Posts

Showing posts from July, 2022

CCM Tamil Bible Study - கோபம்

வெளி12:12d. பிசாசு மிகுந்த கோபம் கொண்டு.நீதி12:16;16:14;27:3,4;பிர7:9;சங்4:4;76:10;தானி11:36;யோனா4:1;மத்2:16;யாக்1:20.  கோபம் கோபம் மிகவும் பொல்லாதது என்று சொல்வது சரியா என்று எனக்கு தெரியவில்லை. தேவன் கோபம் கொள்வது அவசியமானது என்பதை விவிலியத்தில் படிக்கின்றோம். தேவனுடைய விருப்பத்துக்கு மாறாக மனிதர்கள் போனபோது தேவனுடைய கோபம் வெளிப்பட்டது. தேவகோபம் பற்பல விதமான சிதைவுகளை ஏற்படுத்தியிருந்தாலும் அது தேவனுடைய நீதியையும் பரிசுத்தத்தையும் வழுவாதன்மையையும் வெளிப்படுத்தியது. தேவனுடைய கோபத்தினால் தண்டனை உண்டாயிற்றென்றால் தேவ இரக்கத்தினால் கிருபையும் மீட்பும் உண்டாயிற்று.  மனிதர்கள் தேவன் மீது கோபம் கொள்வதை விவிலியம் ஏற்றுக்கொள்ளவில்லை. தேவன் மீதும் தேவ ஆளுகை மீதும் கோபம் காண்பித்தவர்கள் அழிந்து போயினர். ஆகையினால் தான் மனித கோபம் தேவ நீதியை எழுப்பாது என்று அதற்கு முற்றுப்புள்ளி போடப்பட்டது. தேவகோபத்துக்கும் மனித கோபத்துக்கும் உண்டான போட்டிகள் சுருங்கி போயின. ஆனால் தேவ கோபத்திற்கும் சாத்தானின் கோபத்திற்கும் இடையில் உண்டான போட்டிகள் உலகம் அழிக்கப்படுவது வரையிலும் சாத்தான் நரகத்தில் தள்ளப்...

CCM Tamil Bible Study - பட்டயம்

வெளி 6:4d. ஒரு பெரிய பட்டயமும் அவனுக்குக் கொடுக்கப்பட்டது. சங்17:13;ஏசா10:5,6;எசே30:24,25; எண்22:23; உபா32:41;33:29; யோசு5:13; சங்45:3;எரே44:27; லூக் 21:24; வெளி 2:16;19:21.  பட்டயம் பூமியெங்கும் இரத்தக் களறிகள் உண்டாவதற்கான இரண்டாவது காரணம் பட்டயமே ஆகும். தேவனிடம் பட்டயம் உண்டு. தேவனுடைய தூதர்களிடமும் பட்டயம் உண்டு. பட்டயம் பிடித்து செல்லுதல் என்பது யுத்தத்தை குறிப்பிடுகின்றது. ஆவியின்பட்டயத்தால் மனுக்குலத்தை தேவனுக்கு நேராக்கிய ஆண்டவர் இப்பொழுது இரத்தக் களறியை உண்டாக்கும் யுத்த பட்டயத்தை அனுப்புகிறார். அழிக்கும்படியாக - எச்சரிக்கும்படியாக தேவன் அனுப்புகிற வாதைகளில் பட்டயமும் ஒன்றாகும்.  பட்டயம் சுமந்து செல்வது உலகத்தின் இறுதி காலங்களை குறிக்கின்றது. தேவனுடைய சத்துருக்கள் மீது தேவன் பழிவாங்கும் படியாக பட்டயத்தை அனுப்புகிறார். களைகளை அகற்றுகிறவர்களாக மட்டுமல்ல துன்மார்க்கர்களையும் அழிப்பவராகவும் வெளிப்படுகின்றார். தூதன் பட்டயம் எடுத்து புறப்பட்டதின் அடையாளமே கொலை வெறிகளின் கோரத்தாண்டவம். பட்டயம் எடுப்பவனை பட்டயமே கொல்லும் என்பதன் பொருள் என்னவெனில் தேவனுடைய அன்புக்கு இணங்காமல் ...

CCM Tamil Bible Study - சமாதானம் இல்லை

வெளி 6:4c. சமாதானத்தை பூமியிலிருந்து எடுத்துப் போடும்படியாக அதிகாரம் கொடுக்கப்பட்டது. ஏசா38:17;48:22; ஒரே 8:15;16:5; புல3:17; எசே 7:25; மத் 10:34;யோவான்14:27; 1தெச5:3.. சமாதானம் இல்லை பூமியெங்கும் இரத்தக் களறிகள் உண்டாவதற்கான முதல் காரணம் பூமியில் சமாதானம் இல்லை என்பதாகும். ஆதியில் தேவனோடு இருந்ததனால் உண்டாயிருந்த சமாதானம் பாவத்தினிமித்தம் விலக்கப்பட்ட போதே காயின் ஆபேலைக் கொன்றான். லாமேக்கு கொலை பழி சுமந்தான்.  அதன் பின்பு கிறிஸ்து இயேசுவினால் சமாதானம் பூமிக்கு கொண்டுவரப்பட்டது. அவர் வந்து பூமியிலே சமாதானத்தை வைத்துப் போனார். இதனால் அன்பும், பொறுமையும், தயவும், மனிதாபிமானமும், மனசாட்சியும், கருணையும் உண்டாயிருந்தது. இப்பொழுது இரண்டாம் தூதரின் வருகையானது பூமியிலிருந்து சமாதானத்தை விலக்கி போட்டது. தேவன் தம் கிறிஸ்துவினால் கொடுத்த சமாதானத்தை தேவன் தம் தூதனால் திரும்ப எடுத்துப் போடுகின்றார். சமாதானம் விலக்கப்பட்டு போனதன் அறிகுறிகளே பூமியெங்கும் ரத்த களறிகள் உண்டாக காரணமாகும்.  கிறிஸ்துவின் சரீரமாகிய சபையிலும் சமாதானம் காணப்படவில்லை. ஒருவருக்கொருவர் சகிப்புத்தன்மை இல்லை. குடும்பத்த...

CCM Tamil Bible Study - கொலைகளமாகும் பூமி

வெளி 6:4b. அதின் மேல் ஏறியிருந்தவனுக்கு பூமியிலுள்ளவர்கள் ஒருவரையொருவர் கொலை செய்யத் தக்கதாக. வெளி13:10; ஏசா 37:26,27;எசே29:18-20; தானி5:19; யோவா19:11; ஓசி4:2; வெளி22:15.  கொலைகளமாகும் பூமி நாகரீகம் இல்லாத காலங்களில் உண்டான யுத்தங்களில் ஏற்பட்ட ரத்த களறிகளை விட சட்டம், மனிதாபிமானம், மனசாட்சி உள்ள இக்காலங்களில் காணப்படும் ரத்தக் களறிகள் அதிகமாகியுள்ளது. இருளின் காலங்களில் அறியாமையினால் ஏற்படுத்திய ரத்தக்களறிகளைவிட ஒளியின் காலங்களாகிய இக்காலங்களில் அறிந்து செய்கின்ற ரத்த களறிகள் அதிகரித்துள்ளன. மனிதனை மனிதனே புசித்து வாழ்ந்த நர மனிதர்கள் சிந்திய ரத்தங்களை விட நல்லவர்கள், நாணயமானவர்கள், யோக்கியர்கள், நலம்விரும்பிகள், அறிவாளிகள் போர்வையில் சிந்தும் ரத்தம் அதிகமாகியுள்ளது.  ஒரு நாடு பக்கத்து நாட்டை அழிக்க முயற்சிக்கின்றது. ஒரு குடும்பம் இன்னொரு குடும்பத்தை அழிக்கப் பார்க்கின்றது. ஒரு மனிதன் இன்னொரு மனிதனை அழிக்க பார்க்கின்றான். தங்கள் அறிவை பயன்படுத்தியும், தங்கள் திறமையை பயன்படுத்தியும், தங்கள் பலத்தை பயன்படுத்தியும் மற்றவனை அழித்து ஒழிக்க முயற்சிக்கின்றான் மனிதன். ஆறறிவு கொண்ட மன...

CCM Tamil Bible Study - சிவப்பு குதிரை

வெளி 6:4a. அப்பொழுது சிவப்பான வேறொரு குதிரை புறப்பட்டது. வெளி12:3;17:3,6; சக1:8;6:2; ஏசா63:2; மத்27:28.  சிவப்பு குதிரை முதல் முத்திரை உடைத்த போது வெள்ளை குதிரை புறப்பட்டது. அது தூய்மையின் வெற்றியை குறித்தது. இரண்டாவது முத்திரை உடைத்த போது சிவப்பு குதிரை புறப்படுகிறது. ராஜாங்கத்தின் அடுத்த நிலை எதிராளிகளை அழிப்பது தான். தோற்கடிப்பது மட்டுமல்ல திரும்ப எழும்பக்கூடாதபடிக்கு அழிக்கப்பட வேண்டும் என்பதாகும்.  சிவப்பு என்பது சில உண்மைகளை நமக்கு சுட்டி காட்டுகின்றது.  முதலாவது ஆபத்து வரப்போகிறது அல்லது ஆபத்து உள்ளது என்று அறிவுறுத்தும். சிவப்பு அடையாளம் காட்டப்படுமானால் எதிரிடையாக நிற்போர் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். ஆபத்து வரப்போகிறது என்றும் அது அழிவின் ஆபத்து என்றும் உணர்ந்து கொள்ள வேண்டும். பாவம் எப்பொழுதும் இல்லாத அளவுக்கு பெருகி இருக்குமானால் சிவப்பு அடையாளம் உண்டாகிவிட்டது என்று உணர்ந்து கொள்ள வேண்டும். பாவத்தின் காரணமாக சாத்தான் சிவப்பு வண்ணம் உள்ளவனாய் இருக்கின்றான். ஆகவே வரப்போற ஆபத்துகளை முன் உணர்ந்து எச்சரிக்கை அடைய வேண்டும். பாவம் பெருகுகின்ற காலங்களில் கட...

CCM Tamil Bible Study - இரண்டாம் ஜீவ கர்ஜனை

வெளி 6:3. அவர் இரண்டாம் முத்திரையை உடைத்த போது இரண்டாம் ஜீவன் நீ வந்து பார் என்று சொல்ல கேட்டேன்..   இரண்டாம் ஜீவ கர்ஜனை முதலாம் ஜீவன் சிங்கத்திற்கொப்பாக இருந்ததினால் அது நிச்சயம் சிங்க கர்ஜனை என்று நாம் கூற முடியும். ஆகையினால் ஆளுகைச் செய்யும் ராஜாங்கம் உடையவராய் முதலாம் தூதர் புறப்பட்டார். பின்னிட்டு திரும்பாத சிங்கத்தை போல அத்தூதன் ஜெயிக்கிறவராக இருந்தார். இரண்டாம் தூதன் காளைக்கொப்பாயிருந்ததனால் கீறி கிழிக்கும் சீற்றத் தொனியோடு பேசினார். மீட்பின் காலங்கள் முடிந்த பின்பு இந்த ஜீவன் பேசுகின்றது. காளை என்பது தேவனின் மீட்பின் திட்டத்தை குறித்தது என்று அறிந்தோம். இயேசு கிறிஸ்து மீட்பின் செயலை செய்து நிறைவு பெற்றவராய் அநேகரை மீட்டு தேவனுடைய ராஜ்யத்திற்கு உட்படுத்தினவராய் இந்த இரண்டாம் முத்திரையை உடைக்கின்றார்.  மீட்பின் செயல் பூமி எங்கும் எரிகிற தீவட்டிப் போலவும், பிரகாசம் போலவும் எழும்பியும் மீட்பின் திட்டத்திற்குள் வர இயலாதவர்களை தீர்ப்பிடும்படியான செயலை செய்ய முத்திரையை உடைத்து குதிரை வீரனை அனுப்புகிறார். மீட்கப்படாதவர்கள் மேல் தேவன் காண்பிக்கும் செயலை காணும் படியாக இரண்ட...

CCM Tamil Bible Study - ஜெயிக்கிற தூதன்

வெளி6:2c. அவன் ஜெயிக்கிறவனாகவும் ஜெயிப்பவனாகவும் இருப்பான். வெளி11:15,18;15:2;17:14; ரோம15:18,19; 1கொரி15:25,55-57; 2கொரி10:3-5; சங்98:1;110:2;ஏசா25:8.  ஜெயிக்கிற தூதன் சுவிசேஷ பிரபல்யத்தினால் உலகமெங்கும் சுவிசேஷம் பரவிக்கொண்டே இருக்கும். இருளையும் சாத்தானையும் பாவத்தையும் சுவிசேஷமானது ஜெயித்துக் கொண்டே செல்லும். எல்லா இடங்களிலும் அது பரவிக் கொண்டே இருக்கும். ஒருவராலும் தடுக்க முடியாது. ஒருவராலும் சுவிசேஷத்தை மேற்கொள்ள முடியாது என்ற வியாக்கியானத்தை அறிஞர்கள் கூறுகின்றனர். நாம் ஏற்கனவே கூறியதன் படி இறுதி கால தீர்ப்போடு இணைத்து இதனை தியானிக்கின்றோம்.  உலகமெங்கும் தங்கள் ஜெயகொடிகளை நாட்டி தங்களை மார்தட்டிக் கொள்ளுகிறவர்களும் தங்களின் மூதாதையர்களின் தோற்கடிக்கப்பட இயலாத பெருமைகளை கூறிக் கொள்கிறவர்களையும் செயலளவிலும் சிந்தனையளவிலும் ஜெயிக்கிறவராக இந்த தூதர் அனுப்பப்படுகின்றார். தோல்வியை கண்டிராதவரும் பின்னிட்டு திரும்புவதை கேள்விப்பட்டிராதவருமான இந்த தூதர் வில்பிடித்து கிரீடம் சூடி ஜெயித்துக் கொண்டே போகின்றார். இதனை வெளிப்படுத்தலின் சில பகுதிகளில் காண்கின்றோம். எத்தனை சாம்ராஜ்யங்கள...

CCM Tamil Bible Study - தொழுதுக் கொண்டார்கள்

வெளி 5:14. அதற்கு 4 ஜீவன்களும் ஆமென் என்று சொல்லின. 24 மூப்பர்களும் வணக்கமாய் விழுந்து சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவரை தொழுதுக் கொண்டார்கள்.  வெளி 4:9;10:7;19:4.  தொழுதுக் கொண்டார்கள் இயேசு கிறிஸ்துவை புகழ்ந்துரைத்த தூதர்களின் புகழுரையை கேட்ட 4 ஜீவன்கள் ஆமென் என்று சொல்லி முடித்தனர். அதே வேளையில் 24 மூப்பர்களும் வணக்கமாய் விழுந்து ஜீவிக்கிறவரை தொழுது கொண்டார்கள். இயேசு கிறிஸ்து மனுஷனாக பூமியில் பிறந்திருக்கலாம், ஆட்டுக்குட்டியை போல அடிக்கப்பட்டிருக்கலாம், அவமானங்கள் நிந்தைகள் சகித்திருக்கலாம் மரணிக்கப்பட்டிருக்கலாம், குறுகிய வாழ்நாள் கொண்டவர் என்று வர்ணிக்கப்பட்டு இருக்கலாம். ஆனால் அவர் உயிர்ப்பிக்கப்பட்டவராயும், பரமேறினவராயும், சிங்காசனத்தில் வீற்றிருக்கிறவருமாயிருப்பதினால் சதாகாலங்களிலும் உயிரோடு இருக்கிறவராக இருக்கிறார். ஆகையினால் அவர் நீண்ட ஆயுள் உள்ளவராக இருக்கிறார்.  வாழ்நாள் குறுகியவனும் வருத்தம் நிறைந்தவனுமாகிய மனிதன் தன் பணபலத்தாலும் அதிகார பலத்தாலும் கல்வி பெருக்கத்தாலும் ஜாதி பலத்தாலும் இயேசு கிறிஸ்துவுக்கு விரோதமாக கொந்தளிக்கின்றான். என்றென்றும் ஜீவித்திருக்...

CCM Tamil Bible Study - சகல ஜீவ ராசிகளும்

 வெளி 5:13. அப்பொழுது வானத்திலும் பூமியிலும் பூமியின் கீழுமிருக்கிற சிருஷ்டிகள் யாவும்........ உண்டாவதாக என்று சொல்ல கேட்டேன். வெளி5:3;7:9,10; சங்96:11-13;148:2-13; லூக் 2:13,14; ரோம8:19-23; பிலி2:10; கொலோ 1:23.  சகல ஜீவ ராசிகளும் மூவுலகமாகிய வானம், பூமி, பூமியின் கீழ் உள்ள எல்லா ஜீவராசிகளும் தேவனையும் இயேசு கிறிஸ்துவையும் புகழ்ந்துரைக்கின்றன. சங்கீதங்களை படிக்கும்போது தாவீது அரசன் சர்வ சிருஷ்டிகளும் இவ்விதமாக தேவனை துதிக்க வேண்டும் என்று விரும்புவதை நாம் பார்க்கின்றோம். இவ்விதமான ஏக்கத்தை பவுல் அப்போஸ்தலர் ரோமர் நிருபத்தில் அழகாக விவரித்துள்ளார்.  எல்லாவற்றையும் படைத்தவர் தேவன். இயேசு கிறிஸ்துவைக் கொண்டு எல்லாம் படைக்கப்பட்டது. இதனை சர்வ சிருஷ்டிகளும் அறிந்துள்ளன. மனிதனின் பாவம் சிருஷ்டிகளின் பார்வையை மங்கச் செய்திருந்தாலும் அவைகளின் ஏக்கம் தேவனை புகழ்வதை செய்வதும், காண்பதும், அனுபவிப்பதுமாகவே காணப்பட்டது. பாவத்தினாலும், பிசாசினாலும், தேவனுடைய தண்டனையினாலும் அழுத்தப்பட்டிருந்தாலும் தங்களைப் படைத்தவரை மறவாதிருக்கும்படியாக தங்களை தண்டித்தவரையே நோக்கி பார்த்துக் கொண்டிருக்க...

CCM Tamil Bible Study - தகுதியாயிருக்கிறார்

வெளி5:12. அவர்களும் மகா சத்தமிட்டு அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர் வல்லமையையும் ஐஸ்வர்யத்தையும் ஞானத்தையும் பலத்தையும் கனத்தையும் மகிமையையும் ஸ்தோத்திரத்தையும் பெற்றுக் கொள்ள பாத்திரராக இருக்கிறார். வெளி5:9;7:12;19:1; மத்28:18; யோவா3:35,36;17:2; 2கொரி8:9; பிலி2:9-11; 1தீமோ1:17.  தகுதியாயிருக்கிறார் தூதர்களின் புகழ்ந்துரை இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது. எண்ணிக்கைக்கடங்காத தூதர்கள் இயேசு கிறிஸ்துவை புகழ்ந்துரைக்கிறவர்களாக உள்ளனர். மனு குலத்தின் பாவத்தை சுமந்ததனிமித்தம் அடிக்கப்பட்டவராய் ஆனார். அந்த கேடடைந்தார். அப்படிப்பட்ட அவலட்சணங்களை சகித்துக் கொண்டவரே தேவனுக்கு சமமாக புகழ்துரைக்கப்படுகின்றார்.  தூதர்கள் இயேசு கிறிஸ்துவின் பூமி வாழ்வைக் கண்டவர்கள். அவர் பட்ட பாடுகளை அறிந்தவர்கள். அவருக்கு சேவை செய்தவர்கள். சாத்தானை ஜெயித்ததை கண்டவர்கள். பாவத்தை ஜெயித்ததையும் உலகத்தை ஜெயித்ததையும் கண்டவர்கள். ஆகையினால் இயேசு கிறிஸ்துவை குறித்து நீண்ட புகழுரையை செலுத்துகின்றனர்.  இயேசு கிறிஸ்து பூமியில் இருக்கும் போது என்னை குறித்து நான் கொடுக்கிற சாட்சியை விட என்னை குறித்து தேவன் கொடுக்கிற ...

CCM Tamil Bible Study - தூதர்கள் கூட்டம்

 வெளி 5:11. பின்னும் நான் பார்த்தபோது சிங்காசனத்தையும் ஜீவன்களையும் மூப்பர்களையும் சூழ்ந்திருந்த அநேக தூதர்களுடைய சத்தத்தை கேட்டேன். அவர்களுடைய இலக்கம் பதினாயிரம் பதினாயிரமாகவும் ஆயிரம் ஆயிரமாகவும் இருந்தது. வெளி7:11;19:6; 1இரா22:19; 2இரா6:16-18; சங்103:20;148:2; உபா33:2; சங்68:17; தானி 7:10; எபி12:22.  தூதர்கள் கூட்டம் விவிலியத்தில் தூதர்களின் பெயர்கள், தூதர்களின் பணிகள், தூதர்களின் எண்ணிக்கை, தூதர்களின் தோற்றம், தூதர்களின் தன்மை குறித்து பல இடங்களில் சொல்லப்பட்டுள்ளது. அவரவர் பெற்ற வெளிப்பாடுகளின் அடிப்படையில் இந்த குறிப்புகள் காணப்படுகின்றன. இங்கு தூதர்களின் எண்ணிக்கையும் தூதர்களில் இருப்பிடம் குறித்தும் சொல்லப்பட்டுள்ளது. அடுத்த பகுதியில் தூதர்களின் புகழ்ந்துரைகள் குறித்து சொல்லப்பட்டுள்ளது. இன்றைய தினம் தூதர்களின் பணிகளில் மிக முக்கியமான பணியாகிய கீழ்ப்படிதல் குறித்து தியானிக்கலாம்.  சங்கீதம் 103:20 ல் கர்த்தருடைய வார்த்தையை கேட்டு அவருடைய வசனத்தின் படி செய்கிற அவருடைய தூதர்கள் என்று தாவீது கூறுகின்றார். இந்த உண்மை குறித்து விவிலியத்தின் பல இடங்களில் வலியுறுத்தப்பட்ட...

CCM Tamil Bible Study - பாத்திரராயிருக்கிறீர்

வெளி 5:9a. தேவரீர் புத்தகத்தை வாங்கவும் அதன் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரராக இருக்கிறீர்..  வெளி 5:2,3;4:11;5:12;13:8;எபி3:3.  பாத்திரராயிருக்கிறீர் வெளி 5:5 ல் தாவீதின் வேர் என்று சொன்னவர் வெளி 5:6 ல் அடிக்கப்பட்ட ஆடு என்று கூறுகின்றார். வெளி 5:9 ல் தேவரீர் என்று கூறுகின்றார். ஆனால் இச்சொல் மூலத்தில் காணப்படவில்லை. என்றாலும் தேவனுடைய கரங்களில் இருப்பதை வாங்கக்கூடிய தகுதி தேவனை சார்ந்தவர்களுக்கு மட்டுமே உண்டு. இயேசு கிறிஸ்து தேவ மகனாகவும் அறியப்பட்டுள்ளார். இயேசு கிறிஸ்துவின் தகுதியை உயர்த்தி காண்பிப்பதற்காக தமிழ் மொழியில் தேவரீர் என்றுக் கூறப்பட்டுள்ளது. மேலும் இப்பகுதி பாடல் பகுதியாக காணப்பட்டாலும் புகழுரை பகுதியாகவும் ஜெபமொழியாகவும் காணப்படுவதினாலும் இயேசுவை தேவனுக்கு இணையாக உயர்த்தி கூறுவதினாலும் தேவரீர் என்று அழைக்கப்படுகின்றார்.  இயேசு கிறிஸ்து எவ்விதத்தில் தகுதி பெற்றுள்ளார் என்பதை பரலோக ஜீவ ராசிகள் பாடும் இப்பாடலிலிருந்து நாம் அறிய முடியும். அதனை வரும் நாட்களில் நாம் தியானிக்கலாம்.  இயேசு கிறிஸ்துவின் தகுதியை நாம் வேறு நிலையில் இன்றைய தினம் தியானிப்போம்....

CCM Tamil Bible Study - பரிசுத்தவான்களின் ஜெபங்கள்

வெளி 5:8c. பரிசுத்தவான்களுடைய ஜெபங்களாகிய துபவர்க்கத்தால் நிறைந்த பொற்காலசங்களை பிடித்துக் கொண்டு.. வெளி 15:7;8:3,5; சங்கீதம் 141:2; யாத் 30:7,8..  பரிசுத்தவான்களின் ஜெபங்கள் தூபகலசம் ஆசரிப்பு கூடாரத்திலும் எருசலேம் தேவாலயத்திலும் பலிபீடத்தண்டை பயன்படுத்தப்படுகின்ற ஒரு பாத்திரம் என்பதை நாம் அறிவோம். ஆனால் இதே போன்றதொரு பாத்திரம் பரலோகத்திலும் காணப்படுகிறது. குறிப்பாக தேவன் முன்பாக தேவனை தொழுது கொள்ளும் போது இப்பாத்திரம் பயன்படுத்தப்படுகின்றது. இந்த காட்சியை போன்றதொரு காட்சியை கண்டதினால் தான் மோசே தூபக் கலசத்தை செய்ய பணித்தார். தூப கலசத்தில் போட்டு தூபம் ஏற்றக் கூடிய பொருட்கள் குறித்த குறிப்புகளும் உள்ளன. ஆனால் பரலோகத்தின் தூப கலசத்தில் தூப வர்க்கங்களாக பரிசுத்தவான்களின் ஜெபங்களையே குறிப்பிடுகின்றார்.  பரிசுத்தவான்களின் ஜெபங்கள் குறித்து நாம் விளக்கமாக அறிந்து கொள்வது இயலாத காரியம். என்றாலும் சில உண்மைகளை நாம் அறிந்திருக்க வேண்டும் என்றாகின்றது. இந்த பரிசுத்தவான்கள் யார்?. யோவான் இவர்கள் குறித்த காரியங்களை தன் நூல்களில் தெரிவித்திருக்க வேண்டும். வெளி 14:12;16:6;17:6;18:20,24;20...

CCM Tamil Bible Study - வணக்கமாய் விழுந்தனர்

வெளி5:8a. அந்த புத்தகத்தை அவர் வாங்கினபோது அந்த நான்கு ஜீவன்களும் 24 மூப்பர்களும் வடக்கமாய் விழுந்தனர். வெளி5:14;7:11;19:4; யோவான் 5:23;பிலி2:9-11;எபி1:6.  வணக்கமாய் விழுந்தனர் ஏற்கனவே வெளி4:13 ல் இது குறித்து நாம் தியானித்து உள்ளோம். இங்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு கொடுக்கப்பட்ட கனத்தை குறித்து நாம் தியானிப்போம். தேவனுடைய மடியில் செல்ல பிள்ளையாய் இருந்தவர் தேவனுக்கு கிடைத்திருந்த கனத்தையும் பெற்றிருந்தார். இப்பொழுது பிதாவின் மடியில் இருக்கிறவராக அல்ல தேவனுடைய சிங்காசனத்தின் முன்னிலையில் அடிக்கப்பட்ட வண்ணமாய் இருக்கிற நிலையில் கனத்தை பெற்றுக் கொள்கிறார். இனிமேல் பிதாவின் வலது பாரிசத்து சிங்காசனத்தில் வீற்றிருந்து கனத்தை பெற்றுக் கொள்வார். முடிவில் புதிய பூமியில் கிறிஸ்துவே சிங்காசனத்தில் இருந்து ஆளுகை செய்து கனத்தை பெற்றுக் கொள்வார். இந்த நிலையில் அடிக்கப்பட்ட வண்ணமாய் இருக்கிற நிலையில் கிடைத்த கனம், வணக்கம், புகழ்ச்சி குறித்து தியானிப்போம்.  இயேசு கிறிஸ்து பாவம் செய்யாதிருந்தும் உலக மீட்புக்காக பாவியாக அடிக்கப்பட்டு கனவீனப்படுத்தப்பட்டிருந்தாலும் மரணத்தை ஜெயித்து உயிரோ...

CCM Tamil Bible Study - தைரியம் அல்லது உரிமை அல்லது தகுதி

 வெளி 5:7. அந்த ஆட்டுக்குட்டியானவர் வந்து சிங்காசனத்தின் மேல் உட்கார்ந்தவருடைய வலது கரத்திலிருந்த புத்தகத்தை வாங்கினார்.. தைரியம் அல்லது உரிமை அல்லது தகுதி   ஏழு உலகங்களிலும் சிங்காசனத்தில் வீற்றிருந்தவரின் கையில் உள்ள புத்தகத்தை வாங்கக் கூடிய தைரியம் உரிமை தகுதி வேறு எவருக்கும் இல்லாதிருக்க ஆட்டுக்குட்டியானவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு மட்டுமே உள்ளது என்று அறிவிக்கப்படுகின்றது. பாவத்தின் பரிகாரி, மனுக்குலத்தின் மீட்பர், உலக இரட்சகர், தேவனுக்கு பிரியமானவர் என்று பெயர் பெற்ற இயேசுகிறிஸ்து பிதாவாகிய தேவனுடைய கரங்களில் இருந்த புஸ்தகத்தை வாங்குகிறார். புத்தகத்தை வாங்குவதற்கும், அதன் முத்திரையை உடைப்பதற்கும், அதில் உள்ளவைகளை அறிவதற்கும் தகுதி பெற்றவர் அவர் ஒருவரே.  தேவனுடைய சித்தப்படி வாழ்ந்து அவர் விருப்பப்படி காரியங்களை செய்து எள்ளளவும் விசுவாசத்தையும் தூய்மையையும் விட்டு விலகாமல் வாழ்கின்றவர்கள் தேவன் முன்னிலையில் நிற்பதற்கும் தேவனுடைய கரங்களிலிருந்து நன்மைகளைப் பெற்றுக் கொள்வதற்கும் தேவனுடைய ரகசியங்களை அறிவதற்கும் பாத்திராயிருக்கிறார்கள். பர்வதத்தில் ஏறுவதற்கும் பாத்திரராக வ...