CCM Tamil Bible Study - கோபம்

வெளி12:12d. பிசாசு மிகுந்த கோபம் கொண்டு.நீதி12:16;16:14;27:3,4;பிர7:9;சங்4:4;76:10;தானி11:36;யோனா4:1;மத்2:16;யாக்1:20.  கோபம் கோபம் மிகவும் பொல்லாதது என்று சொல்வது சரியா என்று எனக்கு தெரியவில்லை. தேவன் கோபம் கொள்வது அவசியமானது என்பதை விவிலியத்தில் படிக்கின்றோம். தேவனுடைய விருப்பத்துக்கு மாறாக மனிதர்கள் போனபோது தேவனுடைய கோபம் வெளிப்பட்டது. தேவகோபம் பற்பல விதமான சிதைவுகளை ஏற்படுத்தியிருந்தாலும் அது தேவனுடைய நீதியையும் பரிசுத்தத்தையும் வழுவாதன்மையையும் வெளிப்படுத்தியது. தேவனுடைய கோபத்தினால் தண்டனை உண்டாயிற்றென்றால் தேவ இரக்கத்தினால் கிருபையும் மீட்பும் உண்டாயிற்று.  மனிதர்கள் தேவன் மீது கோபம் கொள்வதை விவிலியம் ஏற்றுக்கொள்ளவில்லை. தேவன் மீதும் தேவ ஆளுகை மீதும் கோபம் காண்பித்தவர்கள் அழிந்து போயினர். ஆகையினால் தான் மனித கோபம் தேவ நீதியை எழுப்பாது என்று அதற்கு முற்றுப்புள்ளி போடப்பட்டது. தேவகோபத்துக்கும் மனித கோபத்துக்கும் உண்டான போட்டிகள் சுருங்கி போயின. ஆனால் தேவ கோபத்திற்கும் சாத்தானின் கோபத்திற்கும் இடையில் உண்டான போட்டிகள் உலகம் அழிக்கப்படுவது வரையிலும் சாத்தான் நரகத்தில் தள்ளப்...

CCM Tamil Bible Study - மங்கின நிற குதிரை

வெளி 6:8a. நான் பார்த்தபோது இதோ மங்கின நிறம் உள்ள ஒரு குதிரையை கண்டேன். சக6:3;1:8;புல4:1.  

மங்கின நிற குதிரை

இதனை மேகம் போன்ற நிறம், சாம்பல் நிறம், வெளிறிய நிறம் என்றும் கூறலாம். அடையாளம் கண்டு கொள்ள முடியாதபடிக்கு உள்ள நிறமாகவும் காணப்படலாம். ஏன் மங்கின நிறம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது?. இது தப்பறைவாதிகளின் காலம் என்று குறிப்பிடுகின்றனர். ஆனால் இது கடைசி காலத்தை மையப்படுத்துவதனால் ஒரு சில உண்மைகளை இதன் மூலமாக அறிய வேண்டியுள்ளது. 

# முதலாவது கடைசி கால மக்கள் தங்கள் இருதயத்திலே ஒளி இழந்து, தேவ மகிமை இழந்து, தேவனை விட்டு வெகுதூரம் போய் வெளிறிப்போனவர்களாய் இருப்பார் என்பதாகும். உள்ளத்திலோ உணர்வுகளிலோ எவ்விதமான திட நம்பிக்கை இல்லாமல் காணப்படுவர். 

# இரண்டாவது கடைசி கால பயங்கரங்களின் அடையாளங்களை காண்பதினிமித்தம் பயத்தினாலும் நடுக்கத்தினாலும் நிறைந்தவர்களாய் காணப்படுவர். முக களை இழந்து செத்துப்போன முகத்தோற்றம் உடையவர்களாக இருப்பர். ஆனாலும் கடைசி கால அடையாளங்களினிமித்தம் மனந்திரும்பவோ, தேவனிடம் திரும்பி வரவோ முயற்சிக்க மாட்டார்கள்.  

# மூன்றாவது இந்த நிறம் மிகவும் முக்கியமானதொரு விஷயத்தை சுட்டி காட்டுகின்றது. கடைசி காலத்தின் அறிகுறியாக காணப்படும். அதாவது நம்பிக்கை இழந்த நிலையாகும். கடவுளை நோக்கி பிரார்த்தித்தவைகளுக்குரிய பதில் கிடைக்காததினாலும் காரியங்கள் நினைத்தது போல நடவாததினாலும் பலர் தங்களை மாய்த்துக் கொள்வதினிமித்தமும் உள்ளம் செத்து போய் - குளிர்ந்துப் போய் காணப்படுவர். கடவுளுடைய காரியங்களில் உற்சாகமிழந்து காணப்படுவர். நம்பிக்கை அற்று போனதினிமித்தம் எதைக் குறித்தும் கரிசனை மற்றும் கவனம் இல்லாமல் உலகம் போகிற போக்கில் காணப்படுவர். இருப்பதை விடவும் செத்துப் போவதே மேல் என்ற எண்ணம் தோன்றும். எக்காலத்திலும் இல்லாத அளவுக்கு வாழ்வின் ஒளி இல்லாததால் மரணத்திற்கு விரைந்து ஓடுகிறவர்கள் அதிகரிப்பர். 

அப்படியிருந்தும், அந்த வாதைகளால் கொல்லப்படாத மற்ற மனுஷர்கள் பேய்களையும், பொன் வெள்ளி செம்பு கல் மரம் என்பவைகளால் செய்யப்பட்டவைகளாயும் காணவும் கேட்கவும் நடக்கவுமாட்டாதவைகளாயுமிருக்கிற விக்கிரகங்களையும் வணங்காதபடிக்குத் தங்கள் கைகளின் கிரியைகளைவிட்டு மனந்திரும்பவுமில்லை, தங்கள் கொலைபாதகங்களையும், தங்கள் சூனியங்களையும், தங்கள் வேசித்தனங்களையும், தங்கள் களவுகளையும்விட்டு மனந்திரும்பவுமில்லை. 

வெளிப்படுத்தின விசேஷம் 9:20,21

Comments

Popular posts from this blog

CCM Tamil Bible Study - ஆறுதல் தரும் கிறிஸ்து - Comforter Christ

The Lord built Isaac's family - CCM Tamil Bible Study - ஈசாக்கின் குடும்பம் கட்டப்பட்டது

The Lord built Paul - CCM Tamil Bible Study - கட்டி எழுப்பப்பட்ட பவுல்