CCM Tamil Bible Study - சிங்க கர்ஜனை
- Get link
- X
- Other Apps
வெளி 10:3a. சிங்கம் கெர்ச்சிக்கிறது போல மகா சத்தமாய் ஆர்ப்பரித்தான். நீதி19:12;ஏசா5:29;31:4;42:13;எரே25:30;யோவே3:16;ஆமோ1:2;3:8.
சிங்க கர்ஜனை
பரலோக தேவனுடைய சத்தம் சிங்க கர்ஜனை போல் இருக்கும் என்று விவிலியம் கூறுகின்றது. ஆனால் இயேசு கிறிஸ்துவின் சத்தம் மயிர் கத்தரிக்கிறவனுக்கு முன் சத்தமிடாதிருக்கிற ஆடாகவும், வாய்திறவாதவராகவும் இருந்தார் என்று விவிலியம் கூறுகின்றது. அதே வேளையில் உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்து இரண்டாம் முறையாக வெளிப்படும்போது தேவகுமாரனுக்குரிய இயல்பான சத்தமாகிய சிங்க கர்ஜனையாக கேட்கப்படும். இந்த இடைப்பட்ட காலத்தில் மனிதர்களை ஏமாற்றவும் வஞ்சிக்கவும் பயபடுத்தவும் சிங்கத்தை போல் கர்ச்சிக்கிறவனாக சாத்தான் இருக்கின்றான் என்று விவிலியம் கூறுகின்றது. அவனுடைய கர்ஜனையை உண்மையென்று நம்பியவர்கள் அவனை பின்தொடர்கின்றார்கள். இப்பொழுது சாத்தான் அரசியல்வாதி போர்வையிலும், அதிகாரிகள் போர்வையிலும், சமூக சேவகர்கள் போர்வையிலும், ஜாதி அமைப்புகள் போர்வையிலும் நுழைந்து தேவகுமானாகிய இயேசு கிறிஸ்துவின் கர்ஜனையை எழுப்புகின்றான். சிங்கம் கரச்சிக்கின்றது. யார் தான் கவனிக்காமல் இருப்பார்கள்?. இப்படிப்பட்டவர்களை அடையாளம் காணும் கண்கள் இல்லாததனால் அவர்கள் பின்னால் சென்று மகிமையான சபையையும் மகத்துவமான ஊழிய அபிஷேகத்தையும் இழந்து சாத்தானை போல போலி கர்ச்சனை செய்து வருகிறார்கள்.
முன்னர் நாம் கண்டதின்படி இந்த தூதன் இயேசு கிறிஸ்துவை பிரதிபலிக்கிறவன் அல்ல. தேவனுடைய வாக்கியங்களை தேவனிடமிருந்து நேரடியாக அறிவிக்கிற தூதனாக இருப்பதினால் தேவனைப் போல கர்ச்சிக்கிறவனாக இருக்கின்றான். தேவனுடைய வார்த்தைகள் சகலவற்றையும் உருவாக்கும் ஆற்றல் உடையதாகையினால் அவைகளை சொல்லும்போது சிங்கத்தோரணை உண்டாகும். இயேசு கிறிஸ்துவும் கூட தமது வார்த்தைகளை அதிகாரம் ஆற்றல் உடையவராக போதித்தார். தீர்க்கதரிசிகள் யாவரும் சிங்க கர்ஜனை உடையவர்களாகவே காணப்பட்டனர். ஆகையினால் தான் அவர்கள் வழியாக வந்து தங்கள் வார்த்தைகளை ஒன்றில் ஆசீர்வதிப்பதாகவோ இல்லையெனில் அழிப்பதாகவோ பிரசங்கித்தனர்.
இந்த சிங்க கர்ச்சனை போல கர்த்தருடைய வார்த்தைகளை அதிகாரம் ஆற்றலோடு போதிக்கிற போதகர்கள் உண்டா என்று ஒரு முறை சிந்திப்போம். ஜனங்களுக்கு அவர்களின் பாவத்தையும், கிறிஸ்துவின் மீட்பையும், தேவனுடைய நீதியையும் அறிவிக்கிற தூதர்கள் எங்கே?. தூதர்களாக எழும்பவில்லையெனில் அழிக்கும் தூதன் வருவான்.
மாரியும் உறைந்த மழையும் வானத்திலிருந்து இறங்கி, அவ்விடத்துக்குத் திரும்பாமல் பூமியை நனைத்து, அதில் முளை கிளம்பி விளையும்படிச்செய்து, விதைக்கிறவனுக்கு விதையையும், புசிக்கிறவனுக்கு ஆகாரத்தையும் கொடுக்கிறது எப்படியோ, அப்படியே என் வாயிலிருந்து புறப்படும் வசனமும் இருக்கும், அது வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச்செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும்.
ஏசாயா 55:10,11
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment