும் காணப்படவில்லை. ஆனாலும் நமது தமிழ் விவிலியத்தில் காணப்படுவதினால் இதனை குறித்து சில காரியங்களை இங்கு நாம் தியானிக்கலாம்.
பழைய ஏற்பாட்டில் தூரத்திலிருந்து வரும் செய்தி என்றும், இரட்சிப்பே சுவிசேஷமாய் அறிவிக்கப்பட வேண்டும் என்றும், சமாதானத்தை சுவிசேஷமாய் கூறி அறிவிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. தீர்க்கதரிசிகளாகிய ஊழியக்காரர்களில் தேவனுடைய இருதயத்தை பெற்றுக் கொண்டவர்கள் இந்த சுவிசேஷத்தை காட்சியாகவும் வாக்காகவும் பெற்றுக் கொண்டனர்.
புதிய ஏற்பாட்டில் வரும்போது சுவிசேஷத்தை கொண்டு வந்தவர் இயேசு கிறிஸ்துவாக இருக்கின்றார். இயேசு கிறிஸ்துவே சுவிசேஷமாகவும் அறியப்படுகின்றார். புதிய ஏற்பாட்டில் சுவிசேஷம் என்பது நான்கு முக அமைப்புகளாக கொண்டுள்ளது.
முதலாவது இயேசு கிறிஸ்து கொண்டு வந்த செய்திகள். மனந்திரும்புங்கள் பரலோக ராஜ்யம் சமீபமாய் இருக்கிறது என்பதாகும். அவர் கொண்டு வந்த செய்தி முழுவதும் பரலோகத்திலிருந்து கொண்டு வந்ததாகவே அறியப்படுகின்றது. ஆகையினால் அது தூரத்து நற்செய்தி, இரட்சிப்பின் செய்தி, சமாதானத்தின் செய்தி.
இரண்டாவது இயேசு கிறிஸ்துவின் அற்புதக் கிரியைகள். இருளுக்குள் பதுங்கிக் கிடந்து தன் கோர அமைப்பை வெளிப்படுத்தாமல் துற்கிரியைகளை செய்து மனுகுலத்தை பாவ சேற்றினுள் புதைய வைத்திருந்த சாத்தானுக்கு எதிராக அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்து சுவிசேஷத்தின் செய்தியை கிரியைகள் மூலம் வெளிப்படுத்தினார்.
மூன்றாவது தம்மையே சுவிசேஷமாக கொடுத்தார். ஆதாம் தேவசாயலை சிதைத்ததினிமித்தம் உண்டான சேதத்தை சீர்செய்ய இயேசு கிறிஸ்து மனித சாயலின் மேன்மையை பெற்று நல்லதொரு மாதிரியும் தேவ சாயலுமான தோற்றத்தையும் வாழ்க்கை முறையையும் வெளிப்படுத்தினார். இயேசுவைப்போல மாறுவதே கிறிஸ்தவன், கிறிஸ்தவள், கிறிஸ்தவம் ஆகும்.
நான்காவது பாவத்தினால் உண்டான கடி விஷ காயத்தை ஆற்றவும் பாவத்தின் அடிமைதனமாகிய மரணத்திலிருந்து விடுவிக்கவும் இயேசு கிறிஸ்து தம் ஜீவனை கொடுக்க சிலுவையில் மரித்து அடக்கம் பண்ணப்பட்டு மூன்றாம் நாள் உயிர்த்ததாகும்.
இந்த சுவிசேஷத்தை பழைய ஏற்பாட்டின் பல பாகங்களில் தெளிவாக காண முடியும். இதனை முன்னதாக கண்டவர்கள் தீர்க்கதரிசிகள் ஆவார்கள். அவர்கள் அதைக் குறித்து சாட்சி கொடுத்தார்கள். இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு ஆவியிலும், ஆத்துமாவிலும், சரீரத்திலும் மாற்றமடைந்து அவரின் ராஜ்யத்திற்குள் சேர்வதே நித்ய சுவிசேஷமாகும்.
இதற்காக மரித்தோரானவர்கள், மனுஷர்முன்பாக மாம்சத்திலே அக்கினைக்குள்ளாக்கப்பட்டிருந்தும், தேவன்முன்பாக ஆவியிலே பிழைக்கும்படியாக, அவர்களுக்கு சுவிசேஷம் அறிவிக்கப்பட்டது.
1 பேதுரு 4:6
நீயாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டிலே துவங்குங்காலமாயிருக்கிறது. முந்தி நம்மிடத்திலே அது துவங்கினால் தேவனுடைய சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களின் முடிவு என்னமாயிருக்கும்?
1 பேதுரு 4:17
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment