CCM Tamil Bible Study - கோபம்

வெளி12:12d. பிசாசு மிகுந்த கோபம் கொண்டு.நீதி12:16;16:14;27:3,4;பிர7:9;சங்4:4;76:10;தானி11:36;யோனா4:1;மத்2:16;யாக்1:20.  கோபம் கோபம் மிகவும் பொல்லாதது என்று சொல்வது சரியா என்று எனக்கு தெரியவில்லை. தேவன் கோபம் கொள்வது அவசியமானது என்பதை விவிலியத்தில் படிக்கின்றோம். தேவனுடைய விருப்பத்துக்கு மாறாக மனிதர்கள் போனபோது தேவனுடைய கோபம் வெளிப்பட்டது. தேவகோபம் பற்பல விதமான சிதைவுகளை ஏற்படுத்தியிருந்தாலும் அது தேவனுடைய நீதியையும் பரிசுத்தத்தையும் வழுவாதன்மையையும் வெளிப்படுத்தியது. தேவனுடைய கோபத்தினால் தண்டனை உண்டாயிற்றென்றால் தேவ இரக்கத்தினால் கிருபையும் மீட்பும் உண்டாயிற்று.  மனிதர்கள் தேவன் மீது கோபம் கொள்வதை விவிலியம் ஏற்றுக்கொள்ளவில்லை. தேவன் மீதும் தேவ ஆளுகை மீதும் கோபம் காண்பித்தவர்கள் அழிந்து போயினர். ஆகையினால் தான் மனித கோபம் தேவ நீதியை எழுப்பாது என்று அதற்கு முற்றுப்புள்ளி போடப்பட்டது. தேவகோபத்துக்கும் மனித கோபத்துக்கும் உண்டான போட்டிகள் சுருங்கி போயின. ஆனால் தேவ கோபத்திற்கும் சாத்தானின் கோபத்திற்கும் இடையில் உண்டான போட்டிகள் உலகம் அழிக்கப்படுவது வரையிலும் சாத்தான் நரகத்தில் தள்ளப்...

CCM Tamil Bible Study - தொழுதுக் கொண்டார்கள்

வெளி 5:14. அதற்கு 4 ஜீவன்களும் ஆமென் என்று சொல்லின. 24 மூப்பர்களும் வணக்கமாய் விழுந்து சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவரை தொழுதுக் கொண்டார்கள். 

வெளி 4:9;10:7;19:4. 

தொழுதுக் கொண்டார்கள்

இயேசு கிறிஸ்துவை புகழ்ந்துரைத்த தூதர்களின் புகழுரையை கேட்ட 4 ஜீவன்கள் ஆமென் என்று சொல்லி முடித்தனர். அதே வேளையில் 24 மூப்பர்களும் வணக்கமாய் விழுந்து ஜீவிக்கிறவரை தொழுது கொண்டார்கள். இயேசு கிறிஸ்து மனுஷனாக பூமியில் பிறந்திருக்கலாம், ஆட்டுக்குட்டியை போல அடிக்கப்பட்டிருக்கலாம், அவமானங்கள் நிந்தைகள் சகித்திருக்கலாம் மரணிக்கப்பட்டிருக்கலாம், குறுகிய வாழ்நாள் கொண்டவர் என்று வர்ணிக்கப்பட்டு இருக்கலாம். ஆனால் அவர் உயிர்ப்பிக்கப்பட்டவராயும், பரமேறினவராயும், சிங்காசனத்தில் வீற்றிருக்கிறவருமாயிருப்பதினால் சதாகாலங்களிலும் உயிரோடு இருக்கிறவராக இருக்கிறார். ஆகையினால் அவர் நீண்ட ஆயுள் உள்ளவராக இருக்கிறார். 

வாழ்நாள் குறுகியவனும் வருத்தம் நிறைந்தவனுமாகிய மனிதன் தன் பணபலத்தாலும் அதிகார பலத்தாலும் கல்வி பெருக்கத்தாலும் ஜாதி பலத்தாலும் இயேசு கிறிஸ்துவுக்கு விரோதமாக கொந்தளிக்கின்றான். என்றென்றும் ஜீவித்திருக்கிறவரை எதுவும் செய்ய இயலாது என்று தெரிந்தும், நாம் வாழ்நாள் குறுகியவர்கள் என்று அறிந்தும் சபைகளையும் தேவஜனத்தையும் நொறுக்க துணிகிறார்கள். என்றென்றும் உயிரோடு இருக்கிறவர் எல்லாம் செய்ய ஆற்றல் உள்ளவர் என்று மனிதன் அறியாதிருக்கிறான். ஆட்சிகளை ஏற்றி இறக்குகிறவர் என்றும் அறியாதிருக்கிறான். 

அனைத்தையும் படைத்தவர் ஆளுகிறவர் அழிக்கிறவர் என்றும் அறியாதிருக்கிறான். மனுஷனே உன் கோபம் பெரிது. ஆனால் என்றென்றும் வாழ்கிறவர் பார்வைக்கு முன் நிற்கமாட்டாய். ஆகையால் இன்றே அவருக்கு பயந்து அவரை தொழுது கொள்ள முன்னெடுத்து வா. 

கர்த்தருக்கு விரோதமாகவும், அவர் அபிஷேகம்பண்ணினவருக்கு விரோதமாகவும், பூமியின் ராஜாக்கள் எழும்பிநின்று, அதிகாரிகள் ஏகமாய் ஆலோசனைபண்ணி, அவர்கள் கட்டுகளை அறுத்து, அவர்கள் கயிறுகளை நம்மைவிட்டு எறிந்துபோடுவோம் என்கிறார்கள். 

பரலோகத்தில் வீற்றிருக்கிறவர் நகைப்பார், ஆண்டவர் அவர்களை இகழுவார். 

அப்பொழுது அவர் தமது கோபத்திலே அவர்களோடே பேசி, தமது உக்கிரத்திலே அவர்களைக் கலங்கப்பண்ணுவார். நான் என்னுடைய பரிசுத்த பர்வதமாகிய சீயோன்மீதில் என்னுடைய ராஜாவை அபிஷேகம்பண்ணி வைத்தேன் என்றார். 

குமாரன் கோபங்கொள்ளாமலும், நீங்கள் வழியிலே அழியாமலும் இருக்கும்படிக்கு, அவரை முத்தஞ் செய்யுங்கள், கொஞ்சக்காலத்திலே அவருடைய கோபம் பற்றியெரியும், அவரை அண்டிக்கொள்ளுகிற யாவரும் பாக்கியவான்கள். சங்கீதம் 2:2-6,12..

Comments

Popular posts from this blog

CCM Tamil Bible Study - ஆறுதல் தரும் கிறிஸ்து - Comforter Christ

The Lord built Isaac's family - CCM Tamil Bible Study - ஈசாக்கின் குடும்பம் கட்டப்பட்டது

The Lord built Paul - CCM Tamil Bible Study - கட்டி எழுப்பப்பட்ட பவுல்