CCM Tamil Bible Study - தூதனின் அதிகாரம்
- Get link
- X
- Other Apps
வெளி 10:2b. தன் வலது பாதத்தை சமுத்திரத்தின் மேலும் தன் இடது பாதத்தை பூமியின் மேலும் வைத்து.
வெளி10:5,8;சங்2:8;65:5;நீதி8:15,16;ஏசா59:19;மத்28:18;எபே1:20-22;பிலி2:10,11.
தூதனின் அதிகாரம்
யோவான் அப்போஸ்தலருக்கு ஒன்றை கொடுக்கும்படி கொண்டு வருகிற தூதன் பூமியிலும் சமுத்திரத்திலும் அதிகாரம் பெற்றவனாக இருக்கின்றான். பூமி முழுவதற்கும் அதிகாரம் பெற்றவனாய் இருக்கின்றான். சர்வ அதிகாரம் பெற்றுள்ள இயேசு கிறிஸ்துவை குறிப்பதாக கூறுவது சரியானது அல்ல. இந்த தூதனுக்கு கொடுக்கப்பட்டுள்ள அதிகாரமானது பூமிக்கும் சமுத்திரத்துக்குமுடைய செய்தியை அறிவிப்பதாகும். இவனுடைய அதிகாரத்திலிருந்து மூன்று விதமான செய்திகள் பிறந்துள்ளன. முதலாவது முத்திரிக்கப்பட்ட செய்தி. வச 4. இரண்டாவது எச்சரிப்பின் செய்தி. வச 6. மூன்றாவது தீர்க்கதரிசன செய்தி. வச 11. முதலாவது இடிகளாக வெளிப்பட்டது. இரண்டாவது பேச்சுத் தொனியாக வெளிப்பட்டது. மூன்றாவது புத்தகமாக வெளிப்பட்டது.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளை தேவனுடைய மனிதர்கள் மூன்று விதங்களில் வெளிப்படுத்த பூமியிலும் சமுத்திரத்திலும் அதிகாரம் பெற்றுள்ளார்கள். வானத்திலும் பூமியின் கீழும் அதிகாரம் பெற்றிருக்கவில்லை. அந்த அதிகாரத்தை கிறிஸ்து பெற்றிருக்கின்றார். அந்த அதிகாரத்துக்கு ஊழியக்காரர்கள் கட்டுப்பட்டவர்கள். ஊழியக்காரர்களுக்கு ஒருவரையும் பரலோகத்துக்கு அனுப்பவும் பூமியின் கீழ் அனுப்பவும் அதிகாரம் தரப்படவில்லை. ஆனால் கட்டுவதற்கும் பரலோகம் செல்லும்படி உபதேசிப்பதற்கும் வழியை காட்டுவதற்கும் அதிகாரம் பெற்றுள்ளார்கள்.
தேவனுடைய மனிதர்கள் கர்த்தரின் வார்த்தைகளை மூன்று விதங்களில் வெளிப்படுத்த வேண்டும். முதலாவது வார்த்தைகளை அற்புத அடையாளங்கள் மூலமாக வெளிப்படுத்த வேண்டும். இத்தகைய கிரியைகளில் அடங்கியுள்ள செய்தி இரகசியமாக வைக்கப்பட்டிருக்கும். இரண்டாவது உலகத்தை எச்சரிக்கும் செய்தியையும் தேவனுக்கு மகிமை செலுத்தக்கூடிய செய்தியையும் உள்ளடக்கிய சுவிசேஷத்தை பாவம் சாபம் சாத்தானுக்கு எதிராக அறிவிக்க வேண்டும். மூன்றாவது இறுதிகாலங்கள் தேவனுடைய தீர்ப்புகள் தண்டனை குறித்த செய்தியை நூல்கள் வடிவில் வெளிப்படுத்த வேண்டும். பிரசுரங்கள் மூலமாகவும் புத்தகங்கள் வழியாகவும் வெளிப்படுத்த வேண்டும். இத்தகைய மூன்று வித செய்திகளும் பூமி சமுத்திரம் சார்ந்தவர்களாகவே காணப்படுகிறது. ஏனெனில் இங்குள்ளவர்கள் தான் இரட்சிக்கப்பட வேண்டும். இங்குள்ளவர்கள் தான் பரலோகம் சேர்க்கப்பட வேண்டும். இங்குள்ளவர்கள் தான் தீர்ப்பிடப்பட வேண்டும். ஆகவே தேவதூதன் போல் பலம் பொருந்திய தேவ மனிதர்கள் அதிகாரம் பெற்று நிமிர்ந்து நிற்கிறவர்களாக இருக்க வேண்டும்.
மேலும், உங்களை நிர்மூலமாக்குகிறதற்கல்ல, உங்களை ஊன்றக் கட்டுகிறதற்குக் கர்த்தர் எங்களுக்குக் கொடுத்த அதிகாரத்தைக்குறித்து, நான் இன்னும் சற்றே அதிகமாய் மேன்னைபாராட்டினாலும் நான் வெட்கப்படுவதில்லை. நான் நிருபங்களாலே உங்களை பயமுறுத்துகிறவனாய்த் தோன்றாதபடிக்கு இதைச் சொல்லுகிறேன்.
2 கொரிந்தியர் 10:8,9
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment