CCM Tamil Bible Study - கோபம்

வெளி12:12d. பிசாசு மிகுந்த கோபம் கொண்டு.நீதி12:16;16:14;27:3,4;பிர7:9;சங்4:4;76:10;தானி11:36;யோனா4:1;மத்2:16;யாக்1:20.  கோபம் கோபம் மிகவும் பொல்லாதது என்று சொல்வது சரியா என்று எனக்கு தெரியவில்லை. தேவன் கோபம் கொள்வது அவசியமானது என்பதை விவிலியத்தில் படிக்கின்றோம். தேவனுடைய விருப்பத்துக்கு மாறாக மனிதர்கள் போனபோது தேவனுடைய கோபம் வெளிப்பட்டது. தேவகோபம் பற்பல விதமான சிதைவுகளை ஏற்படுத்தியிருந்தாலும் அது தேவனுடைய நீதியையும் பரிசுத்தத்தையும் வழுவாதன்மையையும் வெளிப்படுத்தியது. தேவனுடைய கோபத்தினால் தண்டனை உண்டாயிற்றென்றால் தேவ இரக்கத்தினால் கிருபையும் மீட்பும் உண்டாயிற்று.  மனிதர்கள் தேவன் மீது கோபம் கொள்வதை விவிலியம் ஏற்றுக்கொள்ளவில்லை. தேவன் மீதும் தேவ ஆளுகை மீதும் கோபம் காண்பித்தவர்கள் அழிந்து போயினர். ஆகையினால் தான் மனித கோபம் தேவ நீதியை எழுப்பாது என்று அதற்கு முற்றுப்புள்ளி போடப்பட்டது. தேவகோபத்துக்கும் மனித கோபத்துக்கும் உண்டான போட்டிகள் சுருங்கி போயின. ஆனால் தேவ கோபத்திற்கும் சாத்தானின் கோபத்திற்கும் இடையில் உண்டான போட்டிகள் உலகம் அழிக்கப்படுவது வரையிலும் சாத்தான் நரகத்தில் தள்ளப்...

CCM Tamil Bible Study - பலமுள்ள தூதன்

வெளி 10:1. பின்பு பலமுள்ள வேறொரு தூதன் வானத்திலிருந்து இறங்கி வர கண்டேன். மேகம் அவனை சூழ்ந்து இருந்தது. அவனுடைய சிரசின் மேல் வானவில்லிருந்தது. அவனுடைய முகம் சூரியனைப் போலவும் அவனுடைய கால்கள் அக்னி ஸ்தம்பங்களை போலவும் இருந்தது. 

பலமுள்ள தூதன்

இந்த அதிகாரம் முழுவதும் இந்த தூதனை குறித்ததாகவும் யோவானுக்கும் தூதனுக்கும் உள்ள தொடர்பை குறிக்கின்றதாகவும் உள்ளது. இந்த தூதன் கிறிஸ்துவை பிரதிபலிக்கின்றான் என்று பலரும் கூறுகின்றனர். அப்படியென்றால் ஏழாம் வசனத்தில் கிறிஸ்துவின் மேல் ஆணையிட வேண்டிய அவசியமில்லை. ஆகவே தேவனிடமுள்ள பயங்கரமான தோற்றமுள்ள தூதர்களில் இவரும் ஒருவர் என்று நாம் அனுமானிக்கலாம். இந்த தூதனை போன்று உலகத்தின் பல பாகங்களில் சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளதை நாம் கண்டுள்ளோம். தேவனை தொழுது கொண்டு தேவனோடு வாழ்வதற்கு பதிலாக தேவனுடைய பணிவிடையாட்களாகிய தேவதூதர்களை தொழுது கொண்டும் அவர்களை தெய்வங்களாக்கியும் செய்யப்படுகின்ற காரியங்கள் சாத்தானியமே ஆகும். 

இந்த தூதனை போன்றவன் தான் சாத்தானும் ஆகும். சாத்தானும் இந்த தூதன் குறித்து சொல்லப்பட்டுள்ளவைகளாகிய மேகம் வானவில் போன்றவைகளை கொண்டுள்ளான். சாத்தானின் முகம் சூரியனைப் போலவும் கால்கள் அக்கினிகளாக இருப்பதினாலும் பலவிதமான அற்புதங்களை செய்து மக்களை ஏமாற்றுகிறான். நெருப்போடு இணைந்து காணப்படுகின்றான்.  சூரிய நமஸ்காரம் செய்ய வைக்கின்றான். நாம் சாத்தானின் இத்தகைய தந்திரங்களை அடையாளம் கண்டு கொள்ள வேண்டும் 

இந்த தூதனை சுற்றிலும் மேகம் சூழ்ந்திருந்தது. தலையின் மேல் வானவில் இருந்தது. முகம் சூரியனைப் போல் இருந்தது. கால்கள் நெருப்பு பாதங்களாக இருந்தது. இதன் பொருள் என்னவெனில் எந்த இடத்திலும் சென்று தேவனுடைய பணிவிடையை செய்யக்கூடிய வலிமையும் தகுதியும் உடையவனாய் இருந்தான் என்பதாகும். சுவிசேஷத்தை அறிவிக்கிறவர்கள் இத்தியாதி காரியங்களை உடையவர்களாகவும் இருப்பதினால் சபையை பாதாளம் மேற்கொள்ள இயலாது. 


கர்த்தர் ராஜரிகம்பண்ணுகிறார், பூமி பூரிப்பாகி, திரளான தீவுகள் மகிழக்கடவது. 

மேகமும் மந்தாரமும் அவரைச் சூழ்ந்திருக்கிறது, நீதியும் நியாயமும் அவருடைய சிங்காசனத்தின் ஆதாரம். 

அக்கினி அவருக்கு முன்சென்று, சுற்றிலும் இருக்கிற அவருடைய சத்துருக்களைச் சுட்டெரிக்கிறது. 

சங்கீதம் 97:1-3

Comments

Popular posts from this blog

CCM Tamil Bible Study - ஆறுதல் தரும் கிறிஸ்து - Comforter Christ

The Lord built Isaac's family - CCM Tamil Bible Study - ஈசாக்கின் குடும்பம் கட்டப்பட்டது

The Lord built Paul - CCM Tamil Bible Study - கட்டி எழுப்பப்பட்ட பவுல்