CCM Tamil Bible Study - கோபம்

வெளி12:12d. பிசாசு மிகுந்த கோபம் கொண்டு.நீதி12:16;16:14;27:3,4;பிர7:9;சங்4:4;76:10;தானி11:36;யோனா4:1;மத்2:16;யாக்1:20.  கோபம் கோபம் மிகவும் பொல்லாதது என்று சொல்வது சரியா என்று எனக்கு தெரியவில்லை. தேவன் கோபம் கொள்வது அவசியமானது என்பதை விவிலியத்தில் படிக்கின்றோம். தேவனுடைய விருப்பத்துக்கு மாறாக மனிதர்கள் போனபோது தேவனுடைய கோபம் வெளிப்பட்டது. தேவகோபம் பற்பல விதமான சிதைவுகளை ஏற்படுத்தியிருந்தாலும் அது தேவனுடைய நீதியையும் பரிசுத்தத்தையும் வழுவாதன்மையையும் வெளிப்படுத்தியது. தேவனுடைய கோபத்தினால் தண்டனை உண்டாயிற்றென்றால் தேவ இரக்கத்தினால் கிருபையும் மீட்பும் உண்டாயிற்று.  மனிதர்கள் தேவன் மீது கோபம் கொள்வதை விவிலியம் ஏற்றுக்கொள்ளவில்லை. தேவன் மீதும் தேவ ஆளுகை மீதும் கோபம் காண்பித்தவர்கள் அழிந்து போயினர். ஆகையினால் தான் மனித கோபம் தேவ நீதியை எழுப்பாது என்று அதற்கு முற்றுப்புள்ளி போடப்பட்டது. தேவகோபத்துக்கும் மனித கோபத்துக்கும் உண்டான போட்டிகள் சுருங்கி போயின. ஆனால் தேவ கோபத்திற்கும் சாத்தானின் கோபத்திற்கும் இடையில் உண்டான போட்டிகள் உலகம் அழிக்கப்படுவது வரையிலும் சாத்தான் நரகத்தில் தள்ளப்...

CCM Tamil Bible Study - எழுதாமல் முத்திரை போடு

வெளி 10:4. அவ்வேழு இடிகளும் தங்கள் சத்தங்களை முழங்கின போது நான் எழுத வேண்டுமென்றிருந்தேன். அப்பொழுது ஏழு இடி முழக்கங்கள் சொன்னவைகளை எழுதாமல் முத்திரை போடு என்று வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாக கேட்டேன். உபா29:29;ஏசா8:16;29:11;தானி8:26;12:4,9. 

எழுதாமல் முத்திரை போடு

தீர்க்கதரிசனங்கள் இவ்விதமாக கணக்கிடப்பட்டுள்ளது. நிகழ்வுகளிலும், பேச்சுகளிலும், எழுத்துக்களிலும் சில காரியங்கள் தேவனால் மறைக்கப்பட்டுள்ளது. ஆதியிலிருந்தே தேவன் இதை செய்தார். தேவன் மறைத்துள்ளவைகளை பிசாசானவன் அறிய முயற்சி செய்வதற்கு அவன் பயன்படுத்துகின்ற முறை தந்திரம் மற்றும் பாவமாகும். தந்திரத்தினால் வஞ்சித்து ஏமாற்றி விஷயங்களை அறிய முயற்சிக்கின்றான். பாவத்தை செய்ய வைத்து ரகசியங்களை பெற்றவர்களை அல்லது அதற்குரியவைகளை தேவனை கொண்டே அழிக்க முயற்சிக்கின்றான். இல்லையெனில் மகா உபத்திரவங்களை கொடுத்து துன்பப்படுத்துகின்றான். இந்த சாத்தானை போல் தேவனால் முத்திரிக்கப்பட்டவைகளை அறியும்படியாக தேவ மனிதர்கள் போராடுகிறார்கள். யோவான் தேவனால் மறைக்கப்பட்டுள்ளதை திறக்கவும் இல்லை வெளிப்படுத்தவும் இல்லை. அப்படியிருக்க தேவ மனிதர்கள் அமைதியாக தேவனுடைய நேரத்திற்காக காத்திருக்க வேண்டும் அல்லவா?. மறைவானவைகள் எல்லாம் தேவனுடையவைகளாகும். 

இந்த ஏழு இடிகளும் எதை உரைத்தது என்பது குறித்து குறிப்பிடவில்லை. சிலர் ஏழு கலசங்களை குறிப்பதாக கூறுகின்றனர். ஆனால் யோவான் இதை குறித்து குறிப்பிடவில்லை. தீர்க்கதரிசிகளால் மறைக்கப்பட்டவைகள் வெளிப்படும் காலமே தீர்க்கதரிசனத்தின் வெற்றியாகும். இவ்விதமாக மறைத்து வைத்ததற்காகதான் சாத்தான் யோவானை உபத்தரவபடுத்தியிருக்கக்கூடும். ஏழு இடிகளும் தேவனுடைய ஏழு செய்திகளாக அறியப்படுகின்றது. இவை கடைசி காலத்தையொட்டிய ஏழு செய்திகளாகும். 

நீதிமொழிகளில் ஞானத்துக்கு ஏழு தூண்கள் உண்டு என்பதை ஞானி வெளிபடுத்தவில்லை. நீதி 9:1. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வருகையை குறித்துள்ளதும் முத்திரிக்கப்பட்டுள்ளது. அதேபோல தேவனின் ஏழு உரைகளும்முத்திரை செய்யப்பட்டுள்ளது. இந்த மூன்று பகுதிகளுக்கும் நெருங்கிய பந்தம் இருக்க வேண்டும். ஏற்ற காலத்தில் தேவன் அதை வெளிப்படுத்துவார். 

தேவனுடைய வார்த்தைகள் எப்பொழுதும் தேவ ஆவியினால் முத்திரை செய்யப்பட்டுள்ளது. தேவனுடைய ஆவியை பெற்ற மனுஷன் தேறினவனாகவும் சீர்படுத்துகிறவனாகவும் இருப்பதற்கு தேவன் தமது ஆவி அவனுக்குள் வைத்து தேவனுடைய வார்த்தைகளை விளக்கி காண்பிக்கின்றார். தேவனுடைய ஆவியை பெற்ற எல்லாருக்கும் இந்த ஞானம் கொடுக்கப்படுவதில்லை என்பதையும் நினைவிற்கொள்ள வேண்டும். ஆகவே இது தான் ரகசியம் என்று சொல்லிக்கொண்டு முன்னிலையில் எழும்பி வரும் சாத்தானின் தந்திரங்களை அடையாளம் கண்டு கொள்வோமாக. 


என் மகனே, நீ உன் செவியை ஞானத்திற்குச் சாய்த்து, உன் இருதயத்தைப் புத்திக்கு அமையப்பண்ணும்பொருட்டு, நீ என் வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு, என் கட்டளைகளை உன்னிடத்தில் பத்திரப்படுத்தி, ஞானத்தை வா என்று கூப்பிட்டு, புத்தியைச் சத்தமிட்டு அழைத்து, 

அதை வெள்ளியைப்போல் நாடி, புதையல்களைத் தேடுகிறதுபோல் தேடுவாயாகில், அப்பொழுது கர்த்தருக்குப் பயப்படுதல் இன்னதென்று நீ உணர்ந்து, தேவனை அறியும் அறிவைக் கண்டடைவாய். கர்த்தர் ஞானத்தைத் தருகிறார்: அவர் வாயினின்று அறிவும் புத்தியும் வரும். 

நீதிமொழிகள் 2:1-6

Comments

Popular posts from this blog

CCM Tamil Bible Study - ஆறுதல் தரும் கிறிஸ்து - Comforter Christ

The Lord built Isaac's family - CCM Tamil Bible Study - ஈசாக்கின் குடும்பம் கட்டப்பட்டது

The Lord built Paul - CCM Tamil Bible Study - கட்டி எழுப்பப்பட்ட பவுல்