CCM Tamil Bible Study - இரத்தமான சந்திரன்
- Get link
- X
- Other Apps
வெளி6:12c. சந்திரன் இரத்தம் போலாயிற்று.
யோபு25:5;சங்72:7;104:19;பிர12:2;ஏசா13:10;24:23;எசே32:7;யோவே2:31;3:15;அப்2:20;மத்24:29.
இரத்தமான சந்திரன்
சந்திரனை கால குறிப்புகளுக்காக படைத்தார் ஆண்டவர். விஞ்ஞானபூர்வமாக சூரியனிலிருந்து கிடைக்கும் ஒளியினால் சந்திரன் ஒளிர்கின்றது என்று கூறப்படுகிறது. வெள்ளியைப் போல பிரகாசமாக காணப்படும் சந்திரன் சூரியன் கறுத்து போய் ஒளி கொடுக்காததினால் இரத்தமாக மாறிப்போயிற்று. சந்திரன் என்பது அழகு கவர்ச்சி போன்றவைகளுக்கு அடையாளமாக காட்டப்படுவதினால் தேவதைகளாக வர்ணிக்கின்றனர். இப்பொழுது அதன் அழகை குலைத்துப் போட்டதினால் இரத்தம் போலாகி சிவந்து காணப்படுகிறது. ஒருவேளை குளிர்ச்சியான ஒளியை கொடுத்த சந்திரன் இனி நெருப்பாய் பொழியப்படும் சந்திரனாக மாறுமோ?.
பாவங்களுக்கும் அக்கிரமங்களுக்கும் பொல்லாப்புகளுக்கும் பேர் போன இருளில் மேலும் மேலும் தீங்குகளைச் செய்யும்படி சந்திரனை பயன்படுத்திக் கொண்டவர்கள் சந்திரனின் இரத்த நிறம் போன்ற தோற்றத்தால் கண்களின் ஒளி மங்கி நீரும் நெருப்பும் இன்னதின்னதென்று அறியக் கூடாதபடிக்கு ஆபத்துகளையும் வேதனைகளையும் உண்டாக்குகிறதாயிற்று. நீரும் நெருப்பும் ஒன்று போல் இருப்பதினால் மனிதர்கள் வெளியே நடமாட இயலாதபடி ஆகும்.
காலங்களையும் நேரங்களையும் அறிய இயலாது. பௌர்ணமியும் அமாவாசையும் இல்லாமல் போகும். இரண்டையும் கணிக்க இயலாததினால் பஞ்சாங்கங்கள் யாவும் செயலிழந்து போகும். சந்திரனை கும்பிட்டவர்கள் மோசம் போவார்கள். அழகு கவர்ச்சி யாவும் காணாமல் போகும். கருமையும் அழகும் ஒன்று போல் காணப்படும். அழகைக் கொண்டு உலகையே கெடுத்து போட்ட வேசித்தனங்கள் யாவும் அற்றுப்போகும். அழகை நாடி போகிறவர்களின் நிலைமை மோசமாகும்.
தேவனின் படைப்பின் நோக்கத்தை உணராத மனிதன் தேவனிடமிருந்து வருகின்ற உபாதிகளையும் அடைந்துதானாக வேண்டும். இரத்தக் காசு இரத்த நிலத்தைத் தோற்றுவித்தது போல இரத்த சந்திரன் இரத்த நிலத்தை பிறப்பிக்கின்றது. சந்திரன் இரத்தமாகும் மேன்பதாக மீட்கப்பட ஒப்புக் கொடுப்போமா?.
ஆனபடியினாலே, நீங்கள் ஞானமற்றவர்களைப்போல நடவாமல், ஞானமுள்ளவர்களைப்போலக் கவனமாய் நடந்துகொள்ளப்பார்த்து, நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஐனப்படுத்திக்கொள்ளுங்கள்.
எபேசியர் 5:15,16
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment