CCM Tamil Bible Study - பாத்திரராயிருக்கிறீர்
- Get link
- X
- Other Apps
வெளி 5:9a. தேவரீர் புத்தகத்தை வாங்கவும் அதன் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரராக இருக்கிறீர்..
வெளி 5:2,3;4:11;5:12;13:8;எபி3:3.
பாத்திரராயிருக்கிறீர்
வெளி 5:5 ல் தாவீதின் வேர் என்று சொன்னவர் வெளி 5:6 ல் அடிக்கப்பட்ட ஆடு என்று கூறுகின்றார். வெளி 5:9 ல் தேவரீர் என்று கூறுகின்றார். ஆனால் இச்சொல் மூலத்தில் காணப்படவில்லை. என்றாலும் தேவனுடைய கரங்களில் இருப்பதை வாங்கக்கூடிய தகுதி தேவனை சார்ந்தவர்களுக்கு மட்டுமே உண்டு. இயேசு கிறிஸ்து தேவ மகனாகவும் அறியப்பட்டுள்ளார். இயேசு கிறிஸ்துவின் தகுதியை உயர்த்தி காண்பிப்பதற்காக தமிழ் மொழியில் தேவரீர் என்றுக் கூறப்பட்டுள்ளது. மேலும் இப்பகுதி பாடல் பகுதியாக காணப்பட்டாலும் புகழுரை பகுதியாகவும் ஜெபமொழியாகவும் காணப்படுவதினாலும் இயேசுவை தேவனுக்கு இணையாக உயர்த்தி கூறுவதினாலும் தேவரீர் என்று அழைக்கப்படுகின்றார்.
இயேசு கிறிஸ்து எவ்விதத்தில் தகுதி பெற்றுள்ளார் என்பதை பரலோக ஜீவ ராசிகள் பாடும் இப்பாடலிலிருந்து நாம் அறிய முடியும். அதனை வரும் நாட்களில் நாம் தியானிக்கலாம்.
இயேசு கிறிஸ்துவின் தகுதியை நாம் வேறு நிலையில் இன்றைய தினம் தியானிப்போம்.
முதலாவது இயேசு கிறிஸ்து தேவனுக்கு சமமானவராகவும் தேவகுமாரராகவும் காணப்பட்டிருந்தாலும் தன்னை உயர்த்தி காண்பிக்கவே இல்லை. அதற்கான எந்த முன்னெடுப்புகளையும் செய்யவும் இல்லை. தேவனுடைய விருப்பம் நிறைவேற்றுவதை மட்டுமே குறியாக கொண்டிருந்தார்.
இரண்டாவது எப்பொழுதும் வெளிப்படையாக நடந்து கொண்டார். இந்த வெளிப்படை தன்மை அவரை தூய்மையானவராகவே நிறுத்தியது. தன்னில் பாவம் குற்றம் பிழை இல்லாதிருந்ததின் காரணமும் இதுவே. இந்த செயல் அவர் உயர்ந்து வருவதை ஒருவராலும் தடுக்க இயலாதபடிக்கு காணப்பட்டது.
மூன்றாவது தாம் செய்ய வேண்டிய ஒரு செயலை எந்த சூழ்நிலையிலும் காலம் தாழ்த்தவோ, விலகிச் செல்லவோ, மறுக்கவோ செய்யாமல் துணிந்து செய்தார். அதை பேசவும் செய்தார். தன் ஜீவன் எடுபட்டு போவது குறித்தும் அவர் கவலைப்பட்டதில்லை. செய்து முடிப்பதிலேயே கவனமாக இருந்தார். இனியும் அப்படியே இருப்பார்.
இந்த இயேசு கிறிஸ்துவை போல அவரை விசுவாசிக்கிறவர்களாகிய நாமும், அவருக்கு பணி செய்கிறவர்களாகிய நாமும் காணப்பட வேண்டும் என்று விரும்புகின்றார். நமது நிலைமை குறித்து நாம் கவலைப்படுவதை விட நம்மை குறித்து அவர் கரிசனைப்பட இடம் உண்டாக்குவோமானால் அதுவே பிரிதியாய் இருக்கும்.
மேலும், தமது முதற்பேறானவரை உலகத்தில் பிரவேசிக்கச்செய்தபோது: தேவதூதர்கள் யாவரும் அவரைத் தொழுதுகொள்ளக்கடவர்கள். என்றார்.
தேவதூதரைக்குறித்தோ: தம்முடைய தூதர்களைக் காற்றுகளாகவும், தம்முடைய ஊழியக்காரரை அக்கினி ஜுவாலைகளாகவும் செய்கிறார் என்று சொல்லியிருக்கிறதே.
குமாரனை நோக்கி: தேவனே, உம்முடைய சிங்காசனம் என்றென்றைக்குமுள்ளது, உம்முடைய ராஜ்யத்தின் செங்கோல் நீதியுள்ள செங்கோலாயிருக்கிறது.
எபிரேயர் 1:6-8.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment