CCM Tamil Bible Study - கோபம்

வெளி12:12d. பிசாசு மிகுந்த கோபம் கொண்டு.நீதி12:16;16:14;27:3,4;பிர7:9;சங்4:4;76:10;தானி11:36;யோனா4:1;மத்2:16;யாக்1:20.  கோபம் கோபம் மிகவும் பொல்லாதது என்று சொல்வது சரியா என்று எனக்கு தெரியவில்லை. தேவன் கோபம் கொள்வது அவசியமானது என்பதை விவிலியத்தில் படிக்கின்றோம். தேவனுடைய விருப்பத்துக்கு மாறாக மனிதர்கள் போனபோது தேவனுடைய கோபம் வெளிப்பட்டது. தேவகோபம் பற்பல விதமான சிதைவுகளை ஏற்படுத்தியிருந்தாலும் அது தேவனுடைய நீதியையும் பரிசுத்தத்தையும் வழுவாதன்மையையும் வெளிப்படுத்தியது. தேவனுடைய கோபத்தினால் தண்டனை உண்டாயிற்றென்றால் தேவ இரக்கத்தினால் கிருபையும் மீட்பும் உண்டாயிற்று.  மனிதர்கள் தேவன் மீது கோபம் கொள்வதை விவிலியம் ஏற்றுக்கொள்ளவில்லை. தேவன் மீதும் தேவ ஆளுகை மீதும் கோபம் காண்பித்தவர்கள் அழிந்து போயினர். ஆகையினால் தான் மனித கோபம் தேவ நீதியை எழுப்பாது என்று அதற்கு முற்றுப்புள்ளி போடப்பட்டது. தேவகோபத்துக்கும் மனித கோபத்துக்கும் உண்டான போட்டிகள் சுருங்கி போயின. ஆனால் தேவ கோபத்திற்கும் சாத்தானின் கோபத்திற்கும் இடையில் உண்டான போட்டிகள் உலகம் அழிக்கப்படுவது வரையிலும் சாத்தான் நரகத்தில் தள்ளப்...

CCM Tamil Bible Study - பட்டயம்

வெளி 6:4d. ஒரு பெரிய பட்டயமும் அவனுக்குக் கொடுக்கப்பட்டது. சங்17:13;ஏசா10:5,6;எசே30:24,25; எண்22:23; உபா32:41;33:29; யோசு5:13; சங்45:3;எரே44:27; லூக் 21:24; வெளி 2:16;19:21. 

பட்டயம்

பூமியெங்கும் இரத்தக் களறிகள் உண்டாவதற்கான இரண்டாவது காரணம் பட்டயமே ஆகும். தேவனிடம் பட்டயம் உண்டு. தேவனுடைய தூதர்களிடமும் பட்டயம் உண்டு. பட்டயம் பிடித்து செல்லுதல் என்பது யுத்தத்தை குறிப்பிடுகின்றது. ஆவியின்பட்டயத்தால் மனுக்குலத்தை தேவனுக்கு நேராக்கிய ஆண்டவர் இப்பொழுது இரத்தக் களறியை உண்டாக்கும் யுத்த பட்டயத்தை அனுப்புகிறார். அழிக்கும்படியாக - எச்சரிக்கும்படியாக தேவன் அனுப்புகிற வாதைகளில் பட்டயமும் ஒன்றாகும். 

பட்டயம் சுமந்து செல்வது உலகத்தின் இறுதி காலங்களை குறிக்கின்றது. தேவனுடைய சத்துருக்கள் மீது தேவன் பழிவாங்கும் படியாக பட்டயத்தை அனுப்புகிறார். களைகளை அகற்றுகிறவர்களாக மட்டுமல்ல துன்மார்க்கர்களையும் அழிப்பவராகவும் வெளிப்படுகின்றார். தூதன் பட்டயம் எடுத்து புறப்பட்டதின் அடையாளமே கொலை வெறிகளின் கோரத்தாண்டவம். பட்டயம் எடுப்பவனை பட்டயமே கொல்லும் என்பதன் பொருள் என்னவெனில் தேவனுடைய அன்புக்கு இணங்காமல் தேவனுக்கும் அவருடைய சபைக்கும் எதிராக பட்டயம் எடுக்கிற ஒவ்வொருவரையும் கர்த்தர் பட்டயமே பழிவாங்கும். 

கிருபையுள்ள வார்த்தைகளையும் சத்திய வார்த்தைகளையும் பற்றிக் கொள்ளாது துன்மார்க்கத்துக்கடுத்த அக்கிரமத்தின் -  அசத்தியமான வாக்குகளை, பொய்யின் வாக்குகளை பட்டயக்குத்துகள் போல பேசுபவர்களுக்கு எதிராகவும் கர்த்தரின் பட்டயம் வரும். சபைகளில் சத்தியத்தின் படி நடவாத - நடப்பிக்காத ஊழியர்கள் மீது கர்த்தரின் பட்டயம் வரும். புறப்பட்ட கர்த்தரின் பட்டயத்தை தடுத்து நிறுத்தும் ஆற்றல் எவருக்கும் இல்லை. 

ஆ கர்த்தரின் பட்டயமே, எந்தமட்டும் அமராதிருப்பாய்? உன் உறைக்குள் திரும்பிவந்து, ஓய்ந்து அமர்ந்திரு. 

அது எப்படி அமர்ந்திருக்கும்? அஸ்கலோனுக்கு விரோதமாகவும் கடல்துறை தேசத்துக்கு விரோதமாகவும் கர்த்தர் அதற்குக் கட்டளைகொடுத்து, அவ்விடங்களுக்கென்று அதைக் குறித்தாரே. எரேமியா 47:6,7.

பட்டயமே, என் மேய்ப்பன்மேலும் என் தோழனாகிய புருஷன்மேலும் எழும்பு என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். மேய்ப்பனை வெட்டு, அப்பொழுது ஆடுகள் சிதறிப்போகும். ஆனாலும் என் கரத்தைச் சிறுவர்மேல் திரும்ப வைப்பேன். சகரியா 13:7.

Comments

Popular posts from this blog

CCM Tamil Bible Study - ஆறுதல் தரும் கிறிஸ்து - Comforter Christ

The Lord built Isaac's family - CCM Tamil Bible Study - ஈசாக்கின் குடும்பம் கட்டப்பட்டது

The Lord built Paul - CCM Tamil Bible Study - கட்டி எழுப்பப்பட்ட பவுல்