CCM Tamil Bible Study - கோபம்

வெளி12:12d. பிசாசு மிகுந்த கோபம் கொண்டு.நீதி12:16;16:14;27:3,4;பிர7:9;சங்4:4;76:10;தானி11:36;யோனா4:1;மத்2:16;யாக்1:20.  கோபம் கோபம் மிகவும் பொல்லாதது என்று சொல்வது சரியா என்று எனக்கு தெரியவில்லை. தேவன் கோபம் கொள்வது அவசியமானது என்பதை விவிலியத்தில் படிக்கின்றோம். தேவனுடைய விருப்பத்துக்கு மாறாக மனிதர்கள் போனபோது தேவனுடைய கோபம் வெளிப்பட்டது. தேவகோபம் பற்பல விதமான சிதைவுகளை ஏற்படுத்தியிருந்தாலும் அது தேவனுடைய நீதியையும் பரிசுத்தத்தையும் வழுவாதன்மையையும் வெளிப்படுத்தியது. தேவனுடைய கோபத்தினால் தண்டனை உண்டாயிற்றென்றால் தேவ இரக்கத்தினால் கிருபையும் மீட்பும் உண்டாயிற்று.  மனிதர்கள் தேவன் மீது கோபம் கொள்வதை விவிலியம் ஏற்றுக்கொள்ளவில்லை. தேவன் மீதும் தேவ ஆளுகை மீதும் கோபம் காண்பித்தவர்கள் அழிந்து போயினர். ஆகையினால் தான் மனித கோபம் தேவ நீதியை எழுப்பாது என்று அதற்கு முற்றுப்புள்ளி போடப்பட்டது. தேவகோபத்துக்கும் மனித கோபத்துக்கும் உண்டான போட்டிகள் சுருங்கி போயின. ஆனால் தேவ கோபத்திற்கும் சாத்தானின் கோபத்திற்கும் இடையில் உண்டான போட்டிகள் உலகம் அழிக்கப்படுவது வரையிலும் சாத்தான் நரகத்தில் தள்ளப்...

CCM Tamil Bible Study - கடைசி கால நான்கு பாவங்கள்

வெளி 9:21. தங்கள் கொலைபாதகங்களையும் தங்கள் சூனியங்களையும் தங்கள் வேசித்தனங்களையும் தங்கள் களவுகளையும் விட்டு மனந்திரும்பவுமில்லை. வெளி11:7-9;13:7,15;16:6;18:24;13:13,14;18:23;21:8;22:15;14:8;17:1,2,5;18:3;19:2. 

கடைசி கால நான்கு பாவங்கள்

கடைசி காலங்களுக்கு அறிகுறிகள் இந்த நான்கு பாவங்களுமேயாகும். இந்த நான்கு பாவங்களையும் விட்டு மனந்திரும்பி பரிசுத்தமாக வாழ்வதற்கு மக்களுக்கு விருப்பமில்லை. இவைகளை கடிந்துரைக்கின்றவர்களில் அனேகர் இந்த பாவங்களில் மறைமுகமாக காணப்படுவதினாலும் இத்தகைய பாவங்களை கருவறுக்க முடியவில்லை. இத்தகைய சாத்தானின் கிரியைகளை உண்மையாகவே எதிர்க்கின்றவர்கள் எல்லா பக்கத்திலிருந்தும் நெருக்கத்துக்குள்ளாகிறார்கள். 

முதலாவது கொலை பாதகங்களை விட்டு மனந்திரும்ப விரும்பவில்லை. போட்டியின்றி வாழவோ, மற்றவர்களின் உடைமைகளை அபகரிக்கவோ வார்த்தைகளினாலோ, ஆயுதங்களினாலோ, வஞ்சக செயல்களினாலோ, கொலை செய்கின்றார்கள். பரிசுத்தவான்கள் பூமியில் இருக்கலாகாது என்று தீர்மானித்து பிசாசு தன்னுடைய ஏவலாட்களை ஏவி பரிசுத்தவான்களை கொன்றழிக்கின்றான். பரிசுத்தவான்களின் இரத்தம் அவர்களுக்கு மிகவும் பிரியமாய் இருப்பதினாலும் இவ்வாறு செய்கின்றார்கள். 

இரண்டாவது சூனியங்களை விட்டு மனந்திரும்பவில்லை. கடைசி காலத்தில் பிசாசுகளின் மாயங்களாகிய மந்திரங்களை தன்னகத்தே கொண்ட சூனியங்கள் தேசமெங்கும் பரவி கண்கட்டு வித்தைகளையும் பொய்யான அற்புதங்களையும் கட்டவிழ்த்து விட்டுள்ளது. இத்தகைய மாய்மாலங்களில் மயங்கி போன ஆண்களும் பெண்களும் அடுத்த பாவத்துக்காக வெறிகொண்டலைகின்றார்கள். பரிசுத்தவான்களின் அற்புத அடையாளங்களை எதிர்ப்பதற்காக சூனிய வித்தைகள் அரங்கேற்றப்படுகின்றது. 

மூன்றாவது வேசித்தனங்களை விட்டு மனந்திரும்பவில்லை. சூனியவித்தைக்களினால் ஒழுக்க நெறிகள், கட்டுப்பாடான வாழ்க்கை முறைகள் பரிகரிக்கப்பட்டு கவர்ச்சிகளும், இச்சைகளும் மிகைப்படுத்தப்படுகின்றது. நாம் பிறந்தது அனுபவிப்பதற்காகவே. இந்த உலகம் நம்மை சுதந்திரமாக வாழ அனுமதிக்கிறது. ஆகவே வாழ்வோம் இன்புற்றிருப்போம் என்று போதிக்கின்றார்கள். வேசித்தனங்கள் இல்லா வாழ்வை மனிதர்கள் மறந்தேப் போனார்கள். 

நான்காவது களவுகளை விட்டு மனந்திரும்பவில்லை. உபாயங்களையும், வஞ்சகமான காரியங்களையும், ஆசையான வார்த்தைகளையும் சொல்லி பிறரின் உடமைகளை அபகரிக்கின்றார்கள். வேசித்தனத்தை நிறைவேற்ற திருட்டு வாழ்வை பயன்படுத்திக் கொள்ளுகின்றார்கள். என்னுடையது மட்டும் எனக்கு; பிறருடையது அவருக்கு என்ற தத்துவம் தேசத்தை விட்டும் மனிதர்களின் மனங்களையும் விட்டு வெளியேறிவிட்டது. களவுகளில் பொய், வஞ்சகம், ஏமாற்றுதல், சதி செய்தால் போன்ற பேய் குணங்கள் உள்ளன. 

மனந்திரும்ப விருப்பமில்லாத சமுதாயம். 

இந்த ஜனங்கள் கண்களினால் காணாமலும், காதுகளினால் கேளாமலும், இருதயத்தினால் உணர்ந்து மனந்திரும்பாமலும், நான் அவர்களை ஆரோக்கியமாக்காமலும் இருக்கும்படியாக, அவர்கள் இருதயம் கொழுத்திருக்கிறது, காதால் மந்தமாய்க் கேட்டு, தங்கள் கண்களை மூடிக்கொண்டார்கள் என்பதே. 

மத்தேயு 13:15

Comments

Popular posts from this blog

CCM Tamil Bible Study - ஆறுதல் தரும் கிறிஸ்து - Comforter Christ

The Lord built Isaac's family - CCM Tamil Bible Study - ஈசாக்கின் குடும்பம் கட்டப்பட்டது

The Lord built Paul - CCM Tamil Bible Study - கட்டி எழுப்பப்பட்ட பவுல்