CCM Tamil Bible Study - மூன்றாம் ஜீவ தொனி
- Get link
- X
- Other Apps
வெளி 6:5a. அவர் மூன்றாம் முத்திரையை உடைத்த போது மூன்றாம் ஜீவனானது நீ வந்து பார் என்று சொல்ல கேட்டேன்.
மூன்றாம் ஜீவ தொனி
மூன்றாம் ஜீவன் மனுச முகம் போன்ற முகம் உள்ளதாய் இருந்தது என்று 4:7 ல் பார்க்கின்றோம். இந்த மூன்றாம் ஜீவன் யோவானை பார்த்து நீ வந்து பார் என்று அழைக்கின்றது. ஒவ்வொரு ஜீவனும் யோவானை ஒவ்வொரு இடத்துக்கு கொண்டு போய் காண்பிக்கின்றன. இந்த ஜீவன் யோவானை மனிதர்களின் மத்தியில் கொண்டு போகின்றது. அதாவது மனிதர்களின் உள்ளம் சிந்தனை செயற்பாடு ஆகியவைகள் எவைகளில் வேர்கொண்டு உள்ளதோ அவைகளுக்கு நேராக கொண்டு போகின்றது. அதாவது உலகத்தின் மேன்மையும் - மனிதனின் மகிழ்ச்சியும் - இருதயத்தின் பெருமையும் ஆகிய செழிப்பின் வளமையின் சூழலுக்கு நேராக வழி நடத்துகின்றது.
ஆதி மனிதனுக்கு செழிப்பின் மேன்மை கொடுக்கப்பட்டிருந்தது. அது தேவனிடமிருந்து வந்ததாகவும் இருந்தது. ஆனால் பாவம் உண்டான போது மனிதக்குலமானது செழிப்பின் மேன்மைக்காய் வியர்வை சிந்த வேண்டி இருந்தது. அப்படி இருந்தாலும் எல்லாருக்கும் நற்பலன் அது தருவதில்லை. இச்சூழலில் மனிதனை வீழ்ச்சிக்கு உட்படுத்திய சாத்தான் உலகத்தின் மேன்மையும் மனிதனும் மகிழ்ச்சியும் இருதயத்தின் பெருமையும் ஆகிய உலக வளமை எல்லாம் தன் அதிகாரத்துக்குட்பட்டிருக்கிறது என்று பறைசாற்றினான். தேவன் சாத்தானின் பெருமையை குலைத்து போடவும் அவனுடைய சதியை முறியடிக்கவும் மனித உருவில் தம் குமாரனை அனுப்பி உலகத்தின் மேன்மையை தன் வசம் கொண்டு வந்தார். ஆனாலும் மனிதன் இயேசு கிறிஸ்துவினால் கிடைக்கக்கூடிய மீட்புக்கும் நீதிக்கும் முக்கியத்துவம் கொடுப்பதை விடவும் உலகத்தின் மேன்மையாகிய வளமைக்கும் பேரின்ப வாழ்வுக்கும் ஆடம்பரத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கலானான்.
இந்த சூழலில் மனிதகுலத்தின் மீட்புக்காய் அனுப்பப்பட்ட மனுஷகுமாரனாகிய இயேசு கிறிஸ்துவை போன்ற முகம் கொண்ட ஜீவன் யோவானை அழைக்கின்றது. உலகத்தின் மேன்மைக்கும் மனிதனின் மகிழ்ச்சிக்கும் இருதயத்தின் பெருமைக்கும் காரணமாகிய வளமையை நோக்கும்படியாக அழைக்கின்றார்.
உலகத்தில் வளமை மனுக்குலத்தை எப்படிப்பட்ட முறையில் நடத்துகிறது என்பதை யோவான் பார்க்கின்றார். நீதியும் நியாயமும் செல்வத்தை வைத்து தீர்மானிக்கப்படுகிறது. இரக்கமும் அன்பும் அந்தஸ்துகளை வைத்து தீர்மானிக்கப்படுகிறது. மனிதாபிமானமும் மனசாட்சியும் ஆஸ்திகளை வைத்து தீர்மானிக்கப்படுகிறது. இந்த மூன்று காரியங்களை கண்ட யோவான் அடுத்த காட்சியை காண போகின்றார். நாமும் தேவனுடைய குமாரனாக வந்த இயேசுவின் அன்பை வைத்து தீர்மானிக்காமல் போனதால் வரப்போகிற பாதிப்புகளையும் பார்க்கப் போகிறோம்.
உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள். ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை. ஏனெனில், மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள். உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம். தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்.
1 யோவான் 2:15-17..
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment