CCM Tamil Bible Study - கையை உயர்த்தி
- Get link
- X
- Other Apps
வெளி10:5. சமுத்திரத்தின் மேலும் பூமியின் மேலும் நிற்கிறதாக நான் கண்ட தூதன் தன் கையை வானத்திற்கு நேராக உயர்த்தி: ஆதி14:22,23;உபா32:40.
கையை உயர்த்தி
பரலோகத்துக்கு நேராக தன் வலது கையை உயர்த்தி ஆணையிடுவது வழக்கம். இங்கு இவ்விதமான ஆணையிடுதலாக அல்லாது தேவனுடைய செய்தியை சொல்வதற்காக கையை உயர்த்தினான் என்று பார்க்கின்றோம். தன் வலது கையை தேவனுக்கு நேராக உயர்த்துவதினால் தான் தேவனுக்காக நிற்கிறவன் என்றும், தனது செய்தி தேவனுடைய செய்தி என்றும், இது நிச்சயமாக நிறைவேறிய தீரும் என்றும் அறிவுறுத்துவதாகும். தேவனிடமிருந்து வருகிற எதுவானாலும் தேவனையே மையம் பண்ணும். தேவனுடைய பணியை செய்யும் படியாக அழைப்பு பெற்று அபிஷேகிக்கப்பட்டு நிலை நிறுத்தப்பட்டுள்ள அனைவருமே தாங்கள் தேவனுக்குரியவர்கள் என்றும், தங்களின் செய்தி தேவனுடையது என்றும், தாங்கள் சொல்லுகிறபடியே நிறைவேறும் என்றும் நம்புகிற உறுதிபாடு உடையவர்களாக இருக்க வேண்டும்.
தேவனுடைய மக்களுக்கு தேவனுடைய செய்தியை சொன்னால் சொன்னதின்படியே நிறைவேறும். தேவனுடைய செய்திகள் யாவும் புத்தக வடிவில் தேவ மனிதர்களால் நமக்கு கொடுக்கப்பட்டுள்ளது. எதை பிரசங்கித்தாலும் பிரமாணங்கள் அவைகள் மேல் அதிகாரம் செலுத்தாதபடிக்கு பிரசங்கிக்க வேண்டும். பிரசங்கிக்கிறவைகளிலும் பிரசங்கிக்கிறவனிலும் பிரமாணம் அதிகாரம் செலுத்தும் படி அது உயிர்த்தெழும் சூழல் இருக்குமானால் தேவகோபாக்கினைக்கு பிரமாணம் வழி நடத்தும். எச்சரிக்கை. ஆகவே தேவனுடைய ஆவியின் துணைகொண்டு தேவனுடைய புத்தகத்தில் தேடி வாசித்து தேவ ஜனங்களை நல்வழிப்படுத்த வேண்டும். தாறுமாறான பிரசங்கங்களை செய்கிறவர்கள் தவறானவைகளை பிரசித்து க்கொண்டு தேவனை மையப்படுத்துவதினால் பிரமாணம் உயிர்பெற்று தேவகோபம் பற்றி எரியும்.
என் சகோதரரே, அதிக ஆக்கினையை அடைவோம் என்று அறிந்து, உங்களில் அநேகர் போதகராகாதிருப்பீர்களாக.
யாக்கோபு 3:1
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment