CCM Tamil Bible Study - சகல ஜீவ ராசிகளும்
- Get link
- X
- Other Apps
வெளி 5:13. அப்பொழுது வானத்திலும் பூமியிலும் பூமியின் கீழுமிருக்கிற சிருஷ்டிகள் யாவும்........ உண்டாவதாக என்று சொல்ல கேட்டேன். வெளி5:3;7:9,10; சங்96:11-13;148:2-13; லூக் 2:13,14; ரோம8:19-23; பிலி2:10; கொலோ 1:23.
சகல ஜீவ ராசிகளும்
மூவுலகமாகிய வானம், பூமி, பூமியின் கீழ் உள்ள எல்லா ஜீவராசிகளும் தேவனையும் இயேசு கிறிஸ்துவையும் புகழ்ந்துரைக்கின்றன. சங்கீதங்களை படிக்கும்போது தாவீது அரசன் சர்வ சிருஷ்டிகளும் இவ்விதமாக தேவனை துதிக்க வேண்டும் என்று விரும்புவதை நாம் பார்க்கின்றோம். இவ்விதமான ஏக்கத்தை பவுல் அப்போஸ்தலர் ரோமர் நிருபத்தில் அழகாக விவரித்துள்ளார்.
எல்லாவற்றையும் படைத்தவர் தேவன். இயேசு கிறிஸ்துவைக் கொண்டு எல்லாம் படைக்கப்பட்டது. இதனை சர்வ சிருஷ்டிகளும் அறிந்துள்ளன. மனிதனின் பாவம் சிருஷ்டிகளின் பார்வையை மங்கச் செய்திருந்தாலும் அவைகளின் ஏக்கம் தேவனை புகழ்வதை செய்வதும், காண்பதும், அனுபவிப்பதுமாகவே காணப்பட்டது. பாவத்தினாலும், பிசாசினாலும், தேவனுடைய தண்டனையினாலும் அழுத்தப்பட்டிருந்தாலும் தங்களைப் படைத்தவரை மறவாதிருக்கும்படியாக தங்களை தண்டித்தவரையே நோக்கி பார்த்துக் கொண்டிருக்கின்றன. பிசாசானவன் இதனை உணர்ந்து தான் சிருஷ்டிகளை தொழுது சேவிக்கும் படியாக மனிதனுக்கு போதிக்கலானான். மனிதன் சிருஷ்டிகளை தொழுது சேவிக்கும் அதே வேளையில் சிருஷ்டிகளோ சிருஷ்டிகரை தொழுதுக் கொள்வதையும் புகழ்ந்துரைப்பதையும் அன்றாடம் செய்து கொண்டே வருகின்றன.
தேவ பக்தி உள்ள சந்ததி தோன்ற வேண்டும் என்று வாஞ்சிக்கின்ற சிருஷ்டிகள் ஒருபோதும் பிசாசைப் போல தேவனுக்குரிய வணக்கத்தை தங்களுக்கென்று எடுத்துக் கொள்ளாது. ஆனால் இந்த ஆறறிவு இல்லாத - தேவசாயலாக சிருஷ்டிக்கப்படாத சிருஷ்டிகளுக்குள்ள அறிவு கூட ஆறறிவு கொண்ட பகுத்தறிவு கொண்ட மனிதனுக்கு இல்லையே. தேவனை புகழ்ந்துரைக்கவும் தொழுது சேவிக்கவும் நேரங்களை ஒதுக்குவதும் இல்லை. அதிகாலைப் பொழுது ஆனந்த கும்மி அடித்து தேவனை புகழ்ந்துரைக்கும் இயற்கையோடு இணைந்து பயணிக்க வேண்டிய மனிதன் அறிவு கொழுத்ததினாலும் வசதி வாய்ப்புகள் பெருகியதாலும் உணர்வு அற்றவனாய் காணப்படுகின்றான்.
இயற்கை துயில் கொள்ளும்போது மனுகுலமும் துயில் கொள்ள வேண்டும். இயற்கை விழிக்கும் போது மனுக்குலமும் விழித்துக் கொள்ள வேண்டும். ஆரோக்கியமாய் நீண்ட நாள் வாழ்ந்து தேவனை புகழ்வதை விட்டு விடாதே..
அது ஒரு பாக்கியம்.
மேலும் தேவனுடைய புத்திரர் வெளிப்படுவதற்குச் சிருஷ்டியானது மிகுந்த ஆவலோடே காத்துக்கொண்டிருக்கிறது. அதேனென்றால் சிருஷ்டியானது அழிவுக்குரிய அடிமைத்தனத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தைப் பெற்றுக்கொள்ளும் என்கிறநம்பிக்கையோடே, அந்தச் சிருஷ்டியானது சுயஇஷ்டத்தினாலே அல்ல, கீழ்ப்படுத்தினவராலேயே மாயைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது. ஆகையால் நமக்குத் தெரிந்திருக்கிறபடி, இதுவரைக்கும் சர்வ சிருஷ்டியும் ஏகமாய்த் தவித்துப் பிரசவவேதனைப்படுகிறது. ரோமர் 8:19-22...
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment