CCM Tamil Bible Study - கோபம்

வெளி12:12d. பிசாசு மிகுந்த கோபம் கொண்டு.நீதி12:16;16:14;27:3,4;பிர7:9;சங்4:4;76:10;தானி11:36;யோனா4:1;மத்2:16;யாக்1:20.  கோபம் கோபம் மிகவும் பொல்லாதது என்று சொல்வது சரியா என்று எனக்கு தெரியவில்லை. தேவன் கோபம் கொள்வது அவசியமானது என்பதை விவிலியத்தில் படிக்கின்றோம். தேவனுடைய விருப்பத்துக்கு மாறாக மனிதர்கள் போனபோது தேவனுடைய கோபம் வெளிப்பட்டது. தேவகோபம் பற்பல விதமான சிதைவுகளை ஏற்படுத்தியிருந்தாலும் அது தேவனுடைய நீதியையும் பரிசுத்தத்தையும் வழுவாதன்மையையும் வெளிப்படுத்தியது. தேவனுடைய கோபத்தினால் தண்டனை உண்டாயிற்றென்றால் தேவ இரக்கத்தினால் கிருபையும் மீட்பும் உண்டாயிற்று.  மனிதர்கள் தேவன் மீது கோபம் கொள்வதை விவிலியம் ஏற்றுக்கொள்ளவில்லை. தேவன் மீதும் தேவ ஆளுகை மீதும் கோபம் காண்பித்தவர்கள் அழிந்து போயினர். ஆகையினால் தான் மனித கோபம் தேவ நீதியை எழுப்பாது என்று அதற்கு முற்றுப்புள்ளி போடப்பட்டது. தேவகோபத்துக்கும் மனித கோபத்துக்கும் உண்டான போட்டிகள் சுருங்கி போயின. ஆனால் தேவ கோபத்திற்கும் சாத்தானின் கோபத்திற்கும் இடையில் உண்டான போட்டிகள் உலகம் அழிக்கப்படுவது வரையிலும் சாத்தான் நரகத்தில் தள்ளப்...

CCM Tamil Bible Study - பேய்கள் வணக்கம்

வெளி 9:20a. அப்படியிருந்தும் அந்த வாதைகளால் கொல்லப்படாத மற்ற மனுசர்கள் பேய்களை வணங்காதபடிக்கு மனந்திரும்பவில்லை.லேவி17:7;உபா32:17;2நாளா11:15;1கொரி10:21;வெளி18:2. 

பேய்கள் வணக்கம் 

பேய் என்பதன் மூலச்சொல் டெய்மோனியோன் என்பதாகும்.  இச்சொல் புதிய ஏற்பாட்டில் 60 தடவைகள் வந்துள்ளது. இதற்கு கடவுளை விட குறைந்தவன் மனிதர்களை விட பலமானவன் என்று பொருளாகும். மனிதர்களை விட அதிக பலம் உள்ளவைகளாக இருப்பதினால் தங்களை கடவுளுக்கு சமமாக பாவித்து கொள்கின்றன. இவைகள் தீமைகளின் ஆவிகள் என்றும் பொருள் படுகின்றது. 

உபத்திரவங்கள் அதிகரித்த போதும், தேவனை குறித்த பயம் அதிகரித்த போதும் பேய்களை வணங்காதபடிக்கு தங்களை கட்டுப்படுத்திக் கொள்ள இயலவில்லை. காரணம் இரண்டு விதமான எண்ணங்கள் மக்களிடையில் நிலவுகின்றன. ஒன்று இவைகள் கடவுளுக்கும் மனிதருக்கும் இடையில் நிற்கின்ற ஆவிகள் என்றும் இவைகள் தங்களுக்காக கடவுளிடம் பிரார்த்திக்கின்றது என்றும் நம்பி இருப்பதாகும். இரண்டாவது இவைகள் கண்ணுக்குத் தெரியாத ஆவிகளாக இருப்பதினால் இவைகளை வணங்காமலும் இடையீட்டாளர்களாக வைத்துக் கொள்ளாவிட்டாலும் பயங்கரமான தீங்குகளை செய்யும் என்று நம்பி இருப்பதாகும். 

பேய் வணக்கம் என்பது ஆவி வணக்கம் ஆகும். மரித்துப்போனவர்கள் பேய்களாக ஆவிகளாக திரிகிறார்கள் என்று நம்புவதினால் இவைகளுக்கு எதிராக தேவனை நோக்கி மனந்திரும்ப இயலாதவர்களாக உள்ளனர். இதனையே குலத்தெய்வம் என்று அழைக்கின்றார்கள். முற்பிதாக்களே குலதெய்வங்களாக அறியப்படுகின்றார்கள். இறந்தவர்கள் ஆவிகளாக திரிவதில்லை என்ற எண்ணங்களில் இருந்து விடுபடுகிறவர்களே கடவுளை தேடுகிறவர்களாக இருக்கிறார்கள். 

விவிலியமானது இறந்தவர்கள் ஆவிகளாக திரிகிறார்கள் என்பதை போதிக்கவில்லை. பரலோகத்திலிருந்து தள்ளப்பட்ட தூதர்களே பேய்களாக திரிகிறார்கள். இவர்கள் அந்தகார சங்கிலிகளினால் கட்டப்பட்டுள்ளதினால் கருமை நிறம் கொண்டவைகளாக காணப்படுகின்றன. சமீப காலங்களில் கருமையை நிறமிகளாக மாற்றி போதிக்கின்றனர். இப்படிப்பட்ட பேய்கள் கண்கள் குருடாகிப் போன மனிதர்களிடையே புகுந்து இறந்தவர்களைப் போல வேடமிட்டு மக்களை ஏமாற்றி திரிகின்றது. சுவிசேஷத்தின் வெளிச்சத்தை பெறாதவர்கள் அனைவரும் இவ்விதமான குருட்டாட்டத்தில் இருப்பதினால் மனந்திரும்புதல் இவர்களுடைய கண்களுக்கு தூரமாகி போய்விட்டது. கடவுளிடமிருந்து அன்பு வந்தாலும், சட்டங்கள் வந்தாலும், தண்டனைகள் வந்தாலும், மரணங்கள் வந்தாலும் தெய்வ பயமும் அடைவதுமில்லை மனந்திரும்புவதும் இல்லை. 

சுவிசேஷ ஒளி இப்படிப்பட்டவர்கள் கண்களை திறக்க நாம் போராடுவோமாக. 

ஒளியானது உலகத்திலே வந்திருந்தும் மனுஷருடைய கிரியைகள் பொல்லாதவைகளாயிருக்கிறபடியினால் அவர்கள் ஒளியைப்பார்க்கிலும் இருளை விரும்புகிறதே அந்த ஆக்கினைத்தீர்ப்புக்குக் காரணமாயிருக்கிறது. 

யோவான் 3:19

Comments

Popular posts from this blog

CCM Tamil Bible Study - ஆறுதல் தரும் கிறிஸ்து - Comforter Christ

The Lord built Isaac's family - CCM Tamil Bible Study - ஈசாக்கின் குடும்பம் கட்டப்பட்டது

The Lord built Paul - CCM Tamil Bible Study - கட்டி எழுப்பப்பட்ட பவுல்