CCM Tamil Bible Study - தைரியம் அல்லது உரிமை அல்லது தகுதி
- Get link
- X
- Other Apps
வெளி 5:7. அந்த ஆட்டுக்குட்டியானவர் வந்து சிங்காசனத்தின் மேல் உட்கார்ந்தவருடைய வலது கரத்திலிருந்த புத்தகத்தை வாங்கினார்..
தைரியம் அல்லது உரிமை அல்லது தகுதி
ஏழு உலகங்களிலும் சிங்காசனத்தில் வீற்றிருந்தவரின் கையில் உள்ள புத்தகத்தை வாங்கக் கூடிய தைரியம் உரிமை தகுதி வேறு எவருக்கும் இல்லாதிருக்க ஆட்டுக்குட்டியானவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு மட்டுமே உள்ளது என்று அறிவிக்கப்படுகின்றது. பாவத்தின் பரிகாரி, மனுக்குலத்தின் மீட்பர், உலக இரட்சகர், தேவனுக்கு பிரியமானவர் என்று பெயர் பெற்ற இயேசுகிறிஸ்து பிதாவாகிய தேவனுடைய கரங்களில் இருந்த புஸ்தகத்தை வாங்குகிறார். புத்தகத்தை வாங்குவதற்கும், அதன் முத்திரையை உடைப்பதற்கும், அதில் உள்ளவைகளை அறிவதற்கும் தகுதி பெற்றவர் அவர் ஒருவரே.
தேவனுடைய சித்தப்படி வாழ்ந்து அவர் விருப்பப்படி காரியங்களை செய்து எள்ளளவும் விசுவாசத்தையும் தூய்மையையும் விட்டு விலகாமல் வாழ்கின்றவர்கள் தேவன் முன்னிலையில் நிற்பதற்கும் தேவனுடைய கரங்களிலிருந்து நன்மைகளைப் பெற்றுக் கொள்வதற்கும் தேவனுடைய ரகசியங்களை அறிவதற்கும் பாத்திராயிருக்கிறார்கள். பர்வதத்தில் ஏறுவதற்கும் பாத்திரராக வேண்டும், ஆலயத்துக்குள் பிரவேசிப்பதற்கும் பாத்திரராக வேண்டும், தேவன் முன்னிலையில் நிற்பதற்கும் பாத்திரராகவேண்டும், கர்த்தரின் வார்த்தைகளை அறிவிப்பதற்கும் பாத்திரராக வேண்டும். தகுதி படுத்தப் பட்டவர்கள் அவர் முன்னிலையில் செயல்படவும் பாத்திரராயிருக்கிறார்கள் மீட்பை பெறுவது மட்டுமல்ல, விசுவாசத்தை கொண்டிருப்பது மட்டுமல்ல, கட்டளைகளின் படி நடந்து தேவ பிரமாணத்தை நிறைவேற்றுபவர்களாயுமிருக்க வேண்டும்.
யார் கர்த்தருடைய பர்வதத்தில் ஏறுவான்?
யார் அவருடைய பரிசுத்த ஸ்தலத்தில் நிலைத்திருப்பான்?
கைகளில் சுத்தமுள்ளவனும் இருதயத்தில் மாசில்லாதவனுமாயிருந்து, தன் ஆத்துமாவை மாயைக்கு ஒப்புக்கொடாமலும், கபடாய் ஆணையிடாமலும் இருக்கிறவனே.
அவன் கர்த்தரால் ஆசீர்வாதத்தையும், தன் இரட்சிப்பின் தேவனால் நீதியையும் பெறுவான். இதுவே அவரைத் தேடி விசாரித்து, அவருடைய சமுகத்தை நாடுகிற யாக்கோபு என்னும் சந்ததி.
சங்கீதம் 24:3-6.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment