CCM Tamil Bible Study - அளந்து கொடுக்கப்படும்
- Get link
- X
- Other Apps
வெளி 6:6. அப்பொழுது, ஒரு பணத்துக்கு ஒருபடி கோதுமையென்றும், ஒரு பணத்துக்கு மூன்றுபடி வாற்கோதுமையென்றும், எண்ணெயையும் திராட்சரசத்தையும் சேதப்படுத்தாதே என்றும், நான்கு ஜீவன்களின் மத்தியிலிருந்து உண்டான சத்தத்தைக் கேட்டேன். 2இரா7:1; சங்கீதம் 76:8,9. மத் 20:2; யோவான் 6:9.
அளந்து கொடுக்கப்படும்
பூமியில் செழிப்பும் தானியங்களின் திரட்சியும் அதிகமாக இருந்தாலும் வறுமையின் காலத்தில் அளந்து கொடுக்கப்படுவது போல கொடுக்கப்படும். தாராளமாய் கொடுக்கப்படுவதில்லை. ஒரு பணம் என்பது அக்காலத்தில் ஒரு நாள் கூலியாகும். ஒரு படி என்பது ஒரு லிட்டருக்கு சற்று குறைவானதாகும். ஒரு பணத்துக்கு ஒரு படி கோதுமை, ஒரு பணத்துக்கு மூன்று படி வாற்கோதுமை என்பது அளவு பிரமாணத்தின் எழுச்சியாகும்.
இந்த காரியம் இஸ்ரயேலருக்கு மன்னாவை தேவன் அளந்து கொடுத்தது போன்றதாகும். தராசின் காலத்தில் நடக்கும் இச்செயலானது எதை குறிக்கின்றது?.
முதலாவது வறுமை மற்றும் வளர்ச்சிக்கு முன் அடையாளம் ஆகும். ஏழு வருட செழிப்புக்கு பின் ஏழு வருட பஞ்சம் வந்ததைப் போன்ற ஒரு இடர் தோன்ற போவதை குறிக்கும். ஆகையினால் சகலமும் அளவு பிரமாணத்துக்கு உட்படுத்தப்படுகிறது.
இரண்டாவது அதிகாரத்தின் எழுச்சியாகும். தேவனுடைய விருப்பத்தினாலேயோ அல்லாமலோ ஒரு ஆட்சி எழும்பி சகலவற்றையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து உற்பத்தி செய்பவனாகிய உடமஸ்தன் கூட தன் உற்பத்தி பொருளை உரிமையாக்கி கொள்ள இயலாது போகும் நிலையை உருவாக்குவார். எல்லா விளைபொருட்களும் கூட்டுறவுகள் கொண்டு வரப்படும். அங்கிருந்து அவரவருக்கான படி அளந்து கொடுக்கப்படும். விவசாயிகள் கூட எதையாவது குறித்து கேள்வி கேட்கக் கூடிய நிலை தடுக்கப்படும்.
மூன்றாவது வலியவனும் எளியவனும் ஒன்று போல் புசிப்பதும் ஒன்று போல் உடுப்பதும் ஒன்று போல் தங்குவதுமான சூழல் உண்டாகும். பொருளாதாரம் குவிக்கப்பட்டிருந்த நிலை மாறி பொருளாதாரம் ஆட்சியாளரின் கண்காணிப்புக்குள் வரும். இதனால் பணப்புழக்கம் எல்லாரிடமும் ஒன்று போல் காணப்படும். பொதுவுடமை கொள்கை போலொத்த நிலை உண்டாகும். ஏழை பணக்காரன் என்ற வேறுபாடு நீக்கப்படும். ஆனால் ஆட்சி அதிகாரத்தை எதிர்க்கும் துணிவு அறவே நீக்கப்படும்.
அளவு பிரமாணம் நல்லதுதான். விவிலியமும் இதனை ஆமோதிக்கின்றது. ஆனால் அது நீதியின் ஆட்சியின் வெளிப்பாடு. கடைசி காலத்தில் நீதியின் ஆட்சிக்கு இடமில்லை. எல்லாம் ஒரே ஆட்சியின் கீழ் கொண்டு வரப்படும். ஆட்சியாளர்கள் தங்கள் இஷ்டம் போல் நடப்பர். வரப்போற அந்தி கிறிஸ்துவின் ஆட்சிக்கு முன் அடையாளமாகும். எங்கும் வெளிச்சம் இல்லாத நிலை உருவாகும். தப்பி பிழைக்கும் வழி கிடைக்காமல் போகும். ஆட்சியாளர்களின் நோக்கம் அறிந்து செயல்படுவோம். ஆனாலும் மேசியா வருவார். ஆட்சி புரிவார்.
இரண்டு மனு உம்மிடத்தில் கேட்கிறேன்: நான் மரிக்கும்பரியந்தமும் அவைகளை எனக்கு மறுக்காமல் தாரும். மாயையையும் பொய்வசனிப்பையும் எனக்குத் தூரப்படுத்தும்: தரித்திரத்தையும் ஐசவரியத்தையும் எனக்குக் கொடாதிருப்பீராக. நான் பரிபூரணம் அடைகிறதினால் மறுதலித்து, கர்த்தர் யார் என்று சொல்லாதபடிக்கும்; தரித்திரப்படுகிறதினால் திருடி, என் தேவனுடைய நாமத்தை வீணிலே வழங்காதபடிக்கும், என் படியை எனக்கு அளந்து என்னைப் போஷித்தருளும்.
நீதிமொழிகள் 30:7-9
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment