CCM Tamil Bible Study - இரண்டாம் ஜீவ கர்ஜனை
- Get link
- X
- Other Apps
வெளி 6:3. அவர் இரண்டாம் முத்திரையை உடைத்த போது இரண்டாம் ஜீவன் நீ வந்து பார் என்று சொல்ல கேட்டேன்..
இரண்டாம் ஜீவ கர்ஜனை
முதலாம் ஜீவன் சிங்கத்திற்கொப்பாக இருந்ததினால் அது நிச்சயம் சிங்க கர்ஜனை என்று நாம் கூற முடியும். ஆகையினால் ஆளுகைச் செய்யும் ராஜாங்கம் உடையவராய் முதலாம் தூதர் புறப்பட்டார். பின்னிட்டு திரும்பாத சிங்கத்தை போல அத்தூதன் ஜெயிக்கிறவராக இருந்தார். இரண்டாம் தூதன் காளைக்கொப்பாயிருந்ததனால் கீறி கிழிக்கும் சீற்றத் தொனியோடு பேசினார். மீட்பின் காலங்கள் முடிந்த பின்பு இந்த ஜீவன் பேசுகின்றது. காளை என்பது தேவனின் மீட்பின் திட்டத்தை குறித்தது என்று அறிந்தோம். இயேசு கிறிஸ்து மீட்பின் செயலை செய்து நிறைவு பெற்றவராய் அநேகரை மீட்டு தேவனுடைய ராஜ்யத்திற்கு உட்படுத்தினவராய் இந்த இரண்டாம் முத்திரையை உடைக்கின்றார்.
மீட்பின் செயல் பூமி எங்கும் எரிகிற தீவட்டிப் போலவும், பிரகாசம் போலவும் எழும்பியும் மீட்பின் திட்டத்திற்குள் வர இயலாதவர்களை தீர்ப்பிடும்படியான செயலை செய்ய முத்திரையை உடைத்து குதிரை வீரனை அனுப்புகிறார். மீட்கப்படாதவர்கள் மேல் தேவன் காண்பிக்கும் செயலை காணும் படியாக இரண்டாம் ஜீவன் யோவானை அழைக்கின்றது. மீட்பின் தேவனின் செயலை கண்ணுற்ற யோவானுக்கு மீட்ப்புக்கு உட்படாதவர்கள் மீது தேவன் காண்பிக்கும் செயலை காணும் படியான பாக்கியமும் கிடைத்தது. இருள் விலகுகிறதைக் கண்ட யோவான் அக்கினி பாளையத்தை சூழ்ந்து கொள்வதையும் பார்க்கப் போகின்றார். தன்னை பலியாக கொடுத்த இயேசுவின் வலிகளையும் வேதனைகளையும் கண்ணுற்ற யோவான் அவரின் ஆக்ரோஷமான ராஜரீக எழுச்சியையும் சிவந்த கண்களின் பயங்கரத்தையும் காணும்படி அழைக்கப்படுகின்றார்.
தேவனுடைய மீட்பை காணும் பரிசுத்தவான்கள் மீட்கப்படாதவர்களுக்கான தேவனின் தீர்ப்பை காணும்படி பாக்கியத்தையும் பெறவாஞ்சிக்க வேண்டும். துன்பங்களை அனுபவித்த நாம் இன்பம் பெற்று வாழ்வது அவசியம் இருந்தாலும் துன்புறுத்தியவர்கள் மீது சொரியப்படும் தேவனின் நீதியுள்ள ஆக்கினையையும் கண்டு அனுபவிக்க வேண்டும். விவிலியத்தின் பல பகுதிகளில் தேவனுடைய இரக்கம் அன்பு கிருபைக்கு உட்படாதவர்கள் மீது தேவகோபாக்கினை சொரியப்பட்டதை கண்டிருக்கின்றோம். ஆனால் இக்காலங்களில் சபைக்கும் தேவனுடைய ஜனத்துக்கும் எதிராக எழும்பியவர்கள் தேவனுடைய தீர்ப்புக்கு உட்படாமல் தப்பித்து பாபிலோன் வேசியாக பரிசுத்தவான்களின் இரத்தத்தின் மேல் வீற்றிருக்கின்றாள். தேவனுடைய மனிதர்கள் தேவனுடைய நீதியுள்ள தீர்ப்பை காணும்படியாக பாபிலோன் வேசி தள்ளப்பட்டு மிதிக்கப்பட்டு போகும் காலம் உண்டாகும்படியாக ஜெபிக்க வேண்டும்
இரதத்தின் மேல் ஆசனம் அமைத்து வீற்றிருக்கும் தேவதைகளுக்கு தேவனின் தீர்ப்பின் காலம் நெருங்கிவிட்டது.
இவைகளுக்குப்பின்பு, வேறொரு தூதன் மிகுந்த அதிகாரமுடையவனாய், வானத்திலிருந்து இறங்கிவரக்கண்டேன், அவனுடைய மகிமையினால் பூமி பிரகாசமாயிற்று. அவன் பலத்த சத்தமிட்டு: மகா பாபிலோன் விழுந்தது! விழுந்தது! அது பேய்களுடைய குடியிருப்பும், சகலவித அசுத்தஆவிகளுடைய காவல்வீடும், அசுத்தமும் அருவருப்புமுள்ள சகலவித பறவைகளுடைய கூடுமாயிற்று.
பரலோகமே! பரிசுத்தவான்களாகிய அப்போஸ்தலர்களே! தீர்க்கதரிசிகளே! அவளைக்குறித்துக் களிகூருங்கள். உங்கள் நிமித்தம் தேவன் அவளை நியாயந்தீர்த்தாரே! என்று தூதன் சொன்னான். வெளி 18:1,2,20...
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment