CCM Tamil Bible Study - கோபம்

வெளி12:12d. பிசாசு மிகுந்த கோபம் கொண்டு.நீதி12:16;16:14;27:3,4;பிர7:9;சங்4:4;76:10;தானி11:36;யோனா4:1;மத்2:16;யாக்1:20.  கோபம் கோபம் மிகவும் பொல்லாதது என்று சொல்வது சரியா என்று எனக்கு தெரியவில்லை. தேவன் கோபம் கொள்வது அவசியமானது என்பதை விவிலியத்தில் படிக்கின்றோம். தேவனுடைய விருப்பத்துக்கு மாறாக மனிதர்கள் போனபோது தேவனுடைய கோபம் வெளிப்பட்டது. தேவகோபம் பற்பல விதமான சிதைவுகளை ஏற்படுத்தியிருந்தாலும் அது தேவனுடைய நீதியையும் பரிசுத்தத்தையும் வழுவாதன்மையையும் வெளிப்படுத்தியது. தேவனுடைய கோபத்தினால் தண்டனை உண்டாயிற்றென்றால் தேவ இரக்கத்தினால் கிருபையும் மீட்பும் உண்டாயிற்று.  மனிதர்கள் தேவன் மீது கோபம் கொள்வதை விவிலியம் ஏற்றுக்கொள்ளவில்லை. தேவன் மீதும் தேவ ஆளுகை மீதும் கோபம் காண்பித்தவர்கள் அழிந்து போயினர். ஆகையினால் தான் மனித கோபம் தேவ நீதியை எழுப்பாது என்று அதற்கு முற்றுப்புள்ளி போடப்பட்டது. தேவகோபத்துக்கும் மனித கோபத்துக்கும் உண்டான போட்டிகள் சுருங்கி போயின. ஆனால் தேவ கோபத்திற்கும் சாத்தானின் கோபத்திற்கும் இடையில் உண்டான போட்டிகள் உலகம் அழிக்கப்படுவது வரையிலும் சாத்தான் நரகத்தில் தள்ளப்...

CCM Tamil Bible Study - வணக்கமாய் விழுந்தனர்

வெளி5:8a. அந்த புத்தகத்தை அவர் வாங்கினபோது அந்த நான்கு ஜீவன்களும் 24 மூப்பர்களும் வடக்கமாய் விழுந்தனர். வெளி5:14;7:11;19:4; யோவான் 5:23;பிலி2:9-11;எபி1:6. 

வணக்கமாய் விழுந்தனர்

ஏற்கனவே வெளி4:13 ல் இது குறித்து நாம் தியானித்து உள்ளோம். இங்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு கொடுக்கப்பட்ட கனத்தை குறித்து நாம் தியானிப்போம். தேவனுடைய மடியில் செல்ல பிள்ளையாய் இருந்தவர் தேவனுக்கு கிடைத்திருந்த கனத்தையும் பெற்றிருந்தார். இப்பொழுது பிதாவின் மடியில் இருக்கிறவராக அல்ல தேவனுடைய சிங்காசனத்தின் முன்னிலையில் அடிக்கப்பட்ட வண்ணமாய் இருக்கிற நிலையில் கனத்தை பெற்றுக் கொள்கிறார். இனிமேல் பிதாவின் வலது பாரிசத்து சிங்காசனத்தில் வீற்றிருந்து கனத்தை பெற்றுக் கொள்வார். முடிவில் புதிய பூமியில் கிறிஸ்துவே சிங்காசனத்தில் இருந்து ஆளுகை செய்து கனத்தை பெற்றுக் கொள்வார். இந்த நிலையில் அடிக்கப்பட்ட வண்ணமாய் இருக்கிற நிலையில் கிடைத்த கனம், வணக்கம், புகழ்ச்சி குறித்து தியானிப்போம். 

இயேசு கிறிஸ்து பாவம் செய்யாதிருந்தும் உலக மீட்புக்காக பாவியாக அடிக்கப்பட்டு கனவீனப்படுத்தப்பட்டிருந்தாலும் மரணத்தை ஜெயித்து உயிரோடு எழும்பியதினித்தம் கனப்படுத்த படுகின்றார் என்பதை தீர்க்கத்தரிசிகள் முதற்கொண்டு இதுவரையிலும் அறிவிக்கப்பட்டு வருகின்றது. உலகம் இயேசுவுக்குரிய கனத்தை கொடுக்கின்றதோ இல்லையோ சபையானது கிறிஸ்துவை கனப்படுத்தி தங்கள் பணிகளைச் செய்ய வேண்டும். கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவின் சிலுவை பாடுகளை எவ்வளவு தியானிக்கின்றார்களோ அவ்வளவாய் அவருடைய ராஜாங்கத்தையும் தியானிக்க வேண்டும். சிலுவையில் சிதைக்கப்பட்டவரே ராஜாவாக இருக்கிறார், ராஜாவாக வரப்போகிறார் என்பதை உணர்ந்து கொள்கின்ற சபையே அவரின் ராஜ்யத்திற்குள் எடுத்துக் கொள்ளப்படும். அவரை இங்கே கனம் பண்ணாதவர் அவரை கனம் பண்ணும் வாய்ப்பை பின்னர் பெறுவதே இல்லை. 

பிதாவானவர் மரித்தோரை எழுப்பி உயிர்ப்பிக்கிறதுபோல, குமாரனும் தமக்குச் சித்தமானவர்களை உயிர்ப்பிக்கிறார். 

அன்றியும் பிதாவைக் கனம்பண்ணும்படிக்கு, பிதாவானவர் தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார். 

குமாரனைக் கனம்பண்ணாதவன் அவரை அனுப்பின பிதாவையும் கனம் பண்ணாதவனாயிருக்கிறான்.

யோவான் 5:21-23

Comments

Popular posts from this blog

CCM Tamil Bible Study - ஆறுதல் தரும் கிறிஸ்து - Comforter Christ

The Lord built Isaac's family - CCM Tamil Bible Study - ஈசாக்கின் குடும்பம் கட்டப்பட்டது

The Lord built Paul - CCM Tamil Bible Study - கட்டி எழுப்பப்பட்ட பவுல்