Posts

Showing posts from August, 2022

CCM Tamil Bible Study - கோபம்

வெளி12:12d. பிசாசு மிகுந்த கோபம் கொண்டு.நீதி12:16;16:14;27:3,4;பிர7:9;சங்4:4;76:10;தானி11:36;யோனா4:1;மத்2:16;யாக்1:20.  கோபம் கோபம் மிகவும் பொல்லாதது என்று சொல்வது சரியா என்று எனக்கு தெரியவில்லை. தேவன் கோபம் கொள்வது அவசியமானது என்பதை விவிலியத்தில் படிக்கின்றோம். தேவனுடைய விருப்பத்துக்கு மாறாக மனிதர்கள் போனபோது தேவனுடைய கோபம் வெளிப்பட்டது. தேவகோபம் பற்பல விதமான சிதைவுகளை ஏற்படுத்தியிருந்தாலும் அது தேவனுடைய நீதியையும் பரிசுத்தத்தையும் வழுவாதன்மையையும் வெளிப்படுத்தியது. தேவனுடைய கோபத்தினால் தண்டனை உண்டாயிற்றென்றால் தேவ இரக்கத்தினால் கிருபையும் மீட்பும் உண்டாயிற்று.  மனிதர்கள் தேவன் மீது கோபம் கொள்வதை விவிலியம் ஏற்றுக்கொள்ளவில்லை. தேவன் மீதும் தேவ ஆளுகை மீதும் கோபம் காண்பித்தவர்கள் அழிந்து போயினர். ஆகையினால் தான் மனித கோபம் தேவ நீதியை எழுப்பாது என்று அதற்கு முற்றுப்புள்ளி போடப்பட்டது. தேவகோபத்துக்கும் மனித கோபத்துக்கும் உண்டான போட்டிகள் சுருங்கி போயின. ஆனால் தேவ கோபத்திற்கும் சாத்தானின் கோபத்திற்கும் இடையில் உண்டான போட்டிகள் உலகம் அழிக்கப்படுவது வரையிலும் சாத்தான் நரகத்தில் தள்ளப்...

CCM Tamil Bible Study - 12 கோத்திரங்கள்

வெளி7:5-8. 12 கோத்திரங்களிலும் முத்திரையிடப்பட்டவர்கள் 12000 பேர் வீதம் மொத்தம் 144000 பேராகும்.  12 கோத்திரங்கள் 12 கோத்திரங்கள் குறித்த குறிப்புகளில் சில வித்தியாசங்கள் காணப்படுகின்றது. யாக்கோபின் பிள்ளைகளின் பிறப்பு வரிசைப்படி இங்கு வரிசை படுத்தபடவில்லை. யூதா கோத்திரம் சேஷ்டபுத்திர கோத்திரமாகவும் ராஜாங்க கோத்திரமாகவும் கருதப்பட்டு முதன்மைப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு கோத்திரத்திலும் 12,000 பேர் என்பது தேவனால் அவரது பணிகள் ஏதோவொன்றிற்காக முத்திரையிடப்பட்டவர்களாகிய ஊழியக்காரர்களே. ஆகையினால் மீதம் உள்ளவர்கள் தள்ளப்பட்டார்கள் என்று பொருள் அல்ல. இவர்கள் இரத்த சாட்சிகளாக காணப்படுபவர்கள் ஆவார்.  யோசுவாவின் காலத்தில் பங்கிடப்பட்ட முறைமையின் அடிப்படையில் இங்கு பட்டியல் காணப்படவில்லை. தாண் கோத்திரமும் எப்பிராயீம் கோத்திரமும் வெளியேற்றப்பட்டு லேவி கோத்திரமும் யோசேப்பு கோத்திரமும் சேர்க்கப்பட்டுள்ளது. ஒரு வேளை எப்பிராயீம் என்ற பெயர் நீக்கப்பட்டு அந்த கோத்திரம் யோசேப்பின் கோத்திரமாக கருதப்பட்டிருக்க வேண்டும். அதே வேளையில் தாண் கோத்திரத்தின் விக்கிரக வணக்கத்தை யாக்கோபின் சந்ததிக்குள் புக...

CCM Tamil Bible Study - ஒளிப்பிடம்

வெளி 6:15. பூமியின் ராஜாக்களும்...... பர்வதங்களின் குகைகளிலும் கண்மலைகளிலும் ஒளித்துக் கொண்டார்கள். யோசு10:16,17;நியா6:2;1சாமு13:6;ஏசா2:10,19;42:22;மீகா7:17;எபி11:38. ஒளிப்பிடம் மலைகள் அகன்று போயின என்று கூறிய பிறகு பர்வதங்கள், கன்மலைகள் எப்படி காணப்பட்டன என்ற கேள்வி நமக்குள் எழும்புகின்றது. 14ஆம் வசனத்தில் மலைகள் அகன்று போயின என்று குறிப்பிடப்பட்டுள்ளது ஒருவேளை இடம்பெயர்ந்து போனதை குறிக்கலாம் என்று கருத இடம் உண்டு என்றாலும் இதன் பொருளை நாம் அறிவது கடினமே. மலைகளைப் பெயர்ந்து போகச் செய்தவர் கன்மலைகளாகிய மலைகள் சிலவற்றை விட்டுவிட்டார் என்று தீர்மானிக்க வேண்டியுள்ளது. மலைகளை கடவுள்களாகவும் கடவுளின் வாழ்விடமாகவும் கருதியவர்கள் இப்பொழுது எஞ்சிய மலைகளையும் பாறைகளையும் சிறு மலைகளையும் ஒளிப்பிடமாக கருதுகின்றார்கள். கோயில்களாக கருதப்படும் மலைகள் யாவும் அகன்று போயின. ஆங்காங்கு சிற்சில மலைகள் தேவனின் அடுத்த நடவடிக்கைகளுக்காக விட்டுவிடப்பட்டுள்ளன. மேலும் மூன்றில் ஒரு பங்கு மலைகளும் தீவுகளும் அகன்று போயிருக்க கூடும்.  பூமியின் உயர் மனிதர்கள் பாறைகளையும் மலைகளையும் வாழ்விடமாக கருதாமல் அவைகளை உடை...

CCM Tamil Bible Study - மலைகள் பெயர்ந்தன

வெளி 6:14b.மலைகள், தீவுகள் யாவும் தங்கள் இடங்களை விட்டு அகன்றுப் போயின. வெளி16:20;ஏசா2:14-18;எரே3:23;4:23-26;51:25;ஆப3:6,10.  மலைகள் பெயர்ந்தன விசுவாசத்தினால் மலைகளைப் பெயர்க்க இயலும் என்று கூறின ஆண்டவரின் கூற்றுப்படி விசுவாசத்தினால் நாம் மலைகளை பெயர்ந்து போக செய்யாததினால் அவர் தமது கோபத்தினால் மலைகளைப் பெயர்ந்து போக செய்கிறார். தீவுகளும் அகன்று போயின. பூமியின் சீதோஷ்ண நிலைகளுக்கும் மற்றுள்ள ஏராளமான நன்மைகளுக்கும் உண்டாக்கப்பட்ட மலைகளை பிசாசானவனும் அவனின் கூட்டத்தாரும் தேவன் வாசமாக இருக்கும் பரலோகத்துக்கு ஏறும்படியாக பயன்படுத்தி கூடாரம் அமைத்துக் கொண்டனர். இதனால் தேவனை தொழுது சேவிக்காமல் மலைகளில் கூடாரம் போட்டுள்ள சாத்தான்களை கும்பிட துவங்கினர் மனிதர். இதினிமித்தம் எல்லாம் மலைகளையும் பெயரப் பண்ணினார். கூடாரங்கள் கவிழ்க்கப்பட்டது. சாத்தான் ஓடிப் போகிறான்.   உலகத்தின் மாட்சிமைகளை பார்க்கும் படியாகவும் தன்னை வணங்கும்படியாகவும் சாத்தான் பயன்படுத்திய மலைகளை பெயர்ந்துப் போகச் செய்கின்றார். மலை கோயில்கள் எல்லாம் காணப்படாமல் போயிற்று.  ஆடம்பரமாய் வாழவும், இன்பமாய் அனுபவிக்க...

CCM Tamil Bible Study - தேவன் நம்மை எதற்க்காக அழைத்தார்?

 தேவன் நம்மை எதற்க்காக அழைத்தார்? (1 பேதுரு புத்தகத்திலிருந்து தியானித்தல்) 1) பரிசுத்தமாக வாழ அழைத்தார் 1 பேதுரு 1: 13-16 2) சுவிசேஷத்தை அறிவிக்க அழைத்தார் 1 பேதுரு 2: 9 3) சபையை ஆசிர்வதிக்க அழைத்தார் 1 பேதுரு 3: 8-9  4) கிறிஸ்துவுக்காக (சுவிசேஷத்திற்காக) பாடு சகிக்க அழைத்தார் 1 பேதுரு 4: 12-16 (2: 21) 5) நித்திய மகிமைக்கு அழைத்தார் 1 பேதுரு 5: 10 உங்கள் அழைப்பை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்... 2 பேதுரு 1: 10-11

CCM Tamil Bible Study - சுருட்டப்பட்ட வானம்

வெளி 6:14a. வானமும் சுருட்டப்பட்ட புத்தகம் போலாகி விலகிப் போயிற்று.  சங்102:26;ஏசா34:4;எபி1:11-13;2பேது3:10;வெளி20:11.  சுருட்டப்பட்ட வானம் வானம் என்பது அண்டவெளியை குறிக்கின்றதாக இருக்கலாம். வானம் தேவனுடைய படைப்பு. இது ஆதியில் படைக்கப்பட்ட ஒன்றாகும். இந்த வானம் தேவனுடைய சிங்காசனம் என்று கூறப்பட்டுள்ளது. வானத்திலிருந்து தேவனுடைய நன்மைகள் மனிதருக்கு உண்டாகின்றது. சூரிய சந்திர நட்சத்திரங்கள் யாவும் வானத்தை அலங்கரிக்கின்றது. வானத்திலிருந்து தேவன் வெளிப்படுவதும் உண்டு. வானம் தேவனுடைய கை வண்ணம். இந்த வானத்தை புத்தகசூருள் சுருட்டப்படுவது போல சுருட்டப்பட வைக்கின்றார்.  அன்று வானத்தை பரப்பியவர் இன்று வானத்தை சுருட்டுகின்றார். வானத்திலிருந்து உண்டான எல்லா நன்மைகளும் இனி கிடைக்காமல் போகும். அவைகளை தேடி மக்கள் செயலிழந்து போவார்கள். ஆழத்தில் இருள் உண்டாகும். ஆதியிலிருந்த ஆழத்தின் இருள் எங்கும் காணப்படும். வானம் சுருட்டப்பட்டு போனதால் வானத்து நீரும் இல்லாமல் போகும். வானத்து நீர் இல்லாதுப் போவதினால் பூமி வறண்டு போகும்.  பஞ்சபூதங்கள் என உயர்வாய் பேசியவர்கள் அவைகளின் வெளியேற்றத்தை கண...

CCM Tamil Bible Study - நட்சத்திரங்கள் விழுந்தன

வெளி 6:13. வானத்து நட்சத்திரங்களும் பூமியிலே விழுந்தது. வெளி8:10-12;9:1;எசே32:7;தானி8:10;லூக்21:25.  நட்சத்திரங்கள் விழுந்தன வானத்தை நட்சத்திரங்கள் அலங்கரிக்கின்றன. நட்சத்திரங்கள் ஒளிரும் கற்களாகும். நட்சத்திரங்கள் பூமியில் விழுவதை அடிக்கடி காண முடியும். ஆனால் கடைசி காலத்தில் நட்சத்திரங்களில் பெரும் பகுதி பூமியில் விழுவதை காண முடியும். இந்த காரியம் மூன்று விஷயங்களை நமக்கு கற்றுத் தருகின்றது.  முதலாவது இது தேவனுடைய அதிகாரத்தை குறிக்கின்றது. சிருஷ்டிகளின் நிலைநிற்பை தேவனே தீர்மானிக்கின்றார். படைத்தவர் அவரே. ஆகையால் விழாமல் இருக்க செய்வதும் விழச்செய்வதும் அவருடைய வேலையாகும்.  இரண்டாவது நட்சத்திரங்கள் விழுந்து போவதனால் பூமியில் உள்ள அனைத்தும் நெருப்பால் பாதிக்கப்படும். ஏற்கனவே சந்திரன் இரத்தமாக இருப்பதினால் நட்சத்திரங்களின் விழுகையையும் எரியூட்டுதலையும் மனிதர்கள் கணிக்க முடியாது. மனிதர்களிலும் மிருக ஜீவன்களிலும் பசுமையிலும் பெரும் பாதிப்புகள் உண்டாகும்.   மூன்றாவது நட்சத்திரங்களை வைத்து ஜோசியம் ராசிகள் கணிக்கின்றவர்களின் கணிப்புகள் தவறாகிவிடும். நட்சத்திரங்களின் விழ...

CCM Tamil Bible Study - இரத்தமான சந்திரன்

வெளி6:12c. சந்திரன் இரத்தம் போலாயிற்று.  யோபு25:5;சங்72:7;104:19;பிர12:2;ஏசா13:10;24:23;எசே32:7;யோவே2:31;3:15;அப்2:20;மத்24:29.  இரத்தமான சந்திரன் சந்திரனை கால குறிப்புகளுக்காக படைத்தார் ஆண்டவர். விஞ்ஞானபூர்வமாக சூரியனிலிருந்து கிடைக்கும் ஒளியினால் சந்திரன் ஒளிர்கின்றது என்று கூறப்படுகிறது. வெள்ளியைப் போல பிரகாசமாக காணப்படும் சந்திரன் சூரியன் கறுத்து போய் ஒளி கொடுக்காததினால் இரத்தமாக மாறிப்போயிற்று. சந்திரன் என்பது அழகு கவர்ச்சி போன்றவைகளுக்கு அடையாளமாக காட்டப்படுவதினால் தேவதைகளாக வர்ணிக்கின்றனர். இப்பொழுது அதன் அழகை குலைத்துப் போட்டதினால் இரத்தம் போலாகி சிவந்து காணப்படுகிறது. ஒருவேளை குளிர்ச்சியான ஒளியை கொடுத்த சந்திரன் இனி நெருப்பாய் பொழியப்படும் சந்திரனாக மாறுமோ?.  பாவங்களுக்கும் அக்கிரமங்களுக்கும் பொல்லாப்புகளுக்கும் பேர் போன இருளில் மேலும் மேலும் தீங்குகளைச் செய்யும்படி சந்திரனை பயன்படுத்திக் கொண்டவர்கள் சந்திரனின் இரத்த நிறம் போன்ற தோற்றத்தால் கண்களின் ஒளி மங்கி நீரும் நெருப்பும் இன்னதின்னதென்று அறியக் கூடாதபடிக்கு ஆபத்துகளையும் வேதனைகளையும் உண்டாக்குகிறதாயிற்று. ந...

CCM Tamil Bible Study - கறுத்துப் போன சூரியன்

 வெளி6:12b.சூரியன் கறுப்பு கம்பளியைப் போலக் கறுத்தது.  ஏசா13:9,10;24:23;60:19,20;எசே32:7,8;யோவே2:10,30,31;3:15;ஆமோ8:9;மத்24:29;27:45;அப்2:19,20.  கறுத்துப் போன சூரியன் கடைசி காலத்தில் சூரியன் இருண்டு போய் ஒளியை கொடாதிருக்கும். உயிரினங்களின் வாழ்வுக்கு சூரிய ஒளியே பிரதானமானதாகும். சூரியன் இருண்டுப் போவதினால் சந்திரனும் ஒளியைக் கொடாதிருக்கும். உயிரினங்களும் மாண்டுப் போகும் நிலைக்கு தள்ளப்படும். வாழ்வின் ஒளி அழிவின் ஒளியாக மாறப்போகுது. பிரகாசமாக்கிய ஒளி இருண்டு போயிற்று. ஆழத்தில் இருந்த இருளை விலக்கவே சூரியனைப் படைத்தார். அந்த சூரியன் ஒளியை கொடாதிருக்கும்போது ஆதி இருள் திரும்பவும் பிரவாகித்து விடும்.  சூரியனை உண்டாக்கிய நீதியின் சூரியனாகிய தேவனை வணங்காதபடிக்கு சூரியனையே தொழுது சேவிக்கிறவர்களாக மாறிவிட்டனர். சூரிய நமஸ்காரமே எல்லாவற்றுக்கும் மூலம் என்று போதிக்கலாயினர். கடவுள் அல்ல சூரியனின் ஒளியே யாவையும் படைத்தது, கடவுள் அல்ல சூரியனின் அபார சக்தியினாலேயே இவ்வுலகம் இயங்குகின்றது என்று கூறி திரிந்தவர்களின் நாவும் புத்தியும் செயலற்று போயின. படைத்தவரின் கைவண்ணமே மறுபடியும் ச...

CCM Tamil Bible Study - பூமி அதிர்ந்தது

 வெளி6:12a. ஆறாம் முத்திரையை உடைக்க கண்டேன்; இதோ பூமி மிகவும் அதிர்ந்தது. வெளி8:5;11:13;16:18;1இரா19:11-13;ஏசா29:6;ஆமோ1:1;சகரி14:15;மத்24:7;27:54;28:2.  பூமி அதிர்ந்தது கடவுளை மறந்து கடவுளால் படைக்கப்பட்டவைகளை கடவுள்களாக பிரகடனப்படுத்திய மனிதன் பூமியை பூமித்தாய் என்று கொண்டாடுகிறான். ஆனால் அந்த பூமித்தாயோ தன்னை படைத்தவரின் முன் நிற்க முடியாமல் தள்ளாடுகிறாள். படைத்தவரின் மகனின் குருதியை குடித்து கும்மாளம் போட்ட பூமித்தாய் நிலையற்றுத் தள்ளாடுகிறாள். தேவனுடைய பரிசுத்தவான்களின் இரத்தத்தை குடித்து வெறி கொண்ட பூமிதாய் ஐயோ என்னை விட்டு விடுங்கள் என்று கதறுகிறாள். கடைசி காலத்தில் பழிவாங்கும் தேவனின் ஆக்ரோஷமான செயல்பாடுகளுக்கு முன்னால் ஒருவரும் நிற்க முடியாது.  இந்த பூமியிலே என்னுடைய ராஜாங்கத்தை ஸ்தாபிப்பேன் என்று தம்பட்டம் அடித்தவர்களும், அடிக்கிறவர்களும் இருப்பிடம் தவற விட்டு அலைகின்ற நாடோடிகளை மாதிரி மூட்டை முடிச்சுகளை வாரிக் கொண்டு ஓடுகிறார்கள். கடவுளை தொழுது சேவிக்க கட்டளை பெற்ற பூமித்தாய் அய்யோ நான் மனிதர்களின் பேச்சைக் கேட்டு மோசம் போய்விட்டோமே என்று கதறுகிறாள்.  பூமி ...

CCM Tamil Bible Study - பூமியின் நான்கு வாதைகள்

வெளி6:8d. பட்டயத்தினாலும், பஞ்சத்தினாலும், சாவினாலும், பூமியின் துஷ்ட மிருகங்களினாலும் பூமியின் காற்பங்கிலுள்ளவர்களை கொலை செய்யும்படியான அதிகாரம் அவைகளுக்கு கொடுக்கப்பட்டது. வெளி8:7-12;9:15;12:4; லேவி26:22-33; எரே15:2,3;16:4,16;43:11; எசே5:15-17;14:13-21; எபி11:36-39.  பூமியின் நான்கு வாதைகள் மரண தூதன் புறப்பட்டு விட்டான். மரண தூதனின் பணியை செய்வதற்கு நான்கு தூதர்கள் நியமிக்கப்படுகிறார்கள். அவர்கள் பூமியின் நான்கு காரியங்களை தங்களுடையதாக்கிக் கொண்டு மனிதனின் ஜீவனுக்கு எதிராக செயல்படுகிறார்கள். இந்த நான்கு வாதைகளினால் மரணமடைவோரை விழுங்கிப் போடும் படியாக பாதாளம் மரணத்தோடு பயணிக்கின்றது. தலையை வெட்டி குழியில் போடுவது போல நிகழ்வுகள் அரங்கேறுகின்றன. இவைகள் குறித்து பல விதமான வியாக்கியானங்கள் காணப்பட்டாலும் நாம் இறுதி காலத்தை மையமாக வைத்தே தியானிக்கின்றோம்.  விவிலியத்தில் மனிதர்களை கொலை செய்யும் படியாக நான்கு விதமான வாதைகள் தேவனால் அனுப்பப்பட்டுள்ளதைப் படித்துள்ளோம். பட்டயம், பஞ்சம், கொள்ளை நோய், துஷ்ட மிருகங்கள். இங்கு கொள்ளை நோய் விடப்பட்டு சாவு என்ற வார்த்தை சேர்க்கப்பட்டுள்ளது. ...

CCM Tamil Bible Study - மரணத்தை பின் தொடரும் பாதாளம்

வெளி 6:8c. பாதாளம் அவன் பின் சென்றது. மத்11:23;லூக்16:23;அப்2:27,31;மத்16:18;1கொரி15:55;வெளி1:18;20:13,14.  மரணத்தை பின் தொடரும் பாதாளம் பாதாளம் என்பது ஆழத்தை குறிக்கின்றது. புதிய ஏற்பாட்டில் 11 தடவைகள் வந்துள்ளது. பாதாளம் குறித்து நாம் தியானிப்பதில்லை. மரணத்தை பின்தொடர்ந்து வரும் பாதாளம் குறித்தே தியானிக்கின்றோம். மங்கின நிறம் உள்ள குதிரையில் ஏறியிருந்தவனுக்கு மரணம் என்று பெயர். குதிரை மரணத்தை சுமந்து செல்லுகின்றது. மேலும் குதிரையையும் தூதரையும் மரணத்தையும் பின் தொடர்ந்து பாதாளம் செல்கின்றது. மரணம் எங்கெல்லாம் உண்டாகின்றதோ அங்கெல்லாம் பாதாளம் காணப்படும். மரணமானது மனிதனை கொன்று போடுகிறது. பாதாளமோ மரணத்தால் கொல்லப்படும் மனிதனை விழுங்குகின்றது. இச்செயல் பாதாளம் ஒரு புதைகுழி என்று அறிவிக்கின்றது. மரிக்கிறவர்கள் புதைகுழிக்குள் தள்ளப்படுகிறார்கள். தனியாக மரித்தாலும், கூட்டமாக மரணமடைந்தாலும், ஏழையாக மரித்தாலும், பணக்காரனாக மரித்தாலும், முட்டாளாக மரித்தாலும், கல்விமானாக மரித்தாலும், அழகற்றவராய் மரித்தாலும், அழகு பதுமையாக மரித்தாலும் யாவரையும் பாதாளம் விழுங்கும். எல்லாரும் ஒரே புதைக்குழிக...

CCM Tamil Bible Study - மரணம் - Death

வெளி 6:8b. அதின் மேல் ஏறியிருந்தவனுக்கு மரணம் என்று பெயர். வெளி 20:13,14; ஏசாயா 25:8; ஓசியா 13:14; ஆபகூ2:5; 1கொரி 15:55; ஆதி2:17;4:8. மரணம் மங்கின நிறம் உள்ள குதிரையின் மேல் ஏறியிருந்தவனுக்கு மரணம் என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. மங்கின குதிரையானது தான் போகிற இடமெல்லாம் மரணத்தை சுமந்து சென்றது. மரணம் என்ற சொல் புதிய ஏற்பாட்டில் 119 தடவைகள் வந்துள்ளது. சரீரமும் ஆன்மாவும் பிரிந்து போவதே மரணம். அதாவது சரித்திரத்திலிருந்து ஆன்மா வெளியேறி போவதே மரணமாகும். மரணம் சரீரத்துக்குரியதாகும். சரீரம் அசைவற்று கிடப்பதே மரணமாகும். ஆகையினால் தான் தூக்கத்தை கூட மரணத்துக்கு ஒப்பிட்டுள்ளது விவிலியம். இந்த மரணம் குறித்து சில உண்மைகளை இன்றைய தியானத்தில் காண்போம்.  # முதலாவது இந்த தூதன் போகும் இடம் எங்கும் மரண ஓலம் உண்டாகும். ஆகையினால் மரண தூதன் என்றும் கூறலாம். ஆகையினால் இந்நிகழ்வு எகிப்தில் நடந்த தலைபிள்ளை சங்கார தூதனுக்கு ஒத்துள்ளது எனலாம். தற்கொலைகளும் வன்கொலைகளும் எல்லா இடங்களிலும் நடந்தேறும். ஓரிடத்தில் அதிகமான விபத்துக்கள் உண்டாகி மரணங்கள் நேரிடுகிறதென்றால் அப்பகுதியில் மரண தூதன் நிலைக் கொண்டிருக்க...

CCM Tamil Bible Study - மங்கின நிற குதிரை

வெளி 6:8a. நான் பார்த்தபோது இதோ மங்கின நிறம் உள்ள ஒரு குதிரையை கண்டேன். சக6:3;1:8;புல4:1.   மங்கின நிற குதிரை இதனை மேகம் போன்ற நிறம், சாம்பல் நிறம், வெளிறிய நிறம் என்றும் கூறலாம். அடையாளம் கண்டு கொள்ள முடியாதபடிக்கு உள்ள நிறமாகவும் காணப்படலாம். ஏன் மங்கின நிறம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது?. இது தப்பறைவாதிகளின் காலம் என்று குறிப்பிடுகின்றனர். ஆனால் இது கடைசி காலத்தை மையப்படுத்துவதனால் ஒரு சில உண்மைகளை இதன் மூலமாக அறிய வேண்டியுள்ளது.  # முதலாவது கடைசி கால மக்கள் தங்கள் இருதயத்திலே ஒளி இழந்து, தேவ மகிமை இழந்து, தேவனை விட்டு வெகுதூரம் போய் வெளிறிப்போனவர்களாய் இருப்பார் என்பதாகும். உள்ளத்திலோ உணர்வுகளிலோ எவ்விதமான திட நம்பிக்கை இல்லாமல் காணப்படுவர்.  # இரண்டாவது கடைசி கால பயங்கரங்களின் அடையாளங்களை காண்பதினிமித்தம் பயத்தினாலும் நடுக்கத்தினாலும் நிறைந்தவர்களாய் காணப்படுவர். முக களை இழந்து செத்துப்போன முகத்தோற்றம் உடையவர்களாக இருப்பர். ஆனாலும் கடைசி கால அடையாளங்களினிமித்தம் மனந்திரும்பவோ, தேவனிடம் திரும்பி வரவோ முயற்சிக்க மாட்டார்கள்.   # மூன்றாவது இந்த நிறம் மிகவ...

CCM Tamil Bible Study - நீ வந்து பார்

வெளி6:7. அவர் நாலாம் முத்திரையை உடைத்த போது நாலாம் ஜீவனானது நீ வந்து பார் என்று சொல்லும் சத்தம் கேட்டேன்.  நீ வந்து பார் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அடிக்கப்பட்டவராக, துன்புறுத்தப்பட்டவராக இருந்தும் முத்திரைகளை உடைக்கும் அதிகாரத்தையும் ஆற்றலையும் பெற்றிருந்தார். நான்காம் ஜீவன் பறக்கிற கழுகுக்கு ஒப்பாய் இருக்கிறது என்பதைக் கண்டோம். இந்த ஜீவன் யோவானை பிறிதொரு இடத்துக்கு கொண்டு செல்கின்றது. இந்த ஜீவனும் யோவானை மனிதர்கள் கூட்டமாக காணப்படும் இடம் நோக்கி அழைத்து செல்கின்றது. அடுத்த வசனங்களை கவனிக்கும்போது மனிதனின் மரணம் குறித்த குறிப்புகள் காணப்படுகின்றது. அப்படியானால் மனிதர்கள் பிணங்களைப் போல காணப்படுகின்ற இடத்துக்கு அழைத்துச் செல்லப்படுகிறார். கழுகின் தன்மைகள் குறித்து நாம் இங்கு தியானிக்காவிட்டாலும் இரு முக்கியமான உண்மைகளை நாம் அறிந்திருப்பது நல்லது.  # முதலாவது மனிதர்கள் கழுகை போல பலம் கொண்டு நீண்ட நாள் வாழும்படியாக படைக்கப்பட்டவர்கள். முதிர் வயதிலும் கணிதந்து பசுமையும் புஷ்டியுமாய் இருக்க வேண்டியவர்கள். ஆனால் தேவனுடைய மேன்மைக்கு இடம் கொடுப்பதை விட்டு விட்டு பூமியின் செழுமைக்கு இட...

CCM Tamil Bible Study - அளந்து கொடுக்கப்படும்

வெளி 6:6. அப்பொழுது, ஒரு பணத்துக்கு ஒருபடி கோதுமையென்றும், ஒரு பணத்துக்கு மூன்றுபடி வாற்கோதுமையென்றும், எண்ணெயையும் திராட்சரசத்தையும் சேதப்படுத்தாதே என்றும், நான்கு ஜீவன்களின் மத்தியிலிருந்து உண்டான சத்தத்தைக் கேட்டேன். 2இரா7:1; சங்கீதம் 76:8,9. மத் 20:2; யோவான் 6:9. அளந்து கொடுக்கப்படும் பூமியில் செழிப்பும் தானியங்களின் திரட்சியும் அதிகமாக இருந்தாலும் வறுமையின் காலத்தில் அளந்து கொடுக்கப்படுவது போல கொடுக்கப்படும். தாராளமாய் கொடுக்கப்படுவதில்லை. ஒரு பணம் என்பது அக்காலத்தில் ஒரு நாள் கூலியாகும். ஒரு படி என்பது ஒரு லிட்டருக்கு சற்று குறைவானதாகும். ஒரு பணத்துக்கு ஒரு படி கோதுமை, ஒரு பணத்துக்கு மூன்று படி வாற்கோதுமை என்பது அளவு பிரமாணத்தின் எழுச்சியாகும். இந்த காரியம் இஸ்ரயேலருக்கு மன்னாவை தேவன் அளந்து கொடுத்தது போன்றதாகும். தராசின் காலத்தில் நடக்கும் இச்செயலானது எதை குறிக்கின்றது?.  முதலாவது வறுமை மற்றும் வளர்ச்சிக்கு முன் அடையாளம் ஆகும். ஏழு வருட செழிப்புக்கு பின் ஏழு வருட பஞ்சம் வந்ததைப் போன்ற ஒரு இடர் தோன்ற போவதை குறிக்கும். ஆகையினால் சகலமும் அளவு பிரமாணத்துக்கு உட்படுத்தப்படுகிறது....

CCM Tamil Bible Study - கைத்தராசு

வெளி 6:5c. அதின் மேல் ஏறியிருந்தவன் ஒரு தராசை தன் கையில் பிடித்திருந்தான். லேவி26:26; புல5:10; எசே4:10,16; யோபு 31:6;சங்62:9; ஏசா40:12; தானி 5:27.. கைத்தராசு தராசு என்பது நியாயஸ்தலத்தின் அடையாளம். தராசு வியாபார ஸ்தலத்தின் மையம். இவ்விரு காரியங்களையும் நாம் இங்கு தியானிக்கலாம். முதலாவது தராசு என்பது நீதிமன்றத்தில் யாவருடைய கண்களும் காணும்படியாக வைக்கப்பட்டுள்ளதாகும். இங்கு நியாயம் மற்றும் அநியாயம் ஒன்று போல் பாவிக்கப்படும் என்பதற்கு அடையாளமாக அல்ல, மாறாக நியாயம் எப்பொழுதும் எடை அதிகம் கொண்டதாகவே காணப்படும் என்பதற்கு அடையாளமாக வைக்கப்பட்டுள்ளது. தேவனுடைய நியாய சங்கத்தில் நியாயம் முழுமையானதாகவும் அநியாயம் பூஜ்யமாகவும் காணப்படும் படியாக நிறுக்கப்படும். நம்மில் உள்ள நியாயமும் அநியாயமும் ஒன்று போல் சரிசமமாக காணப்படும் படியாக விவிலியத்தில் தராசு வைக்கப்படவில்லை. நமது நீதி நிறுக்கப்படும் போது நீதி முழுமையாகவும் அநீதி பூஜ்யமாகவும் இருக்க வேண்டும்.  இரண்டாவது வியாபார ஸ்தலத்தில் எடை மற்றும் பொருள் கொண்டு அளவிடப்படுவதால் இரண்டும் சமமாக வருவது வரையிலும் அதாவது எடையின் அளவுக்கு வருவது வரையிலும் ...

CCM Tamil Bible Study - கருப்பு குதிரை

வெளி 6:5b.நான் பார்த்தபோது இதோ ஒரு கறுப்பு குதிரையை கண்டேன். சக 6:2,6;எரே 4:28;புல4:8;5:10; யோவே2:6.  கருப்பு குதிரை மனித முகம் கொண்ட ஜீவன் யோவானுக்கு கறுப்பு குதிரையை காண்பிக்கின்றது. கறுப்பு என்பது சபைகளில் உண்டான உபத்திரவங்கள், தப்பறைகள், பிரிவினைகள் போன்றவைகளை குறிப்பதாக விவிலிய அறிஞர்கள் கூறுகின்றனர். வெளிப்படுத்தல் புத்தகமானது கடைசி காலங்களில் உண்டாகும் நிகழ்வுகளை வலியுறுத்துகின்றதாக இருப்பதாலும், இதன் பின்புள்ள காரணங்கள் முக்கியமானதாகையினாலும் நாம் கறுப்பு குதிரை என்பதை பின்வருமாறு தியானிக்கின்றோம்.  கறுப்பு குதிரை என்பதை நாம் மூன்று விதங்களில் தியானிக்கின்றோம் # முதலாவது வெளிச்சமாய் இருந்த தேவனுடைய பிரசன்னம் காணப்படாமல் போகும். உண்மையான தரிசனங்கள் நின்று போகும். தேவனின் வெளியரங்கமான வெளிப்பாடுகள் நிறுத்தி வைக்கப்படும். ஆவிக்குரிய வெளிச்சம் மறைக்கப்பட்டு போகும். இருளின் ஆதிக்கம் அதிகமாகும். ஆனாலும் ஆங்காங்கு ஆவியின் வெளிச்சம் கொண்டுள்ளவர்கள் வாசம் பண்ணுவார்கள். இப்படிப்பட்டவர்களின் எச்சரிப்புகளை எவரொருவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.  # இரண்டாவது செழிப்பின் கால முடி...

CCM Tamil Bible Study - மூன்றாம் ஜீவ தொனி

வெளி 6:5a. அவர் மூன்றாம் முத்திரையை உடைத்த போது மூன்றாம் ஜீவனானது நீ வந்து பார் என்று சொல்ல கேட்டேன்.  மூன்றாம் ஜீவ தொனி மூன்றாம் ஜீவன் மனுச முகம் போன்ற முகம் உள்ளதாய் இருந்தது என்று 4:7 ல் பார்க்கின்றோம். இந்த மூன்றாம் ஜீவன் யோவானை பார்த்து நீ வந்து பார் என்று அழைக்கின்றது. ஒவ்வொரு ஜீவனும் யோவானை ஒவ்வொரு இடத்துக்கு கொண்டு போய் காண்பிக்கின்றன. இந்த ஜீவன் யோவானை மனிதர்களின் மத்தியில் கொண்டு போகின்றது. அதாவது மனிதர்களின் உள்ளம் சிந்தனை செயற்பாடு ஆகியவைகள் எவைகளில் வேர்கொண்டு உள்ளதோ அவைகளுக்கு நேராக கொண்டு போகின்றது. அதாவது உலகத்தின் மேன்மையும் - மனிதனின் மகிழ்ச்சியும் - இருதயத்தின் பெருமையும் ஆகிய செழிப்பின் வளமையின் சூழலுக்கு நேராக வழி நடத்துகின்றது.  ஆதி மனிதனுக்கு செழிப்பின் மேன்மை கொடுக்கப்பட்டிருந்தது. அது தேவனிடமிருந்து வந்ததாகவும் இருந்தது. ஆனால் பாவம் உண்டான போது மனிதக்குலமானது செழிப்பின் மேன்மைக்காய் வியர்வை சிந்த வேண்டி இருந்தது. அப்படி இருந்தாலும் எல்லாருக்கும் நற்பலன் அது தருவதில்லை. இச்சூழலில் மனிதனை வீழ்ச்சிக்கு உட்படுத்திய சாத்தான் உலகத்தின் மேன்மையும் மனிதனும் மக...