CCM Tamil Bible Study - தகுதியாயிருக்கிறார்
- Get link
- X
- Other Apps
வெளி5:12. அவர்களும் மகா சத்தமிட்டு அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர் வல்லமையையும் ஐஸ்வர்யத்தையும் ஞானத்தையும் பலத்தையும் கனத்தையும் மகிமையையும் ஸ்தோத்திரத்தையும் பெற்றுக் கொள்ள பாத்திரராக இருக்கிறார். வெளி5:9;7:12;19:1; மத்28:18; யோவா3:35,36;17:2; 2கொரி8:9; பிலி2:9-11; 1தீமோ1:17.
தகுதியாயிருக்கிறார்
தூதர்களின் புகழ்ந்துரை இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது. எண்ணிக்கைக்கடங்காத தூதர்கள் இயேசு கிறிஸ்துவை புகழ்ந்துரைக்கிறவர்களாக உள்ளனர். மனு குலத்தின் பாவத்தை சுமந்ததனிமித்தம் அடிக்கப்பட்டவராய் ஆனார். அந்த கேடடைந்தார். அப்படிப்பட்ட அவலட்சணங்களை சகித்துக் கொண்டவரே தேவனுக்கு சமமாக புகழ்துரைக்கப்படுகின்றார்.
தூதர்கள் இயேசு கிறிஸ்துவின் பூமி வாழ்வைக் கண்டவர்கள். அவர் பட்ட பாடுகளை அறிந்தவர்கள். அவருக்கு சேவை செய்தவர்கள். சாத்தானை ஜெயித்ததை கண்டவர்கள். பாவத்தை ஜெயித்ததையும் உலகத்தை ஜெயித்ததையும் கண்டவர்கள். ஆகையினால் இயேசு கிறிஸ்துவை குறித்து நீண்ட புகழுரையை செலுத்துகின்றனர்.
இயேசு கிறிஸ்து பூமியில் இருக்கும் போது என்னை குறித்து நான் கொடுக்கிற சாட்சியை விட என்னை குறித்து தேவன் கொடுக்கிற சாட்சியே மேலானது என்றார். பரலோக தேவனும் பரலோக ஜீவராசிகளும் தேவதூதர்களாகிய சேனை திரள்களும் இப்பொழுது இயேசு கிறிஸ்துவை குறித்து சாட்சி கொடுக்கின்றனர். இந்த சாட்சியம் மெய்யானது ஆகும்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தேவனிடமிருந்து வல்லமையையும், தேவனிடமிருந்து ஞானத்தையும், தேவனிடமிருந்து ஐஸ்வர்யகிய மேன்மையையும், தேவனிடமிருந்து பலத்தையும், தேவனிடமிருந்து கனத்தையும், தேவனிடமிருந்து மகிமையையும், தேவனிடமிருந்து ஸ்தோத்திரத்தையும் பெற்றுக் கொள்ளத் தகுதி உடையவரானார். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து 7 தராதரங்களை தமது தந்தையிடம் இருந்து பெற்றுக் கொள்கிறார் என்று கூறுகின்றனர். இந்த ஏழும் ஏற்கனவே இயேசுவிடமிருந்ததுதான். அவைகளை கொள்ளையாடி பெற விரும்பவில்லை. உரிமை கொண்டாடி பெறவிரும்பவில்லை. உறவு கொண்டாடி பெற விரும்பவில்லை. செய்ய வேண்டியதை செய்து முடித்து கீழ்ப்படிதலினாலே பெற்றுக் கொள்ள விரும்பினார். கீழ்ப்படிதலே இயேசுவை மறுபடியும் இந்த 7 மேன்மைகளையும் பெறவைத்தது. ஆகையினால் இருகாரியங்கள் நடக்கும். இனி ஒருவர் தேவனுக்கு அடுத்த இடத்தில் வர முடியாது. மேலே யாவரும் இயேசுவைப் போல கீழ்ப்படிந்து வாழ்வதனால் மட்டுமே இயேசுவை பின் தொடர்ந்து நன்மைகளை பெற முடியும் என்றாகின்றது.
..கீழ்ப்படிவோம் மேல்படியேறுவோம்...
அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல்,
தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்.
ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி, இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும்,
பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார். பிலி2:6-11.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment