CCM Tamil Bible Study - கோபம்

வெளி12:12d. பிசாசு மிகுந்த கோபம் கொண்டு.நீதி12:16;16:14;27:3,4;பிர7:9;சங்4:4;76:10;தானி11:36;யோனா4:1;மத்2:16;யாக்1:20.  கோபம் கோபம் மிகவும் பொல்லாதது என்று சொல்வது சரியா என்று எனக்கு தெரியவில்லை. தேவன் கோபம் கொள்வது அவசியமானது என்பதை விவிலியத்தில் படிக்கின்றோம். தேவனுடைய விருப்பத்துக்கு மாறாக மனிதர்கள் போனபோது தேவனுடைய கோபம் வெளிப்பட்டது. தேவகோபம் பற்பல விதமான சிதைவுகளை ஏற்படுத்தியிருந்தாலும் அது தேவனுடைய நீதியையும் பரிசுத்தத்தையும் வழுவாதன்மையையும் வெளிப்படுத்தியது. தேவனுடைய கோபத்தினால் தண்டனை உண்டாயிற்றென்றால் தேவ இரக்கத்தினால் கிருபையும் மீட்பும் உண்டாயிற்று.  மனிதர்கள் தேவன் மீது கோபம் கொள்வதை விவிலியம் ஏற்றுக்கொள்ளவில்லை. தேவன் மீதும் தேவ ஆளுகை மீதும் கோபம் காண்பித்தவர்கள் அழிந்து போயினர். ஆகையினால் தான் மனித கோபம் தேவ நீதியை எழுப்பாது என்று அதற்கு முற்றுப்புள்ளி போடப்பட்டது. தேவகோபத்துக்கும் மனித கோபத்துக்கும் உண்டான போட்டிகள் சுருங்கி போயின. ஆனால் தேவ கோபத்திற்கும் சாத்தானின் கோபத்திற்கும் இடையில் உண்டான போட்டிகள் உலகம் அழிக்கப்படுவது வரையிலும் சாத்தான் நரகத்தில் தள்ளப்...

CCM Tamil Bible Study - பூமி அதிர்ந்தது

 வெளி6:12a. ஆறாம் முத்திரையை உடைக்க கண்டேன்; இதோ பூமி மிகவும் அதிர்ந்தது. வெளி8:5;11:13;16:18;1இரா19:11-13;ஏசா29:6;ஆமோ1:1;சகரி14:15;மத்24:7;27:54;28:2. 

பூமி அதிர்ந்தது

கடவுளை மறந்து கடவுளால் படைக்கப்பட்டவைகளை கடவுள்களாக பிரகடனப்படுத்திய மனிதன் பூமியை பூமித்தாய் என்று கொண்டாடுகிறான். ஆனால் அந்த பூமித்தாயோ தன்னை படைத்தவரின் முன் நிற்க முடியாமல் தள்ளாடுகிறாள். படைத்தவரின் மகனின் குருதியை குடித்து கும்மாளம் போட்ட பூமித்தாய் நிலையற்றுத் தள்ளாடுகிறாள். தேவனுடைய பரிசுத்தவான்களின் இரத்தத்தை குடித்து வெறி கொண்ட பூமிதாய் ஐயோ என்னை விட்டு விடுங்கள் என்று கதறுகிறாள். கடைசி காலத்தில் பழிவாங்கும் தேவனின் ஆக்ரோஷமான செயல்பாடுகளுக்கு முன்னால் ஒருவரும் நிற்க முடியாது. 

இந்த பூமியிலே என்னுடைய ராஜாங்கத்தை ஸ்தாபிப்பேன் என்று தம்பட்டம் அடித்தவர்களும், அடிக்கிறவர்களும் இருப்பிடம் தவற விட்டு அலைகின்ற நாடோடிகளை மாதிரி மூட்டை முடிச்சுகளை வாரிக் கொண்டு ஓடுகிறார்கள். கடவுளை தொழுது சேவிக்க கட்டளை பெற்ற பூமித்தாய் அய்யோ நான் மனிதர்களின் பேச்சைக் கேட்டு மோசம் போய்விட்டோமே என்று கதறுகிறாள். 

பூமி அசைக்கப்படுவதனால் பூமியை உண்டாக்கினவரை மனிதர்கள் நோக்கி பார்க்க வேண்டும். ஆனால் இப்பொழுதாவது நோக்கி பார்ப்பார்களா?. பார்க்க மாட்டார்கள். ஏனெனில் பூமி கடவுளால் உண்டாக்கப்பட்டது என்ற அறிவு இல்லாதவர்களாகி விட்டார்களே. இனி ஒரு தரம் பூமியை அசைய பண்ணுவேன் என்ற தேவ வாக்கு நிறைவேறும் காலம் சமீபத்தது. காலங்காலமாக தங்கள் மேம்படுத்திக் கொண்டிருந்த எல்லாவிதமான ராஜாங்கங்களும் நிலைகுலைந்து காணப்படாமல் போகும். ஆட்சியாளர்கள் நிலை குலைந்து இப்பூமியில் இருப்பிடம் தேடி ஓடி முடிவில் காணப்படாமல் போவார்கள். கலாச்சாரங்களும் காணப்படாமல் போகும். சாத்தானின் மக்கள் சாத்தானிடம் முறையிட்டு சலித்து போய் தங்களை தாங்களே மாய்த்துக் கொள்வார்கள். இனி வாழ்வில்லை என்ற நிலைக்கு தள்ளப்படுவார்கள். 

கடைசி காலங்களில் உண்டாகும் பூமி அதிர்ச்சிகள் யாவும் இறுதி பூமி அதிர்ச்சிக்கு முன்னடையாளம் ஆகும். முன்னடையாளங்களை முன்னறிந்து படைத்த தேவனிடம் மண்டியிட்டு அண்டிக் கொண்டால் பரகதி அடையலாம். 

கர்த்தருடைய நாள் இரவிலே திருடன் வருகிறவிதமாய் வரும். அப்பொழுது வானங்கள் மடமட என்று அகன்றுபோம், பூதங்கள் வெந்து உருகிப்போம், பூமியும் அதிலுள்ள கிரியைகளும் எரிந்து அழிந்துபோம். இப்படி இவைகளெல்லாம் அழிந்து போகிறதாயிருக்கிறபடியால் நீங்கள் எப்படிப்பட்ட பரிசுத்த நடக்கையும் தேவபக்கியும் உள்ளவர்களாயிருக்க வேண்டும்.

தேவனுடைய நாள் சீக்கிரமாய் வரும்படிக்கு மிகுந்த ஆவலோடே காத்திருங்கள். அந்த நாளில் வானங்கள் வெந்து அழிந்து, பூதங்கள் எரிந்து உருகிப்போம். அவருடைய வாக்குத்தத்தத்தின்படியே நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகுமென்று காத்திருக்கிறோம். ஆகையால், பிரியமானவர்களே, இவைகள் வரக் காத்திருக்கிற நீங்கள் கறையற்றவர்களும் பிழையில்லாதவர்களுமாய்ச் சமாதானத்தோடே அவர் சந்நிதியில் காணப்படும்படி ஜாக்கிரதையாயிருங்கள். 

2 பேதுரு 3:10-14

Comments

Popular posts from this blog

CCM Tamil Bible Study - ஆறுதல் தரும் கிறிஸ்து - Comforter Christ

The Lord built Isaac's family - CCM Tamil Bible Study - ஈசாக்கின் குடும்பம் கட்டப்பட்டது

The Lord built Paul - CCM Tamil Bible Study - கட்டி எழுப்பப்பட்ட பவுல்