CCM Tamil Bible Study - 12 கோத்திரங்கள்
- Get link
- X
- Other Apps
வெளி7:5-8. 12 கோத்திரங்களிலும் முத்திரையிடப்பட்டவர்கள் 12000 பேர் வீதம் மொத்தம் 144000 பேராகும்.
12 கோத்திரங்கள்
12 கோத்திரங்கள் குறித்த குறிப்புகளில் சில வித்தியாசங்கள் காணப்படுகின்றது. யாக்கோபின் பிள்ளைகளின் பிறப்பு வரிசைப்படி இங்கு வரிசை படுத்தபடவில்லை. யூதா கோத்திரம் சேஷ்டபுத்திர கோத்திரமாகவும் ராஜாங்க கோத்திரமாகவும் கருதப்பட்டு முதன்மைப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு கோத்திரத்திலும் 12,000 பேர் என்பது தேவனால் அவரது பணிகள் ஏதோவொன்றிற்காக முத்திரையிடப்பட்டவர்களாகிய ஊழியக்காரர்களே. ஆகையினால் மீதம் உள்ளவர்கள் தள்ளப்பட்டார்கள் என்று பொருள் அல்ல. இவர்கள் இரத்த சாட்சிகளாக காணப்படுபவர்கள் ஆவார்.
யோசுவாவின் காலத்தில் பங்கிடப்பட்ட முறைமையின் அடிப்படையில் இங்கு பட்டியல் காணப்படவில்லை. தாண் கோத்திரமும் எப்பிராயீம் கோத்திரமும் வெளியேற்றப்பட்டு லேவி கோத்திரமும் யோசேப்பு கோத்திரமும் சேர்க்கப்பட்டுள்ளது. ஒரு வேளை எப்பிராயீம் என்ற பெயர் நீக்கப்பட்டு அந்த கோத்திரம் யோசேப்பின் கோத்திரமாக கருதப்பட்டிருக்க வேண்டும். அதே வேளையில் தாண் கோத்திரத்தின் விக்கிரக வணக்கத்தை யாக்கோபின் சந்ததிக்குள் புகுத்தியதினிமித்தம் (17:1-18:31) இறுதி பட்டியலிலிருந்து விலக்கப்பட்டது. மேலும் தாண் கோத்திரத்திலிருந்துதான் யூதா கோத்திரத்து சிங்கத்தை எதிர்க்கும் ஆற்றலுடையவன் எழும்புவான் என்பதினாலும் தாண் வெளியேற்றப்பட்டது. வெளியேற்றப்பட்ட தாண் வலுசர்ப்பத்தோடு கூட்டணி கொண்டு கிறிஸ்துவை எதிர்க்கும் அந்திகிறிஸ்துவாக மாறும்.
துவக்கப்பட்டியலோ இடைப்பட்டியலோ பிரதானமானதாக காணப்பட்டாலும் பட்டியலை இறுதிப்படுத்துபவர் தேவனே. கோத்திரங்களை வரிசைப்படுத்துவதும் இறுதிப் படுத்துவதும் அவரது அதிகாரத்துக்குட்பட்டதாகும். முந்தினோர் பிந்தினோராவதும் பிந்தினோர் முந்தினோராவதும் அவருடைய செயலே. யாக்கோபின் விருப்பப்படி சில காலங்கள் தேவன் அனுமதித்திருந்தார். ஆனாலும் தேவனுடைய ஆதி தீர்மானத்தின் படி யூதா கோத்திரமே பிரதானமாக்கப்பட்டது. ஆசாரிய கோத்திரத்துக்கு யோசுவா தனியிடம் தராதிருந்தாலும் முடிவில் அவர்கள் ஒன்று சேர்க்கப்பட்டு தனி கோத்திரமாகும்.
கோத்திரங்கள் குறித்த படிப்பினைகள் ஏராளம் உண்டு. அவைகளை தியானிப்பது நல்லது.
எவ்வளவுதான் தீர்மானித்து திட்டங்களை வகுத்தாலும் தேவனே இறுதி அதிகாரம் படைத்தவர். இதை உணர்ந்து நாம் வாழ்வோமாக.
அப்பொழுது அவர் தம்முடைய தூதரை அனுப்பி: தாம் தெரிந்துகொண்டவர்களைப் பூமியின் கடைமுனை முதற்கொண்டு, வானத்தின் கடைமுனைமட்டுமுள்ள நாலு திசைகளிலுமிருந்து கூட்டிச்சேர்ப்பார்.
மாற்கு 13:27.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment