CCM Tamil Bible Study - சமாதானம் இல்லை
- Get link
- X
- Other Apps
வெளி 6:4c. சமாதானத்தை பூமியிலிருந்து எடுத்துப் போடும்படியாக அதிகாரம் கொடுக்கப்பட்டது. ஏசா38:17;48:22; ஒரே 8:15;16:5; புல3:17; எசே 7:25; மத் 10:34;யோவான்14:27; 1தெச5:3..
சமாதானம் இல்லை
பூமியெங்கும் இரத்தக் களறிகள் உண்டாவதற்கான முதல் காரணம் பூமியில் சமாதானம் இல்லை என்பதாகும். ஆதியில் தேவனோடு இருந்ததனால் உண்டாயிருந்த சமாதானம் பாவத்தினிமித்தம் விலக்கப்பட்ட போதே காயின் ஆபேலைக் கொன்றான். லாமேக்கு கொலை பழி சுமந்தான்.
அதன் பின்பு கிறிஸ்து இயேசுவினால் சமாதானம் பூமிக்கு கொண்டுவரப்பட்டது. அவர் வந்து பூமியிலே சமாதானத்தை வைத்துப் போனார். இதனால் அன்பும், பொறுமையும், தயவும், மனிதாபிமானமும், மனசாட்சியும், கருணையும் உண்டாயிருந்தது. இப்பொழுது இரண்டாம் தூதரின் வருகையானது பூமியிலிருந்து சமாதானத்தை விலக்கி போட்டது. தேவன் தம் கிறிஸ்துவினால் கொடுத்த சமாதானத்தை தேவன் தம் தூதனால் திரும்ப எடுத்துப் போடுகின்றார். சமாதானம் விலக்கப்பட்டு போனதன் அறிகுறிகளே பூமியெங்கும் ரத்த களறிகள் உண்டாக காரணமாகும்.
கிறிஸ்துவின் சரீரமாகிய சபையிலும் சமாதானம் காணப்படவில்லை. ஒருவருக்கொருவர் சகிப்புத்தன்மை இல்லை. குடும்பத்திலும் சமாதானம் இல்லை. குடும்பத்தில் ஒருவருக்கொருவர் ஏட்டிக்கு போட்டியாக நடந்து கொள்கிறார்கள். ஒருவருக்கொருவர் குத்தி பதம் பார்க்கும் தன்மை அதிகரிக்கிறது.
சமாதானத்தை இழப்பது ஒரு புறம். சமாதானத்தை தேடி தேடியே வாழ்வில் மாய்த்துக்கொள்ளும் காலம் மறுபுறம். அன்று வலியினால் சமாதானம் பிறந்தது. இன்று சமாதானம் கொண்டு வந்தவருக்கு வலி உண்டாக்கினதினால் சமாதானம் நீக்கப்படுகிறது.
நாம் சும்மாயிருப்பானேன்? கூடிவாருங்கள், நாம் அரணான பட்டணங்களுக்குள் பிரவேசித்து, அங்கே சங்காரமாவோம், நாம் கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தபடியால், நம்முடைய தேவனாகிய கர்த்தர் நம்மைச் சங்காரம்பண்ணி, நமக்குப் பிச்சுக்கலந்த தண்ணீரைக் குடிக்கக்கொடுக்கிறார்.
சமாதானத்துக்குக் காத்திருந்தோம், பிரயோஜனமில்லை, ஆரோக்கிய காலத்துக்குக் காத்திருந்தோம், இதோ, ஆபத்து, எரேமியா 8:14,15
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment