CCM Tamil Bible Study - கோபம்

வெளி12:12d. பிசாசு மிகுந்த கோபம் கொண்டு.நீதி12:16;16:14;27:3,4;பிர7:9;சங்4:4;76:10;தானி11:36;யோனா4:1;மத்2:16;யாக்1:20.  கோபம் கோபம் மிகவும் பொல்லாதது என்று சொல்வது சரியா என்று எனக்கு தெரியவில்லை. தேவன் கோபம் கொள்வது அவசியமானது என்பதை விவிலியத்தில் படிக்கின்றோம். தேவனுடைய விருப்பத்துக்கு மாறாக மனிதர்கள் போனபோது தேவனுடைய கோபம் வெளிப்பட்டது. தேவகோபம் பற்பல விதமான சிதைவுகளை ஏற்படுத்தியிருந்தாலும் அது தேவனுடைய நீதியையும் பரிசுத்தத்தையும் வழுவாதன்மையையும் வெளிப்படுத்தியது. தேவனுடைய கோபத்தினால் தண்டனை உண்டாயிற்றென்றால் தேவ இரக்கத்தினால் கிருபையும் மீட்பும் உண்டாயிற்று.  மனிதர்கள் தேவன் மீது கோபம் கொள்வதை விவிலியம் ஏற்றுக்கொள்ளவில்லை. தேவன் மீதும் தேவ ஆளுகை மீதும் கோபம் காண்பித்தவர்கள் அழிந்து போயினர். ஆகையினால் தான் மனித கோபம் தேவ நீதியை எழுப்பாது என்று அதற்கு முற்றுப்புள்ளி போடப்பட்டது. தேவகோபத்துக்கும் மனித கோபத்துக்கும் உண்டான போட்டிகள் சுருங்கி போயின. ஆனால் தேவ கோபத்திற்கும் சாத்தானின் கோபத்திற்கும் இடையில் உண்டான போட்டிகள் உலகம் அழிக்கப்படுவது வரையிலும் சாத்தான் நரகத்தில் தள்ளப்...

CCM Tamil Bible Study - ஜெயிக்கிற தூதன்

வெளி6:2c. அவன் ஜெயிக்கிறவனாகவும் ஜெயிப்பவனாகவும் இருப்பான். வெளி11:15,18;15:2;17:14; ரோம15:18,19; 1கொரி15:25,55-57; 2கொரி10:3-5; சங்98:1;110:2;ஏசா25:8. 

ஜெயிக்கிற தூதன்

சுவிசேஷ பிரபல்யத்தினால் உலகமெங்கும் சுவிசேஷம் பரவிக்கொண்டே இருக்கும். இருளையும் சாத்தானையும் பாவத்தையும் சுவிசேஷமானது ஜெயித்துக் கொண்டே செல்லும். எல்லா இடங்களிலும் அது பரவிக் கொண்டே இருக்கும். ஒருவராலும் தடுக்க முடியாது. ஒருவராலும் சுவிசேஷத்தை மேற்கொள்ள முடியாது என்ற வியாக்கியானத்தை அறிஞர்கள் கூறுகின்றனர். நாம் ஏற்கனவே கூறியதன் படி இறுதி கால தீர்ப்போடு இணைத்து இதனை தியானிக்கின்றோம். 

உலகமெங்கும் தங்கள் ஜெயகொடிகளை நாட்டி தங்களை மார்தட்டிக் கொள்ளுகிறவர்களும் தங்களின் மூதாதையர்களின் தோற்கடிக்கப்பட இயலாத பெருமைகளை கூறிக் கொள்கிறவர்களையும் செயலளவிலும் சிந்தனையளவிலும் ஜெயிக்கிறவராக இந்த தூதர் அனுப்பப்படுகின்றார். தோல்வியை கண்டிராதவரும் பின்னிட்டு திரும்புவதை கேள்விப்பட்டிராதவருமான இந்த தூதர் வில்பிடித்து கிரீடம் சூடி ஜெயித்துக் கொண்டே போகின்றார். இதனை வெளிப்படுத்தலின் சில பகுதிகளில் காண்கின்றோம். எத்தனை சாம்ராஜ்யங்கள் இணைந்து ஒரே மனமாய் நின்று எதிர்த்தாலும் தோற்கடிக்கப்படவியலாத ஜெய வீரனாக முன்னிட்டு சென்று கொண்டே இருப்பார். ஜெயிக்கிற தூதனாகிய இவர் பூமியில் தள்ளப்பட்டிருந்த சாத்தானையும் அவன் சேனைகளையும் ஜெயிக்கிறவராக எழும்புகின்றார். 

சபைகளுக்குள் பிரிவினைகளையும் ஆடம்பரங்களையும் கொள்கை குழப்பங்களையும் புகுத்தி சபைகளை பாழ்படுத்திக் கொண்டிருந்த சாத்தானின் கிரியைகளுக்கு இறுதி அத்தியாயம் எழுதப்படுகிறது. இப்படிப்பட்ட சாத்தானுக்கும் அவன் கிரியைகளுக்கும் துணை போனவர்களாகிய செல்வவான்களும் கல்விமான்களும் பரிசுத்தவான்கள் போர்வையை கொண்டிருந்தவர்களும் தங்களுக்கென்று தேவனால் தீர்மானிக்கப்பட்டிருந்த தீர்ப்பு வருவதைக் கண்டு தலையிலும் மார்பிலும் அடித்துக் கொண்டு மரண ஓலமிடுவார்கள். 

ஜெயிக்கிறவனாய் புறப்பட்டு சென்று கொண்டிருக்கிற தூதரை தடுத்து நிறுத்தி ஏன் இதை செய்கிறீர் என்று கேட்கத்தக்கவன் ஒருவன் உண்டோ?. இன்று கொக்கரிக்கிறவர்கள் நாய்களைப் போல ஊளையிட்டும் ஆந்தைகளைப் போல கூவிக்கொண்டும் புழுதியை இறைத்துக்கொண்டும் முடிவு நெருங்குவதை பார்த்துக் கொண்டே இருந்து காணப்படாமல் போவார்கள். 

அவருடைய புறப்படுதல் அருணோதயம் போல் அல்ல அக்கினி நெருப்பாய் வரப் போகின்றது. 

இன்னும் ஒருதரம் என்கிற சொல்லானது அசையாதவைகள் நிலைத்திருக்கத்தக்கதாக, அசைவுள்ளவைகள் உண்டாக்கப்பட்டவைகள்போல மாறிப்போம் என்பதைக் குறிக்கிறது. ஆதலால், அசைவில்லாத ராஜ்யத்தைப் பெறுகிறவர்களாகிய நாம் பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை செய்யும்படி கிருபையைப் பற்றிக்கொள்ளக்கடவோம். நம்முடைய தேவன் பட்சிக்கிற அக்கினியாயிருக்கிறாரே. எபிரேயர் 12:27-29..

Comments

Popular posts from this blog

CCM Tamil Bible Study - ஆறுதல் தரும் கிறிஸ்து - Comforter Christ

The Lord built Isaac's family - CCM Tamil Bible Study - ஈசாக்கின் குடும்பம் கட்டப்பட்டது

The Lord built Paul - CCM Tamil Bible Study - கட்டி எழுப்பப்பட்ட பவுல்