CCM Tamil Bible Study - கொலைகளமாகும் பூமி
- Get link
- X
- Other Apps
வெளி 6:4b. அதின் மேல் ஏறியிருந்தவனுக்கு பூமியிலுள்ளவர்கள் ஒருவரையொருவர் கொலை செய்யத் தக்கதாக. வெளி13:10; ஏசா 37:26,27;எசே29:18-20; தானி5:19; யோவா19:11; ஓசி4:2; வெளி22:15.
கொலைகளமாகும் பூமி
நாகரீகம் இல்லாத காலங்களில் உண்டான யுத்தங்களில் ஏற்பட்ட ரத்த களறிகளை விட சட்டம், மனிதாபிமானம், மனசாட்சி உள்ள இக்காலங்களில் காணப்படும் ரத்தக் களறிகள் அதிகமாகியுள்ளது. இருளின் காலங்களில் அறியாமையினால் ஏற்படுத்திய ரத்தக்களறிகளைவிட ஒளியின் காலங்களாகிய இக்காலங்களில் அறிந்து செய்கின்ற ரத்த களறிகள் அதிகரித்துள்ளன. மனிதனை மனிதனே புசித்து வாழ்ந்த நர மனிதர்கள் சிந்திய ரத்தங்களை விட நல்லவர்கள், நாணயமானவர்கள், யோக்கியர்கள், நலம்விரும்பிகள், அறிவாளிகள் போர்வையில் சிந்தும் ரத்தம் அதிகமாகியுள்ளது.
ஒரு நாடு பக்கத்து நாட்டை அழிக்க முயற்சிக்கின்றது. ஒரு குடும்பம் இன்னொரு குடும்பத்தை அழிக்கப் பார்க்கின்றது. ஒரு மனிதன் இன்னொரு மனிதனை அழிக்க பார்க்கின்றான். தங்கள் அறிவை பயன்படுத்தியும், தங்கள் திறமையை பயன்படுத்தியும், தங்கள் பலத்தை பயன்படுத்தியும் மற்றவனை அழித்து ஒழிக்க முயற்சிக்கின்றான் மனிதன். ஆறறிவு கொண்ட மனிதன் ஐந்தறிவு கொண்ட காட்டு மிருகங்களை விட மோசமானவனாய் இருக்கின்றான்.
இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஒன்றித்து வாழ அழைக்கப்பட்ட சபைகள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டு மற்ற சபைகளை அழிக்க முயற்சிக்கின்றார்கள். கொலை செய்யலாகாது என்று பிரசங்கித்து கொண்டே வாங்கினாலும் சூழ்ச்சியினாலும் கொலை செய்கிறார்கள். இரட்சிப்புக்குள் வராதவர்களை இரட்சிப்புக்குள் நடத்துவதை விட்டுவிட்டு பிறசபை மக்களை இரட்சிப்புகள் வழி நடத்துகிறோம் என்ற போர்வையில் சபைகளை கொலை செய்து அழிக்கிறார்கள். கிறிஸ்துவின் சரீரமாகிய சபையை மறுபடியும் கொலை செய்கிறார்கள்.
அக்காலத்தில் அறிவுக்கொழுத்தவர்களோடு சேர்ந்துக் கொண்டு சபையை கொலை செய்தார்கள். பின்னர் விஞ்ஞானத்தோடு சேர்ந்துக் கொண்டு சபைகளை அழித்தார்கள். ஒரு கட்டத்தில் கடவுள் மறுப்பாளர்களோடு சேர்ந்து கொண்டு சபைகளை துவம்சம் செய்தார்கள். இப்பொழுது கொல்லுகிறவர்களோடு கூட்டணி சேர்ந்து கொண்டு - உலகத்தோடு சமரசம் செய்துக் கொண்டு - பணத்தோடு இணைந்து கொண்டு - அதிகார வர்க்கங்களோடு இணைந்து கொண்டு சபைகளை கொன்றழிக்கின்றார்கள்.
சுவிசேஷ எழுச்சி, சபைகளின் பெருக்கம், அறிவு வளர்ச்சி, நாகரீக மாற்றம் போன்ற வளர்ச்சிகளின் மத்தியிலும் ரத்தக்களறிகள் அதிகமாகிப் போக காரணம் என்ன என்பதை வரும்நாட்களில் காண்போம்.
சிவப்பு குதிரை சிவந்தமண்ணில் கால் பதித்து முன்னேறுகின்றது. தூதனின் கால்களிலோ சிவப்பு படியவில்லை.
தோட்டக்காரர் குமாரனைக் கண்டபோது: இவன் சுதந்தரவாளி, இவனைக் கொன்று, இவன் சுதந்தரத்தைக் கட்டிக்கொள்வோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டு, அவனைப் பிடித்துத் திராட்சத்தோட்டத்திற்குப் புறம்பே தள்ளிக் கொலைசெய்தார்கள். மத்தேயு 21:38,39...
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment