CCM Tamil Bible Study - ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகள்
- Get link
- X
- Other Apps
வெளி 10:6b. ஆனாலும் தேவன் தம்முடைய ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகளுக்கு சுவிசேஷமாய் அறிவித்தபடி...
யாத்15:20;எண்11:25;உபா18:15;34:12;நியா4:4;1சாமு3:20;சங்105:15;நீதி29:18;மத்10:41;13:35;லூக்24:44;ரோம1:4;16:25;2பேது1:19;2பேது3:2;வெளி22:19.
ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகள்
ஊழியக்காரன் என்பதற்கு மூலச்சொல் டூலோஸ். அப்படியென்றால் அடிமை என்றும் இன்னொருவரின் பணிக்காக அர்ப்பிக்கப்பட்டவன் என்றும் பொருள். இச்சொல் புதிய ஏற்பாட்டில் 127 தடவைகள் வந்துள்ளது. வெளிப்படுத்தலில் 14 தடவைகள் வந்துள்ளது. தீர்க்கதரிசி என்றால் மறைவானவைகளை கண்டோ, அறிந்தோ வியாக்கியானம் செய்கிறவன் என்றுப் பொருள். இச்சொல் புதிய ஏற்பாட்டில் 149 தடவைகள் வந்துள்ளது. வெளிப்படுத்தலில் எட்டு தடவைகள் மாத்திரமே வந்துள்ளது. ஊழியக்காரராகிய தீர்க்கதரிசி என்றால் தேவனுடைய கட்டளையாலும், தேவனுடைய ஆவியாலும் கட்டப்பட்டவனாகிய தேவனால் அர்ப்பிக்கப்பட்டவனாகிய தனக்குத்தானே எவ்வித உரிமையும் இல்லாதவனுமாகிய தேவனுடைய அடிமை என்று பொருளாகும்.
தேவனால் பிரித்தெடுக்கப்பட்டவனாயும், அபிஷேகிக்கப்பட்டவனாயும் வார்த்தையையோ, காட்சியையோ, பணியையோ பெற்றுக் கொண்டவனாகவும் காணப்படுகிறவனே ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகள். இவர்களை தேவன் நம்பும் படியாக நடந்து கொள்வார்களெனில் அல்லது தேவன் இவர்களை நம்பிவிட்டாரெனில் தூரத்துக்கால செய்தியையும் காட்சியையும் கொடுக்கின்றார். ஆகையினால் தான் இஸ்ராயேலில் அநேக தீர்க்கதரிசிகள் இருந்தும் சில பேருக்கு தான் தூரத்து செய்தியாகிய சுவிசேஷம் அறிவிக்கப்பட்டது.
தீர்க்கத்தரிசிகளாக இல்லாதிருந்தும் தீர்க்கதரிசனப் பணிகளை செய்தவர்களும் உண்டு. அவர்களை கொண்டும் சுவிசேஷ செய்தியை அறிவித்துள்ளார் என்பதை தாவீதின் புத்தகங்களில் காண முடியும்.
புதிய ஏற்பாட்டின் தீர்க்கத்தரிசிகள் பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசிகளுக்கு முற்றிலும் வேறுபடுகின்றார்கள். பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசிகள் தூரத்து செய்தியாகிய இயேசுவை தங்களுக்குள் அறிவித்தார்கள். புதிய ஏற்பாட்டின் தீர்க்கதரிசிகளோ தங்களுக்குள் வெளிப்பட்ட இயேசு கிறிஸ்துவை தேவனை அறியாதவர்கள் மத்தியில் இயேசு கிறிஸ்து மட்டுமே தேவனுடைய ஒரே மீட்பின் குமாரன் என்று அறிவிக்கின்றார்கள். இந்த தீர்க்கதரிசிகள் தேவனுடையவர்கள் அல்லாதவர்களிடமிருந்து வரப்போகின்ற ஆயுதங்களையும், கண்ணிகளையும், பள்ளங்களையும் முன்னதாகவே கண்டு அவைகளை சபைகளுக்குள் அறிவித்து சபையானது விழிப்புடன் இருக்க கற்பிப்பார்கள்.
இப்படிப்பட்ட தீர்க்கதரிசனப் பணிகளை செய்கின்ற தீர்க்கதரிசிகள் சபைகளுக்குள் இல்லாதுப் போனதினால் தான் சபைகளும், ஊழியங்களும், ஊழியர்களும் சாத்தானுடைய வலையில அகப்பட்டு காணப்படாமல் போகின்றார்கள்.
ஊழியக்காரராகிய தீர்க்கதரிசி என்றால் அடிமைப்பட்டு அடிமைத்தனத்தை அறிவித்து விடுவிக்கப் போராடுகிறவன்.
சகோதரரே, நீங்கள் நியாயந்தீர்கப்படாதபடிக்கு ஒருவருக்கொருவர் விரோதமாய் முறையிடாதிருங்கள். இதோ, நியாயாதிபதி வாசற்படியில் நிற்கிறார். என் சகோதரரே, கர்த்தருடைய நாமத்தினாலே பேசின தீர்க்கதரிசிகளைத் துன்பப்படுதலுக்கும் நீடிய பொறுமைக்கும் திருஷ்டாந்தமாக வைத்துக்கொள்ளுங்கள்.
யாக்கோபு 5:9,10
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment