CCM Tamil Bible Study - சிவப்பு குதிரை
- Get link
- X
- Other Apps
வெளி 6:4a. அப்பொழுது சிவப்பான வேறொரு குதிரை புறப்பட்டது. வெளி12:3;17:3,6; சக1:8;6:2; ஏசா63:2; மத்27:28.
சிவப்பு குதிரை
முதல் முத்திரை உடைத்த போது வெள்ளை குதிரை புறப்பட்டது. அது தூய்மையின் வெற்றியை குறித்தது. இரண்டாவது முத்திரை உடைத்த போது சிவப்பு குதிரை புறப்படுகிறது. ராஜாங்கத்தின் அடுத்த நிலை எதிராளிகளை அழிப்பது தான். தோற்கடிப்பது மட்டுமல்ல திரும்ப எழும்பக்கூடாதபடிக்கு அழிக்கப்பட வேண்டும் என்பதாகும்.
சிவப்பு என்பது சில உண்மைகளை நமக்கு சுட்டி காட்டுகின்றது.
முதலாவது ஆபத்து வரப்போகிறது அல்லது ஆபத்து உள்ளது என்று அறிவுறுத்தும். சிவப்பு அடையாளம் காட்டப்படுமானால் எதிரிடையாக நிற்போர் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். ஆபத்து வரப்போகிறது என்றும் அது அழிவின் ஆபத்து என்றும் உணர்ந்து கொள்ள வேண்டும். பாவம் எப்பொழுதும் இல்லாத அளவுக்கு பெருகி இருக்குமானால் சிவப்பு அடையாளம் உண்டாகிவிட்டது என்று உணர்ந்து கொள்ள வேண்டும். பாவத்தின் காரணமாக சாத்தான் சிவப்பு வண்ணம் உள்ளவனாய் இருக்கின்றான். ஆகவே வரப்போற ஆபத்துகளை முன் உணர்ந்து எச்சரிக்கை அடைய வேண்டும். பாவம் பெருகுகின்ற காலங்களில் கடிந்து கொள்ளும், தண்டனையை அறிவிக்கும் தீர்க்கதரிசன ஆவி எழும்பி இருப்பதை அறியும்போது ஆபத்து நெருங்கி விட்டது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
இரண்டாவதாக சிவப்பு என்பது அழிவின் அடையாளமாக உள்ளது. இரத்தக்களறிகள் அதிகமாகும். எங்கு பார்த்தாலும் கொலைகளும் வன்முறைகளும் அதிகரித்துக் கொண்டே இருக்கும். முற்றான அழிவு பெருகி வரப் போகின்றது என்று அறிந்து கொள்ள வேண்டும். பெற்றோருக்கு எதிராக பிள்ளைகள் எழும்புவதை காணும் போதும், புருஷனுக்கு எதிராக மனைவிமார்கள் எழும்புவதை காணும் போதும், தங்கள் சொந்த போதகருக்கு எதிராக விசுவாசிகள் எழும்புவதை காணும் போதும், வன்மம் கொண்ட தலைமைத்துவங்கள் எழும்பியுள்ளதை கவனிக்கும் போதும் அழிவின் விளிம்புக்கு வந்து விட்டோம் என்று அறிந்து கொள்ள வேண்டும்.
மூன்றாவதாக எவ்வளவு பெரிய ஆபத்துகளும் அழிவும் ஏற்பட்டாலும் தேவனின் மீட்பின் திட்டம் ஆயத்தமாக உள்ளது என்றும் மீட்பு முடியும் முன் அவரைப் பற்றிக் கொள் என்றும் எச்சரிக்கை படுத்தப்படுகின்றது. தேவனின் மீட்பின் திட்டம் முடிவுபெறப்போகின்றது என்பதற்கு அடையாளமே சிவப்பு ஆகும். நாம் எச்சரிக்கை படுத்தப்பட்டுள்ளோம். சிவப்பு குதிரை புறப்பட்டு உள்ளதினால் மிகவும் கவனமாக நடந்து கொள்ள வேண்டும்.
மீட்பை முடித்து வைக்கும் நாள் நெருங்கி விட்டது.
நீதியைச் சரிக்கட்டும் நாள் என் மனதிலிருந்தது, என்னுடையவர்களை மீட்கும் வருஷம் வந்தது. நான் பார்த்தேன், துணைசெய்வார் ஒருவருமில்லை, தாங்குவார் ஒருவருமில்லை என்று ஆச்சரியப்பட்டேன், அப்பொழுது என் புயமே எனக்கு இரட்சிப்பாகி, என் உக்கிரமே என்னைத் தாங்கிற்று.
ஏசாயா 63:4,5
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment